4.5.07

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு

2002 களில இலங்கையில யுத்தம் தவிர்க்கப்பட்டிருந்த அந்த சமாதான காலத்தில தான் எனக்கு நண்பர்களோடு அதிகம் வெளியில சுத்தும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்லப் போனால் அதுக்கு பிறகு தான் வீட்டில தேடாமல் விட்டவை. கொழும்பில நான் ராகுலன் செந்தூரன் சோமி இந்த நாலு பேரும் தான் ஒரு செட். அந்தக் காலப்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை திறக்கப் பட்டிருந்தது. அதனாலை பின்னேரங்களில அங்கை தான் நிப்பம். நாலு பேரும் சுத்த வர இருந்தமெண்டால் 9 அல்லது 10 மணி வரை உள்ள நாட்டு விசயம் எல்லாம் அலசுவம்.

நானும் ராகுலனும் மொக்கைக்கு மட்டுமே பெயர் போனவர்கள். சோமியும் செந்தூரனும் ஒருவித அறிவிஜீவித்தனத்தோடை கதைக்கிற ஆக்கள். அப்பிடி அவை கதைக்கும் போது கொமன்ற் அடிக்கிறது தான் எங்கடை வேலை. அதுவே நல்ல சுவாரசியமாக இருக்கும்.

அது மாதிரியான ஒரு அலசல் தான் இது. சோமிதரன் வழமைபோலவே ஒரு வித மிதப்பு நிலையில் இருந்து அறிவுசீவித்தனமாகவே கதைக்கிறார். கேளுங்க..


34 Comments:

Blogger சின்னக்குட்டி said...

இதில் சயந்தன் கதைத்தது குறைவு. சோமி செய்த பிரசங்கத்தை அடிப்படையாக வைத்து எனது கருத்து. ஆதாம் ஏவாள் காலத்து காதல் கூட வித்தியாசமான உடலமைப்பு ஊடாக ஏற்பட்ட பருவ கிளர்ச்சி தான் காலப்போக்கில் சமூகம் தான் காதல் கருத்துணர்வவை உருவாக்கியது. காலத்துக்கு காலம் பருவ உணர்வுடன் சோ்ந்து வேறு புற காரணிகள் அமைந்தால் மட்டுமே so call காதல் உருவாகும் அல்லது அபின் அடிச்சவன் நிலை உருவாகும்.இந்த so call காதல் என்றுமே தனித்து நின்றதல்லை ஏதோ ஒன்றோடை சார்ந்தே நிற்கிறது. காதலிப்பவர்கள் எப்பொழுதும் ஒருதருக்கு ஒருதர் மற்றவர்களின் தனித்தன்மை அழிப்பதிலையே கவனம் செலுத்துகிறார்கள். ஒவ்வொருதருடைய உணர்வை ஒருதருக்கு ஒருதர் தனது உடமையாக்கவே முனைகிறார்கள். அண்மையில் விரைவில் காதல் வலையில் விழுபவர்கள் ஒருவகையில் உளவியல் குறைபாடுள்ளவர்கள் என இத்தாலிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்

3:28 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

சின்னக்குட்டியர்,
சரியாச் சொல்லியிருக்கிறியள். பெரும்பாலும் ஒத்துப்போறன்.
உதையே நாங்கள் சொன்னால் அனுபவமில்லாதவன் கதைக்கிறான் எண்டோ, ஞானி - துறவி கதைக்கிறான் எண்டோ கதைசொல்ல ஒரு கும்பல் அங்கால காத்துக்கிடக்கு.

அதுசரி, , காதலும் கத்தரிக்காயும் எண்ட சொற்றொடரை சினேகிதியின்ர இடுகையில சொல்லி, அதைச்சாட்டா வச்சு இப்படியொரு அலட்டல்பதிவு போடத் தூண்டுகோலாயிருந்த நீங்கள்தான், காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு எண்டு விளங்கப்படுத்தியிருக்க வேணும்.
____________________
சயந்தன்,
அஞ்சியத்துக்கும் பெறுமதியில்லாத விசயத்தைப் பற்றி அரைமணித்தியாலம் அலட்டி, அஞ்சுநிமிசமாக் குறுக்கி ஒருபதிவு தேவைதானா?
கேட்டிருந்தால் வேற நல்ல தலைப்புக்கள் தந்திருப்பேனே?

5:59 PM  
Blogger கானா பிரபா said...

