வலைப் பதிவர்கள் பற்றிய உற்சாக உரையாடல்
இது ஒரு உற்சாக அலட்டல் பதிவு. ஏற்கனவே நானும் சோமியும் அலட்டி இட்ட பதிவுக்கு முன்பாக சில காலங்களுக்கு முன்பு ஒலிப்பதிவு செய்யப் பட்டது. ஒரு வேளை இது எப்போது ஒலிப் பதிவு செய்யப்பட்டதென்பதை சோமியும் மறந்திருக்கலாம். வழமை போலவே நோக்கமெதுவுமற்ற பலதும் பத்துமான உரையாடல் தான் இப்பதிவாயினும் ஆரம்பத்தில் சோமி தனது வலைப் பதிவு குறித்தும் பதிவர்கள் குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
பிற்பாதியில் சாதாரண அலட்டல் தான் இடம்பெறும். அவ்வப்போது ஒலிப்பதிவை குழப்பும் விதத்தில் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். (மயக்கும் சிரிப்பு..:))
சோமி நீ என்னைப் பற்றி புகழ்ந்து பாடிய தோத்திரங்களை கூச்சத்தில் எடிற் பண்ணிட்டன். பரவாயில்லை பின்னூட்டத்தில வந்து சொல்லு. :))
பிற்பாதியில் சாதாரண அலட்டல் தான் இடம்பெறும். அவ்வப்போது ஒலிப்பதிவை குழப்பும் விதத்தில் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். (மயக்கும் சிரிப்பு..:))
சோமி நீ என்னைப் பற்றி புகழ்ந்து பாடிய தோத்திரங்களை கூச்சத்தில் எடிற் பண்ணிட்டன். பரவாயில்லை பின்னூட்டத்தில வந்து சொல்லு. :))
37 Comments:
நேயர் விருப்பம் - சோமியின் கதை - பாகம் 2 எப்போ? :)
மயக்கும் சிரிப்போ?? இதைத்தான் சில்லறை சிதறும் சிரிப்பெண்டு சொல்றவையோ??
சோமி அண்ணான்ர குரல் எனக்குத்தெரிஞ்ச ஒரு அண்ணான்ர குரலை மாதிரியே இருக்கு.
கொழுவியைப் பற்றிப் புகழ்ந்து சயந்தன் அண்ணாட்ட சொல்றது நல்லாயில்லை ...பிறகு சயந்தன் அண்ணாக்கு எரிச்சலாப்போடும்.
பஞ்சாபி போடுறதோ சீலை கட்டுறதோ என்று நாங்களே கவலைப்படேல்ல உங்களுக்கு என்ன வந்தது?
பொம்பிளை பார்க்கப்போறதைப்பற்றி சோமி அண்ணாதான் இன்னும் எழுதேல்ல என்று நினைக்கிறன் அதயும் எழுதிப்போட்டு உந்த அலட்டலைப் பதிஞ்சிருக்கலாம்.
சயந்தன், சோமி,
மிகவும் இரசித்தேன்..
கலக்குறீங்க.
ரெம்ப எதார்த்தமா..உற்சாகமா பேசுறீங்க.. வாரம் ஒன்றாவது இடுங்கள்.
இதுக்கென்று ஒரு தனிப் பெயர் வைக்கலாம்..
'கேப்பங்கஞ்சி வித் கவிதா' மாதிரி.
'மாமனும் மச்சானும்' - பழைய ஸ்டைல் தலைப்பு
'ஹெலோ மாம்ஸ்' புது ஸ்டைல்.
தொடருங்க..
:)
ahaaa
நல்லா இருந்தது உரையாடல்
:)))
மழை ஸ்ரேய பெயரின் நமது விளக்கமும் அதகவே இருந்தது.
இப்பிடியான ஆய்வுகளைத் தொடர்ந்து தாங்கோ.
***
சோமிதரன் ஷ்ரேயாவை 'அது' எண்டு அஃறிணையாக விளிப்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன்.
***
அப்ப கொழுவிக்கு வயசு போட்டுதெண்டு சொல்லிறியள்?
சுப்பர் சோமீ
தம்பியவை உதென்ன கூத்து. ஒண்டு செய்யிறதெண்டால் ஒழுங்காச் செய்ய வேணும். இல்லாட்டி செய்யாமல் இருக்க வேணும். உதென்ன..? அடியும் இல்லை நுனியும் இல்லை. சசில விசயங்கள் பொதுவுக்கு வரும்போது ஒழுங்கா இருக்க வேணும். நீங்கள் உங்களுக்குள்ளை வாடா போடா எண்டு என்னவும் கதையுங்கோ. ஆனா இப்பிடீயொண்டு செய்யேக்கை மரியாதையாக் கதைக்க வேணும். இப்பத்தைய பெடியங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. என்னவோ போங்கோடா..
