17.6.07

நட்சத்திர வார அழைப்பு

அன்புடையீர்

நிகழும் மங்களகரமான சர்வசித்து வருடம் ஆனித் திங்கள் 18ம் நாள் முதல் 25ம் நாள் வரையிலான அக்னி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுப காலப் பகுதியான ஒரு வாரத்திற்கு சயந்தனாகிய என்னை இறைவன் திருவருள் துணை கொண்டு நட்சத்திர பதிவராய் நியமிக்க பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதரராய் சாரல் பக்கத்திற்கு வருகை தந்து படித்து கேட்டு பார்த்து வாரத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
சயந்தன்

விழா நடைபெறும் இடம்
www.sayanthan.blogspot.com

பிற்குறிப்பு: மொய் ஏற்றுக் கொள்ளப்படும். ஏற்கனவே வாங்கிய மொய்களைத் திருப்பித் தருபவர்கள் தவிர புதிதாகத் தர விரும்புகிறவர்களும் தரலாம். அவை பின்னர் தவணை முறையில் திருப்பிச் செலுத்தப் படும்.

38 Comments:

Blogger சினேகிதி said...

சோமி அண்ணா மைக்கைத்தாங்கோவன்.நானும் அப்ப இருந்து பார்க்கிறன் நீங்களே மைக்கை வைச்சுக்கொண்டு நிக்கிறீங்கிள். வசந்தனண்ணா நீங்களே மொய் விபரம் எழுதுறீங்கிள்.சரி எழுதுங்கோ.சினேகிதி $100.

சயந்தனண்ணா வாழ்த்துக்கள் :-)

10:15 PM  
Anonymous Anonymous said...

கொண்டாடத்துக்கு நானும் வந்தனான்... சிறப்ப இருக்கும் எண்டதிலை எந்த சந்தேகமும் இல்லை..... வாழ்த்துக்கள்.

10:17 PM  
Anonymous Anonymous said...

"நிகழும் மங்களகரமான சர்வசித்து வருடம் ஆனித் திங்கள் 18ம் நாள் முதல் 25ம் நாள் வரையிலான அக்னி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுப........... "/// இதை கேக்கும் sorry வாசிக்கும் போது.... "இது தானா இவன் தானா எதிர்பார்த்த இந்நாளும் இது தானா....." அந்த மாதிரி சயந்தனையும் உர்கார்த்தி .....ம்ம்ம்ம்ம் நல்லாதான் இருக்கு.......

10:55 PM  
Blogger ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் சயந்தன். கண்ணீர் முட்ட வைத்தது உங்கள் முன்னுரை. :)

10:55 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள்...

11:04 PM  
Blogger சோமி said...

வாழ்த்துக்கள் சயந்தன் - நான் இங்கு பந்தியில் உட்கார்ந்திருக்கிறன். யாரங்கே என்னை மொய்ப் பகுதியில் கொண்டு போய் விட்டது. ?

என்னது சிநேகிதி 100 டொலரா.. ? இல்லயே என்வலப்புக்குள்ளை இலங்கை ரூபா 2 தான் உள்ளது.

(மைக்கில் )
சிநேகிதி கொடுத்த மொய்ப் பணம் 2 ரூபா

(வசந்தனிடம்) விஜெ மொய் தரவில்லை.. பந்தியில் இருக்க விட வேண்டாம்
ஒரே பிசியப்பா..

11:15 PM  
Blogger சின்னக்குட்டி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சயந்தன்.கலக்குங்க இந்த வாரத்தை.. மொய் வைச்சுட்டால் போச்சும்.. 9.99 சத காசுகள் தானே . அதற்கென்ன.

11:15 PM  
Blogger த.அகிலன் said...

வாழ்த்துக்கள் சயந்தன்.

12:16 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் சயந்தன்...

மண்வாசனையோடு கூடிய அருமையான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...!!!!

12:19 AM  
Blogger கதிரவன் said...

வாழ்த்துக்கள் சயந்தன்

12:33 AM  
Blogger கலை said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

1:04 AM  
Blogger கதிர் said...

501 :))

1:25 AM  
Blogger மலைநாடான் said...

சயந்தன்!

வாழ்த்துக்கள்.
(அதுசரி, சோமிக்கு கொஞ்சம் பொறுத்துக் காசு அனுப்பலாம் என்டு சொன்னது, இந்த மொய்ய நம்பியே...):)

சோமி!
வந்த ஆட்கள் எல்லாரும் கடைசிவரை இருந்துதான் போகவேணும் என்டிறத கவனமாப்பாரும்.

