19.3.07

அந்த ஐந்து பேரையும் யாருக்காவது தெரியுமா..?

இன்று ஒருவருடன் நமது இளம் பராயத்து நினைவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது இது பற்றிய பேச்செழுந்தது. அதாவது நமது இளம்பராயத்து பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற சுவையான சுவாரசியமான கதைகளை இப்போதும் நம்மால் நினைவு கொள்ள முடிகிறதா என கொஞ்சம் முயற்சித்துப் பார்த்தோம். குறிப்பாக தமிழ் ஆங்கில பாடப்புத்தகங்களில் இவ்வாறான நிறையக் கதைகள் இருந்தன. கதைகள் மட்டுமல்லாமல் பாடல்களும் கூட.

இதனைப் படித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது Muru என்பவரைத் தெரியுமா? ஆரம்ப ஆங்கில பாடப் புத்தகத்தில் I am Muru, I am from Nigeria எனத் தன்னை அறிமுகப் படுத்துவாரே.. அவர் தான். அவரைத் தெரிந்திருந்தால் நீங்கள் என் வயதொத்தவர்கள்.

Muru ஐ போல மொத்தம் 5 பேர் இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கு Taro ஐயும் ஞாபகமிருக்கிறது. I am Taro, I am from Japan என்றவர் அவர். இது தவிர இந்தியாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் இருவர் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கூட ஒரு பெண் தன்னை அறிமுகப் படுத்தியிருப்பார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தேங்காய்ப் பூ இனிப்புச் செய்து சாப்பிட்டதும் நினைவிருக்கிறது.

இவர்கள் ஐவரின் பெயர்களும் ஊர்களும் யாருக்காவது தெரியுமா.? எனது அறிதலின் படி வசந்தன், சிநேகிதி, டிசே போன்றோர் இதற்கு பதிலளிக்கக் கூடியவர்களாக இருக்கலாம். இது தவிர, வேறு கதைப்பாத்திரங்களையும் நீங்கள் அறிமுகப்படுத்தலாம். (நான் மூளையைப் போட்டு எவ்வளவு குழப்பியும் சிறு வயது தமிழ்ப் புத்தகங்களிலிருந்து எந்தக் கதையையும் என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. )

எமக்கு முந்தைய பாடத்திட்டத்திலிருந்த இவ்வாறான சுவாரசியமான கதைகள் பற்றியும் அறிய ஆவல் உள்ளது.(கானா பிரபா உங்களை அங்கை சேர்க்கவா ? இங்கை சேர்க்கவா?) எமக்குப் பின்னும் பாடத்திட்டம் மாற்றப் பட்டிருக்கிறது. யாராவது சின்ன வட்டுக்கள் அதையும் எழுதுங்கள்.

தமிழகத்தில் எப்படி..? உங்கள் சிறு வயதில் பாடப்புத்தகங்களில் இருந்த சிறு சிறு கதைகள் அல்லது எவையாயினும் சுவையான விடயங்கள் பற்றி முடிந்தால் ஒரு outline கொடுக்கலாமே..

26 Comments:

Anonymous Anonymous said...

Saman-srilanka,Geetha-india.japan ல இருந்து ஒருத்தரு வருவாரு.அவரு பெரு தான் வரமாட்டன் எண்டுது :-)

10:23 AM  
Anonymous DJ said...

I'm Saman
I'm from Sri Lanka

I'm Geetha
I'm from India

I'm Muru
I'm from Nigeria

I'm Ann(e)
I'm fron England

I'm Taro
I'm from Japan?

Hope I rem something :-).

10:45 AM  
Anonymous பாலா said...

பலாப் பழத்தை காகம் கொத்துகிறது. பாலா அதனை துரத்துகிறான்.

துள்ளிக் கொண்டோடுது வெள்ளைப் பசு

11:52 AM  
Blogger வி. ஜெ. சந்திரன் said...

