30.10.06

என்னாலை எழுத வந்தவராம்

நானெல்லாம் இப்ப ஒண்டும் எழுதுறதில்லை. வசந்தனும் சரியா குறைச்சிட்டார். அதுக்கிப்ப என்ன எண்டும் ஏதோ பெரிசா உவை ரண்டு பேரும் முந்தி வலைப்பதிவில கோலோச்சினவை மாதிரி கதைக்கினம் எண்டு ஆரும் கேப்பினம். ஆனாலும் பாருங்கோ கோலோச்சாட்டிலும் நாங்கள் ரண்டு பேரும் நிறைய வாலாட்டினாங்கள்.

அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் நிப்பாட்டிப்போட்டாலும் வலைக்கு என்ன செய்தம் எண்ட கேள்வி நெடுநாளாய் எனக்குள்ளை இருந்தது. அது இண்டையோடை தொலையுது. இண்டைக்கு சும்மா அலசேக்கை பகீ எண்டவரின்ரை ஊரோடி எண்ட ஒரு பதிவைப் பார்த்தன். அவர் தன்ர முதலாவது பதிவில இப்பிடீ சொல்லுறார்.

ஊரோடி - பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன்.

பிறகென்ன.. நான் ஒரு புது ஆளை கொண்டு வந்திருக்கிறன் எண்ட நிம்மதியோடை போய்ச்சேரலாம் தானே..

பகீயின் ஊரோடி அகிலனின் தளம் மற்றும் இன்னொருவர் -மச்சாளின் கையைப்படித்தவர்- பெயர் நினைவுக்கு வருகுதில்லை.. இவையளின்ர பதிவுகளை படிக்கேக்கை சந்தோசமா இருக்கு. வாங்கோடா பொடியங்களா.. சும்மா பிளந்து கட்டுங்கோ..

வசந்தன் உமக்கு பின்னாலை மண்வாசனையோடை எழுத ஆக்கள் இல்லையெண்ட கவலை இனி உமக்கு தேவையில்லைத்தானே..

12 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

யோவ்!
ஆரப்பா உப்பிடிக் கவலைப்பட்டது?
நீர் சுயதம்பட்டம் அடிக்கிறது இருக்கட்டும். அதுக்குள்ள ஏன் என்னை இழுக்கிறீர்? (எல்லாம் உந்த பகீ ஏத்திவிட்ட பப்பாதான் காரணம்) ஏதோ கிழடுதட்டிப் பிரியிற மாதிரிக் கதைவிடுறீர்? 'போய்ச் சேருற' கதையெல்லாம் கதைக்கிறீர். எங்களுக்குத் தெரியாதோ நீர் ஏன் எழுதிறேல எண்டு. இந்தப்பதிவைப் போடுறதுக்கே எத்தினை கெஞ்சு கெஞ்ச வேண்டிக்கிடக்கு உம்மால?

நான் மண்வாசனையோட எழுதவுமில்லை, எனக்குப்பிறகு ஆரெண்ட வாரிசுக் கவலையும் எனக்கில்லை. அவனவன் அவனின்ர பாட்டில எழுதிப்போட்டுப் போகட்டுமேன். முந்தி மெல்பேண் உறைக்குள்ள ரெண்டு கத்திகள் இருந்தன. இப்ப ஒரேயொரு கத்தி.

நீர் சொன்ன 'மச்சாளின்ர கையப்பிடிச்சவரின்' பேர் நிலவன். அவரும் அகிலனும் கிளிநொச்சியில இருந்து பதியினம்.

ஏதோ நீர் இன்னும் இருக்கிறீர் எண்டதைக்காட்ட ஒரு பதிவாவது போடவைச்சதுக்கு பகீக்கு நன்றி.

3:58 AM  
Anonymous Anonymous said...

ஹனிமூன் இன்னும் முடியேல்லையோ அப்பு:))

5:24 AM  
Anonymous Anonymous said...

ம் வாங்கப்பு வாங்க....பிளவாளுமை சரியானதால வரல்ல எண்டு நினைச்சன் ம்கிம் கஷ்டம்தான் மோனே..

8:37 AM  
Anonymous Anonymous said...

/எங்களுக்குத் தெரியாதோ நீர் ஏன் எழுதிறேல எண்டு. இந்தப்பதிவைப் போடுறதுக்கே எத்தினை கெஞ்சு கெஞ்ச வேண்டிக்கிடக்கு உம்மால?/
சயந்தன், உதுக்காவது நீர் உம்மடை இன்றைய நிலவரம் குறித்து விரிவாக எழுதோணும்.

9:24 AM  
Blogger பகீ said...

அட ஒரு பதிவையும் காணேல்ல எண்டு இருந்தன் ஒரு பதிவாவது வந்திருக்கு. கட்டாயம் தொடருங்கோ.

8:08 PM  
Blogger சயந்தன் said...

வசந்தன்.. நாலு சுவருருக்குள்ளை கதைக்கிறதுகளை வெளிய சொல்லுறேல்லை எண்ட கொள்கையை மீறி நான்தான் சால்சாப்பு கதையள் கதைச்சிட்டன். மன்னிச்சு கொள்ளும்.

டிசே.. நீர் கதைக்கிறதை பாத்தால் நான் ஏதோ கவலைக்கிடமான நிலமையில இருக்குறது போல நினைக்கிற மாதிரி தெரியுது. அப்பிடியொண்டும் இல்லை.

