27.5.07

என்ரை மனிசியும் ட்ரைவிங் பழக வேணும்

மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம். மனுசன் அங்காலை பார்ட்டியில நிற்கிறாராம். அங்கை வந்த பெரும்பாலான ஆண்கள் பார்ட்டியில தான் நிப்பினம் எண்டதை ஊகித்துக் கொண்டேன். எனக்கும் இதில குந்தியிருக்கிறதை விட அங்கை போனால் பொழுது போகும் எனத் தோன்றியது. ஆனாலும் ஆரும் வந்து கூப்பிடாமல் எப்பிடிப் போறது..? என்னைக் கூப்பிடக் கூடிய யாரும் பக்கங்களில நிக்கினமோ எண்டு அங்காலை இங்காலை பாத்தன். யாருமில்லை. இதில இருந்தாச் சரிப்படாது யாற்றையும் கண்ணில படக் கூடிய மாதிரி நின்றால்த் தான் சரியென எழுந்து ஓரமா வந்தன்.

மேடையில குழந்தையின் கையைப் பிடிச்சுத் தாயே கேக்கை வெட்டி, அவவே அப்பாக்கும் தீத்தி விட்டா. குழந்தை வீரிட்டு கத்திக் கொண்டடிருந்தது. மேடையின் கீழே ஒரு பத்துப் பதினைஞ்சு பேர் முதல்ல போய் மொய் குடுக்கவும், வீடியோக்கு முகம் காட்டவும் தயாராய் கியூவில நின்றனர்.

´´என்னடாப்பா இங்கை நிக்கிறாய்? எங்கை நிண்டனி இவ்வளவு நேரமும்.. வா வா உள்ளை வா.. ´´ ஐய்யோ தெய்வமே.. ஆரோ என்னைக் கூப்பிடுகினம். இனி பொழுது சுவாரசியத்துக்குக் குறையில்லாமல்ப் போகும். ´´சும்மா இந்தப் பக்கம் வந்தனான்´´எண்டு நான் சொல்லிக்கொள்வதை கவனத்திலேயே எடுக்காதவர் போல அவர் நடக்க, நான் பின்னால் போய் ஒரு சில தெரிந்த முகங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.

´´என்ன விசர்க்கதை கதைக்கிறியள்.. பொடியள் இப்ப கிழக்கில இருந்து வெளியேறிப் போட்டாங்கள். இது ஒரு தன்மானப் பிரச்சனையெல்லோ எண்ட படியாலை அடுத்த அடி மணலாறில தான் விழும். மணலாறைக் கையுக்கை கொண்டு வந்தாத்தான் கிழக்கில அடியளைத் தொடங்கலாம்´´ எண்டு அங்கையிருந்து சொன்னவர் கையில இருந்த க்ளாசை அடிக்கடி ருசி பாத்துக்கொண்டார். அவர் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி இடைமறித்துக் கொண்டிருந்த இன்னுமொருவர் இப்ப முழுவதுமாய்ச் சொல்லத் தொடங்கினார். ´´கிழக்கில இப்போதைக்கு கை வைக்கிறதில்லை´´ ஏதோ தான் தான் அந்த முடிவை எடுத்தவர் மாதிரிச் சொன்னவர் ´´முதல்லை யாழ்ப்பாணத்தில தொடங்க வேணும். பொடியள் தாங்கள் பலமாயிருக்கிறம் எண்டு காட்ட வேணுமெண்டால் யாழ்ப்பாணத்தை தங்கடை கையுக்குள்ளை கொண்டு வரோணும்´´ எண்டு முடித்தார். நான் வந்ததன் பிறகு அவருக்கு இது ரண்டாவது ரவுண்ட்.