DJ சரியாகவே பின்னூட்டம் போட்டிருக்கிறார்.
//I'm Saman
I'm from Sri Lanka

I'm Geetha
I'm from India

I'm Ann(e)
I'm fron England//
எனக்கு நீங்க கேட்ட உடன நினைவு வந்தது I'm geetha. I;am from india தான்.
I'm muru. I'm from Nigeria எண்டது எப்ப புலம் பெயர்ந்தனோ அந்த நாளிலை இருந்து எனக்கு அடிக்கடி ஞாபகம் வாறது.
ஏன் எண்டா என்னோட 2 வருசமா படிச்ச ஒரு ஆபிரிக்க நண்பனின் முகம் அந்த பாடத்தில் வரும் படத்தை நினைவூட்டிய படியே இருக்கும். எனது வகுப்பில் பெரும் பான்மையானவர்கள் ஆபிரிக்காவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த ஒருவரை மட்டும் ஏன் அப்படி நினைக்க தோன்றியது என்றோ/ அந்த படத்துடன் பொருத்தி பார்த்தேன் என்றோ தெரியவில்லை.
நான் இத பற்றி அதாவது அந்த நண்பனையும், எங்கட ஆங்கில பாடத்தையும் பற்றி எழுத வேணும் எண்டு நினைச்சனான்...

11:54 AM  
Anonymous Anonymous said...

//இன்று ஒருவருடன் நமது இளம் பராயத்து நினைவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது இது பற்றிய பேச்செழுந்தது.//

வீட்டுக் காரியெண்டு சொன்னால் என்ன குறைஞ்சிடும்.?

12:40 PM  
Blogger சயந்தன் said...

டிசே அதெப்படி 50 வருசம் ஆனாலும் எல்லாத்தையும் ஞாபகம் வைச்சிருக்கிறீங்கள்..?
பாலா நீங்க சொன்னதும் நினைவுக்கு வருகுது.. அதைப் பற்றி மேலும் எழுதுங்கள்.

1:58 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
நான் இவை படிக்கவில்லை. ஆங்கிலம் "new plan reders ல் JESON and argonotes படித்தேன்; பின் அதைப் படமாகவும் பார்த்தேன்;
தமிழ் மலரில் "முதல் பறப்பு" எனும் ஒரு பறவைக் குஞ்சின் முதல் பறப்பின் விபரிப்பும்; "ஓம் நான் சொல்லுகிறேன்"; அபிவிவேகபூரண குரு சிஸ்யர்கள் போன்றவை மறக்கமுடியாதவை!

2:40 PM  
Blogger சினேகிதி said...

டிஜே அளவுக்குக்கூட எனக்கு ஞாபகம் வரேல்ல ஆனால் தேங்காய்ப்பூ இனிப்பு ஞாபகம் வருது :-))

தமிழ்ப்புத்தகத்தில ஆதவன் என்றொரு பெயர் ஞாபகம் வருது..கதைதான் ஞாபகம் வரேல்ல.. பட் நான் நினைக்கிறன் மாமா ஒராள் ஆதவன்ர வீட்ட போக "வெயிலால வந்திருக்கிறீங்கள் மாமா" என்று சொல்லி ஆதவன் தண்ணி குடுப்பார் ; அப்ப மாமா குறிப்பறிந்து நடக்கிறான் ஆதவன் கெட்டிக்காரன் (அப்பிடித்தான் ஏதோ சொலலுவார்).

2:58 PM  
Anonymous Son of கொழுவி said...

//தமிழ்ப்புத்தகத்தில ஆதவன் என்றொரு பெயர் ஞாபகம் வருது..//

தமிழ்ப் புத்தகத்தில அப்பிடியொரு ஆதவனும் வரேல்லை. சிநேகிதி யாரோ தன்ர சிநேகிதப் பெடியன்ரை பெயரை சொல்லுறா போல உள்ளது. சிநேகிதி உண்மையச் சொல்லுங்கோ.. யாரந்த ஆதவன்.. அதுவும் குறிப்பறிந்து நடக்கிற பெடியன்.

3:35 PM  
Blogger கானா பிரபா said...

//(கானா பிரபா உங்களை அங்கை சேர்க்கவா ? இங்கை சேர்க்கவா?) எமக்குப் பின்னும் பாடத்திட்டம் மாற்றப் பட்டிருக்கிறது. யாராவது சின்ன வட்டுக்கள் அதையும் எழுதுங்கள்.//

நான் உங்களுக்குப் பிறகு வந்த பாடத்திட்டம் தானே ;-)
அதுக்காக பெயில் விட்டுப் படிச்சனான் எண்டு சொல்லிப்போடாதேங்கோ. ஆங்கில வகுப்பை நினைப்பூட்டீட்டீர். ஒரு பதிவு தான் போட வேணும். பின்னூட்டத்தில கனக்க எழுதேலாது. Role play என்று சொல்லப்படும் இவைகள் குறித்த நிறைய விஷயம் சொல்லவேண்டியிருக்கு ;-)

கடைசிவாங்கிலிருந்து .....