Toddy with Somee.. may be this title will be suitable..
good. keep it up
ரவிசங்கர்.. சாட்டோடை சாட்டா சோமியின் கதை பாகம் ஒன்றை சொல்லி விட்டதை நன்கு உணர்ந்திருக்கிறீங்கள். என்னவெல்லாம் சொல்ல நினைத்தமோ அதையெல்லாம் சொல்லிட்டம் பாத்தீங்களா..
//பஞ்சாபி போடுறதோ சீலை கட்டுறதோ என்று நாங்களே கவலைப்படேல்ல உங்களுக்கு என்ன வந்தது?//
இதென்ன கேள்வி. நாங்கள் தானே இதுகளைத் தீர்மானிக்கிறது.:)
சிறில் அலெக்ஸ் நன்றி. செய்வோம்.
வசந்தன், அது என்று குறிப்பிட்டது அந்த முகவரியை. அதாவது மழை ஸ்ரேயா என்ற முகவரியை. அவவை இல்லை. (இவன் பாவி தெரியாத் தனமா உளறுறது. பிறகு அதுக்கு நான் விளக்கம் சொல்ல வேண்டிக் கிடக்கு)
//சுந்தர் / Sundar said...
சுப்பர் சோமீ //
சுந்தர்.. சோமிதரனுடைய அப்பாவின் பெயர் சுப்பர் இல்லை.
Toddy with Somee நல்லாகத் தான் கிடக்கு. படமும் கிடக்கு. போட்டுடலாம்.
கொழுவியப் பத்தியும் பேசியிருக்கீங்களா..? :)))
சோமி தற்போது எங்கே இருந்து பேசுகிறார்.
சுவாரசியமான உரையாடல்!!
சில முடிவுகள்:
1. சோமி உற்சாகமாய் இருக்கின்றார். சயந்தன் அவ்வாறில்லை. ஒருவருக்குத் திருமணம் ஆனதும் இன்னொருவருக்கு அவ்வாறு ஆகாததும் காரணமாயிருக்கலாம்.
2. கொழுவியின் பதிவுகள் நீர்த்துபோவதற்கு அவருக்கு வயது ஆனது ஒரு காரணமாயிருக்கலாம் மற்றும் அண்மையில் மத்தியகுழுவில் புது உறுப்பினர் சேர்க்கப்பட்டதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
3. சயந்தன், 'ஏன் எனது பதிவை பட்டியலிடவில்லை?' என்று சோமியிடம் கேட்கின்றபோது,அச்சம் நாணம் மடம் பயிர்ப்புடன் வெட்கப்பட்டதைப்ப்பார்க்கும்போது சயந்தன் கொழும்பில் ஹீரோவாக அல்ல, ஹீரோயினாக நாடகங்களில் நடித்திருப்பார் என்றுதான் நம்பவேண்டியிருக்கின்றது.
4. சைவமங்கையர் கழகம், இராமநாதன் கல்லூரி, மெதடிஸ் போன்றகல்லூரிப் பெண்கள் கல்லூரியில் ஹீரோயின் சயந்தனிற்காய் நடிகை மன்றங்கள் இன்றும் இயங்கிக்கொண்டிருப்பதாய் அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
விறுவிறுப்பான உரையாடல்...
ஒட்டுக் கேப்பதைப் போன்ற ஓர் உணர்வு :)))
//சோமி உற்சாகமாய் இருக்கின்றார். சயந்தன் அவ்வாறில்லை. ஒருவருக்குத் திருமணம் ஆனதும் இன்னொருவருக்கு அவ்வாறு ஆகாததும் காரணமாயிருக்கலாம்.//
ஓ.. சோமிக்கு திருமணம் ஆகிவிட்டதா..?
//சோமி தற்போது எங்கே இருந்து பேசுகிறார்.//
யோகன் அண்ணை. அவர் இப்போது சென்னையில் கல்வி கற்கின்றார்.
//அச்சம் நாணம் மடம் பயிர்ப்புடன் வெட்கப்பட்டதைப்ப்பார்க்கும்போது சயந்தன் கொழும்பில் ஹீரோவாக அல்ல, ஹீரோயினாக நாடகங்களில் நடித்திருப்பார் என்றுதான் நம்ப வேண்டியிருக்கின்றது.//
ஓம். முதலும் ஒரு தடவை தான் பெண் வேசம் போட்ட நாடகம் என்று ஒரு படம் போட்டிருந்தவர். தேடினன் காணேல்லை.
