23.11.06

எனது வானொலி அனுபவங்கள் 1

சிட்னியில் எனது நீண்ட நாளான ´´முடிஞ்சால் செய்து பாக்கலாம்´´ என்கின்ற ஒரு ஆசை நிறைவேறியது. அது ஒரு ஒலிபரப்பாளனாவது. கொழும்பில் ஆயிரத்தெட்டு வானொலிகள் முளைச்ச போது அப்பிடி ஒரு ஆசை வந்ததெண்டு நினைக்கிறன். அதுக்கு முதல் பள்ளிக்குடத்தில படிக்கும் போது ஒருமுறை இலங்கைத் தேசிய வானொலியில் மாணவர் மலர் நிகழ்ச்சிக்கு போயிருந்தன்.. 10 நிமிச கவிதை படிக்கிறதுக்கு காலமை 10 மணிக்கு போய் பின்னெரம் 3 மணிக்குத்தான் வந்தன். அதிலும் பெரிய சோகம் அடுத்த வாரம் அந்த நிகழ்ச்சியைக் கேட்க நான் மறந்திட்டன். என்னோடை சேயோனும் வந்ததா ஞாபகம்..

இதுக்குப் பிறகு என்னோடை படிச்ச ஒரு சிலர் கொழும்பு தனியார் றேடியோக்களில இருந்தினம். ஆனால் அதுகளில போய் வெறும் பாட்டுப்போடுறதிலையும் சும்மா போனில சிரிச்சுக் கதைக்கிறதிலையும் என்ன இருக்கெண்ட நினைப்பிலுயும் றேடியோக்களுக்கு உள் நுழையிறதுக்கு ஆக்களிடம் கேட்க தயங்கினதிலையும் அந்த எண்ணங்களை கை விட்டு விட்டன். எனக்குத் தெரிஞ்ச ஒருவர் மட்டக்களப்பில இருந்து கொழும்பு வரைக்கும் வந்து வானொலியளில முயற்சித்தவர். தமிழகத்தில மெட்ராசுக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேடுற மாதிரி இவர் மட்டக்களப்பில இருந்து வந்தவர் எண்டு பகிடியா அவரைப் பாத்து சொல்லுறது உண்டு. இனியும் என்னத்துக்கு தெரிஞ்சவர் எண்டு சொல்லுவான்.. அவர் என்ர நண்பர் சோமிதரன். அவரைப்பற்றி பல தடவை சொல்லியாச்சு எண்ட பெடியாலை இங்கை படமே போட்டுக் காட்டியிருக்கிறன்.

2004 மெல்பெண் போன பிறகு அங்குள்ள ஒருவர் மூலமாக வாரமொரு முறை ஒலிபரப்பாகிற ஒரு வானொலியில் ஏதாவது செய்வதற்கான வாய்ப்பு கிடைச்சுது எண்டாலும் அந்த நேரம் நான் UNI இல இருந்து பெற்றொல் செற்றுக்கு வேலைக்கு போற நேரமெண்ட படியாலை அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போட்டுது.

அதுக்கு பிறகு செப்ரம்பர் சிட்னிக்கு ஒரு முறை போயிருந்தேன். அந்த காலப்பகுதிகளில சிட்னியைச் சேர்ந்த பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இன்பத்தமிழ் ஒலி எண்ட றேடியோவில சஞ்சிகை நிகழ்ச்சியொண்டு செய்து கொண்டிருந்தவை. அதுக்கு ஒரு முறை என்ர மச்சானோடு போக முடிஞ்சுது.

அண்டைக்கு எதேச்சையாக மெல்பேணில் நடந்த ரகுமானின் இசை நிகழ்வைப்பற்றி வானொலியில் சொல்லுற வாய்ப்பு கிடைச்சது. அதையும் தவிர கத்தரிக்காய் பச்சடி செய்வது எப்படி எண்ட ஒரு சமையல் குறிப்பும்.. (அது பற்றி வசந்தன் எழுதிய குறிப்பு..)
அதோடை நான் மெல்பேண் வந்திட்டன்.

பிறகு திரும்பவும் சிட்னிக்கு டிசம்பர் போனேன். அது கோடை விடுமுறை காலம்.. கிட்டத்தட்ட 3 மாச லீவு. ஆரம்பத்தில் சிட்னிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றின் நாடகத்திற்காக அலைஞ்சன். நடக்குமா நடக்காதா எண்ட சந்தேகம் கடைசி வரை இருந்தாலும் கடைசியா அது சொதப்பாமல் அரங்கேறியது எண்ட வகையில் சந்தோசமா இருந்தது.

இப்பிடி எல்லாம் முடிஞ்சு இருந்த ஒரு நாள் பின்னேரம் ஒருவர் போன் பண்ணினார்.

வணக்கம் நான் கானா பிரபா கதைக்கிறன் எண்டார் அவர்.

17.11.06

வீடியோ பாருங்கோ

எனது தனிப்பட்ட நோக்கம் ஒன்றிற்காக எடுத்த வீடியோ பதிவுகளின் சில காட்சிகள் இவை. வீட்டிற்கு அருகில் உள்ள காட்சிகளை தனியே தொகுத்திருக்கிறேன். எனது தொகுத்தல் பயிற்சிக்காக.. சரி வருகுது போல கிடக்கு.. இனியென்ன.. கமெரா கிடைச்சால் குறும்படம் எடுக்கிற ஆட்கள் வரிசையில நானும் சேரவேண்டியது தான்.


5.11.06

பனி விழ முதல்..

இன்னும் சில தினங்களில் இங்கு பனிப்பொழிவு ஏற்படுமாம்.. இப்போது காலை வேளைகளில் புற்பரப்புக்களில் பனி லேசாக விசிறுப்பட்டு இருக்கிறது.. ஒரு முயற்சியாக பனிக்கு முன்பும் பின்பும் குறித்த சில ஒரே இடங்களை படம் பிடிக்கலாம் என நினைத்தேன். அவைதான் இவை.. இதே இடங்களை பனியின் பின்னரும் எடுப்பதாக உத்தேசம்..

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting