4.4.07

கருத்து உருவாக்கமும் ஈழ ஊடகங்களும் - ஒலிப்பத்தி

ஈழத் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள், சர்வதேச மக்கள் மத்தியிலும், சர்வதேசத்தின் முடிவெடுக்கும் அதிகார மையங்கள் மத்தியிலும், எவ்வளவு தூரம் கருத்துக்களை உருவாக்கும் ஊடகங்களாக செயற்படுகின்றன என்பது குறித்த ஒலிப்பத்தி இது.

புலம் பெயர்ந்த சூழலில், ஈழ நிலை குறித்து, வெளி மக்களுக்கு மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்கக் கூடிய வாய்ப்புக்களும், வசதிகளும் இருந்த போதும், அது பற்றி கிஞ்சித்தும் சிந்தியாது இணையம், பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சியென சகல ஊடகப் பரப்பிலும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் நம் மீதான சுய பார்வை இது.


11 Comments:

Blogger மலைநாடான் said...

"ஒளிபடைத்த கண்ணினாய் வாவா"

சயந்தன், சோமி!

மிகநல்ல விரிவான பார்வை. தொடர்ந்து செய்யுங்கள். தொடர்ச்சிக்கு அப்பால் செய்ய வேண்டியவர்களும் நீங்களே. மனதுக்கு நிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

நன்றி.

1:41 AM  
Blogger ரவிசங்கர் said...

ஐயகோ, நகைச்சுவைப் பதிவு போடுபவர்களை இப்படி "உம்"மென்று serious பதிவு போட வைத்த மலைநாடானுக்கு என் கண்டனங்கள் :)

இருந்தாலும், பூசணிக்காய், சோறு என்று சொதிப்பதிவின் தாக்கம் தெரிகிறது ;)

விளையாட்டுப் போக, முக்கியமான கருத்து ஒன்றை முன்வைத்திருக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள் மட்டும் படிக்கும், பார்க்கும் ஊடகங்களில் திரும்பத் திரும்ப சோகக் கதைகளை எழுதுவதால் அனுதாபம் வரலாம், முன்னேற்றம் வராது. தமிழ்நாட்டு ஊடகங்கள் நிறுவனப்படுத்தப்பட்ட அடக்குமுறை அல்லது agendaவுடன் செயல்படுகின்றன. எனவே, அவற்றின் மூலம் ஈழச்செய்திகளுக்கு வெளிச்சம் வரும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. இந்த வெற்றிடத்தை இணையத்தின் துணை கொண்டு நிரப்ப வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்கள் முயலலாம். என் பார்வையில் வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் தங்கள் குடும்பம், விடுதலைப் போராட்டம் செய்யும் அளவுக்கு கருத்துருவாக்கத்தில் ஈடுபடவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை ஒரு embassy முன் சென்று கொடி பிடிப்பதுடன் விட்டு விடுகிறார்கள். இன்னும் தீவிரமாக lobby செய்ய வேண்டியது அவசியம்.

தன் சொந்தப் பிரச்சினைகளுக்கே தெருவில் இறங்காத தமிழ்நாட்டுத் தமிழன் என்று, எப்படி சொரணை வந்து அண்டையில் நடக்கும் இனப்பிரச்சினைக்குப் போராடுவான் என்றும் தெரியவில்லை. அடுத்து நீங்கள் உரையாட இருப்பதாய்ச் சுட்டிக்காட்டிய விசயங்களும் முக்கியமானவை.

6:39 AM  
Blogger சயந்தன் said...

//இந்த வெற்றிடத்தை இணையத்தின் துணை கொண்டு நிரப்ப வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்கள் முயலலாம்.//

இணையத்தளம் மட்டுமல்ல.. புலம் பெயர்ந்த தேசங்களில் ஈழத்தமிழர்களின் கைகளில் இலத்திரனியலின் பொதுவான ஊடகங்கள் கைகளில் உள்ளன.

ஆயினும், ஈழப் போராட்டம் தொடர்பில் இயங்குவது என்பது வெறுமனே விடுதலைப் புலிகளின் வெற்றிச் செய்திகளை முந்தித் தருவது என்றே அவர்கள் கருதுகிறார்கள்.

உதாரணத்திற்கு வானொலியை எடுத்துக் கொள்ளுங்கள். தனியான பிறிதொரு மொழிக்கான சேவையென்றல்ல.. இருக்கும் வானொலியில் அந்த அந்த நாட்டு மொழிகளில் எத்தனை மணிநேரம்.. அல்லது எத்தனை நிமிட நேரம் நிகழ்ச்சிகள் வருகின்றன என்றால் பதில் பூச்சியம்.