வயித்தெரிச்சல்ல சில சனம் புகையுது

வசந்தன் அடிகளார் உங்களைச் சொல்லேல்லை ;-)

சின்னக்குட்டியர்,

இவ்வளவு வியாக்கியானம் கதைக்கிறிள், ஆனால் நீங்கள் காயிதம் கொடுத்ததா ஆரோ ஒரு பெட்டை, தங்கச்சியின்ர பதிவில புலம்பியிருக்கு பார்த்தனியளே?

6:20 PM  
Blogger அற்புதன் said...

ஆளாளுக்குப் போட்டுக் கொடுத் திருக்கியள்.அடுத்ததாக உங்களால் காதலிக்கப்படவர்களின் பேட்டியையும் போட்டா காதல் பற்றிய தெளிவு நேயர்களுக்கு ஏற்படலாம் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.:-)

காதல் எண்டா என்ன என்பதற்கு பல விளக்கங்கள் இருக்கும் நிலையில் நீங்கள் தமிழ் கூறும் நல் உலகில் அதாவது தமிழ்ச் சினிமாவால் கட்டியமைக்கப் பட்டிருக்கும் காதல் பற்றியே கதைகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.பல கலாச்சாரங்களிலும் இலக்கியங்களிலும் காலகட்டங்களிலும் காதலுக்கான வரையறைகள் மாறுபடுவதையும் அடுத்த கலந்துரையாடலில் சேர்த்துக் கொண்டால் சுவாரசியமாக இருக்கும்.ஏனெனில் புலம் பெயர் சூழலில் காதல் என்பது வேறு விதமாகவும் கொழும்பில் ஒரு விதமாகவும் யாழ்ப்பணத்தில் இன்னொருரு விதமாகவும் இருக்கிறது என்பது எனது அவதானிப்பு.இல்லயோ?ஆகவே காதல் என்பதே சூழலுக்கு எற்ப மாறுபடுகிறது இல்லயா.

7:17 PM  
Anonymous காதலன் said...

//ஏனெனில் புலம் பெயர் சூழலில் காதல் என்பது வேறு விதமாகவும் கொழும்பில் ஒரு விதமாகவும் யாழ்ப்பணத்தில் இன்னொருரு விதமாகவும் இருக்கிறது என்பது எனது அவதானிப்பு.இல்லயோ?ஆகவே காதல் என்பதே சூழலுக்கு எற்ப மாறுபடுகிறது இல்லயா.//

அற்புதத்தார் சொல்வது காதல் அல்ல. அவை காதல் செய்யும் வழிமுறைகள். அவைதான் இடத்திற்கொன்றாக பண்பாட்டு பின்புலத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. காதல் எங்கும் ஒன்றுதான். அனைவரும் காதலியுங்கள்.

9:02 PM  
Anonymous Son of கொழுவி said...

//உதையே நாங்கள் சொன்னால் அனுபவமில்லாதவன் கதைக்கிறான் எண்டோ, ஞானி - துறவி கதைக்கிறான் எண்டோ கதைசொல்ல ஒரு கும்பல் அங்கால காத்துக்கிடக்கு.//

அது மட்டுமோ வசந்தன் - ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எண்டானாம் எண்டும் அந்தக் கும்பல் சொல்லும். நான் சொல்லவில்லை :)

9:05 PM  
Blogger கானா பிரபா said...

//அற்புதன் said...
ஏனெனில் புலம் பெயர் சூழலில் காதல் என்பது வேறு விதமாகவும் கொழும்பில் ஒரு விதமாகவும் யாழ்ப்பணத்தில் இன்னொருரு விதமாகவும் இருக்கிறது //

அற்புதத்தார் நல்லா அனுபவிச்சுச் சொல்லியிருக்கிறார் போல

10:09 PM  
Blogger ரவிசங்கர் said...

சயந்தன், சோமியின் மந்திரச் சிரிப்பை வடிகட்டுவது / எதிரொலிக்க வைப்பது எப்படின்னு ஒரு நுட்பப் பதிவு போடுறீங்களா ;)

அடுத்த உரையாடலில் சோமி நீட்சி, அமைப்பியல்வாதம், நவீனத்துவம், இசம் என்று பயமுறுத்தும்போது தொடர்ந்தும் இதே போல் பாயாசம், பருப்பு, பூசணிக்காய் என்று ஏதேனும் உணவு குறித்து எடுத்துக் கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..