1:25 AM  
Blogger கானா பிரபா said...

யோவ்

கடைசி வரிசைக்கு கோழிக்கால் போடேல்லை, எங்கப்பா சோமிப்பயல் போயிட்டான்?

1:59 AM  
Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.

மொய் வச்சாச்சு...101ன்னு (ஒரு கமெண்ட்) எழுதிக்குங்க. :)

3:16 AM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துக்கள் சயந்தன்..
:)

கலக்குங்க..!

4:15 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

கவலைக்குரிய விசயம்.
தமிழ் வலைப்பதிவுலகம் விசர்பிடிச்சுத் திரியிற ஒரு கிழமையில உம்மை நட்சத்திரமாக்கியிருக்கினம்.
இதன்பின்னணியில் இருக்கும் சதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆரப்பா அந்தச் சதிகாரன் / சதிகாரி?

;-)

உதார் சினேகிதிக்குப் போட்டியா 'அன்புள்ள சினேகிதி'?

4:15 AM  
Blogger கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் சயந்தன்

4:40 AM  
Blogger இளங்கோ-டிசே said...

யோவ், வசந்தன் தன்ரை கலியாண வீட்டுக்கு எழுத வைத்திருந்த அழைப்பிதழைக் களவெடுத்து நீர் இங்கே போட்டுவிட்டீர் என்று அழுது குழறுகிறார், அதை முதலில் கவனியும்.
.....
வாழ்த்து!

6:09 AM  
Blogger சினேகிதி said...

கோழிக்காலா?? இன்றைக்கு சைவ போஜனம் பிரபாண்ணா :-)

மிச்ச 98 டொலரை அதுக்குள்ள சுருட்டினது யாரு யாரு யாரு?

7:16 AM  
Anonymous Anonymous said...

இன்றைய முகப்புப் படம் என்ன சொல்லுது சயந்தன்.. தொப்புள் கொடிக்கும் இதுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லையா? இல்லை எனக்குத் தான் புரியலையா? யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறன்.. பிடிபடுதில்லை... கேட்டிட்டா பெடியனுக்கு ஒரு பின்னூட்டம் கூடின மாதிரியும் போச்சு.. என் சந்தேகத்தையும் தீர்த்துக்கிட்ட மாதிரியும் போச்சு... அது தான்..

8:11 AM  
Blogger சோமி said...

யோவ்..என்று மரியாதைக் குறைவாக விழித்தவர்களின் சபை நாகரிகமின்மையை "மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின்" சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எமது அமைப்பின் மத்திய குழு எமது ஐரோப்பிய பொறுப்பாளர் "மொக்கைப் புயல்" சயந்தன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

-மத்தியகுழு உறுப்பினர்

8:36 AM  
Anonymous Anonymous said...

\\எமது அமைப்பின் மத்திய குழு எமது ஐரோப்பிய பொறுப்பாளர் "மொக்கைப் புயல்" சயந்தன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

-மத்தியகுழு உறுப்பினர\\

்குழு குழுவா கிளம்பிட்டிங்கிளா கும்மாளம் போட.

9:18 AM  
Blogger ilavanji said...

சயந்தன்,

நட்சத்திர வாழ்த்துக்கள்!

// தமிழ் வலைப்பதிவுலகம் விசர்பிடிச்சுத் திரியிற ஒரு கிழமையில // வசந்தன் இப்படித்தான் எதையாவது கெளப்புவாரு! அப்படியே இருந்தாலும் உங்களுக்கு விசருக்கு வேப்பிலை அடிக்கத்தெரியாதா என்ன?! :)

படம் அருமை! ஆனா இதனை முன்னாடியே எங்கயோ பார்த்தாமாதிரி இருக்கு! :)))

11:03 AM  
Blogger அற்புதன் said...

சயந்தனண்ணா வாழ்த்துக்கள்.

11:04 AM  
Blogger பிருந்தன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

12:48 PM  
Anonymous Anonymous said...

//கானா பிரபா Said

கடைசி வரிசைக்கு கோழிக்கால் போடேல்லை, எங்கப்பா சோமிப்பயல் போயிட்டான்?//

தம்பி.. இப்பிடி பப்ளிக்கில கிலிசை கெடுத்தாத.. ஆக்கள் என்ன நினைப்பினம்.. பேசாமல் சாப்பிடு பாப்பம்.. அடம் பிடிக்காமல்..

1:11 PM  
Anonymous Anonymous said...

