20.4.07

ஐந்து பதிவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடல்

நடைமுறையில் மிகச் சிரமமான ஒலிப்பதிவொன்றை, சும்மா பரீட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்த்தோம். வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு, 5 பதிவர்கள் கலந்து கொள்வதென்பதும், அது ஒலிப்பதிவு செய்யப்படுவதென்பதும் நுட்ப ரீதியில் சாதாரண விடயம் (சிஞ்சா மனுசி கலையகத்திற்கு). ஆனால் நடைமுறையில் அந்த உரையாடல் ஒழுங்கமைக்கப் படுவது கடினமானது.

இருவர் பேசுகின்ற போது ஒருவர் குறிக்கிடுவதென்பது சமாளிக்கக் கூடியது. ஆனால், அதுவே ஐவராகும் போது இறுதியில் அடிபிடிதான் எஞ்சும் எனத் தெரிந்தும் இதையும் செய்து தான் பார்த்து விடுவோமே என்ற ஒரு ஆர்வத்தில் இது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிப்பதிவுகள் இடையூறு இல்லாத, இரைச்சல் இல்லாத, வானொலித் தரத்தில் அமைய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. அவ்வாறில்லாமல் வெறும் இரைச்சல்களோடும், விக்கி விக்கியும், ஸ்.. என்ற சத்தங்களோடும் ஒலிப்பதிவு செய்யப்பட்டால் அது தொடர்ந்து கேட்கின்ற ஆர்வத்தைக் கொடுக்காது என்று நாமறிவோம்.

இந்த உரையாடல் ஈழத்தின் போர்ச் சூழலில் வெளியான திரைப்படங்கள் குறித்துப் பேசுகின்றது. நமது இளைய நாட்களில், நாம் வாழ்ந்த பிரதேசங்களில் தமிழக சினிமா தடைக்கும், தணிக்கைக்கும் உட்பட்டிருந்த பொழுதுகளில் ஈழத்தில் இருந்து வெளியான திரைப்படங்கள் மீது எமக்கு இயல்பாகவே ஈடுபாடும் ஆர்வமும் இருந்தது. அது குறித்து பேசும் வசந்தன், சிநேகிதி, விஜெ சந்திரன், சயந்தன் இவர்களோடு மலைநாடானும் இணைந்து கொண்டிருக்கிறார். (சோமிதரன் கேரளாவில் படப்பிடிப்புக்களில் இருப்பதனால் அறுவராகி அறுவாராகாமல் தப்பித்தோம்;)

இந்த ஒலிப்பதிவு கடந்த சித்திரைப் பொங்கலுக்கு வர இருந்தது. ஆயினும் இன்று வரை அதன் தொகுப்பு வேலைகள் முடியாத படியால்.. இப்படி ஒன்றைச் செய்தோமென, பிலிம் காட்டவாவது ஒரு முன்னோட்டமாக சில பகுதிகளை வெளியிடுகிறோம். (சிநேகிதியின் உரையாடல் தெளிவின்மையாக இருப்பதனை சி.ம கலையகம் கவலையுடன் உணர்ந்து கொள்கிறது:(


13 Comments:

Anonymous மணியம் said...

மணி நல்லாத்தான் அடிக்கிறியள்

1:41 PM  
Blogger மாசிலா said...

நல்ல முயற்சி. அனால் நீங்கள் பேசும் தமிழ்தான் கொஞ்சம் புரியவில்லை. அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நிதானமாக பேசினால் நன்றாக இருக்கும்.
பகிர்ந்தமைக்கு நன்றி.

1:51 PM  
Blogger சினேகிதி said...

ஐயோ ஐயோ உது நானில்லை......என்ர அம்மம்மா கதைக்கிற மாதிரி இருக்கு...what did u do to ma voice?

3:04 PM  
Blogger Tamil said...

it is good try

4:49 PM  
Blogger சயந்தன் said...

//ஐயோ ஐயோ உது நானில்லை......என்ர அம்மம்மா கதைக்கிற மாதிரி இருக்கு...what did u do to ma voice?//

பதிவில் சிறு திருத்தம் ஒன்று.
அது குறித்து பேசும் வசந்தன், சிநேகிதியின் அம்மம்மா, விஜெ சந்திரன், சயந்தன் இவர்களோடு மலைநாடானும் இணைந்து கொண்டிருக்கிறார்.

சிநேகிதி உங்கட அம்மம்மா எதுக்காக தன்னை சிநேகிதியெண்டு சொல்லிக் கதைச்சவ..?

8:57 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

ஐசே,
அவ அப்பவே சொன்னவ தானே தன்ர குரல இளம் ஆக்களின்ர குரல் மாதிரி வெளியிடச்சொல்லி. ஒருறேடியோக் காரரும் அப்பிடித்தான் செய்தவையாம் எண்டும் சொன்னவதானே? பிறகேன் நீர் அப்பிடியே போட்டனீர்?

கடசிப்பகுதியில வாற தொலைபேசி அழைக்கிற விசயத்தில உண்மையில என்ன நடந்ததெண்டதையும் சேத்துப் போட்டிருக்கலாம். நாங்களெல்லாரும் மலைநாடான்தான் பிசகு விட்டிட்டார் எண்டு நினைக்க, ஒண்டும் தெரியாதமாதிரி சிரிச்சுக்கொண்டிருந்த ஆளையும் காட்டியிருக்கலாம்.

9:27 PM  
Anonymous Anonymous said...

//சிநேகிதி உங்கட அம்மம்மா எதுக்காக தன்னை சிநேகிதியெண்டு சொல்லிக் கதைச்சவ..?//

அவாடை அம்மம்மாக்கு என்ன பெயர் ? பொட்டம்மாவோ..?

1:38 AM  
Anonymous Anonymous said...

Nice recording. but i think 3 voices are enough..

2:45 PM  
Anonymous Anonymous said...

//ஒண்டும் தெரியாதமாதிரி சிரிச்சுக்கொண்டிருந்த ஆளையும் காட்டியிருக்கலாம்.//

Snegithy..? am I correct..?

3:01 PM  
Anonymous கா said...

வருவியா வரமாட்டியா வரேல்லைன்னா உன் பேச்சுக் கா

1:37 AM  
Anonymous Anonymous said...

பாடல் நன்றாக உள்ளது.டி எல் மகாராஜனா பாடியது அந்தப் பாடலை?

5:24 AM  
Anonymous Anonymous said...

eppo full post??

6:12 AM  
Anonymous Anonymous said...

இன்னும் கதைச்சு முயேல்லையோ?

5:21 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home