3:57 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

ஆங்கிலப் புத்தகத்தில நானும் அது படிச்சனான். டீசே சொன்னது எனக்கும் ஞாபகம் இருக்கு. yay!! :O))

சினேகிதி சொல்லுற 'ஆதவன்' சம்பந்தப்பட்ட ஒரு பாடம், பொதுப் போக்குவரத்து வண்டிகளில் ஏற வரிசையில் நின்று பொறுமை காத்து ஏற வேண்டும், முண்டியடிக்கக் கூடாது என்பது. இன்னொரு பாடம், பொதுச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பது. ரயிலில் போகும் போது மின்விசிறி திருடப்பட்டிருந்ததோ அல்லது இருக்கைகள் கிழிக்கப்பட்டிருந்ததோ தான் ஆதவன் & மாமா/சித்தப்பாவிற்கிடையிலான உரையாடலுக்குக் காரணமாய் அமையும்.
(கொழுவி- சினேகிதி பாவம், நீங்க வெருட்ட ஆள் பயந்திடுவா!! :O)

முதலும் (மதியிட பதிவொன்றில என நினைக்கிறன்) கேட்டிருந்தன். ஒரு பழைய இரண்டாம் மூன்றாம் (நான் படிக்கும் போது இருக்கவில்லை, ஆனால் எனக்கு வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது) வகுப்புப் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ஒரு தோட்டத்திற்குள் பட்டம் தொலைந்து போவதும், ஒட்டகச்சிவிங்கியின் உதவியுடன் அது மீட்டெடுக்கப்படுவதுமான கதை இருந்ததே.. யாருக்காவது ஞாபகமிருக்கா?

4:02 PM  
Blogger சயந்தன் said...

//ஆங்கிலப் புத்தகத்தில நானும் அது படிச்சனான். டீசே சொன்னது எனக்கும் ஞாபகம் இருக்கு. yay!! :O))//

`மழை` ஷ்ரேயா(Shreya) அப்போ நீங்க பழைய பாடத்திட்ட ஆள் இல்லையோ..? அப்ப இதுவும் ஞாபகமிருக்கோ..? would you like a cup of tea and biscuit..?
மற்றது அது Son of கொழுவியாம்:(

கானா பிரபா அதெல்லாம் பின்னூட்டத்திலேயே எழுதலாம். ஒரு பிரச்சனையும் இல்லை. வியாபாரம் ஒண்டு தொடங்கினால் உடனேயே போட்டி வியாபாரம் தொடங்கி சனத்தைப் பிரிக்கிறாங்கப்பா.. போன முறையும் உப்பிடித் தான் நடந்தது. அப்புறம் நான் அழுதுடுவன்.

4:13 PM  
Blogger சினேகிதி said...

யா யா ஸ்ரேயா எனக்கந்த ஒட்டகத்தை ஞாபகம் இருக்கு :-)))

கொழுவிக்கு வயசு போச்சென்டு அண்ணைமார் சொன்னது சரியாத்தான் கிடக்கு...

4:34 PM  
Blogger தமிழ்நதி said...

இங்கிலீஸ் பாடம் நல்ல பம்பலாப் போகுது. நாங்கள் படிக்கேக்குள்ளை எங்களுக்கு free பாடம் அப்பதான். பெடியங்கள் அசுமாத்தமில்லாமல் வெளியிலை போயிடுவாங்கள். நாங்கள் மாங்காய்,புளியங்காய் எண்டு திண்டுகொண்டிருப்பம். சயந்தன்!உங்கடை பதிவு பள்ளிக்கூட நாட்களை ஞாபகப்படுத்துது. பயப்பிடாதையுங்கோ... தனிப்பதிவு போட்டு உங்கடை ஆக்களைக் கடத்திக்கொண்டு போயிடுவனெண்டு அழாதையுங்கோ.

6:25 PM  
Blogger சினேகிதி said...

தெனாலிராமனை எல்லாருக்கும் ஞாபகம் இருக்குத்தானே???

அப்புறம் மழைகாலம் ..வெள்ளம் பற்றி ஒரு பாட்டிருக்கல்லோ....

6:57 PM  
Blogger வசந்தன் said...

