12.5.07

பண்டி (பன்றி) பார்க்கலாம் வாங்க

இது வழமையான ஒரு பன்றிப் பதிவு அல்ல :)
நான் வாழ்ந்த யாழ்ப்பாணப் பிரதேசச் சூழலில் பன்றி என்பதனை பண்டி எனத் தான் சொல்வது வழமை. இதுவே சில சமயங்களில் ஆட்களை போடா பண்டி எனத் திட்டவும் பயன்படுகிறது. தமிழகத்தில் கூட பன்றி என்ற சொல் சில இடங்களில் பன்னி எனத் திரிபடைந்திருப்பதை அறிந்திருக்கிறேன்.

இங்கே சுவிசில் நான் வாழும் நகரச் சூழல் அற்ற பெரு வயல்வெளிகளும் ஏரிகளும் பண்ணைகளும் அமைந்திருக்கின்ற கிராமச் சூழல் ஒன்றில் வீட்டிற்கு மிக அண்மையாக இருக்கும் ஒரு பன்றிக் கூண்டை பதிவு செய்து காட்சிப்படுத்துகிறேன். மாலை வெயிலில் வீடியோவிற்கான ஒளி அமைப்பு சரியாக வில்லை. அதனால் என்ன.. ?


6 Comments:

Anonymous பண்ணைப் பன்றி said...

எங்களைப் படமெடுத்த அண்ணாவுக்கு நன்றி

4:30 PM  
Anonymous பன்றிகள் முன்னேற்றச் சங்கம் said...

எங்களைத் தனித்துவமாகப் படம் பிடித்துப் பிரச்சாரப்படுத்திய
பன்றிகளின் காவலன் சயந்தனுக்கு ஜே

அனைத்துலக பன்றிகள் முன்னேற்றச் சங்கம்

5:49 PM  
Anonymous பண்டிப்பயல் said...

இதுவே சில சமயங்களில் ஆட்களை போடா பண்டி எனத் திட்டவும் பயன்படுகிறது.

போடா பண்டி

10:19 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சயந்தன், எழுநாவுக்கான பின்னூட்டம் இது.. அங்கே இடுகையில் பிழை வருவதால் கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா? :-D :

தன்விருப்பப் பதிவுகளின் பின்னூட்டத்தை மட்டும் எழுநாமூலம் திரட்ட முடியுமா?

1:28 AM  
Blogger ரவிசங்கர் said...

சயந்தன், சுரதா - எழுநா மனித உழைப்பில் தொகுக்கப்பட்ட பின்னூட்ட ஓடை opml கொண்டு உருவாக்கப்பட்டதா இல்லை தானியங்கி நுட்பம் ஏதும் இருக்கிறதா என அறிய ஆவல்.

2:54 AM  
Blogger suratha said...

//தன்விருப்பப் பதிவுகளின் பின்னூட்டத்தை மட்டும் எழுநாமூலம் திரட்ட முடியுமா?//

பொன்ஸ்

எழுநா ஒரு மாதிரி பின்னூட்டத்திரட்டி.
இதே முறையில் நீங்கள் ஒரு கூகிள் கணக்கு மூலம் உங்கள் விருப்ப பதிவர்களின் பின்னூட்டங்களை திரட்டிக்கொள்ளலாம்.

சயந்தன் அறிவிப்பிற்கு தொடுப்பிற்கும் நன்றி .

3:54 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home