--
வாழ்க்கை, காதல், திருமணம், social structure பத்தி நல்லா புரிஞ்சு வைச்சிருக்கார் சோமி ! கடைசியா, சயந்தன் சொன்ன இயல்ப மறைக்காம விரும்புற கருத்தும் முக்கியமானது. அடுத்த உரையாடல்ல பேசுங்க..இதப் பத்தி எழுதினா நான் தனியா ஒரு இடுகையே போட வேண்டி இருக்கும் !

இன்னும் நிறைய சொல்லலாம். ஆனா, ஒலிப்பதிவா இருக்கனால, எழுத்துப் பதிவு மாதிரி மேற்கோள் காட்டி மறுமொழி அளிக்க முடியல

12:31 AM  
Anonymous காதல் ஞானி said...

//அண்மையில் விரைவில் காதல் வலையில் விழுபவர்கள் ஒருவகையில் உளவியல் குறைபாடுள்ளவர்கள் என இத்தாலிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்//

காதல் மீது எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் சிறுவயசில நிறைய காதலிகளால் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் அடி வாங்கியவர்களாகவும் இருப்பார்கள் என உகண்டா நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்களாம் :))

2:11 AM  
Blogger அற்புதன் said...

//அற்புதத்தார் சொல்வது காதல் அல்ல. அவை காதல் செய்யும் வழிமுறைகள். அவைதான் இடத்திற்கொன்றாக பண்பாட்டு பின்புலத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. காதல் எங்கும் ஒன்றுதான். அனைவரும் காதலியுங்கள்.//

காதலன் உங்களை மாதிரி எனக்கு கனக்க அனுபவங்கள் இல்லை,ஆனால் அவதானித்ததை வச்சு சொல்வதானால்.யாழ்ப்பாணத்தில் ஒருவன் ஒருத்தியுடன் பேசினாலையே அது காதலெனப்படும்.கொழும்பில் அது அப்படிப் பார்க்கப் படமாட்டாது.புலத்தில் இன்னும் ஒரு படி மேல போய் ,அவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அவர்களாக இது என் காதலி/காதலன் என்று மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் வரை அது காதல் உறவாகப் பார்க்கப் பட மாட்டாது.

ஆகவே காதல் என்பதற்கான வரவிலக்கணம் சூழலுக்கும் ஏற்ப மாறுபடுகிறது என்று தான் நினைகிறேன்.

6:15 AM  
Blogger அற்புதன் said...

//அற்புதத்தார் நல்லா அனுபவிச்சுச் சொல்லியிருக்கிறார் போல //

பிரபாண்ணை,

சொந்த அனுபவம் மற்றும் வகுப்பில பக்கத்தில் இருந்தவர் பின் பெஞ்சில இருந்தவர் மற்றும் நண்பர்கள் உறவினர்களின் அனுபவம் என்று எல்லாரினது அனுபவத்தையும் வச்சுத் தான் சொல்லுறன்.:-)

6:17 AM  
Anonymous Anonymous said...

இரவில் தூங்காமல் இது தேவை தானா? இறுதியில் கத்தரிக்காய் வதக்கல் கதை கேட்டு பசி வந்தது தான் மிச்சம்..

7:07 AM  
Blogger கானா பிரபா said...

//தூயா said...
இரவில் தூங்காமல் இது தேவை தானா? இறுதியில் கத்தரிக்காய் வதக்கல் கதை கேட்டு பசி வந்தது தான் மிச்சம்.. //

தூயா தங்கச்சிக்கு அடுத்த சமையல்குறிப்பு தயார்

7:25 AM  
Anonymous கண்டவன் said...

//பின் பெஞ்சில இருந்தவர் //

அது கானா பிரபாவா

9:57 AM  
Anonymous முருகேசர் said...

டோய் பொடியளா.. உவன் பொடி சோமியன் நித்திரை வெறியில கதைக்கிறானோ.. குரலைப் பாக்க அப்பிடித்தான் கிடக்கு.. ஏன்ராப்பா அவனை நடுச்சாமத்தில எழுப்பி அறுக்கிறியள்.. பிறகு அவன் எங்களை அறுக்கிறான்..

10:20 AM  
Blogger சின்னக்குட்டி said...