பகீ.. எழுதாட்டியும் படங்களெண்டாலும் போடுவன்.

9:48 PM  
Blogger சயந்தன் said...

வசந்தன்.. நாலு சுவருருக்குள்ளை கதைக்கிறதுகளை வெளிய சொல்லுறேல்லை எண்ட கொள்கையை மீறி நான்தான் சால்சாப்பு கதையள் கதைச்சிட்டன். மன்னிச்சு கொள்ளும்.

டிசே.. நீர் கதைக்கிறதை பாத்தால் நான் ஏதோ கவலைக்கிடமான நிலமையில இருக்குறது போல நினைக்கிற மாதிரி தெரியுது. அப்பிடியொண்டும் இல்லை.

பகீ.. எழுதாட்டியும் படங்களெண்டாலும் போடுவன்.

9:52 PM  
Anonymous Anonymous said...

//நீர் கதைக்கிறதை பாத்தால் நான் ஏதோ கவலைக்கிடமான நிலமையில இருக்குறது போல நினைக்கிற மாதிரி தெரியுது. அப்பிடியொண்டும் இல்லை//
அப்படியொண்டும் இல்லை எண்டு சொல்லேக்கயே ஏதோ ஒண்டு இருக்கு எண்டு அர்த்தம் தொனிக்கிற மாதிரி இருக்குது.

11:25 PM  
Anonymous Anonymous said...

//முந்தி மெல்பேண் உறைக்குள்ள ரெண்டு கத்திகள் இருந்தன. இப்ப ஒரேயொரு கத்தி.
//
;-)

4:43 PM  
Blogger சயந்தன் said...

//அதுசரி நீர் 30.10.06 - 10:31 PM போட்ட பதிவிற்கு முதலாவது ஆளாக 10:58 PM இற்கு விழுந்தடித்துக்கொண்டு வந்து வசந்தன் பின்னோட்டம் விட்டது மட்டும் எப்பிடி எண்டுதான் எனக்கு விளங்கேல்லை.//

ஐயனே திருநாளை புளொக்கர்..உதை வசந்தனிடம் தான் கேக்க வேணும்..

//அடுத்தது நான் நீர் எப்பிடியப்பா சொல்லுவீர்

முந்தி மெல்பேண் உறைக்குள்ள ரெண்டு கத்திகள் இருந்தன. இப்ப ஒரேயொரு கத்தி.

எண்டு உமக்குத் தெரியாட்டி நீர் கனக்க கதைக்க்கூடாது.//
நான் சொல்லவில்லையே..

//வேணுமெண்டால் ஆர்எம்ஐரி வாரும். உக்காந்து பேசுவம்//
உதை இந்த வருச மார்ச்சுக்கு முன்னாலை கேட்டிருக்க வேணும். பரவாயில்லை..இன்னொரு முறை வந்தால்.. நீரும் rmit இலேயே தொடந்தும் இருந்தா சந்திப்பம்..

//மாதனமுத்தாவோட சேர்ந்து பனங்காய்ப் பணியாரம் சாப்பிட்டுக்கொண்டு திரிஞ்ச நீர் பேந்து அரைவாசிலே ஓடாம இருக்க வேற என்ன செய்துவைக்க எண்டதையும் சொல்லிவிடும்.//
எனக்குது விளங்கேல்லை.. என்ன சொல்ல வாறியள்.. நானும் வசந்தனும் ஒண்டு எண்டா.. அட திரும்பவுமா..

1:37 AM  
Blogger சயந்தன் said...

திருநாளைபுளொக்கர் 8:15க்கு எழுதின பதிலுக்கு நான் 8:37க்கு பதில் குடுத்தது என்னெண்டு தான் எனக்கு விளங்கவில்லை..

1:39 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

அய்யனே திருநாளைblogகர்,
உம்மோட பெரிய கரைச்சலாப் போட்டுது.
முதலில ஆரைக் கேள்வி கேக்கிறீர் எண்டு சொன்னா மேற்கொண்டு கதைக்கலாம்.
RMIT வந்து கதைக்கக்கூடிய ஆளாயிருந்தால், மெல்பேணில சயந்தன் எண்டு ஒருத்தர் இருந்து வலைப்பதிஞ்சதையும் இப்ப அவர் குடும்ப அரசியலில சங்கமிச்சு ஐரோப்பாவில இருக்கிறதையும், வசந்தன் எண்டு ஒருத்தன் இப்பவும் மெல்பேணில இருக்கிறதையும் தெரியாமலிருக்கிறீரோ????
நான் 'மெல்பேண் உறைக்குள்ள ஒரு கத்தி'க் கதை சொன்னதுக்கு ஏன் சயந்தனோட ராத்திறீர்?
உம்மட கதையப் பாத்தா இன்னொருத்தரும் மெல்பேணில இருந்து வலைப்பதியிறார் போல கிடக்கு?
ஹிஹிஹி... அப்பிடியெண்டாலும் வெளிய வாங்கோவன் ராசாமாரே.
பதினேழு நிமிசத்தில முதற்பின்னூட்டம் வாறதில என்ன பெரிய ஆச்சரியம் கிடக்கெண்டு விளங்கேல.
_______________________________________
பிளவாளுமை பற்றி உதாரணம் காட்டிறதுக்கு வேற ஒருத்தர் இருக்கிறார். அவரைவிடச் சிறந்த உதாரணம் எங்கயும் எடுக்க ஏலாது.
;-)

1:52 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home