´´அது மட்டுமில்லையண்ணை. யாழ்ப்பாணத்தை அவன் பிடிச்சு பன்னிரண்டு வருசமாச்சு. இனியும் விட்டுவைக்கேலாது. கெதியில தொடங்க வேணும்´´ என்றவரை எனக்கு யாரென அடையாளம் தெரியவில்லை. சில வேளை கிட்டடியில வந்திருப்பார். ´´ஓ... அதை விட இப்ப எங்களுக்கு ஆள்வளம் தேவை. யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இடத்தைப் பிடிச்சால்த் தான் தேவையான ஆள் வளத்தைப் பெறலாம்´´ என்றவர் போன வருசம் தான் தன்ர மூத்த மகனை ஏஜென்சி மூலமும் மற்றப் பிள்ளையள் ரண்டு பேரையும் மனிசியையும் ஸ்பொன்சரிலையும் இங்கை கூப்பிட்டவர்.

´´இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறதுக்கில்லை. நீங்கள் போடுற பிளானுக்கும், ரைம் ரேபிளுக்கும் அங்கை சண்டை பிடிக்கேலாது தெரியுமோ.. ´´ யாரோ உறைப்பாக் சொன்னது கேட்டது. பிறகென்ன.. இங்கையும் தெளிவாக் கதைக்கிறதுக்கு ஆரோ இருக்கினம் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன். அதுக்கு ஆரும் பதில் சொல்லேல்லை. பதில் சொல்லுறதுக்கும் ஒண்டும் இல்லைத் தானே. ரண்டு மூண்டு பேர் எழும்பி வெளியில போயிச்சினம். மேடையடியில இப்ப பெரிய கியூ நிண்டது. பிறந்த நாள் குழந்தையின் கையில குடுக்கிற என்வெலப்புக்களை தாயும் தகப்பனும் சிரிச்சுக் கொண்டே வாங்கி பின்னாலை வைத்துக்கொண்டிருந்தினம். இன்னும் கொஞ்சம் கியூ குறையட்டும் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன்.

´´என்னடா.. உதோடையே அப்ப துவங்கி இருக்கிறாய். ஏதாவது பெரிசா அடியன்´´ எண்ட ஒருவர் பெரிசா ஒரு போத்தலை என்னருகில் நகர்த்தினார். ´´இல்லையண்ணை. பெரிசு பழக்கமில்லை. லைட் தான் எப்பவும். அதோடை போகேக்கை ட்ரைவிங் செய்ய வேணும். உது சரிப்பட்டு வராது.´´ எண்டு நான் சொல்லி முடிக்க முதலே அவரிட்டை இருந்து ஒரு இடிச் சிரிப்பு வெளிவந்தது. கொஞ்ச நேரத்துக்கு கெக்கட்டம் போட்டு அவர் தொடர்ந்து சிரிக்க, இதில சிரிக்கிறதுக்கு என்ன இருக்கெண்டு எனக்கு விளங்கவில்லை.

´´ஏன்ராப்பா உன்ர மனிசி இன்னும் ட்ரைவிங் பழகேல்லையே..? என்ரை மனிசியை வந்து ஆறுமாதத்தில பின்னாலையும் முன்னாலையும் கலைச்சு லைசென்சை எடுக்கப் பண்ணிப் போட்டன். ஒரு மூவாயிரம் செலவழிச்சது. இப்ப பார் ஒரு பிரச்சனையும் இல்லை. எவ்வளவும் ஏத்தலாம். காசைப் பாக்காதை. மனுசியை உடனை லைசென்சை எடுக்கச் சொல்லு. ´´ எண்டு சொல்லிப் போட்டு ´´பெரிய மனுசர் சொல்லுறதைக் கேட்டு நட´´ எண்டு வேறை சொன்னார்.

வெளியில கியூ சரியாக் குறைஞ்சிருந்தது. மேடையில ஏறி சிரிச்சு வாழ்த்துச் சொல்லிப் போட்டு, பார்சல் பண்ணி வைச்சிருந்த விளையாட்டுப் பொருளை தாயிடம் குடுக்க அவ லேசா சிரிச்சா. எண்டாலும் என்வெலப் குடுக்கும் போதிருந்த சிரிப்பில்லை அது எண்டு எண்ணிக் கொண்டேன்.

