சூடான பதிவர் ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு
Ravi Dreams ரவிசங்கருடன் நடாத்திய கலந்துரையாடல் ஒலிப்பதிவு இது. வலைச் சூழலில் தினமும் இரண்டு மூன்று பின்னூட்டங்களை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டு பதிவுக் கயமை :) செய்யும் ஒரு வலைப் பதிவர் அவர். ஒரு நாளில் 8 பதிவுகள் இட்டு சாதனை புரிந்த அவர், இதனால் திரட்டிகளின் முதற் பக்கத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுவோமோ என்பாதாலேயோ திரட்டிகளை விட்டு போய்விட்டார். அவருடனான இக் கலந்துரையாடலில் உபுண்டு, வேர்ட்பிரஸ், மாற்று மற்றும் திரட்டிகள் குறித்து அவர் பேசியிருக்கிறார். இவை பற்றி ஏற்கனவே அவர் பல பதிவுகளில் எழுதியும் இருக்கிறார்.
இவ் ஒலிப்பதிவினை ஏலவே கேட்ட ஒருவர் எனக்குச் சொன்னார்.
உங்களுடைய சிரிப்புக்கு போட்டியாக ரவிசங்கர் உருவாகிறார்.
இவ் ஒலிப்பதிவினை ஏலவே கேட்ட ஒருவர் எனக்குச் சொன்னார்.
உங்களுடைய சிரிப்புக்கு போட்டியாக ரவிசங்கர் உருவாகிறார்.
39 Comments:
அடடே.. இதப் பத்தியெல்லாம் பேச முடியுங்களா உங்களால..? என்னமோ போங்க சொதி மாதிரியோ கத்தாpக்கா மாதிரியோ வருமா இதெல்லாம்..
என்னங்க.. இது.. நமக்கு புரியிற தமிழிலை பேசுங்க... என்னா பாஸைங்க..அது கட்டற்ற மென்பொருள் கட்டிய என்று கிட்டு.
அது சரிங்க...சங்கரு ஏனுங்க அடிக்கடி வெட்கபட்டு சிரிச்சுகிறாரு..
மதராசி - வெகப்பட்டா ? :(
சிஞ்சா மனுசி கலையகம் - அடுத்த முறை சிரிப்பொலிகளை நீக்கித் தொகுக்க இயலுமா ? இல்லை, இன்னும் seriousஆ பேசுவமா :)
மிகப்பிரயோசனமான நல்ல பதிவு.
மேலதிக தகவல் மாலினி என்பது என் அம்மாவின் பெயர். மாலினிதேவி.
இன்னுமொரு மேலதிக தகவல். பாமினி என்பது 3ம் வகுப்பில் நம்மோடு படித்த ஒருவர். மேலும் அறிய இங்கு கிளிக்கவும் :):):)
மற்றும் படி இதற்கும் உபுண்டுவிற்கான பாமினி எழுத்துருவை அந்தரப்பட்டு நான் பெற்றுக்கொண்டதற்கும் எந்த சம்பந்தமுமில்லை மயூரன் :))))
க்னூ/லினக்ஸ் பயன்படுத்துவதன் அரசியல் பின்னணி பற்றி பேசியிருப்பதால், இந்த பதிவைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
Good post
thanks
கலக்கல் சந்திப்பு.. பயனுள்ளதாயும் அமைந்தது கண்டு மகிழ்ச்சியே.
முதலில் பதிவுலகை சீரியசாக நினைத்து இப்படிப்பட்ட கலந்துரையாடல்களை, பரிமாற்றங்களை ஆரம்பித்து நடத்துவதற்காக இருவருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் 'திரட்டி' என்பதைப் பற்றிய கருத்தோடு ஒத்துப்போகிறேன். ஆனாலும் அதிக அளவு ஆபாசம் தனிநபர் தாக்குதல்களை கட்டுப்படுத்த என்ன வழி? கடினமானக் கேள்விதான்.
தமிழ்மணம் கருத்து ரீதியான காரணங்களுக்காக பதிவுகளை திரட்ட மறுப்பது தவறான போக்கு என்பது என் கருத்து. இது குறித்து பதிவர்கள் விவாதிப்பது நல்லதே.
