13.4.06

ஈழம் குறித்து ஜெயலலிதா..

சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே..

ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான் இன்று ஈழத்தமிழர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் வேறு பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்களாக பணி புரியும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்து தான் நான் சொல்கின்றேன். ஆகவே நான் ஒட்டு மொத்தமாக இலங்கைத்தமிழர்கள் என்று சொல்கின்றேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத்தமிழர்கள் மதிப்போடும் மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடாத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இது தான் என்னுடைய கொள்கை.

11 Comments:

Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

நீரெல்லாம் தேர்தல் பதிவு எழுதத் துவங்கீட்டீரோ?
சபாஷ்!! சரியான போட்டி.

அதுசரி, ஜெயா ரீவி எல்லாம் பாக்கிறீர் போல கிடக்கு??

3:48 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: pot"tea"kadai

இரை கிடைப்பதற்கு அரியதாய் இருப்பின் பதுங்கித் தானே பாய வேண்டும். அதை தான் ஜெயா சொல்கிறார்.

13.59 14.4.2006

9:04 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Chumma

ஒரு இலச்சியத்தை அடைவேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.. கனவு காண்கிறார்கள் என்றால்.. நடக்க மடியாத ஒன்றிற்காகவா..?

13.47 14.4.2006

12:50 AM  
Blogger à®œà¯†à®¯à®•à¯à®•à¯à®®à®¾à®°à¯ said...

/ஒரு இலச்சியத்தை அடைவேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.. கனவு காண்கிறார்கள் என்றால்.. நடக்க மடியாத ஒன்றிற்காகவா..? /

அப்துல்கலாமே எல்லோரையும் கனவு கான சொல்கிறார். கனவு கண்டால்தான் அதை நனவாக்க முயலமுடியும். மார்டின் லூதர் கிங்-கின் நான் ஒரு கனவு கண்டேன் என்ற சொற்பொலிவைப்பற்றி கேள்வியாவது பட்டதுண்டா?

2:32 AM  
Anonymous Anonymous said...

//மார்டின் லூதர் கிங்-கின் நான் ஒரு கனவு கண்டேன் என்ற சொற்பொலிவைப்பற்றி கேள்வியாவது பட்டதுண்டா? //

அட போங்கப்பா.. சொற்பொலிவையே நான் கேள்விப்பட்டதில்லையே..

10:39 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: tamilchild

மிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

15.57 5.5.2006

3:15 AM  
Anonymous Anonymous said...

our EX CM JJ, OUR PURADCHI THAI,
Our PEN KADVUL> our Godess>
oh god save our EX CM GODESS
Long live,

1:54 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: chumma

vada

22.47 29.5.2006

1:57 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: johan- paris

இதே!கொள்கையுடன்; தொடர்ந்தால் போதும்!
எழுத்தில் இட்டதற்கு; சயந்தனுக்கு நன்றி!
யோகன் -பாரிஸ்

22.51 29.5.2006

1:58 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kirukan

//என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை.//
அது என்ன தான் கொள்கை

1.20 30.5.2006

4:27 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kavi

இந்த செய்தி எந்த ஊடகத்திலும் வந்ததாக தெரியவில்லை.

0.32 18.11.2006

4:41 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home