வெளியில வெயில் நல்லாயிருந்தது. வரும் வழியில் லேசாக மனைவியிடம் கேட்டேன். ´´என்னமாதிரி கார் பழகிற பிளானுகள்.. ´´
´´ஓ.. இப்பதானே படிக்கிறன். எடுக்கத் தான் வேணும். ஏன் கேட்கிறாய்.. ´´
´´இல்லை கெதியில படிச்சு லைசென்சை எடன். மனசு வைச்சுப் படிச்சாயெண்டால் கெதியில எடுக்கலாம். சோதினையை எடுத்து விட்டாய் எண்டால் பிறகு நானே பழக்கி விடுவன். சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கேலாது தானே´´
´´ம்.. என்ன திடீரென்று அக்கறை.. ´´
´´ஒண்டுமில்லை.. இங்கை எல்லா பொம்பிளையளும் கார் ஓடுகினம். என்ர மனுசியும் ஓட வேணும் எண்டு எனக்கும் ஆசையிருக்கும் தானே..அதோடை அந்தரமாவத்துக்கும் உதவும் தானே.. ´´
சிக்னலில் இப்போ சிவப்பு லைட் எரிந்தது. காரை நிறுத்தினேன். பூவுலகில் பொய் சொல்லும் போது மேலுலகில் கடவுளின் இடத்தில் சிவப்பு லைட் எரியும் கதையொன்று தேவையில்லாமல் ஞாபகத்தில் வந்து தொலைத்தது.

30 Comments:

Anonymous Anonymous said...

நானும் என்ர மனிசியை கெதியா லைசன்ஸ் எடுக்க சொல்ல வேண்டும் ஜடியா குடுத்ததுக்கு நன்றி தம்பி:-)

5:21 PM  
Anonymous Anonymous said...

அட அட சைக்கிள் கேப்பில் என்னமா பெண்ணியம் பேசுறீங்க.

ம்ம்ம் சூப்பர். இருங்க இருங்க அண்ணி கிட்ட வத்தி வைக்கிறேன்.

சயந்தன் ரசிகர் மன்றம்
பிலடெல்பியா குறுக்குச் சந்து
பென்சில்வேனியா
அமேரிக்கா

8:37 PM  
Anonymous Anonymous said...

பெண்கள் தண்ணியடிக்கக் கூடாதென பழமைவாதம் பேசுறான் இதில பெண்ணியம் எங்கேர்ந்து வந்தது மூடனே.

பெண்ணிய முன்னேற்றக் கழகம்
பெல்மோர் குறுக்குச் சந்து
சிட்னி
அவுஸ்திரேலியா

8:44 PM  
Anonymous Anonymous said...

//பெண்கள் தண்ணியடிக்கக் கூடாதென பழமைவாதம் பேசுறான் இதில பெண்ணியம் எங்கேர்ந்து வந்தது மூடனே.//

இதை நான் ஆமோதிக்கிறேன்
பெண்ணிய முன்னேற்றக் கழகம்
ஷிபுயா குறுக்குச் சந்து
டோக்யோ
ஜப்பான்

8:47 PM  
Anonymous Anonymous said...

//நானும் என்ர மனிசியை கெதியா லைசன்ஸ் எடுக்க சொல்ல வேண்டும் ஜடியா குடுத்ததுக்கு நன்றி தம்பி:-)//

அம்புட்டு நல்லவனாடா நீயி.

8:51 PM  
Anonymous Anonymous said...

நானும் என்ர மனிசியை கெதியா லைசன்ஸ் எடுக்க சொல்ல வேண்டும் ஜடியா குடுத்ததுக்கு நன்றி தம்பி:-)

11:05 PM  
Anonymous Anonymous said...

