21.2.08

4 வது ஆண்டில் சாரல். வாழ்த்த வரிசையாய் வாருங்கள்

சும்மாயிருந்த பொழுதொன்றில் நானெழுதிய யானைக்கதையொன்றைத் தேடிப்புறப்பட்டபோதுதான் புலப்பட்டது. கடந்த பெப்ரவரி 13 இல் சாரல் நான்காவது வருடத்தில் நுழைந்து விட்டிருந்தமை. அட நான்கு வருடமாயிற்றா ?

சாரல் Blogspot இற்கு வருவதற்கு முன்பே 2004 செப்டெம்பரில் யாழ்.நெற்றில் (நெட்டில்) சஜீ என்ற ஒற்றைப்பெயரில் வைத்திருந்த குடில் (அப்போது இந்த பெயரில்தான் blog எனக்கு அறிமுகமாயிற்று. ) பின்னர் காணாமல் போய்விட்டது. நான் சேமித்து வைத்திராத நிறைய நனவிடை தோய்தல் எழுத்துக்கள் அதனோடு மறைந்து போயின. ஈழத்தமிழர்கள் அதிகம் இறந்தகாலத்து நினைவுகளையே வலையில் அழுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பலமான ஆதாரமாக இருந்த தளம் அது.

பின்னர் இடையில் சாரலை ஆரம்பித்து மெல்பேணில் ஒரு நடுநிசி தாண்டிய இரவில் சக்தி வானொலிச் செய்தியொன்றை கேட்டுவிட்டு எழுதிய முதல்ப்பதிவு நேற்றுப்போல இருக்கிறது.

கடந்த வருட முற்பகுதியில் நிறைய ஒலிப்பதிவுகள் செய்தது போல இப்போதும் நிறையச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. அப்படித்தான் நண்பர்களும் சொன்னார்கள். (முழு ஒலிப்பதிவுகளையும் கேட்க இங்கு அழுத்துக) (ஒருவர் என்னை எதிர்பார்த்துக்கொண்டு பண்டத்தரிப்புச் சந்தியிலேயே குந்தியிருக்கிறாராம்.)

தவிர இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயத்தினையும் முடித்திட வேண்டும். தொடங்கியாயிற்று.

இப்படியான ஆண்டு விழாக்களை வலையில் கொண்டாட ஒரு மரபு உள்ளது. யாரேனும் நாலு பதிவர்களிடம் பாராட்டுப்பெற்று வெளியிடுவதுதான் அது. அதையே நானும் செய்ய நினைத்தேன். ஆயினும் கேட்கும் போது அதற்கென்ன தந்தால்ப் போச்சு என மெயில் அனுப்புவார்கள். பிறகு அதை அடியோடே மறந்து போவார்கள் என்பதனால் :)))) அந்த எண்ணத்தை கைவிட்டாயிற்று.

வேறென்ன.. வாழ்த்த வாற ஆட்கள் வரிசையாய் வாருங்கள்.. :))

11 Comments:

Blogger சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள்

நான் தான் முதலாவதாய் போல

சும்மா கொழுவிறன் என்று நினைக்காதையுங்கோ

உண்மையாய் நாலு வருஷமாச்சோ -;))

4:19 PM  
Anonymous Anonymous said...

ஒருவர் என்னை எதிர்பார்த்துக்கொண்டு பண்டத்தரிப்புச் சந்தியிலேயே குந்தியிருக்கிறாராம்

-;))-;))-;))

12:14 AM  
Blogger Mohandoss said...

அப்பப்ப சாரலை விட்டுட்டு ஓடிப் போய்விடுகிறீர்கள்.

தொடர்ச்சியாய் எழுதுங்கள் என்பதைத்தவிர என்ன சொல்ல!

//ஈழத்தமிழர்கள் அதிகம் இறந்தகாலத்து நினைவுகளையே வலையில் அழுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பலமான ஆதாரமாக இருந்த தளம் அது.//

ஏறக்குறைய எல்லோருக்குமே இறந்த காலத்து நினைவுகள்(அவை சோகமாக) இருக்கும் பொழுது, எழுத்தில் அது இயல்பாய் வெளிப்பட்டேத்தீரும். அதை வலுக்கட்டாயமாகத் தடுத்தி நிறுத்திவிடாதீர்கள் என்பதை பின்னிணைப்பாகச் சொல்லிக் கொள்(ல்)கிறேன். :)

12:49 AM  
Blogger கலை said...

வாழ்த்துக்கள். வரிசையில நானும் ஒரு ஆள். :)

1:13 AM  
Blogger பகீ said...

வாழத்துக்கள் குருவே.....

3:02 AM  
Blogger U.P.Tharsan said...

அட நான்கு வருடங்கள் முடிந்துவிட்டதா! வாழ்த்துக்கள்.

சொதிப்பதிவுபோல என்னும் நிறைய பதிவுகளுக்காய் நாங்கள் காத்திருக்கிறோம்.

5:28 PM  
Blogger மலைநாடான் said...

வாழ்த்துக்கள் தலைவா! :)

8:17 PM  
Blogger மாயா said...

வாழ்த்துக்கள் :))

11:26 PM  
Blogger ஆ.கோகுலன் said...

//வாழ்த்த வரிசையாய் வாருங்கள்//
என்னதான் யாழ்ப்பாணத்த விட்டு வந்தாலும் உந்த வரிசைக்குணம் இன்னும் போகேல்லை. பதிவில் நவாலி வலிகளை சொல்லியிருந்தவிதம் உணர்ச்சிகரமானது (ஆனந்தன் அண்ணா). வரிசையாய் எழுத வாழ்த்துக்கள்.

2:10 AM  
Blogger சோமி said...

வாழ்த்துக்கள் தலைவரே,
வாழியவே பல்லாண்டுகாலம் வாழியவே வாழ்க வாழ்க வாழியவே. இதைப்பாடலாக இன்னும் சிலவரிகளைச் சேர்த்து ஒலிப் பின்னூட்டம் இட ஆசை 5 ம் ஆண்டிலாவது அந்த வசதிக்கான கண்டுபிடிப்பைச் செய்வதற்க்கு வாழ்த்துக்கள்

4:49 AM  
Blogger சினேகிதி said...

வாழத்துக்கள் சயந்தனண்ணா.

5:48 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home