காதலாகி கசிந்து உருகி... யாரப்பா அந்த நாயன்மார்... அது இருக்கட்டும்.. காதல் என்ற சொல் எல்லாராலும் வசதிக்காக வெவ்வாறான சந்தர்பத்தில் வெவ்வேறு விதமாக பாவிக்கப்படுகிறது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு கருத்தும் வெவ்வேறு விதமாக தொனிக்கிறது.SO CALL காதல் என்று சொல்லுக்கு கட்டபடும் குஞ்சங்களில் குளிர் காய்வதையே பிழை என்கிறேன். அற்புதமான பாலியல் உணர்வை பற்றி அபத்தமாகவும் தீட்டாகவும் உருவக படுத்தி விட்டு .இந்த So call காதலை புனித படுத்தி தூய்மைப்படுத்தி தெய்வீக படு்த்தி கொண்டிருக்கின்ற இந்த சமூக ஆதிக்க சக்திகளின் கருத்தை சொறிந்து கொண்டிருப்பதையே பிழை என்று கூறுகிறேன் . காதல் ஒன்று இருந்தால் அந்த காதலை வெறுக்கும் மன நோயாளி போல இங்கை கதைக்கவில்லை(காதல் ஞானிக்கு தான் சொல்றன்).

10:33 AM  
Anonymous matharasi said...

//காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு எண்டு விளங்கப்படுத்தியிருக்க வேணும்//

ஏங்க சி.கு வயசிச்சால்ல துன்னுட்டு மூலையிலை தூங்கிறது விட்டு என்னா பேச்சு பேசிறீங்க.

ஒரு தபா கத்திரிக்காயை பற்றி ஆபாசமாக சொல்லி யாழ் இணையத்திலை வெட்டு வேண்டி மவுராதை கெட்டுதுல்லை மறந்திட்டீங்களா..

பசங்க சும்மா உசுப்பேத்திறாங்கா.. கண்டுகாதையுங்க

10:58 AM  
Blogger சயந்தன் said...

//நித்திரை வெறியில கதைக்கிறானோ.//

முருகேசப்பா.. நித்திரை வெறியில முன்பாதி பிழை. பின்பாதி சரி. :)

11:32 AM  
Anonymous Anonymous said...

////தூயா said...
இரவில் தூங்காமல் இது தேவை தானா? இறுதியில் கத்தரிக்காய் வதக்கல் கதை கேட்டு பசி வந்தது தான் மிச்சம்.. //

தூயா தங்கச்சிக்கு அடுத்த சமையல்குறிப்பு தயார்//

கான்ஸ், உங்களை போல என்னை பத்தி யாருக்குமே தெரியலை..


//சயந்தன் said...

//நித்திரை வெறியில கதைக்கிறானோ.//

முருகேசப்பா.. நித்திரை வெறியில முன்பாதி பிழை. பின்பாதி சரி. :)//

சோமிஸ் ரசிகர்களை இதை எதிர்க்கின்றோம்..உங்கள் பூனையின் வழிநடத்தலில் உங்கள் கார் உடைபடும்.. :P

6:23 PM  
Anonymous கொண்டோடி said...

//உங்கள் பூனையின் வழிநடத்தலில் உங்கள் கார் உடைபடும்.. :P//

அப்பிடியா?
சயந்தன் உங்க சைக்கிள் ஓடித்திரியிறதாயெல்லொ கேள்விப்பட்டேன்.

10:35 PM  
Anonymous தல said...

//சோமிஸ் ரசிகர்களை இதை எதிர்க்கின்றோம்..உங்கள் பூனையின் வழிநடத்தலில் உங்கள் கார் உடைபடும்.. //

சோமி உங்களது ரசிகர் மன்றங்கைள உடனடியாக நற்பணி மன்றங்களாக மாற்றவும்.

6:56 AM  
Blogger சினேகிதி said...

en0fl0ve2வாறன் இண்டைக்கு...நானில்லாத நேரம் நீங்கள் எப்பிடி என்னை விட்டிட்டு காதலைப் பற்றிக்கதைக்கலாம் :-)) கத்தரிக்காயைப் பற்றிக்கதைக்கலாம் ஆனால் காதல் பற்றி என்றால் என்னட்டயும் கேட்டிருக்கலாமெல்லோ.

8:01 AM  
Blogger சயந்தன் said...

//நீங்கள் எப்பிடி என்னை விட்டிட்டு காதலைப் பற்றிக்கதைக்கலாம் :-))//

சின்ன பிள்ளையளை சேர்ப்பதில்லை :))

1:04 PM  
Blogger சோமி said...

