21.3.07

மூன்று பாட்டு ஒரு மெட்டு! கானா பிரபா, இது வேறு தலைப்பு

கானா பிரபா தனது பதிவொன்றில் இட்டிருந்த மெட்டு ஒன்று பாடல் மூன்று எனும் பதிவின் பாதிப்பில் உருவாகிய குரற்பதிவு இது. பொதுவாக சினிமா என்ற ஒரே தளத்தில் வெவ்வேறு மொழிகளில் ஒரு மெட்டு பல பாடல்களில் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் மூன்று பாடல்களும் சினிமாவும் சினிமாவிற்கு வெளியேயுமான வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப் பட்டிருக்கின்றன என்பது குறித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. கேட்டுப் பாருங்கள்.


15 Comments:

Blogger மலைநாடான் said...

சயந்தன்!

முதலில் அருமையான ஒலிப்பதிவுக்குப் பாராட்டுக்கள். மிக மிக நேர்த்தியாக வந்திருக்கு.

இந்த மெட்டு ஒற்றுமையில் நீங்கள் குறிப்பிட்ட நேருக்குநேர் படத்திலுள்ள மூன்று பாடல்கள், அப்படியே அச்சொட்டாகக் கொப்பியடித்தவை. உதாரணத்துக்கு " நோவுமன் நோ க்ரை " பாடலில் வரும் கைதட்டல், விசில் அடிக்கும் சத்தம் எல்லாம் நேருக்குநேர் படப் பாடலிலும் வரும். ஆனால் புலிகளின் காற்று வெளி படப்பாடலில், இடையிசையிலும் , குறிப்பாக வேகப்பரிமாணத்திலும், பொப்மார்லியின் பாடலில் இருந்து மாறுபாடுகள் உண்டு.

இப்படியான இசைநுட்பத் தந்திரங்களை வைத்துக்கொண்டுதான் இசையமைப்பாளர்கள் தங்கள் விளையாட்டை காட்டுவதாக ஒரு செவ்வியிலோ, மேடைநிகழ்ச்சியிலோ இசைஞானி வெளிப்படையாகச் சொல்லி, விமர்சனத்துக்குள்ளானார்.

தமிழ்த்திரையுலகில் இது காலங்காலமாக நடந்து வருவதுதான். வெவ்வேறு தளங்களில் என்ற போது எனக்கு ஞாபகத்துக்கு வந்த அண்மைக்காலப் பாடல் ஒன்று.

எல்.ஆர். ஈஸ்வரியின் கற்பூரநாயகியே கனகவல்லி பாடல் தாமிரபரணி திரைப்படத்தில் கறுப்பான கையாலே ஒன்னை பிடிச்சேன் என உருமாறியுள்ளது.

7:14 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

இதில என்ர பேரையும் பாவிச்சிருக்கிறீர் எண்டபடியா சிலதைச் சொல்ல வேணும்.

நானும் பலரைப் போலவே 'காற்றுவெளி' திரைப்படப் பாடலில் இருந்துதான் 'அகிலா' பாடல் படியெடுக்கப்பட்டதென்று நினைத்துக்கொண்டிருந்தேன். என்றாலும் இப்பாடல் எப்படி இந்தியாவில் ஒலித்திருக்க முடியும் என்ற ஐயம் தொடர்நது இருந்தே வந்தது.
பின்பொரு முறை இசைப்பிரியனோடு கதைத்துக்கொண்டிருந்த போது அவர்தான் இரண்டு பாடல்களும் வேறொரு மூலத்தைக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டார். வேறு பாடலொன்றின் தழுவலில் ஈழத்து எழுச்சிப்பாடலொன்று இசைக்கப்பட்டிருப்பதை முதன்முதலில் அறிந்தபோது ஆச்சரியமாகவே இருந்தது.

அதன்பின் 'உயிர்ப்பூ' திரைப்படத்தில் இடம்பெற்ற - மாவீரன் மேஜர் சிட்டுவுக்கு நீங்காப் புகழைத் தந்த பாடலான - 'சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்' என்ற பாடலின் அடிப்படை மெட்டும் மேற்கத்தைய பாடலொன்றின் தழுவல் என்ற தகவலை அறிந்துகொண்டேன்.
அந்த மூலப்பாடல் சரியாக ஞாபகமில்லை. ஆனால் இருமுறை கேட்டிருக்கிறேன்.
ஆனால் அடிப்படை மெட்டுத்தான் தழுவலேயன்றி இடையிசை உட்பட்ட நிறைய விடயங்கள் மூலத்தினின்று வேறுபட்டவை. அதைவிட அப்பாடலின் உணர்வுக்கிளர்ச்சிக்கு அந்த மெட்டு பெருமளவு பங்களிப்பதாக நான் நினைக்கவில்லை. முதன்மையானது சிட்டுவின் குரல், அடுத்து பாடல்வரிகள், அதையும்விட திரைப்படத்தில் பாடல் இடம்பெறும் காட்சி.

அதன்பின் தமிழீழ எழுச்சிபாடல்கள் சிலவற்றில் பிற இசைகளின் தழுவல் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். 'ஆனையிறவு' தொகுப்பில் வந்த 'தாயின் மணிக்கொடி' பாடல் ஓர் எடுத்துக்காட்டு.

7:17 AM  
Anonymous Anonymous said...