என்ன பாதியில் நின்னு போச்சு? தணிக்கையா? ;)
//என்ன பாதியில் நின்னு போச்சு? தணிக்கையா? ;)//
தணிக்கை பண்ண இதென்ன காதலும் கத்தரிக்காயும் ஒலிப்பதிவா..? (அப்படியா அப்போ அதிலென்ன தணிக்கையெண்டு கேட்கப் படாது. ):)))
பொன்ஸ் அவ்வளவும் தான் சொல்ல வந்த விடயங்கள். நன்றி வணக்கம் சொல்லி விடைபெற்றிருக்கலாம் தான். நமக்கதெல்லாம் பழக்கமில்லையே.. :)
(இது பாலினியை பயன்படுத்தி உபுண்டுவில் இருந்து அனுப்பப்படும் ஒரு மறுமொழி):)
தமிழ்மணம் கருத்து ரீதியான காரணங்களுக்காக பதிவுகளை திரட்ட மறுப்பது தவறான போக்கு என்பது என் கருத்து ??
இது குறித்து பதிவர்கள் விவாதிப்பது நல்லதே.
//என்னங்க.. இது.. நமக்கு புரியிற தமிழிலை பேசுங்க... என்னா பாஸைங்க..அது கட்டற்ற மென்பொருள் கட்டிய என்று கிட்டு.
அது சரிங்க...சங்கரு ஏனுங்க அடிக்கடி வெட்கபட்டு சிரிச்சுகிறாரு..//
ஏனுங்க.. நீங்க ரொம்பக் கஸ்டப்பட்டு மதராசித் தமிழில பேச முயற்சிக்கிறீங்க. ஆனாலும் இன்னும் கொஞ்சம் ட்ரெயினிங் தேவை உங்களுக்கு. better luck next time
சிறி அலெக்ஸ் சொல்வது
தமிழ்மணம் கருத்து ரீதியான காரணங்களுக்காக பதிவுகளை திரட்ட மறுப்பது தவறான போக்கு என்பது என் கருத்து
சிறில் அலெக்ஸ் தமிழ்மணம் எங்கே கருத்துகளுக்காகத் திரட்ட மறுக்கிறது?
//சிறில் அலெக்ஸ் தமிழ்மணம் எங்கே கருத்துகளுக்காகத் திரட்ட மறுக்கிறது?//
இங்கே புயல் ஒன்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் தெரிகின்றன. Be Aleart
இது ஆரிய பின்னூட்டம் இல்லை. சூடான பின்னூட்டம்
சிறில் அலெக்ஸ் சொல்வது
தமிழ்மணம் கருத்து ரீதியான காரணங்களுக்காக பதிவுகளை திரட்ட மறுப்பது தவறான போக்கு என்பது என் கருத்து
சிறில் அலெக்ஸ் தமிழ்மணம் எங்கே கருத்துகளுக்காகத் திரட்ட மறுக்கிறது?
ஆறிய பின்னூட்டமிடாது சூடான பின்னூட்டமிடும் அநாநி.. எனக்கு நிறைய பின்னூட்டம் கிடைத்தால் சந்தோசம் தான். அதற்காக ஒரே பின்னூட்டத்தை எத்தனை தடவை தான் சுட்டுச் சுட்டு போடுவீங்க..? ஆகக் குறைந்தது வேறு வேறு மாதிரியாகிலும் எழுதி எழுதி போடலாமே..:)))
சிறில் சொன்னது தொடர்பான உங்கள் கேள்விக்கு அவர் எப்படிங்க அடுத்த நிமிடமே பதிலளிக்க முடியும்..? அவரும் உங்க கேள்வியை பாக்க வேணாமோ.. அது வரை பொறுத்திருங்கப்பா..
இல்லை நான் இதே மாதிரிதான் தொடர்ந்து பின்னூட்டுவேன் என்றால் சொல்லுங்க.. நான் மட்டுறுத்தல் செய்து விட்டு தூங்கப் போறேன்.. ஒரே மாதிரியான உங்களுடைய 6 பின்னூட்டங்களை முழுங்கிட்டேன்.
என்ன தலீவா துர்வாசமாகீட்டீங்க
ஒவ்வொத்தரும் தனக்கு விரும்பினத எழுதிட்டு போகட்டுமே. மறுக்காதீங்க தலீவா. ஆனைக்கு சோளப்பொரி கொடுத்தா என்ன சோறுகறி கொடுத்தா என்ன
ஆனைக்கு சோளப்பொரி கொடுத்தா என்ன சோறுகறி கொடுத்தா என்ன
???
