17.4.08

யம்மா ! என்னமா பேசுறாங்க இவங்க!

கடந்த ஒலிப்பதிவின் தொடர்ச்சியாக நீளும் இந்த ஒலிப்பதிவில் சோமிதரனும் வரவனையானும் தம் உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். சிறுவயது முதலே பெண்களை தன்னிடத்தினின்று பிரித்து வைத்த சமூகம் மீது கடுமையான சாடலை சோமி முன்வைக்கிறார் :) அதன் பின்னதான உளவியல் அரசியல் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார். அவரது பேச்சின் இழையோடும் சோகத்தை புரிந்து கொள்ளுங்கள் :)

இதையாவது பேசலாமா ?

16.4.08

லவ்ஸ் அகராதி! யாழ்ப்பாணத் தமிழில் மட்டுமல்ல

வருத்தப்படாத வாலிபர் சங்கப்பதிவில் கானா பிரபா எழுதிய பதிவொன்றின் பிறகு கடந்த வருடத்தின் ஏப்ரலில் செய்திருந்த இந்த ஒலிப்பதிவு நினைவுக்கு வந்தது. இந்நாள் வரை வெளியிடப்படாத இந்தப் பதிவினை இன்று தூசி தட்டி வெட்டியெடுத்தேன். தமிழகத்தினதும் ஈழத்தினதும் பல பகுதிகளில் பயன்படுத்தும் பல்வேறான சொல் வழக்காடல் குறித்து நானும் சோமிதரனும் வரவனையானும் பேசியிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக கடலை போடுதல் சைட் அடித்தல் ஆள் இவையெல்லாம் எங்கெல்லாம் எப்படி பேசப்படுகின்றது என்ற ரொம்ப ரொம்ப முக்கியமான விசயங்களே இவ் ஒலிப்பதிவின் பேசு பொருள் :)

ஒலிப்பதிவில் கலந்து விட்டு பின்னர் இது நாள் வரை ஒருவருடங்களைக் கடந்து போன பின்னும் எப்ப வரும் எனக் கேள்வி கேட்காத வரவனையான் மற்றும் சோமிதரன் ஆகியோருக்கு நன்றி. வழமை போலவே இந்த ஒலிப்பதிவினையும் சிஞ்சா மனுசி கலையகம் வெளியிடுகிறது :))

15.4.08

மச்சானைப் பாரடி - சுஜித் ஜியின் இன்னொரு பாடல்3.4.08

தனியே தன்னந்தனியே :)

வெளியே போகும் வரும் போதுகளில் ச்சும்மா ஐபோன் கொண்டு கிளிக்குவதுண்டு. இந்த முறை போட்டியின் தலைப்பில் அமைந்த (என நான் நினைக்கும்) ஒரு படம் இது - என்ன சோகத்திலோ அமர்ந்திருக்கின்றார் பூனையார்.

Photobucket - Video and Image Hosting