16.4.08

லவ்ஸ் அகராதி! யாழ்ப்பாணத் தமிழில் மட்டுமல்ல

வருத்தப்படாத வாலிபர் சங்கப்பதிவில் கானா பிரபா எழுதிய பதிவொன்றின் பிறகு கடந்த வருடத்தின் ஏப்ரலில் செய்திருந்த இந்த ஒலிப்பதிவு நினைவுக்கு வந்தது. இந்நாள் வரை வெளியிடப்படாத இந்தப் பதிவினை இன்று தூசி தட்டி வெட்டியெடுத்தேன். தமிழகத்தினதும் ஈழத்தினதும் பல பகுதிகளில் பயன்படுத்தும் பல்வேறான சொல் வழக்காடல் குறித்து நானும் சோமிதரனும் வரவனையானும் பேசியிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக கடலை போடுதல் சைட் அடித்தல் ஆள் இவையெல்லாம் எங்கெல்லாம் எப்படி பேசப்படுகின்றது என்ற ரொம்ப ரொம்ப முக்கியமான விசயங்களே இவ் ஒலிப்பதிவின் பேசு பொருள் :)

ஒலிப்பதிவில் கலந்து விட்டு பின்னர் இது நாள் வரை ஒருவருடங்களைக் கடந்து போன பின்னும் எப்ப வரும் எனக் கேள்வி கேட்காத வரவனையான் மற்றும் சோமிதரன் ஆகியோருக்கு நன்றி. வழமை போலவே இந்த ஒலிப்பதிவினையும் சிஞ்சா மனுசி கலையகம் வெளியிடுகிறது :))

23 Comments:

Blogger கௌபாய்மது said...

ம்ம்ம.. நல்லாயிருந்துது. சோமிதரன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டார். ஏற்கனவே என்னென்ன விசயங்களைக் கதைக்கப் போறீங்கள் எண்டு முதலே கதைச்சுப் போட்டு பதிவுசெஞ்சா வெளியால எல்லாம் போய்க் கதைக்கத் தேவையில்லை.

சயந்தன், உங்கட சேவையள தொடருங்கோ.

8:01 AM  
Anonymous V.J.Chandran said...

Vaali vaikkiRathu eNdu thaan yarlpaanaththilaiyum solluRathu

8:02 AM  
Blogger சினேகிதி said...

எப்பிடி மனசு வந்தது உங்களுக்கு என்ன விட்டிட்டு ஒரு மொக்கை போட :-(

சோமியண்ணான்ர சொந்தக்கதையை சோகக்கதையை ஏன் சொல்ல விடேல்ல நீங்கள் பாவம் அவர்.

றூம் போட்டு அழுறளவுக்கு இருக்கா வரவணையான்ட நிலம:-

8:39 AM  
Blogger சயந்தன் said...

கௌபாய் மது சோமி சொதி பற்றி கதைக்கும் போது கூட உணர்ச்சி வசப்படுபவர். பெண்கள் என்றால் சும்மாவா? தவிர பேசி வைத்தெல்லாம் ஆரம்பிப்பதில்லை. ஸ்ராட் மீயூசிக் என்று விட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான். அவையவையும் தமக்கு பிடித்தவற்றை கதைக்க பிறகு நான் எனக்கு பிடிக்காததை எல்லாம் வெட்டுவன் :)))

இந்த சேவையள் கடந்த வருட சேவைகள். இப்பவும் ஆசை இருக்கு. செய்யலாம்

9:15 AM  
Blogger நிமல்/NiMaL said...

உங்கள் மூவரின் சொந்தக்கதை, சோகக்கதை மொத்த ஆண் சமுதாயத்தின் குரலாகவே ஒலித்திருக்கிறது.

:))

9:29 AM  
Anonymous சோமி ரசிகைகள் மன்றம் said...

சோமி ஏதோ Export Quality Girls என ஏதோ சொல்ல வாற நேரம் அதை நிறுத்திய ஜனநாயக மறுப்பிற்கு எமது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 24 மணி நேரத்தில் அவர் என்ன சொன்னார் என்பதனை அறியத்தராவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்

10:09 AM  
Blogger தமிழ்பித்தன் said...