ம்.. நல்லாத்தான் பொடியா செய்திருக்கிறாய். கூட்டாளிமார் வரேல்லையோ உதுகளை பற்றி கதைக்க..

8:46 AM  
Blogger வி. ஜெ. சந்திரன் said...

ஆச்சரியமான தகவல். நன்றி.

11:42 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன் !
பிரபாவின் தொகுப்பு ஒரு இசையமைப்பாளர் தன் சொந்த மெட்டை ஏனைய மொழிகளிலும் அறிமுகப்படுத்தியது. இதை பிரதி எனவோ;அல்லது திருட்டெனவோ கொள்ளமுடியாது.
ஆனால் உங்கள் தொகுப்பு காலங்காலமாக இசையுலகில் அப்பப்போ நடப்பது; அன்றைய நாட்களில்
நாம் வானொலியை மாத்திரம் நம்மி இருந்ததால் தெரியவில்லை; இன்று செய்மதியால் யாவும் வெட்டவெளி ஆகிறது.
உங்கள் "மணிக்குரல்" ப் பேணுங்கள்!!

2:44 PM  
Blogger கானா பிரபா said...

ம் என்ர பெயர் போட்டு பதிவுத் தலைப்பெழுதிற காலமாப் போச்சு, நல்லா இருக்கு.

அழகான அந்தப் பனைமரம் பாடல் கூட உனைக்காணும் பொழுதன்றி வேறுமில்லை என்ற பக்திப் பாடலின் தழுவலாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஒலிப்பதிவைப் பற்றிய என் மனவெளிப்பாடு. நீர் இயல்பாகப் பேசி ஒலிப்பதிவு செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர். அதில் தான் அதிக சுவாரஸ்யமும் இருக்கின்றது. இந்த ஒலிப்பதிவு வானொலிப் பாணியில் அமைந்திருக்கின்றது. இதில் குறை சொல்ல ஒன்றுமில்லை என்றாலும் சயந்தன் பாணி தான் நமக்குப் பிடித்தது ;-)

2:47 PM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சாமீ..இப்படியா ஈயடிப்பாங்க :)

ஒலிப்பதிவு அருமை. சாரல் வானொலி தொடங்கும் திட்டம் ஏதும் இருக்கா :)

கானா பிரபா சொன்ன மாதிரி இயல்பான சயந்தன் மாதிரி பேசினாலே இன்னும் நல்லா முசுப்பாத்தியா :) இருக்கும் !

3:54 PM  
Anonymous Anonymous said...

//கானா பிரபா சொன்ன மாதிரி இயல்பான சயந்தன் மாதிரி பேசினாலே இன்னும் நல்லா முசுப்பாத்தியா :) இருக்கும் !//

Ravi,
Do you use the word முசுப்பாத்தி in TamilNadu? or got it from any SriLankan friend?

4:25 PM  
Anonymous Anonymous said...

nallayirukku

10:30 PM  
Blogger சயந்தன் said...

வசந்தன் மேலதிக தகவல்களுக்கு நன்றி. முருகேசர் பாராட்டுக்கு நன்றி எண்டாலும் திரும்பவும் கூட்டாளி மாருடன் முருங்கை மரத்தில் ஏறியே தீருவன் எண்டதை இப்பவே சொல்லிக் கொள்கிறேன். கானா பிரபா இயல்பற்று இப்படிப் பேசுவது எனக்கும் அன்னியமாகத் தான் தோன்றுகிறது. ஆனாலும் ரண்டு பேர் சேர்ந்தால்த் தான் இயல்பாக கதைக்கலாம் போல இருக்கு. ரவிசங்கர் ஐரோப்பாவில இருக்கிற தமிழ் வானொலிகளின் எண்ணிக்கை போதாதா..? நானும் வந்து கழுத்தறுக்கணுமா..? அதுசரி.. நீங்கள் முசுப்பாத்தியை எங்கையிருந்து பிடிச்சனியள் எண்டு யாரோ பீட்டரண்ணா கேட்டிருக்கிறார். பதில் சொல்லுங்க.

2:56 AM  
Anonymous Anonymous said...

ரோம்ப சுவாரசியமா இருக்கு உங்கள்
பதிவுகள்..
வாழ்த்துக்கள்

நேசமுடன்..
-நித்தியா

4:44 AM  
Anonymous Anonymous said...

உங்கடை சில்லறை கொட்டும் சிரிப்பை கேட்க ஓடோடி வந்தேன். ஏமாற்றி விட்டீர்களே.. சோமியைக் காணாதது பெரும் சோகம்.

7:03 AM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

முசுப்பாத்தி இலங்கை நண்பர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட சொல் தான். தமிழ்நாட்டில் யாருக்கும் புரியாது. இது அரபுச் சொல் என நினைத்து இருந்தேன். அப்புறம் ஒரு வலைப்பதிவில் இது தமிழ் தான் என்று யாரோ நிறுவக் கண்டேன். முசுப்பாத்தி = முசிப்பு + ஆற்றி

11:33 AM  
Anonymous Anonymous said...

புலிகளின் பாடலின் tempo வேறுபட்டிருக்கிறது..

4:28 PM  
Anonymous Anonymous said...

ம்ம்ம்ம் நீங்க சொல்வதில் உண்மை இருக்கு தான்..நல்ல குரல் உங்களுக்கு..

8:09 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home