இப்ப தான் கேட்டனான், சோமி அண்ணை நல்லா உணர்ச்சி வசப்படுகிறார் ;-)
அரட்டை அரங்கத்திலை கேட்டமாதிரி இருந்தது.
ஏனண்ணை சினிமா/பொழுதுபோக்கு என்று வகைப்படுத்தினீங்கள்? சோமி இன்னும் கோடம்பக்கதில தானோ?
சொல்ல மறந்துவிட்டேன், ஒட்டுக்கேட்டல் நன்றாக இருந்தது ;-)
//வசந்தன், அது என்று குறிப்பிட்டது அந்த முகவரியை. அதாவது மழை ஸ்ரேயா என்ற முகவரியை. அவவை இல்லை. (இவன் பாவி தெரியாத் தனமா உளறுறது. பிறகு அதுக்கு நான் விளக்கம் சொல்ல வேண்டிக் கிடக்கு)//
சரிசரி உம்மட சமாளிபிக்கேசனை நம்பிறன். :O))
___
அதென்ன kAnA பிரபாவை gAnA பிரபா என்டுறார் சோமி?
___
கொழும்பு மகளிர் கல்லூரியில ஏன் ரசிகையர் மன்றம் இல்லை? :O))
கொழுவியைப் பத்தி எழுதுறீங்க.. பேசுறீங்க.. அவரெல்லாம் இங்கு வந்து பின்னூட்டம் போட மாட்டார் என்ற தைரியம் தானே.. அண்ணன் நினைச்சா பாட்டுப் போட்டே உங்களை காட்டை விட்டு துரத்திடுவாரு.. ஆமா சொல்லிட்டான். தலீவா பாட்டொண்ணை எடுத்து வுடு தலீவா
அட பாவிகளா... ரெண்டு நாளா கொஞ்சம் வேலைப் பளுவில இருந்துட்டன் அந்த இஅடைவெளியில என்னைய வச்சி ஒரு காமெடி கலந்துரையாடலே நடக்குது.
சயந்தன் நாங்கள் உப்பிடி ஏதும் உரையாடலாம் எண்டு சும்மா கதைச்சுப் பாத்தத நீ பதிவு செய்து என்னிடம் முறையாக அனுமதி பெறாமல் வெளியிட்டது கண்டணதுக்குரியது.
நான் எப்பவோ செய்த சில தொலைக்கட்சி நிகழ்ச்சிகளை அய்ரோப்பிய தொலைக்காட்சி ஒண்டு ஒளிபரப்பிவரும் நிலையில் இவ்வறு எனது குரை வெளியிடுவதற்க்கு நான் பலத்த கண்டனத்தைச் சொல்லுறன்.
(போடப் போறன் எண்டா என்னைப் பற்றி நீயும் உன்னைப் பற்றி நானும் இன்னும் நாலு வரி நல்ல சொல்லியிருகலாமல்லே)
/ஓ.. சோமிக்கு திருமணம் ஆகிவிட்டதா..? /
அண்ணை நான் சின்னப் பெடியன் எண்டு எத்தினதரம் சொல்லுறது
/சோமி இன்னும் கோடம்பக்கதில தானோ? /
இல்ல நுங்கம்பாக்கதில
வசந்தன்(Vasanthan) said...
/சோமிதரன் ஷ்ரேயாவை 'அது' எண்டு அஃறிணையாக விளிப்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன்./
இப்பதான் உணர்வுரீதியான பிரச்சனைகளில இருந்து வெளி வந்திருக்கன் மறுகா ஏண்டாப்ப கொழுவி விடுறியள்
சினேகிதி:
/பொம்பிளை பார்க்கப்போறதைப்பற்றி சோமி அண்ணாதான் இன்னும் எழுதேல்ல என்று நினைக்கிறன் அதயும் எழுதிப்போட்டு உந்த அலட்டலைப் பதிஞ்சிருக்கலாம். /
நான் அனுபவம் இல்லாத்துகளை எழுதுறது இல்ல தங்கச்சி
//நான் எப்பவோ செய்த சில தொலைக்கட்சி நிகழ்ச்சிகளை அய்ரோப்பிய தொலைக்காட்சி ஒண்டு ஒளிபரப்பிவரும் நிலையில்//
சொல்ல வேணும் எண்டு நினைச்சனான். இங்கை ஒரு ரிவியில அடிக்கடி வாறீர். அண்டைக்கு யாரோ ஒரு சின்னப் பெடியனிட்டை மைக்கை நீட்டி வெளிநாட்டில இருக்கி சித்தப்பாக்கு என்ன சொல்ல விரும்புறீர் எண்டீர்.