//இது ஆரிய பின்னூட்டம் இல்லை. சூடான பின்னூட்டம்//
ஓ.. அது தானா இது.. ?:)
//இல்லை நான் இதே மாதிரிதான் தொடர்ந்து பின்னூட்டுவேன் என்றால் சொல்லுங்க.. நான் மட்டுறுத்தல் செய்து விட்டு தூங்கப் போறேன்..//
நீங்க போய்த்தூங்குங்க.. நாம நல்ல பிள்ளைகளாட்டம் உங்க பதிவை பாத்துக்குpறம் :)
ஓகே... மட்டுறுத்தல் நீக்கப்படுகிறது.. ஆனாலும் அனானியாட்டம் ரொம்ப அதிகம்.. ஆமா...
//(அப்படியா அப்போ அதிலென்ன தணிக்கையெண்டு கேட்கப் படாது. ):)))//
அதான் அப்பவே சொல்லிட்டீங்களே.. சோமி உங்களைப் பத்தி சொல்லும் "உண்மைகளை" தணிக்கை செஞ்சித்தான் போடுறீங்கன்னு எங்களுக்கும் தெரியும் ;)
-- சோமீஸ் ரசிகர் மன்றம் சார்பாக :-D
//-- சோமீஸ் ரசிகர் மன்றம் சார்பாக :-D//
தல போல வருமா?
suuppaaer
தல உங்க சிறில் வந்து பதில் சொல்வார்ன்னு இன்னமும் நம்பிக்கிட்டே இருங்க.
சற்றுமுன் பின் இப்போதுன்னு காப்பி சாப்பிட்டுக்கிட்டே இருக்குறவருக்கு இதுல ஒரு லைனு போடமுடியாதாக்கும். எடுத்தோம் கவுத்தோமுன்னு தமிழ்மணம் கருத்து பத்தி கருத்து சொல்லிட்டு ஓட மட்டும் தெரீது.
தலீவா முட்டம் பையன் வருவாரா? பதில் தரமுடியாதுன்னா மன்னிப்பாச்சும் எடுத்தேன் கவுத்தேன் காமெண்டுக்கு கேப்பாரா?
அனானி. உங்களைப் போலவே தமிழ்மணம், தேன்கூடு திரட்டிகளின்மீது பாசம் உள்ளது.
குரற்பதிவில் விவாதிக்கப்பட்ட கருத்தையே எழுத்து வடிவில் தந்திருக்கிறேன்.
போன சந்திப்பில் ஓசை செல்லா சொன்னது முக்கியமான ஒரு பாயிண்ட். இணையம் மட்டற்றது. அதகாக ஆபாசங்களையெல்லாம் திரட்டவேண்டிய அவசியமில்லை - ஆபாசம் என்பது மோசமானது என்பதற்கல்ல, மாறாக அதை தனிப்படுத்தவேண்டும் என்பதற்காக.
தமிழ்மணத்தின் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை சொன்ன சில பதிவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்(அந்த சமயம் நான் பதிவுகளில் புழங்கவில்லை) இதை என்ன சொல்ல?
ஆதாரங்களுடன் கூடிய பதிவுகளைத்தான் தமிழ்மணம் திரட்டமுன்வருமென்றால் எத்தனை பதிவுகள்/பதிவர்கள் மிஞ்சுவார்கள்?
தங்களைப்பற்றிய அவதூறுகளுக்கு(?) பதிவர்கள் தனிப்பட்ட முறையில் எப்படி பதில் சொல்கிரார்களோ அப்படியே தமிழ்மணமும் இதை எதிர்கொண்டிருக்கலாம் என்பது என் எண்ணம். அதற்குப் பதிலாக தன் 'அதிகாரத்தை' பயன்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது.
விளையாட்டாக கிசு கிசு போட்டுக்கொண்டிருந்த பதிவு ஒன்றை நீக்கியதுதுவங்கி பல விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை.
நண்பர் மிதக்கும் வெளி சுகுணா திவாகர் தவிர்த்து யாரும் பதிவர்கள் விலக்கப்படுவது குறித்து விவாதித்ததாகத் தெரியவில்லை.