காதலின் பல்வேறு உணர்வுகளுக்குள் வாழ்பவன் அல்லது வாழ்ந்தவன் நான்.....காதல் என்பது இன்னமும் புரிந்துகொள்ளப் படாமல் குழப்பிக் கொள்ளப்டுவது, இந்த குழப்பதுக்கு அப்பால் ஊருக்கு ஊர் காதல் வேறுபடுவதாக கூறுவதும் ஏற்புடையதல்ல. காதல் என்பது ஒரு உணர்வு. அது எங்கும் ஒரே வகையினதுதான். காதல் தரும் சுகமும் காதல் தரும் வலியும் உலகமுழுமைக்கும் ஒன்றுதான்

//சோமிஸ் ரசிகர்களை இதை எதிர்க்கின்றோம்..//
உயிரினும் மேலான ரசிகர்களுக்கு நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவில் வெற்றிப் பதிவுகளை தரத் தயாராக இருக்கிறம்.
...இப்பிடியெல்லாம் சொல்லனுமுன்னு மனசு துடிக்குதுங்கோ..ஏனுங்கோ இப்பிடி ஆசைகாட்டி ஆலமரதில ஏத்திவிடுறிங்க.

சயந்தன் நீ சும்மா நாங்கள் கதைச்சதுகளை ஒழுங்கா கருத்து விளங்கிறமாதிரி எடிட் செயம்மல் கண்ட மேனிக்கு கட் பண்ணி இந்த மாதிரி போட்டால் எனது ரசிகர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.

1:08 AM  
Blogger சயந்தன் said...

//சயந்தன் நீ சும்மா நாங்கள் கதைச்சதுகளை ஒழுங்கா கருத்து விளங்கிறமாதிரி எடிட் செயம்மல் கண்ட மேனிக்கு கட் பண்ணி இந்த மாதிரி போட்டால் எனது ரசிகர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.//

தாங்கள் சொந்த கதையை குறைத்தால் கண்ட மேனிக்கோ காணாத மேனிக்கோ வெட்டுவது குறையும். வேணுமெண்டால் என்னை பற்றி நாலு வார்த்தை நல்லதாக சொல்லு.. கட் பண்ணாமல் போடுறன். :)

3:11 AM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

தூயா,
சோமீஸ் ரசிகர் மன்றத்தில் எனக்கும் ஒரு இடம் போட்டு வையுங்கோ. :)

9:09 AM  
Blogger கலை said...

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உள்ள தொடர்பு இன்றுதான் புரிந்தது. :)

2:00 AM  
Blogger Haran said...

என்னென்ன தலைப்பில் எல்லாம் கட்டுரைகளும்... பேச்சுகளும்... புல்லரிக்குது எனக்கு... :P

காதல் என்று வரும் பொழுது, ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விதமாக உணரப்படுவதாகவே நான் நினைக்கின்றேன்... சிலருக்கு ஒரு அழகான பெண்ணையோ/ஆணையோ கண்டால் அவர்கள் மீது வரும் சபலத்தை(infactuation) காதல் என்கின்றார்கள். சிலர் காதலிக்கிறோம் என்பார்கள் ஆனால் ஒருவர் மீது ஒருவருக்குத் துண்டற நம்பிக்கை, மரியாதை என்பன இருக்காது...
காதல் என்பது வெளியில் ஒன்றாகச் சுற்றித் திரிவதிலோ, ஒருவருக்கொருவர் பூ (றோசாப் பூ) கொடுப்பதிலோ, பரிசுகள் கொடுப்பதனாலோ, அல்லது அழகாய் இருப்பதனாலோ அல்லது முத்தங்கள் கொடுப்பதால் மட்டுமோ வருவதன்று... என்னைப் பொறுத்தவரையில், இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய சுழ்நிலையை ஏற்படுத்தி ஒருவரைப் பற்றி முழுமையான உணர்வை மற்றவனுக்கோ/ மற்றவளுக்கோ எடுத்து இயம்பக் கூடியதாக இருக்க வேண்டும், அதுவே ஒருவர் மற்றவருக்கு, ஆசானாகவும், உற்ற நண்பனாகவோ/ நண்பியாகவும், ஆலோசகராகவும் இருக்கச் செய்யக் கூடியதாக அமைய வேண்டும். அதே நேரம்... ஒருவரில் ஒருவருக்கு கவர்ச்சி இருக்க வேண்டியதும் அவசியமே...
தமிழ் குடும்பங்களில், பொதுவாக இதனை நான் காண்பதில்லை... பொதுவாகவே... பெண் என்பவள் ஆணுக்குக் கீழ்ப்பட்டவளாகவே நடத்துகிறார்கள்... அதிலும் கேவலமான விடயம் என்ன என்றால்.. பெண்களே... பெண்களை அவ்வாறு நடத்தியும்.... அடக்கியும் வருகிறார்கள் எமது சமுதாயத்தில்.

