21.2.08

4 வது ஆண்டில் சாரல். வாழ்த்த வரிசையாய் வாருங்கள்

சும்மாயிருந்த பொழுதொன்றில் நானெழுதிய யானைக்கதையொன்றைத் தேடிப்புறப்பட்டபோதுதான் புலப்பட்டது. கடந்த பெப்ரவரி 13 இல் சாரல் நான்காவது வருடத்தில் நுழைந்து விட்டிருந்தமை. அட நான்கு வருடமாயிற்றா ?

சாரல் Blogspot இற்கு வருவதற்கு முன்பே 2004 செப்டெம்பரில் யாழ்.நெற்றில் (நெட்டில்) சஜீ என்ற ஒற்றைப்பெயரில் வைத்திருந்த குடில் (அப்போது இந்த பெயரில்தான் blog எனக்கு அறிமுகமாயிற்று. ) பின்னர் காணாமல் போய்விட்டது. நான் சேமித்து வைத்திராத நிறைய நனவிடை தோய்தல் எழுத்துக்கள் அதனோடு மறைந்து போயின. ஈழத்தமிழர்கள் அதிகம் இறந்தகாலத்து நினைவுகளையே வலையில் அழுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பலமான ஆதாரமாக இருந்த தளம் அது.

பின்னர் இடையில் சாரலை ஆரம்பித்து மெல்பேணில் ஒரு நடுநிசி தாண்டிய இரவில் சக்தி வானொலிச் செய்தியொன்றை கேட்டுவிட்டு எழுதிய முதல்ப்பதிவு நேற்றுப்போல இருக்கிறது.

கடந்த வருட முற்பகுதியில் நிறைய ஒலிப்பதிவுகள் செய்தது போல இப்போதும் நிறையச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. அப்படித்தான் நண்பர்களும் சொன்னார்கள். (முழு ஒலிப்பதிவுகளையும் கேட்க இங்கு அழுத்துக) (ஒருவர் என்னை எதிர்பார்த்துக்கொண்டு பண்டத்தரிப்புச் சந்தியிலேயே குந்தியிருக்கிறாராம்.)

தவிர இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயத்தினையும் முடித்திட வேண்டும். தொடங்கியாயிற்று.

இப்படியான ஆண்டு விழாக்களை வலையில் கொண்டாட ஒரு மரபு உள்ளது. யாரேனும் நாலு பதிவர்களிடம் பாராட்டுப்பெற்று வெளியிடுவதுதான் அது. அதையே நானும் செய்ய நினைத்தேன். ஆயினும் கேட்கும் போது அதற்கென்ன தந்தால்ப் போச்சு என மெயில் அனுப்புவார்கள். பிறகு அதை அடியோடே மறந்து போவார்கள் என்பதனால் :)))) அந்த எண்ணத்தை கைவிட்டாயிற்று.

வேறென்ன.. வாழ்த்த வாற ஆட்கள் வரிசையாய் வாருங்கள்.. :))

18.2.08

விடுமுறை நாளொன்றின் ஒளிப்படக் குறிப்புக்கள்

விரைவில் நாங்களும் கடற்கரை போவோம் :)


14.2.08

ரொம்ப முக்கியமான கேள்விகள் ?

தினப்படி வாழ்க்கையில தோன்றுகின்ற கேள்விகளை தொகுத்துப் பதிவிடுறன். இதில சம்பந்தப்பட்டவர்களிடமே இதுகளை நேரே கேட்கலாம் எண்டாலும் சும்மா ஒரு இதுக்கு பொதுவில விடுறன்.

கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது என்னும் பலதரப்பட்ட எழுத்தாளர்களைக் கவர்ந்த நூல்கள் தொடர்பான நூல் ஒன்றை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொகுத்திருக்கிறார். அதில் ஒவ்வொரு எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்களும் உண்டு. அவற்றை அ. முத்துலிங்கம்தானா எழுதினார் என அறிய ஆவல். ஏனெனில் அவரைப் பற்றிய குறிப்பில் நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ. முத்துலிங்கம் படைப்புக்களைச் சொல்லலாம் என்றுள்ளது. ??

தினக்குரலில் கானா பிரபாவின் பதிவினை அறிமுகப்படுத்தியவிடத்தில் மடத்துவாசல் பிள்ளையார் கனவில் வந்து சொன்னதும் நித்திரையால் எழும்பி பதிவுகளை எழுதுபவர் கானா பிரபா என்ற பொருள்பட உள்ளதே.. ? உண்மையா.. ? என் கனவிலும் தான் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பதிவெழுதச் சொல்லவில்லையே.. :(

2004 காதலர் தினத்தை (அப்போது தீர்மானிக்கப்படாத) காதலியுடன் கொண்டாடுவேன் என அறிக்கையிட்ட சோமிதரன் (ஆதாரம் ஒளிப்பதிவாக உண்டு ) 2008 இலாவது அந்த இலக்கை அடைந்தாரா ? தவிர அவரது யாழ் நூலகம் தொடர்பான ஆவணப்படம் எப்போ வரும் ?

கொழுவிக்கு டொச் தெரியும் என அறிய முடிந்த சிறீரங்கன் அவர்களால் கொழுவிக்கு தமிழும் தெரியும் என அறிய முடியாமல் போனது ஏன்.. ?

அப்புறம்.. அப்புறம்.. பெரியண்ணன் இப்போ பெரியண்ணன் வீட்டில் உள்ளாராமே.. ? அறிந்தவர் யாரேனும் உண்டோ ?

பதிவுலகிலிருந்து விடைபெற்றுச் சென்ற ஓசை செல்லா அண்ணன் இன்னும் திரும்பி வரவில்லையே.. ஏன் ?

கேள்விகள் தொடரும் -