7.2.07

பின்னூட்டங்களும் திரட்டப்படுகின்றன

புளொக்கரில் அதாகப் பட்டது புதிய புளொக்கருக்கு மாறிய பின்னரும் கிளாசிக் வகை வார்ப்புருவையே விடாப்பிடியாக பயன்படுத்தும் இப்பதிவில் பின்னூட்டங்களைத் திரட்டி வெளியிடும் வசதியினை செய்திருக்கின்றேன். எனது பதிவில் பின்னூட்டமிடும் நண்பர்கள், அன்பர்கள், வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மற்றம் பெயர்கள் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, வலைப் பதிவின் சகல பக்கங்களிலும் காட்சிப் படுத்தப்படும். ( அது தவிர பின்னூட்டங்களில் தனித் தனியவும் நன்றி செலுத்தப்படும். :)

இந்த வசதி ஏற்கனவே wordpress சேவையில் உள்ளது. தவிர புதிய புளொக்கரின் புதிய layout முறையிலும் உள்ளதாம்.(சரியாக தெரியாது) கிளாசிக் வார்ப்புருவிலேயே இருந்து கொண்டு ஏற்படுத்திய இரண்டாவது வசதி இது. இதற்கு முதல் லேபிள்கள் மூலம் பதிவுகளை வகைப் படுத்தியிருந்தேன்.

செய்தி ஓடைகளைக் கொண்டு நமது இணைய உலாவியிலேயே புதிய பதிவுகளை மட்டுமல்ல.. புதிய பின்னூட்டங்களையும் உடனுக்குடன் படித்து முடிக்கின்ற வாய்ப்புக்கள் ஏற்படுகின்ற போதும்.. குடுமிச் சண்டை குழாயடிச் சண்டைகள் மட்டுமல்ல.. யுத்தச் :) செய்திகளைப் படிப்பதற்கும் தமிழ்மணத்திற்கு வருவது தான் சுவாரசியம்.

இப்போ கருத்து இட்டவர்கள் என்னும் இப் பின்னூட்டத் திரட்டில் கருத்தெழுதியவரின் பெயரின் மீது கிளிக்குவதனால் மூலப் பதிவுக்கு செல்லலாம். அங்கு உங்கள் பின்னூட்டங்களையும் இடலாம்:)

4 Comments:

Blogger கானா பிரபா said...

க்கும் க்கும் (துக்ளக் சோ செருமும் பாணியில்)

4:52 PM  
Anonymous Anonymous said...

Superppppppp

10:08 PM  
Anonymous kanthan said...

புளொக்கர் கூட இவ் வசதியைத் தருகின்றதே..

11:54 PM  
Anonymous யோசித்தவன் said...

திரட்டப்படும் பின்னூட்டங்களில் உங்கள் பெயர் தான் அதிகமாக உள்ளது. நன்றிப் பின்னூட்டங்களோ :)

8:14 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home