டி.சே. சொன்னது முழுக்கச் சரிதான்.
ஊரில, அந்த ஐந்துபேரில ஒராளின்ர பேராலை நான் அழைக்கப்பட்டேன்.
எனது தலைமயிர் அச்சு அசலாக அவர்களில் ஒருவரின் தலைமயிரைப் போலவே இருக்கும். (இப்போதும் பெருமளவு மாறவில்லையென்றுதான் நினைக்கிறேன். ஆனால் எந்தநேரமும் நல்லா ஒட்ட வெட்டியிருக்கிறதால அந்தத் தோற்றம் தெரியாது)
__________________________________
கொஞ்சம் வளர்ந்து படித்தவற்றில் ஆங்கிலப் பாடத்தில் Role Play தான் ஓரளவுக்கு ஞாபகம் இருக்கும் பகுதி. மற்றும்படி எதுவுமே தெரியாது. ஆங்கிலப்பாடத்துக்கு எங்களைப் போன்ற பின்வாங்கார் செய்வதெல்லாம் வாசிப்புத்தான். வாசிப்பென்றால் பாடப்புத்தகத்தை வாசிப்பதில்லை; வாத்திதான் முன்னுக்கு பாடப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பார். பொதுவாகவே பலர் ராணி காமிக்ஸை பாடப்புத்தகத்துள் வைத்து வாசிப்பர். 94 இல பேனை சுண்டிற விளையாட்டு பிரபலமாக இருந்தது. தனியார் கல்விநிலையங்களில படிச்சவையள் இதை மறந்திருக்க மாட்டினம். நாங்கள் ஆங்கிலப்பாட நேரத்தில அந்த விளையாட்டைப் பள்ளிக்கூடத்திலயும் விளையாடுவம். (நான் படிச்ச கல்லூரியின் பேரைச் சொல்லி, அங்க அப்பிடியெல்லாம் விளையாடினாங்கள் எண்டு சொன்னா எங்களுக்கு முந்தி அங்க படிச்சு வெளியேறின பழைய மாணவர் யாருமே நம்ப மாட்டார்களாம்.;-(()

__________________________________
அதுசரி, உவர் பிரபா இன்னும் கடசிவாங்கிலயிருந்து எழும்பிப் போகேலயோ?

9:26 PM  
Blogger கொழுவி said...

டோய்!
ஆரடாப்பா அது எனக்கே தெரியாமல் என்ர மோன் எண்டுகொண்டு வாறது?
தம்பி! நீ வீட்டில வீணாப் பிரச்சினை கிழப்பப் பாக்கிறாய்.
உது சரியில்லை. அமைதிப் பூங்காவா இருக்கிற வீட்டைக் குழப்பிப் போடாதை.

முந்தி எங்கட இயக்கத்தில இருந்து கலைக்கப்பட்ட குழப்பியின் வேலையாக இருக்குமோ?

9:27 PM  
Blogger மோகன்தாஸ் said...

சயந்தன் நிறைய சொல்லலாம், எங்களுக்கு துணைப்பாடப்பகுதி என்று ஒரு அய்ட்டம் உண்டு, கல்லூரி வரையில். அதுமட்டுமில்லாமல் நான் படித்த சாமியார்ப் பள்ளியில்(இந்து) வியாழக் கிழமை மாரல் ஸ்டடீஸ் வகுப்பு நடக்கும்.

வரிசையாக, ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர் இப்படி வருடம் ஒன்றில் ஒருவரைப் பற்றிப் படிப்போம்.

என்னோட புத்திக்கு பட்டுன்னு நினைவில் வரும் ஒரு கதை, ஒரு நாய் குட்டி போட்டிருக்கும், பால் குடிக்க முடியாத சூழ்நிலை குட்டிக்கு. ஒரு அம்மா தன்னுடைய தாய்ப்பாலை கொடுப்பாங்க ஒரு கொட்டாங்குச்சியில்.

எங்க ஆங்கில் ஆசிரியர் சிவராமன்னு, சேக்ஸ்பியரை அப்படியே நடித்துக் காட்டுவார் மனிதர். ரொம்ப திறமையான ஆளு, நாங்கல்லாம் அவரோட கிளாஸுக்காக காத்திருப்போம்.