ஏனப்பு உதுகள் தான் ரிவியில செய்யிறீரோ..? அதப் பத்தி எழுதுவம் எண்டு நினைச்சன். பிறகு உம்மை பொலிஸ் பிடிச்சாலும் எண்டதாலை விட்டுவிட்டன்.
பிறகெப்ப கதைப்பம்..?
/சோமி இன்னும் கோடம்பக்கதில தானோ? /
/இல்ல நுங்கம்பாக்கதில/
கீழ்ப்பாக்கத்தில என்று கேள்விப் பட்டோம். உண்மையில்லையா
This comment has been removed by the author.
\நான் அனுபவம் இல்லாத்துகளை எழுதுறது இல்ல தங்கச்சி \\
ஓ அப்ப டிஜே ,வசந்தனண்ணா எல்லாரும் அனுபவத்திலயா எழுதினவை?? உண்மையோ அண்ணைமாரே சொல்லவேயில்லை
//தம்பியவை உதென்ன கூத்து. ஒண்டு செய்யிறதெண்டால் ஒழுங்காச் செய்ய வேணும். இல்லாட்டி செய்யாமல் இருக்க வேணும்.//
என்ன முருகேசர் சும்மா தொண தொணக்கிறார். வயசு போனால் இப்பிடித் தான். ம்.. முருகேசர் தான் கொழுவியோ..?
யாருக்கு இந்த நகைச்சுவை அறுவை?
புட்டு, ஒஸ்ரேலியா வானொலி இவற்றில் குட்டிக் கழித்துப் பாத்தால் shellஇ அடிக்கிறியள் எண்டு தெரியுது.
ஆனா அங்கால இருந்து ஒண்டையுங் காணேல, ரியூப் பல்ப்போ அல்லது எரியாத பல்ப்போ?
நான் நல்லா ரசிச்சன். நன்றி அண்ணையவை.
//குட்டிக் கழித்துப் பாத்தால் shellஇ அடிக்கிறியள் எண்டு தெரியுது.//
அண்ணோய்.. நீங்கள் குட்டிக் கழித்துப் பார்த்தாலும் சரி கூட்டிக் கிழித்துப் பார்த்தாலும் சரி . செல்லடியும் இல்லை. பொல்லடியும் இல்லை. சங்கு தன் பாட்டுக்குத் தானே கிடக்குது. ஊதச் சொல்லிக் கேட்டதோ உங்களிடம்...
//சங்கு தன் பாட்டுக்குத் தானே கிடக்குது. ஊதச் சொல்லிக் கேட்டதோ உங்களிடம்...//
சும்மா வீசிற காத்திலயே சும்மா கிடக்கிற சங்கு ஊதிக்கேக்குமண்ணை,
எனக்கும் கேக்குது.
எதிர்த்தரப்புக்கு ஒரு பளாயும் விளாங்காது எண்டதுக்காக இப்பிடிக் குத்தக்கூடாது.
இந்தப் பின்னூட்டத்தையும் விரிவா விளக்கினாத்தான் அவைக்கு விளங்கும்போல.
முருகேசரப்பு சொன்னமாதிரி ஏதாவது உருப்படியாச் செய்யுங்கோ.
முதல்வந்து செல்லடிக்கிற பின்னூட்டம் போட்டுக் கொழுவி வச்ச அனானி நானில்லை.
நல்லாயிருக்கு..அதிலயும் நீங்க சோமியை உங்கட பதிவை சொல்லலை என்று கேட்டிங்களே....சூப்பர் ;)
அனானி
சயந்னுக்கு ஏன் கோபம் பொத்துக்கிட்டு வர்து? அனானி எல்லாமே உன்னால.இன்னாத்துக்கு சும்மா கெடக்கீற சங்க எடுத்தேப்பா?
ஒரு சில அனானிகள் கவனத்திற்கு:
நம்மைக் கொண்டு போய் யாரோடும் கொழுவி விட்டும் மனம் பிறழ்ந்த நிலையில் யாரோ எவருடனாவதும் முடிச்சிட்டும் தங்கள் முகத்தில் வழியும் வக்கிரச் சீழினை வழித்துத் துடைப்பது குறித்து நமக்கொன்றும் கவலையில்லை. தொடர்ந்தும் உரையாடுவோம். அனானிகளை யாவரும் புரிவர்:)))
சயந்தன் அண்ணா, சோமி அண்ணா,
மிகவும் இரசித்தேன்..
கலக்குறீங்க.
krishna
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home