1.3.07

தமிழ்மணத் தடையினை உடைத்தவன் நான்

என்ன பாக்கிறீங்க.. ஆச்சரியமா இருக்கா.. இவனுக்கு மட்டும் எப்பிடி 34 வது பின்னூட்டத்தினையும் தமிழ்மணம் திரட்டுது என்று தானே ஆச்சரியப் படுறீங்க.? தடைகள் தாண்டப்பட வேண்டியவை அல்ல.. தகர்த்தெறியப்பட வேண்டியவை என்று என்ர ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார். அதனால என்ர அறிவைப் ? பாவிச்சு .... ... இந்த இடத்தில நீங்க கண்டு பிடிச்சிடுவீங்க. இவன் சுத்துறான் எண்டு.

சத்தியமா எனக்கொண்ணும் தெரியாதுங்க. வெறும் 8 பின்னூட்டத்தை 34 பின்னூட்டம் எண்டு காட்டுறதில எனக்கொண்டும் பிரச்சனையில்லைத்தான். ஆனா என்ர கவலையெல்லாம் இனி வாற 9வது 10வது பின்னூட்டங்கள் காட்டப்படுமா இல்லாட்டி 35 வது பின்னூட்டம் வரைக்கும் காத்திருந்து பிறகு தான் திரட்டுமா என்பது தான். (அப்பிடிப் பாத்தால் கூட 35 என்ற எண் 30 க்கு பிறகு வாறதாலை தமிழ்மணத்தில வராதே..)

12 Comments:

Anonymous Anonymous said...

சொன்னாப்போல டோண்டுதான் முதலிலை உடைச்சவர். பிறகு மு. கார்த்திகேயன். நீர் மூண்டாவதோ நாலாவதோ ஆளெண்டுதான் சொல்லுறதெண்டா சொல்லோணும்

6:05 AM  
Anonymous Anonymous said...

இன்னொண்டு. தமிழ்மணத்தில முன்பக்கத்தில நாப்பதாம் உச்சக்கட்டம். நீரொண்டும் மதகை உடைக்கேல்லை. அவையளே திறந்து விட்டுப்போட்டினம் போல கிடக்கு.
போன 24 மணித்தியாலங்களிலை வந்த மறுமொழிகள் பக்கத்தில எல்லையில்லாமல் பின்னூட்டம் அத்தினையும் தோன்றுமாம். பின்னூட்டம் மொடரேற் பண்ணோணும் எண்டதையும் கழட்டிப்போட்டினமாம். அவையளின்றை இரவே பக்கத்தில சொல்லியிருக்கினம்

6:08 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

//சொன்னாப்போல டோண்டுதான் முதலிலை உடைச்சவர்.//

எப்போ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6:14 AM  
Blogger சயந்தன் said...

ஆமால்ல.. ஏற்கனவே தடைய உடைச்சிட்டுப் போயிட்டாங்க..

6:17 AM  
Blogger ரவிசங்கர் said...

மேல உள்ள anony சொல்லுறது சரி.

1. 34 காட்டுவது நிரற் கோளாறு. விரைவில் சரி செய்வார்கள்

2. 40 உயரெல்லை

3. மறுமொழி மட்டுறுத்த தேவை இல்லை

நாளை முறையான அறிவிப்பு வரும். இது எல்லாம் தமிழ்மணப் பதிவுல மறுமொழிகள்ல தமிழ்மணம் நிர்வாகம் சொல்லி இருக்கு..

எப்படியோ ஆட்களை இழுக்கிற மாதிரி தலைப்பு வைக்கிறதுல வல்லவர் நீங்கன்னு இன்னொரு முறை நிருபிச்சுட்டீங்க..இதப் பத்தி ஒரு பதிவு போடுங்க :)

6:20 AM  
Blogger சயந்தன் said...

//34 காட்டுவது நிரற் கோளாறு. விரைவில் சரி செய்வார்கள்//

என்னத்துக்கு சரி செய்யணும். அப்பிடியே கிடக்கட்டும். 34 என்ற இலக்கத்தை அதிலயாவது பார்த்து பரவசப்படுவோம்.