இது தொடர்பாக எமது மத்திய குழு அறிக்கை வெகுவிரைவில் வெளியாகும்

11:01 AM  
Anonymous Anonymous said...

சகோதரா, என்ன இது? நாம் எமது தேசிய உணர்வோடு போராடிக்கொண்டிருக்கும் போது உங்களை போன்ற சிலர் புலம்பெயர்ந்து இந்திய பாணியில் காதல் உணர்வுகளை, காதல் ஆராட்ச்சிகளையும் நடத்திக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதற்காக காதல் உணர்வுகளை ஒருவன் அனுபவிக்க கூடாதா என எதிர்கேள்வி உருவாகலாம். இருக்கலாம் எனினும் அவை பதிவுகளாக உரையாடலாக வருவது அவ்வளவு விரும்பதக்கதல்ல. எமது தேசிய உவர்வுகளே இந்த காலகட்டத்தில் எல்லா ஈழத்தமிழர்களாலும் முன்நிறுத்தப்படவேண்டும். எனிமேலாவது இதுபோன்ற வீண் விவாதங்களை அலசாமல் எம் நாட்டினதும் எமது வாழ்க்கை சூழலில் அனுபவிக்கும் அனுபவங்களையும் அலசி ஆராயவேண்டும். நீங்கள் எல்லோரும் உங்களுக்கு அடுத்த படியாக வலை பதிய வருபவர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக இருக்கவேண்டுமே தவிர அவர்களை வேறு பாதையில் அழைத்து செல்லவது அவ்வளவு உகந்ததல்ல.

நன்றி புரிந்துணர்வுக்கு

நம்பிக்கையுடன்
ஈழவேந்தன்.

12:20 PM  
Anonymous சுரேஸ் பிரேமச்சந்திரன் said...

பின்னூட்டமிட்ட ஈழவேந்தன் நமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரா என அறிய ஆவல் :)

1:37 PM  
Blogger நிமல்/NiMaL said...

சயந்தன்,

உங்களின் அனுமதி இல்லாமல் இந்த பதிவிலுள்ள SWF Playerஐ எனது இந்த பதிவில் பாவித்திருக்கிறேன். விரைவில் மாற்றிவிடுகிறேன்.

நன்றி...!

2:01 PM  
Blogger கானா பிரபா said...

;-) இன்னும் கேக்கேல்லை, கேட்டுட்டு வாறன்

3:33 PM  
Blogger பகீ said...

நானும் இன்னும் கேக்கேல்ல. கேட்டுட்டு வாறன் எண்டும் சொல்லேலாது. ஏனெண்டா தெரியும்தானே நம்மட இன்ரநெற் வேகம்?

9:02 PM  
Anonymous மாயாவி said...

பன்னாடை ஈழவேந்தா! புலிகளே காதல் திருமணம் செய்யும் போது நாங்கள் அதை பற்றி கதைப்பதே கூடாதா உங்கட தேசிய உணர்வுக்கு ஒரு எல்லையே கிடையாதா ஆண்டவரே இணைய போராளிகளின் தொல்லை தாங்க முடியல

10:12 PM  
Blogger சயந்தன் said...

கேட்டுட்டு வாறன் எண்டும் சொல்லேலாது. ஏனெண்டா தெரியும்தானே நம்மட இன்ரநெற் வேகம்?//

நல்லதாப்போச்சு பகீ அப்புறம் யாழ்ப்பாணத்து பெடியளின்ர தேசிய உணர்வையும் மழுங்கடிக்கிறாய் சகோதரா என ஈழவேந்தன் ஐயாவிடம் கேட்கவேண்டியிருந்திருக்கும் :)

2:51 AM  
Blogger கானா பிரபா said...

இப்ப தான் திருட்டு சிடி மூலம் கேட்டேன் ;-)

சம்பந்தப்பட்ட மூன்று தரப்பு வாதங்களையும் பார்த்தால்

சோமியை இன்று முதல் மட்டக்களப்பு ராஜேந்தர் என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. அநியாயத்துக்கு தலையைச் சிலுப்பி சிலுப்பி கதைக்கிறார். சோடா குடியுங்கோ அண்ணை.