//மிச்ச 98 டொலரை அதுக்குள்ள சுருட்டினது யாரு யாரு யாரு?//

வேறை ஆர்.. உவன் சோமிதான் எண்ணிக் கொண்டிருந்தவன்.

1:12 PM  
Blogger kavishan said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சயந்தன்.

3:58 PM  
Blogger துளசி கோபால் said...

அட!
சயந்தன் நீங்களா இந்த வார நட்சத்திரம்?

வாழ்த்து(க்)கள்.

நேத்து மெல்பேர்னில் துப்பாக்கிச்சூடு விவரம் பார்த்தவுடன் உங்க நினைவுதான்
வந்துச்சு. எல்லாம் நல்லா இருக்கணுமேன்ற கவலைதான்.வேறென்ன?

5:03 PM  
Anonymous Anonymous said...

இந்தாங்கோ சோமியண்ணா இதையும் ஒருக்கா எழுதிக்கொள்ளுங்கோ.... இரட்டை வடம் தங்கச்சங்கிலி... அது அது ... இஞ்ச கொஞ்சம் பொறும் ஐசே... நான் எல்லோ சொல்லிகொண்டு இருக்கிறன்.. ஆ.. அது அது சோமி அண்ணை 2பவுணும்.. 4மஞ்சாடியும்.. வடிவா எழுதிங்கோ.. அப்பாடி ஒரு மாதிரி குடுத்தாச்சு.. இஞ்ச தம்பி பந்தி எங்க போடுகினம்?

7:47 PM  
Blogger Vasanthan said...

இளவஞ்சி,
அப்ப சயந்தனையும் விசர்ப்பதிவு போடச் சொல்லிறியளோ?

மவனே சயந்தா,
உவங்கட கதையக்கேட்டு சிவாஜி பற்றி ஏதாவது பதிவு வந்துது.....
நடக்கிறதே வேற.
அவுஸ்திரேலியாவில இருக்கிற உம்மட சொத்துப்பத்துக்களுக்கு பாதுகாப்பு உறுதியில்லை.

9:57 PM  
Blogger SurveySan said...

கலிபோர்னியா சர்வேசன்&கோ வகை, $101.

பி.கு: என் குட்டீஸ் போட்டிக்கு விளம்பரம் கொடுத்தா, $202 ஆகலாம் :)

10:09 PM  
Blogger Unknown said...

நாலு பன்றிக்குட்டிதானே போனாப்போகட்டும் நீங்கள் சிவாஜிப்பதிவு போடு்ங்கோ சயந்தனண்ணா :-)

வசந்தனண்ணா இப்பிடி பப்ளிக்கா மிரட்டுறது நல்லாயில்ல!

11:21 PM  
Blogger சயந்தன் said...

//நேத்து மெல்பேர்னில் துப்பாக்கிச்சூடு விவரம் பார்த்தவுடன் உங்க நினைவுதான்
வந்துச்சு. எல்லாம் நல்லா இருக்கணுமேன்ற கவலைதான்.வேறென்ன?//

துளசிக்கா.. அன்பிற்கு நன்றி...
ஆனால் மெல்பேணில் இருந்து சுவிற்சலாந்து வந்து குடும்ப அரசியல் நீரோட்டத்தில் தொபுக்கடீர் என விழுந்து அடுத்த மாதத்தோடு ஒரு வருடம் ஆகப் போகிறது..
இப்போ மெல்பேணில் வசந்தன் மட்டுமே..

அவர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார் என்பதனால் பாதுகாப்பாக இருப்பார்.

வசந்தன் உம்முடைய ராஜதந்திர அழுத்தத்தையும் மீறி நான் சிவாஜி பற்றி பதிவிட்டு விட்டேன். இதுக்கும் மேல போனால் நான் கோத்தபாய ராஜபக்ச போல புலம்ப வேண்டியிருக்கும். ஆ... நமக்கு கனடா போன்ற நாடுகளின் ஆதரவு இருக்கு பாத்தீரோ..

1:24 AM  
Anonymous Anonymous said...

ஆரம்பமே ஆர்ப்பாட்டமா இருக்கு.
வாழ்த்துக்கள்!!!!!

3:40 AM  
Blogger Jazeela said...

நட்சத்திர வாழ்த்துகள்.

காசா பணமா என் மொய் €10001 :-)

7:01 AM  
Blogger U.P.Tharsan said...

நல்ல(சாப்பாடா)பதிவா போடுங்கப்பா.

7:31 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home