6:26 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன் !
இதையும் படியுங்கோ!!


johan paris
March 1st, 2007 | 7:09 am
நிர்வாகிகளுக்கு!
தற்போது பின்னூட்ட எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நண்பர் கூறி அறிந்தேன்.
என் பதிவுகள் அந்த அளவு பின்னூட்டம் பெறுபவை அல்ல!
எனினும் நான் இறுதியாகப் போட்ட “இத்தனை கால்களா? இதுக்கு” எனும் பதிவுக்கு, என் மறு பின்னூட்டமுட்பட 9 பின்னூட்டம் வந்த நிலையில்; (64) அடைப்புக் குறியுள் போட்டு; மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலராவது படிக்கக் கூடிய என் பதிவு முடங்கிக் கிடக்கிறதே!
எனும் கவலையாக உள்ளது;
ஏற்கனவே!!! இலையான் கலைப்பு;;;இப்படி ? தடையும் வந்தால்;நான் எழுது நானே படிக்க வேண்டியதே!!
எதாவது செய்து 30 க்குள் ;(வந்தால்) தலைப்பில் தெரிய ஆவன செய்யவும்.
தலைப்பில் நிற்க பின்னூட்டும் வித்தை எதுவுமோ,ஏற்பாடோ நான் செய்வதில்லை.
ஆனால் சகலருக்கும் பதிலிடும்;குறைந்தது நன்றி சொல்லும் பழக்கமுடையவன்!!சில சமயம் அவர்கள் கேட்கும்; பதிவு பற்றிய மேலதிக கேள்விகளுக்குப் பதில் கூறியே ஆகவேண்டியுள்ளது;
ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.
தங்கள் உதவி சேவைக்கு நன்றி
=====
பதிவர் யோகன்:

இதுபோல வேறு சில பதிவுகளுக்கும் நிகழ்ந்திருப்பது நாம் அறிந்ததே. இதைக் குறித்தும் இப்போது நாற்பதுவரைக்கும் முன்பக்கத்திலும் எல்லையின்றி “24 மணிநேர மறுமொழிகள்” பகுதியிலும் பின்னூட்ட இற்றைப்படுத்தல் தோன்றுமென மேலே சுட்டியிருக்கிறோம். மீண்டும் புதிய பின்னூட்டங்கள் வரும்போது, மாறுதல் தென்படுகிறதா பாருங்கள்.

புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

6:29 AM  
Blogger சயந்தன் said...

உங்கை எனக்கு முதலே கனபேர் தடையினை உடைச்சிருக்கினம். உது தெரியாமல் நான் அவசரப்பட்டு விட்டன். தமிழ்மணத் தடையினை உடைத்தவர்களில் நானும் என தலைப்பை திருத்தி வாசிக்கவும்.

6:34 AM  
Anonymous Anonymous said...

பின்னூட்டங்களைத் திறந்து விடலாமாம். யாரும் திறக்க மாட்டாங்க. அப்புறம் ஒரு நாளில 30 பின்னூட்டம் கிடைக்கும். ;)

6:49 AM  
Blogger டிசே தமிழன் said...

தலைப்பை மாத்து தல.
இல்லையெனில்...
என்னுடைய பதிவொன்றில் முதன்முறையாக பின்னூட்டங்கள் முப்பதைத்தாண்டப்போகின்றது என்று அறிந்துதான் தமிழ்மணம் இந்த்த்தடையை அகற்றினார்கள் என்று நானுமொரு பதிவு போடப்போகிறன்.

7:14 AM  
Blogger R. கரன் said...

ஏற்கனவே தடைய உடைச்சிட்டுப் போயிட்டாங்க.

2:10 PM  
Blogger பொன்ஸ் said...

//என்னத்துக்கு சரி செய்யணும். அப்பிடியே கிடக்கட்டும். 34 என்ற இலக்கத்தை அதிலயாவது பார்த்து பரவசப்படுவோம்.//

:)))) அ.மு.கவினரைக் கூப்பிட வேண்டியது தானே! :)

4:25 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home