15.2.07

கூகுள் றீடரில் பின்னூட்டங்கள்

நீங்கள் கூகுள் றீடர் போன்ற செய்தி ஓடைகளுக்கான செயலிகள் ஊடாக பதிவுகளைப் படிக்கும் பழக்கம் உடையவரா?

நீங்கள் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் குறித்த ஒரு இடுகை தொடர்பான புதிய பின்னூட்டங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா..?

புதிய பின்னூட்டம் இடப்பட்டிருக்கும் போது அப்பதிவு கண் சிமிட்டும் நேரமளவே தமிழ் மணத்தில் தங்குவதால் நீங்கள் ஆர்வமுடன் படித்த ஒரு இடுகையை அதன் பின்னூட்டங்களுடன் பின் தொடர முடியாது போகலாம்.

உங்களுடைய கூகுள் றீடரில் கீழ்க்கண்ட முகவரியை இணைத்து விடுங்கள். இங்கே sayanthan.blogspot.com என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பிப் படிக்கும் வலைப்பதிவைச் சேருங்கள். நீங்கள் Fire Box பயன்படுத்துபவராக இருந்தால் நேரடியாக அதிலேயே இந்த இணைப்பை இணைத்து விடலாம். அது இலகுவானதும் கூட.

இதெல்லாம் நமக்காகாதப்பா என்பவர்கள் இந்த முகவரியை உங்கள் இணைய உலாவியில் ஒரு தடவை முயற்சித்தாவது பாருங்கள்.

http://sayanthan.blogspot.com/feeds/comments/full

1 Comments:

Blogger சயந்தன் said...

இந்தப் பதிவை இட்ட நேரமோ என்னவோ.. நேற்று முதல் இந்த இணைப்பில் ஒரு வருடத்துப் பழமையான பின்னூட்டங்கள் திரட்டப்படுகின்றன. ஆனால் இத உலகம் முழுவதிலும் உள்ள புளொக்கர்களால் உணரப்படுவதாக எல்லா Groups இலும் கூறுகிறார்கள்.

இப்போதைக்கு கடைசிக்கு முதல் பின்னூட்டம் வரை காட்டவதற்கான தற்காலிக ஏற்பாடு.. செய்ய முயல்கிறேன். அதற்கான சோதனை இது.

8:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home