முதலில் ஊடகத் துறையில் சரியான துறையறிவு உள்ளவர்கள் அல்லாது தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என நிரம்பியிருப்பது முதல்த் தவறு. ஒரு உதாரணம் சொல்கிறேன். அண்மையில் ஜெனிவாவில் பேச்சுக்களில் கலந்து கொண்ட இலங்கை அரச குழுவினர் பத்திரிகையாளர் மாநாட்டினை கூட்டியிருந்தனர். சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் அங்கு சமூகமளித்திருந்த வேளையில் அரச குழுவினரை சிக்கலுக்குள்ளாக்கும்.. அவர்களை சர்வதேச பத்திரிகையாளர் மத்தியில் நெருக்குதல்களுக்குள்ளாக்கும் எந்த ஒரு கேள்வியையும் எமது பத்திரிகையாளர்கள் கேட்கவில்லை. பச்சையாகச் சொன்னால் கேட்கத் தெரியாது. இதற்கு முன்னால் போராட்டத்தினருக்கு எதிரான எவரையும் செவ்வி கண்ட அனுபவம் துளியும் கிடையாது. எதிரிகளை செவ்வி காணுவதென்பது அவர்களைப் பொறுத்த வரை துரோகம்.

உண்மையில் அந்தச் சந்தர்ப்பத்தில் அரச குழுவினரிடம் தெளிவான ஆதாரங்களுடன் தர்க்க ரீதியாகவும் இறுக்க மான கேள்விகளூடாகவும் இலங்கை அரச படைகள் மேற்கொள்ளும் சகல வகையான மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேள்வியெழுப்பியிருக்க வேண்டும்.

அதை விடுத்து விட்டு தமிழ்செல்வனிடம் விளாசித் தள்ளி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதில் என்ன பயன்.?

வருடந்தோறும் ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம். ஐநா முன்றலுக்கு போகிறோம். ஐரோப்பிய யூனியனுக்கு போகிறோம். அது பற்றி சரியான முறையில் பிற நாட்டு ஊடகங்களுக்கு சொல்கிறோமா..? அவர்களை உத்தியோக பூர்வமான முறையில் அழைக்கிறோமா..?

சென்ற முறை பெல்ஜியம் சென்ற நிகழ்வில் எத்தனை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வந்தார்கள். எத்தனை பிற ஊடகங்களில் அச்செய்தி வெளியானது. ? அது பற்றியெல்லாம் நாம் கவலைப் படுவதில்லை.

ஆனால் ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ நினைவு நிகழ்வோ கொத்துரொட்டிக் கடை போட மறப்பதில்லை.

இவையெல்லாவற்றையும் விட எத்தனை பேர் தமது வேலையிடத்திலும் படிக்குமிடத்திலும் பிற தேசத்தவருக்கு நம்மைப் பற்றிச் சொல்லுகிறோம்..?

இலங்கையில் என்ன நடக்கிறது எனத் தெரியாத நிலையில்த் தானே ஒரு சாதாரண வெளிநாட்டுப் பிரஜை உள்ளார்..?

கவலையாகச் சொன்னால் ஈழப் போராட்டத்தை நாம் நமது பெரு விருப்புக்குரிய கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை ரசிக்கும் நிலையில் இருந்து ரசிக்கவும் நோக்கவும் ஆரம்பிக்கின்றோம்.

11:00 AM  
Blogger அற்புதன் said...

நல்ல பதிவு,
புலத்தில் இளையவர்களுக்கு வழி விட்டால் அவர்கள் தங்கள் திறமைகளை உள்ளூர் மொழியிலையே காட்டுவார்காள்.ஆனால் இது குறிப்பாக ஐரோப்பாவில் நடப்பதாகத் தெரியவில்லை.கவலைக் குரிய விடயம்.பூனைக்கு யார் மணிகட்டுவது ?

11:25 AM  
Blogger சின்னக்குட்டி said...

ஊடகத்துறையை துறையாக பயின்றவர்கள் அரிதாக இருப்பது தான் காரணமாக இருக்குமோ

12:08 PM  
Blogger சயந்தன் said...

சிவா சின்னப்பொடி இணைத்திருந்த இணைப்பின் வெளித்தெரிகை எனது வார்ப்புருவில் சிக்கலை ஏற்படுத்துகிறதாக நான் உணர்ந்து கொள்வதால்:( அவ்விணைப்பினை சுட்டியாக இணைத்திருக்கிறேன்.
இங்கு அழுத்துக

3:07 PM  
Blogger theevu said...

//அதை விடுத்து விட்டு தமிழ்செல்வனிடம் விளாசித் தள்ளி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதில் என்ன பயன்.?
//

இதுதான் இங்கை நெடுவவும் நடக்குது.இந்த ஆர்ப்பாட்டம் ஊர்வலம் இதெல்லாம் தேவையில்லாத வேலை..

ஒருத்தனும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

பிரான்ஸ் செய்தி தெரியும்தானே..