அது சரி... நான் உங்கள் வலைப் பதிவை வாசிக்கும் பொழுது... புகை புகையாய் வலைப் பதிவிலிருந்து வாந்தது... என்ன அது? வயித்தெரிச்சலா???

2:08 AM  
Blogger கொண்டோடி said...

காதல் பற்றின புரிதல் இடங்களுக்கேற்ப, பண்பாட்டுச் சூழலுக்கேற்ப மாறுபடும் எண்டு அற்புதன் சொன்னதை மறுக்கிறம் எண்டுறியள். பிறகு நீங்களே 'காதல் ஓர் உணர்வு' எண்டு குண்டைத் தூக்கிப் போடுறியள். அதிலயே உங்கட முந்தி மறுப்பு அடிபட்டுப் போகுது.

நானும் சொல்லிறன், காதல் ஓர் உணர்வுதான்.
உணர்வு எண்ட அடிப்படையில் ஒவ்வொருவரும் அதை உணர்ந்துகொள்ளும் முறை வேறவேற தானே? அப்ப காதல் பற்றின புரிதல் எப்படி எல்லாருக்கும் ஒரேமாதிரி இருக்கமுடியும்? வித்தியாசமாத்தானே இருக்கும்?

'காதல்' எண்டதை எழுத்துக்கூட்டி எழுதிறது வேண்டுமெண்டால் எல்லாருக்கும் ஒரேமாதிரியிருக்கலாம். (அதைக்கூட சில எழுத்துப்பிழையாக எழுதுகிறார்கள்.;-))
காதல் எண்டது மாற்றி எழுதமுடியாத, உச்சரிக்கமுடியாத ஒரு சொல்லாக இருக்கலாம்.
ஆனால் காதல் என்பது தொடர்பான புரிதல் ஒன்றில்லை. அது ஆளாளுக்கு வேறுபடும். மேல சிலர் அழகாக அதுகளைப்பற்றிச் சொல்லியிருக்கினம்.

ஒருத்தி எதேச்சையாப் பாத்துச் சிரிச்சாலே காதல் எண்டு நினைக்கிற பெடியளிட்ட இருக்கிற புரிதல்தானா எல்லாருக்குமிருக்கும் காதல் பற்றின புரிதல்?
(பெண்களும் அப்படித்தானா எண்டதை யாராவது பெண்கள் வந்து சொன்னால் நல்லது. ஆனால் சினேகிதித் தங்கச்சி எழுதினதைவிடவும் வேற காட்டுக்கள் உங்களுக்குத் தேவையில்லை)

கலந்துரையாடின ரெண்டுபேருக்கும் விளங்கிறமாதிரிச் சொல்லிறதாயிருந்தால், எல்லாக் கத்தரிக்காயும் ஒரேமாதிரியில்லாதபோது காதல் மட்டும் எப்படி ஒரேமாதிரியிருக்குமெண்டு சொல்லிறியள்?

6:41 AM  
Blogger அற்புதன் said...

//காதல் பற்றின புரிதல் இடங்களுக்கேற்ப, பண்பாட்டுச் சூழலுக்கேற்ப மாறுபடும் எண்டு அற்புதன் சொன்னதை மறுக்கிறம் எண்டுறியள். பிறகு நீங்களே 'காதல் ஓர் உணர்வு' எண்டு குண்டைத் தூக்கிப் போடுறியள். அதிலயே உங்கட முந்தி மறுப்பு அடிபட்டுப் போகுது.