துணைப்பாடப்பகுதி கதைகள் எல்லாமே நல்லாயிருக்கும், அதேபோல வாழ்க்கையென்பது கவிதையோ கற்பனையோ அல்ல அப்படின்னு ஒரு கதை, தன்னோட மனைவிக்கு தன் நண்பன் மூலமா சின்ன வயசில் காதல் கடிதம் தந்திருப்பார் அதைப் பத்தி ஒரு கதை.

தன்னை மிகத்திறமையான வாடிக்கையாளர் அப்படின்னு நினைக்கிற ஒருத்தர் கிட்ட புல்லாங்குழலை விப்பாங்க அதைப் பத்தி ஒரு கதை. இப்படி நிறைய நல்ல கதைகள்.

9:46 PM  
Blogger Thillakan said...

உய்.. உய்....

எனக்கும் எல்லாம் நியாபகம் வருது!!!!!

தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வா நாய்க்குட்டி
நான் வளர்த்த நாய்க்குட்டி
........ மிச்சத்தை நீங்க நிரப்புங்க

புள்ளி புள்ளி மானே
துள்ளி ஒடி வா
அள்ளி இந்த புள்ளிய
யாருனக்கு தந்தது,
ஹ்ஹ ஹ்ஹா ஹ்ஹா ஹா

நிலா நிலா ஒடி வா ....

மாதன முத்த கதை இருக்கு பிறகு வருன் அது என்ர அண்ண்ட புத்தகதில் இருந்தது
ஏன்ர காலதில் புத்தகதில் இருந்து எடுத்திடாங்க.

11:37 PM  
Blogger சினேகிதி said...

எனக்கு மோகன்தாஸ் சொன்னமாதிரி எழுதினதை வாசிச்ச உடன சிவபெருமான் பன்றிக்குட்டிக்கு பால்குடுத்த கதை ஞாபகம் வந்திட்டு.

11:38 PM  
Anonymous சிவபெருமான் said...

புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான். அந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டது. இது சைவ பாடத்தில வந்ததே..

12:54 AM  
Blogger சயந்தன் said...

ஒட்டகச் சிவிங்கி கதை நானும் பார்த்திருக்கிறேன். ஆனா அது பழைய புத்தகம். அது தவிர படம் பார் கதை சொல் என்ற ஒரு பாடம். இரண்டு ஆடுகள் எதிரும் புதிருமாக வந்து முட்டி மோதி பின்னர் விட்டுக் கொடுக்கும். இது பாலர் வகுப்பு. அப்பவெல்லாம் புது வகுப்புக்கு போகும் போது புது புத்தகம் வாங்கிறதும் உறை போடுறதும் ஒரு திருவிழா மாதிரி நடக்கும். சில நேரங்களில பழைய புத்தகங்களும் கொடுக்கப்படும். அப்ப வீட்டை வந்து அழுவதும் உண்டு. (இலங்கையில் இலவச பாடப் புத்தகங்கள். )

3:46 AM  
Blogger ரவிசங்கர் said...

வடை சுட்ட பாட்டிக்குப் பேர் இல்லியே :)

இருந்தாலும், இந்தப் பதிவு over flashbackஆ இருக்கே !! ;)

6:09 AM  
Blogger தமிழ்நதி said...

திலகன்,

ஏன் மிச்சத்தை விட்டிட்டீங்கள்?

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லியப் பூ கொண்டு வா..!
(கடைசி வரிக்கு ஒரு துள்ளுத் துள்ளி கையையும் தட்ட வேணும்.. எதுக்கும் அக்கம் பக்கம் பாத்துச் செய்யுங்கோ)

நாங்கள் படித்த காலத்தில் ஒரு கதை படித்தோம். முலாம்பழம் அழுகியிருக்கும் உண்மையைச் சொல்லி விற்பனை செய்த பையன் வாழ்வில் உயர்நிலையை அடைந்ததாக. இப்ப உண்மையைச் சொன்னா ஒரு மாதிரிப் பாத்திட்டெல்லோ போறாங்கள்!

6:10 AM  
Blogger தமிழ்பித்தன் said...

எனக்கு ஆங்கில ரீச்சர் செய்த பாக்கு பொம்மை நினைவிருக்கிறது (நான் தான் வீட்டிலிருந்து பாக்கு கொண்டு போனனான்

2:40 PM  
Blogger சின்னக்குட்டி said...

றெயின் றெயின் ஹோ எவே...ஹம் எகெய்ன் எனதெர் டே

7:05 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home