At 8:51 PM, கேள்விகேட்பவன்

//நானும் என்ர மனிசியை கெதியா லைசன்ஸ் எடுக்க சொல்ல வேண்டும் ஜடியா குடுத்ததுக்கு நன்றி தம்பி:-)//

அம்புட்டு நல்லவனாடா நீயி.

உணக்கு அம்புட்டு சந்தேகமா? நாயி.

11:53 PM  
Blogger சயந்தன் said...

அடச் சே.. கஸ்ரப்பட்டு ஒரு கதை எழுதினால் ஆளாளுக்கு அடிபடுறாங்க.. இதுதான் நான் கதையே எழுதுறேல்லை.. சோமி எங்கை நிக்கிறாய்.. வா கதைப்பம்.

11:59 PM  
Blogger சயந்தன் said...

ஒரு விசயம்.. நான் என கதாபாத்திரத்தை சுட்டி எழுதுவது சிறுகதைகளிலும் நாவல்களிலும் வழமையாக நடப்பது தான். வலைப் பதிவுகளில் பெரும்பாலும் நான் எனச் சுட்டி அனுபவங்களே எழுதப் படுவதால் இதனையும் அனுபவமாக எடுத்துக் கொள்ளக் கூடும். அவ்வாறில்லை

12:48 AM  
Anonymous Anonymous said...

//அவ்வாறில்லை//

நம்பிட்டம்

சயந்தன் ரசிகர் மன்றம்
பிலடெல்பியா குறுக்குச் சந்து
பென்சில்வேனியா
அமேரிக்கா

1:06 AM  
Anonymous Anonymous said...

//உணக்கு அம்புட்டு சந்தேகமா? நாயி.//

உனக்கு ஜோக்கு எது சீரியஸ் எதுன்னு கூட தெரியலை, நீயெல்லாம் பதிவுக்கு பின்னூட்டம் போட வந்துட்ட.

1:08 AM  
Blogger மலைநாடான் said...

//மேடையில ஏறி சிரிச்சு வாழ்த்துச் சொல்லிப் போட்டு, பார்சல் பண்ணி வைச்சிருந்த விளையாட்டுப் பொருளை தாயிடம் குடுக்க அவ லேசா சிரிச்சா. எண்டாலும் என்வெலப் குடுக்கும் போதிருந்த சிரிப்பில்லை//

பின்ன.. பிறந்தநாள் பிள்ளைக்கு ஆனா கொண்டாட்டம்..?

1:09 AM  
Anonymous Anonymous said...

At 12:48 AM, சயந்தன்

ஒரு விசயம்.. நான் என கதாபாத்திரத்தை சுட்டி எழுதுவது சிறுகதைகளிலும் நாவல்களிலும் வழமையாக நடப்பது தான். வலைப் பதிவுகளில் பெரும்பாலும் நான் எனச் சுட்டி அனுபவங்களே எழுதப் படுவதால் இதனையும் அனுபவமாக எடுத்துக் கொள்ளக் கூடும். அவ்வாறில்லை

"நாங்களும் நம்பீட்டோம்"

1:12 AM  
Anonymous Anonymous said...

//"நாங்களும் நம்பீட்டோம்"//

யாரு எவருன்னு சொன்னா நல்லாயிருக்கும்லே அதைச் சொல்லு முதல்ல.

சயந்தன் ரசிகர் மன்றம்
பிலடெல்பியா குறுக்குச் சந்து
பென்சில்வேனியா
அமேரிக்கா

1:18 AM  
Anonymous Anonymous said...

At 1:18 AM, சயந்தன் ரசிகர் மன்றம்

//"நாங்களும் நம்பீட்டோம்"//

யாரு எவருன்னு சொன்னா நல்லாயிருக்கும்லே அதைச் சொல்லு முதல்ல.