பேசாமல் தமிழ்நாட்டில் ஒரு நோட்டிஸாவது ஒட்டுங்கள்.அதுதான் மயூரன் சொன்னதுபோல் சர்வதேசம்.

மிச்சமெல்லாம் பம்மாத்து.

சொன்னால் துரோகி என்பார்கள்.

நமக்கெதுக்கு வம்பு?

3:28 PM  
Blogger சயந்தன் said...

//ஊடகத்துறையை துறையாக பயின்றவர்கள் அரிதாக இருப்பது தான் காரணமாக இருக்குமோ//

சின்னக்குட்டி. அது உண்மையே.
மருத்துவம் ஒரு துறை போல பொறியியல் ஒரு துறை போல ஊடகவியல் ஒரு துறை. அது சார்ந்த கல்வி பல்கலைக் கழக மட்டம் வரை கற்பிக்கப் படுகிறது.

ஆனால் நம்மைப் பொறுத்தவரை நன்றாக எழுதத் தெரிந்தால் நன்றாக வாசிக்கத் தெரிந்தால் அவர் ஒரு ஊடகவியலாளர்.

இந்த நிலை மாற வேண்டும். வெளிநாடுகளில் ஊடகத்துறையை துறை சார்ந்து கற்க இளைய தலைமுறை முன்வர வேண்டும்.

//பிரான்ஸ் செய்தி தெரியும்தானே..//

தீவு ஈழப்போரின் தவிர்க்கவியலாத அங்கமும் தலைமையும் விடுதலைப் புலிகள் தான். மறுப்பதற்கில்லை.

ஆனால் ஈழப்போராட்டத்தின் இன்னுமொரு அங்கம் அங்கு தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிற அப்பாவி மக்கள். அந்த மக்களின் துயரங்களை வெளிச் சொல்வதற்காக யாரும் யாரையும் கைது செய்யப் போவதில்லை.

ஈழப் போராட்டத்தினை வெளிச் சொல்வதென்பது வெற்றிச் செய்திகளை வழங்குதல் மட்டுமல்ல.

ஈழப் போராட்டத்திற்கான பங்களிப்பு என்பது காசு கொடுப்பது மட்டுமல்ல.

மீண்டும் ஒரு கேள்வி என்னையும் நோக்கி..

அண்மையில் புலிகள் வான் தாக்குதல் நடாத்திய போது அடைந்த புளகாங்கிதத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்தினோம்.? தமிழல்லாத பத்திரிகைகளில் அச் செய்தி வந்தது குறித்து எத்துணை மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால் நேற்று முன்தினமோ அதற்கு முன்போ முல்லைத் தீவில் இலங்கை அரசு குண்டு வீசி 2 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்தச் செய்தி பற்றி தமிழல்லாத பத்திரிகைகளில் வெளியானதா..?
வெளியாக ஏதாவது செய்தோமா..?

1:14 AM  
Blogger ரவிசங்கர் said...

//புலம் பெயர்ந்த தேசங்களில் ஈழத்தமிழர்களின் கைகளில் இலத்திரனியலின் பொதுவான ஊடகங்கள் கைகளில் உள்ளன. //

இணையத்தளம் புகும் அளவுக்கு வானொலி, தொலைக்காட்சி சேவைகள் தமிழ்நாட்டுக்கள் வர முடியாது. எளிமையாகத் தடை செய்ய முடியும். தவிர, இணையத்தளம் கட்டற்றது. யார் வேண்டுமானாலும் தகுந்த செய்தியை பதிவேற்ற முடியும். எல்லாராலும் வானொலி, தொலைக்காட்சி தொடங்கமுடியாது. ஆனால், உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து ஈழச் செய்திகளை இணையத்தில் தரலாம் தானே?

//கவலையாகச் சொன்னால் ஈழப் போராட்டத்தை நாம் நமது பெரு விருப்புக்குரிய கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை ரசிக்கும் நிலையில் இருந்து ரசிக்கவும் நோக்கவும் ஆரம்பிக்கின்றோம்.//

கவலைக்குரிய உண்மை.

//எத்தனை பேர் தமது வேலையிடத்திலும் படிக்குமிடத்திலும் பிற தேசத்தவருக்கு நம்மைப் பற்றிச் சொல்லுகிறோம்..?//