வரவனையாரே, கேரளா ஒப்பீடு அசத்தல் ;-)

சயந்தன் சைக்கிள் கேப்பில் தனக்கு ஒண்டும் தெரியாது மாதிரி கேக்குமாப் போல் இருக்கு. உதாரணம் கடலை போடுதல் எண்டா என்னெண்டே தெரியாதாம். அட்ரா சக்கை அட்ரா சக்கை

துண்டு என்பது தூய (கொட்டாஞ்சேனை) தமிழ் சொல் தான். சோமியை கண்டிக்கிறேன்.

5:03 AM  
Blogger சோமி said...

அட பாவிகளா என்ன பேசினன் எண்டே மறந்து போச்சப்பா. சயந்தன் சொல்லிட்டு போடுடா...... போனவருசம் இருந்த நிலமை வேற இந்த வருசம் இருகிற நிலமை வேற .....எனது ரசிகைகளின் மனம் புண்படாதவகையில் செயற்படுமாறு சயந்தனை எச்சரிக்கிறேன்.
thank u 4 ur comment
Mr.M.K. Ezaventhan XMP

11:18 AM  
Blogger மலைநாடான் said...

//அட பாவிகளா என்ன பேசினன் எண்டே மறந்து போச்சப்பா. சயந்தன் சொல்லிட்டு போடுடா...... போனவருசம் இருந்த நிலமை வேற இந்த வருசம் இருகிற நிலமை வேற //

சோமி!
இதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன்...:)

12:46 PM  
Blogger தமிழ்பித்தன் said...

சோமி அண்ணை சயந்தன் அண்ணா திட்டமிட்டு குடும்பங்ளை பிரிக்க இரகசிய பிளான் போட்டுட்டாரே தெரியாது இன்னும் வேறையும் சொன்னியளே அப்ப உங்கட வேட்டி கிழியிறது நிச்சயம் ((டவுசரைப் பற்றி நான் இனி கதைக்க மாட்டன் அதிலதானாம் எனக்கு இந்தவருடம் காண்டம்)

2:23 PM  
Blogger சினேகிதி said...

\\சோமியை இன்று முதல் மட்டக்களப்பு ராஜேந்தர் என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. அநியாயத்துக்கு தலையைச் சிலுப்பி சிலுப்பி கதைக்கிறார். சோடா குடியுங்கோ ((((அண்ணை))))))).
\\
ம்கும் அண்ணாவா!

7:39 PM  
Anonymous உயர் ஸ்தானிகர் இலங்கை தூதரகம் said...

இந்திய இலங்கை கலாசார இணைப்புத் திட்டத்தின் கீழ் இவ்வாறான நிறைய நிகழ்ச்சிகளைச் செய்யச் சொல்லி ஊக்குவிக்கிறோம்

7:41 AM  
Blogger தமிழன்... said...

நீங்கள் சொன்ன மாதிரி யாழ்ப்பாணத்தில அந்த தமிழ் கதைக்கிற ஆட்கள் இப்ப குறைவு... ஆனாலும் வயது வந்த ஆட்கள் அப்படித்தான் கதைக்கிறார்கள்... சாதாரணமான பேச்சு வழக்கு மாறியிருக்கிறது அதுவும் இளைய சமூகம் கதைக்கிறது நிறைய வித்தியாசம்...

2:30 AM  
Blogger தமிழன்... said...

இன்னும் நிறைய இருக்கு நீங்கள் கதைக்காதது... உங்கடை காலத்திலிருந்து இப்ப நிறைய மாறியிருக்கு அண்ணை...

2:33 AM  
Blogger சோமி said...

ஆளாளுக்கு அண்ணை எண்டு சொல்லி நன் ஏதோ வயனாவன் எண்டு நினைச்சு எனது ரசிகைகளும் சொல்ல ஆரம்பிச்சா நிலமை என்னாகிறது. நன்றி சினேகிதி

1:18 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home