சயந்தன் ரசிகர் மன்றம்
பிலடெல்பியா குறுக்குச் சந்து
பென்சில்வேனியா
அமேரிக்கா

நான்தாப்பா அனானி:-)

1:50 AM  
Blogger சயந்தன் said...

ப்ளீஸ் யாராச்சும் என் கதையைப் பற்றி கதையுங்களேன்.. :(((

2:01 AM  
Anonymous Anonymous said...

//ப்ளீஸ் யாராச்சும் என் கதையைப் பற்றி கதையுங்களேன்.. :(((//

அதெல்லாம் முடியாது நாங்க இப்படித்தான் கும்மியடிப்போம்.

2:23 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஓ... அதை விட இப்ப எங்களுக்கு ஆள்வளம் தேவை. யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இடத்தைப் பிடிச்சால்த் தான் தேவையான ஆள் வளத்தைப் பெறலாம்´´ என்றவர் போன வருசம் தான் தன்ர மூத்த மகனை ஏஜென்சி மூலமும் மற்றப் பிள்ளையள் ரண்டு பேரையும் மனிசியையும் ஸ்பொன்சரிலையும் இங்கை கூப்பிட்டவர். //
சயந்தன் !
அருமை ;இதைக் கதையென நான் நினைக்கவில்லை. இது தான் இங்கே நடைமுறை. குத்தாமல் குத்துமெழுத்து. ஆனால் இந்த ஜென்மங்கள் இதைப் படிக்குமென நான் நினைக்கவில்லை.
இந்தக் கதை சொல்லியின் இடத்தில் ;நான் பல தடவை நிசமாக இருந்து அல்லல் பட்டுள்ளேன்.

2:39 AM  
Anonymous Anonymous said...

அது சரி.. எதற்காக எல்லோரும் பெயரை வெளியிடாமல் அனானிகளாக எழுதுகிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் தங்கள் மனைவிகளுக்கு ட்ரைவிங் பழக்கியவர்களோ..? போட்டுக் குடுக்கிறவன்.. நான் நினைத்தேன் மனைவிக்கு ட்ரைவிங் பழக்கினால் தாம் தண்ணியடித்து விட்டு போகும் போது மனைவியை ட்ரைவ் செய்யச் சொல்வார்கள் என்று. ஆனால் இதற்கு மனைவி தண்ணியடிக்கக் கூடாதென்ற காரணமும் உள்ளதா..? அட அட அட

3:12 AM  
Anonymous Anonymous said...

At 3:12 AM, Anonymous

அது சரி.. எதற்காக எல்லோரும் பெயரை வெளியிடாமல் அனானிகளாக எழுதுகிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் தங்கள் மனைவிகளுக்கு ட்ரைவிங் பழக்கியவர்களோ..? போட்டுக் குடுக்கிறவன்.. நான் நினைத்தேன் மனைவிக்கு ட்ரைவிங் பழக்கினால் தாம் தண்ணியடித்து விட்டு போகும் போது மனைவியை ட்ரைவ் செய்யச் சொல்வார்கள் என்று. ஆனால் இதற்கு மனைவி தண்ணியடிக்கக் கூடாதென்ற காரணமும் உள்ளதா..? அட அட அட

நீர் எதுக்கு அனானியாக வந்தீரோ அதற்க்காகத்தான்;-)

3:15 AM  
Blogger சோமி said...

சயந்தன் நீண்ட காலத்திற்க்குப் பிறகு உங்கள் சிறுகதை ஒன்றை வாசித்த அனுபவம் கிடைத்தது.
இத்தகைய வாக்குமூலங்கள் போராட்டதின் அதன் மக்களின் வாழ்வியலை சொல்பவை.புலம்பெயர்வாழ்வின் கதை சொல்லிகளிடமிருந்து இத்தகைய கதைகள் தொடர்ந்து வர சயந்தன் போன்ற புதிய தலமுறையினர் இன்னும் விரிவான தளத்தில் இயங்க வேண்டும். வெறும் சனரஞ்சகத்தனத்த மையப் படுத்தாது மக்கள் கதைகளைப் பேச வேண்டும்.