பிறர் சொல்வது மிகவும் குறைவு. சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், ஈழப்போராட்டம் என்றாலே குண்டு, ஆள் சாவுக் கணக்கு என்ற ரீதியில் பேசுவது கவலைக்குரியது. போராட்டத்துக்கான வரலாறு குறித்து அறிந்தவர்கள் மிகவும் குறைவு. அதிலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஈழப்போராட்ட அறிவு ராஜீவ் காந்தி கொலையில் தொடங்கி ராஜீவ் காந்தி கொலையில் முடிந்து விடும் தட்டை நோக்குடன் இருக்கிறது. நெதர்லாந்து வந்த புதிதில் நான் தமிழ்நாட்டுத் தமிழன் என்று அறிந்து கூட வேலை பார்க்கிறவர் - "ஓ, நீங்கள் நல்ல தமிழரா?" என்றார். பொத்துக் கொண்டு வந்த கோபத்துடன் அவருக்குப் பொறுமையாக விளக்க வேண்டியாகி விட்டது. ஈழத் தமிழர்கள் கெட்டத் தமிழர்கள் என்ற பிம்பம் வெற்றிகரமாக அயல்நாட்டு் (தமிழ்நாட்டிலும்) ஊடகங்களில் பரப்பப்பட்டிருக்கிறது. இதைப் போக்க என்ன செய்யப்பட்டிருக்கிறது?

ஈழச் செய்திகளை பிற மொழியினருக்குத் தெரிவிப்பதில் ஐரோப்பாவில் பிறந்து வளரும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் பெரும்பங்காற்ற முடியும். ஆனால், இதற்கான உணர்வும் தமிழறிவும் போதுமான அளவு ஊட்டி வளர்க்கப்படுவதாகத் தெரியவில்லை. போர்த் துயர் உடைய போன தலைமுறை ஈழத் தமிழர்களே புலம் பெயர் வாழ்வின் பாதுகாப்பில் ஒதுங்கும்போது மேற்குலகச் சிந்தனைகளுடன் வளரும் அடுத்த தலைமுறை குழந்தைகள் பணம் கொடுப்பது தவிர என்ன விதத்தில் தாயகத்துக்குப் பங்களிப்பாளர்கள் என்று தெரியவில்லை. மாவீரர் நாள் கூட்டத்தில் நான் பார்த்த வரை இளைய தலைமுறையிடம் ஒரு துடிப்போ முனைப்போ தெரியவில்லை. தமிழுடனான தொடர்பு தமிழ்ப் பாடல்கள், ஆடல் என்ற அளவைத் தாண்டாமல் தேங்கி நிற்கிறதோ என்று தோன்றுகிறது.

(பின்னூட்டமே நீள்கிறது..பேசாமல் பதிவாகவே போட்டு விடுகிறேன்!)

3:17 AM  
Blogger சோமி said...

தங்கள் படைப்பைத் தாங்களே மெச்சுகிற போக்கும் பழமைப் புகழ் பேசிக்கோண்டிருப்பதுவும் ஒருகுறிப்பிட்ட வட்டத்துக்குள் நிண்டுகொண்டு பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருப்பது எமது இயல்பாகவே ஆகிவிட்டிருக்கிரது.

இண்டைக்கு இத்தனைபேர் இணையத்துக்குள் தமிழ்பேசிக்கொண்டிருகிறோம். ஆனால் இணைய மொழிகளில் தமிழ் 50 இடங்களுக்கு பின்னாலேயே உள்ளது தமிழை விட சிறிய மொழிகள் எட்டிவிட்ட நிலையைக் கூட தமிழ் இன்னமும் தொடவில்லை.

வெறும் சவுச்செய்திகளை அறிவிக்கும் சதனங்களாக நமது ஊடகங்கள் மாறிவிட்டிருக்கின்றன.
வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களில் வேலை செய்த எனது அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு விசயம் என்னவெனில் நாம் தேடலுக்கு தயாராவில்லை என்பதே.

ஓசிப் பேப்பர் ஓசி வானொலி ஓசித் தொலைக்காட்சி நடத்துவதற்கு அதற்கான குறைந்த பட்சத் தொழில்நுட்ப வசதி மாட்டும் போதுமானது என்ற நிலை உருவாகியுள்ளது. குறித்த ஊடகங்களில் சொல்லபடும் விடையத்தின் உள்ளடக்கம்தான் முக்கியமானது என்பது புரிவதில்லை.தொழில்நுட்பத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப்போல் 3 மடங்கு முக்கியத்துவம் கொடுத்தாகவேண்டிய உள்ளடக்கத்துக்கும் தேடலுக்கும் இவர்கள் கொடுக்கும் பெறுமானம் வெறும் பத்து சதவீதமானதாகவே இருகிறது.

இதைப் பற்றி எழுதுவதே வீண் வேலையாகத்தெரிகிறது. ஒரு ஆரோக்கியமான குழுச்செயற்பாடு அவசியம் என்பதைத் தவிர வேறு என்னத்தச் சொல்ல.

3:44 AM  
Blogger மலைநாடான் said...

//ஒரு ஆரோக்கியமான குழுச்செயற்பாடு அவசியம் என்பதைத் தவிர வேறு என்னத்தச் சொல்ல.//

100:100 உண்மை

4:08 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home