இது குறித்த விவாதம் தேவை என்பது என் கருத்து. தமிழ்மணத்தை எதிர்ப்பதோ அதை வெறுமனே சாடுவதோ என் நோக்கமல்ல மாறாக அதை மேம்படுத்துவதில் அதன் பயனாளர்களின் பங்கும் உள்ள்ளது என்பதற்காகவே இந்தக் கேள்விகள்.
முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன்.
அன்புடன்
சிறில் அலெக்ஸ்
சோமி சயந்தனைப் பற்றி எங்காவது நல்லமாதிரிச் சின்னதாகச் சொன்னாலும் அதைத் தலைப்புச் செய்தியாக்கும் சயந்தன் கடந்த 13 ஆம் திகதி கன்னியாகுமரியிலிருந்து இமயமலை வரைவாழும் சோமி ரச்கர்கள் யாவரும் சோமியின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியதைப் பற்றி ஏன் மூச்சுக் கூட விடவில்லை?
- சோமீஸ் ரசிகர் மன்ற இந்திய ஒருங்கிணைப்பாளர்,
புது தில்லி
//சோமி சயந்தனைப் பற்றி எங்காவது நல்லமாதிரிச் சின்னதாகச் சொன்னாலும் அதைத் தலைப்புச் செய்தியாக்கும் சயந்தன் கடந்த 13 ஆம் திகதி கன்னியாகுமரியிலிருந்து இமயமலை வரைவாழும் சோமி ரச்கர்கள் யாவரும் சோமியின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியதைப் பற்றி ஏன் மூச்சுக் கூட விடவில்லை?//
சன் டிவி ஆகிறதா சயந்தனின் சாரல் ? :)
//தல உங்க சிறில் வந்து பதில் சொல்வார்ன்னு இன்னமும் நம்பிக்கிட்டே இருங்க.
சற்றுமுன் பின் இப்போதுன்னு காப்பி சாப்பிட்டுக்கிட்டே இருக்குறவருக்கு இதுல ஒரு லைனு போடமுடியாதாக்கும். எடுத்தோம் கவுத்தோமுன்னு தமிழ்மணம் கருத்து பத்தி கருத்து சொல்லிட்டு ஓட மட்டும் தெரீது.//
//தலீவா முட்டம் பையன் வருவாரா? பதில் தரமுடியாதுன்னா மன்னிப்பாச்சும் எடுத்தேன் கவுத்தேன் காமெண்டுக்கு கேப்பாரா?
//
எனக்கு ஒரு தனிமடலோ அல்லது என் பதிவில் பின்னூட்டமோ இட்டிருந்தால் உடனே பதிலளிக்க வாய்ப்பிருந்திருக்கும்.
சோமிக்கெதிரான சயந்தனின் திரைமறைவு நகர்வுகளைக் கண்டித்து போராட்டத்தில் குடிப்போம்..ச்சீ.. குதிப்போம்:-))
//போராட்டத்தில் குடிப்போம்..//
அதற்கு சோமியை தலைமை தாங்க வைப்போம்.
//முன்னர் கொழுவி எழுதிய அநாமதேயம் நான்தான்.//
இங்கை எதுக்கு அவரு வாறார்...:((
ithu verai kozuvi
//காகம் கனவு காணும் கதை நல்ல கதையென்ன? :-)//
உந்த கதை எனக்குத் தெரியாதே.. சொன்னால் நானும் சோமியும் அடுத்த முறை கனாக் கண்ட காகம் எண்டு கலந்துரையாடுவமெல்லோ..
//சூடான பதிவர் ரவிசங்கருடன்//
எந்த நேரத்துல தலைப்பு வச்சியோ... சூடாக்கிட்டுத் தான் மறுவேலன்னு அலையுறானுங்க!!
பத்த வைச்சிட்டியே பரட்டை--
சயந்தன்
நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க என் இரு பின்னூட்டங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
நல்ல பதிவு, நீண்ட நாளைக்குப் பிறகு ரவியின் குரலைக் கேட்கக் கூடியதாக இருந்த்து!!!
வேர்ட்பிரஸ், விக்கி, பயர்பொக்ஸ் போன்றவற்றின் உத்தியோக பூர்வமற்ற தமிழ் மொழி பிராண்ட் அம்பசிடர்!!! ;)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home