குறிப்பு: பின்னூட்டும் நண்பர்களே சயந்தன் ரொம்ப நல்லவன் எவ்வளவு காமடி பண்ணினாலும் தாங்குவான். அதுக்காக இந்த பதிவில வந்து அனானிகளா இவ்வளவு காமெடி கூடது.

3:38 AM  
Anonymous Anonymous said...

//குறிப்பு: பின்னூட்டும் நண்பர்களே சயந்தன் ரொம்ப நல்லவன் எவ்வளவு காமடி பண்ணினாலும் தாங்குவான். அதுக்காக இந்த பதிவில வந்து அனானிகளா இவ்வளவு காமெடி கூடது.//

இப்படியெல்லாம் சொல்வதால் முன்னால் வந்த கமென்ட்களுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லையென்று ஆகிவிடாது சோமி.

3:46 AM  
Anonymous Anonymous said...

கமென்ட் மாடரேஷன் கொண்டுவந்த அண்ணன் சயந்தன் வாழ்க வாழ்க.

சயந்தன் ரசிகர் மன்றம்
பிலடெல்பியா குறுக்குச் சந்து
பென்சில்வேனியா
அமேரிக்கா

3:47 AM  
Anonymous Anonymous said...

At 3:46 AM, கேள்வி கேட்பவன்

//குறிப்பு: பின்னூட்டும் நண்பர்களே சயந்தன் ரொம்ப நல்லவன் எவ்வளவு காமடி பண்ணினாலும் தாங்குவான். அதுக்காக இந்த பதிவில வந்து அனானிகளா இவ்வளவு காமெடி கூடது.//

இப்படியெல்லாம் சொல்வதால் முன்னால் வந்த கமென்ட்களுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லையென்று ஆகிவிடாது சோமி.

உண்மையிலேயே சயந்தன் நல்லவர்தான், எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சுகிட்டே தாங்கிறார், கொழுவி பொல்லாத ஆளப்பா:-)

4:11 AM  
Anonymous Anonymous said...

சயந்தன்,

சோழியன் குடுமி சும்மா ஆடாதென்று தமிழில் ஒரு பழமொழி இருக்குது, தெரியுமெல்லோ.

சோமி நல்லவர் யார் கெட்டவர் யாரென்று நீர் சொல்லக் கூடாது அது தானா வரணும்

4:14 AM  
Blogger U.P.Tharsan said...

புலம்பெயர்வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.

6:37 AM  
Blogger சயந்தன் said...

இதனை ஒரு தோலுரிப்பு எழுத்து என சோமி என்னோடு பேசும் போது சொன்னான். இது பற்றி பின்னூட்டங்களில ஏதாவது பேசப்படும் என எதிர்பார்த்தேன். ஆனா அனானிகள் ஆட்டம் தான் நடந்தேறியது. என்னுடைய கட்டுப்பாட்டிலேயே எனஇனுடைய ரசிகர் மன்றம் இல்லாத போது நான் என்ன செய்யட்டும்.. :((

8:15 AM  
Anonymous Anonymous said...

//ஒரு தோலுரிப்பு எழுத்து என சோமி என்னோடு பேசும் போது சொன்னான்.//

தோலுரிப்பு எழுத்து என்றால் என்ன?

8:50 AM  
Anonymous Anonymous said...

`ஹி `ஹி இப்பிடி ரகசியங்களை போட்டு உடைக்கக் கூடாது.

11:21 AM  
Anonymous Anonymous said...

--இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறதுக்கில்லை. நீங்கள் போடுற பிளானுக்கும், ரைம் ரேபிளுக்கும் அங்கை சண்டை பிடிக்கேலாது தெரியுமோ..--

உண்மை

9:27 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home