நானும் சொல்லிறன், காதல் ஓர் உணர்வுதான்.
உணர்வு எண்ட அடிப்படையில் ஒவ்வொருவரும் அதை உணர்ந்துகொள்ளும் முறை வேறவேற தானே? அப்ப காதல் பற்றின புரிதல் எப்படி எல்லாருக்கும் ஒரேமாதிரி இருக்கமுடியும்? வித்தியாசமாத்தானே இருக்கும்?//

அப்படிக் கேளுங்கோ, :-)
காதல் பற்றிய புரிதல் ஒவ்வொரு மனிதருக்கும் வேறு படும் போது வெவ்வேறு சூழலுக்கும் கலாச்சாரங்களுக்கும் வேறு படாதோ? பொதுவான் விசயங்களும் இருக்கு ,ஆனா காதல் என்பது ஒரு சாம்பாறு, சொதி மாதிரி.பல விடயங்களின் கலவையாக இருக்கும் போது அது பற்றிய புரிதலும் வேறு படும்.இப்ப சொதி வைக்கிறதில, வகைகளில கன வித்தியாசம் இருப்பதாக சொமி தரன் சொன்ன மாதிரி, காதல் என்னும் சொதியும் ஒவ்வொரு இடத்தில வேற வேறயா இருக்கும் அல்லோ? காதல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரு பதின் மூன்று வயசுப்பெடியன் என்ன சொல்லுவான்? ஒரு இருபது வயசுப் பையன் என்ன சொல்லுவான்? சின்னக்குட்டி மாதிரி ,என்ன மாதிரி ஒரு அறுபது வயசு இளைஞன் என்ன சொல்லுவான்?

காதலும் கத்திரிக்காயும் ஒரே மாதிரி சாம்பாறில போடலாம், கறி வைக்கலாம்,குழம்பு வைக்கலாம்,வதக்கலாம்,சொதியும் வைக்கலாம் என்ன?:-)

10:22 AM  
Blogger சினேகிதி said...

ஹலோ கொண்டோடி....... சினேகிதித் தங்கச்சி இதுதான் காதல் என்று வலரயறுத்துச் சொல்லேல்ல. இப்ப லவ் பண்ற ஆக்களைப் பார்த்தால் நான் சொன்ன தருணங்களில எல்லாம் காதல் வந்திருக்கணும் அதான் அந்தச் சந்தேகத்தில எழுதினான் அப்பிடி.

4:47 PM  
Blogger கொண்டோடி said...

சினேகிதித் தங்கச்சி,

நான் உங்கட பேரைப் பாவிச்சுச் சொல்லவந்தது வேற.
'ஒருத்தி எதேச்சையாச் சிரிச்சாலே அது காதல்' எண்டு நினைக்கிற பெடியள் பற்றிச் சொல்லியிருந்தன். பெட்டையள் பற்றிச் சொல்லேல. அங்கால்பக்கம் எப்பிடியிருக்குமெண்டு நாங்கள் 'ஸ்டேட்மெண்ட்' விட ஏலாதுதானே?

அங்கால்பக்கமும் இதேபோல 'லூசுத்தனங்கள்' இருக்கு எண்டதுக்குத்தான் உங்கட கருத்தை மேற்கோளிட்டனான். (கவனிக்க: சினேகிதியைச் சொல்லவில்லை. நீங்கள் நல்ல தெளிவாத்தான் இருக்கிறியள்)

************************
அற்புதன்,
கத்தரிக்காய்க்கும் காதலுக்குமான தொடர்பு பற்றி நீங்கள் சொன்னதுதான் சரி. நல்ல விளக்கம். எண்டாலும் காதலில PHD செய்தவைக்கும் செய்துகொண்டிருக்கிறவைக்கும் நாங்கள் சொல்லிறதொண்டும் ஏறப்போறதில்லை.

4:13 AM  
Blogger சின்னக்குட்டி said...

வயது என்னோவோ கிழம் என்றாலும்... உந்த விசயங்களில் அரிச்சுவடிதான். என்ரை சந்தேகம் எல்லாம்... உங்கடை இந்த so call காதல் என்ற உணர்வும் வெறுப்பு உணர்வு ஒரு இடத்திலை இருக்கு எப்படி....உண்மையாய் இருக்கேலாது தானே... அதாலை தான் சொல்லுறன்.. நீங்கள் சொல்ற இடத்திலை உங்கட so call காதல் அந்த உணர்வாய்..இல்லை.. காதல் இருக்க வேண்டிய அதுக்குக்குரிய இடத்திலைத்தான் இருக்கு.

6:22 AM  
Anonymous Anonymous said...

சோமி நிறைய விசயங்களை கட்டுடைக்கிறார்..

12:29 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home