9.3.07

நான் போட்ட பின்னூட்டங்கள்

எனது வலைப்பதிவில் பிறர் இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்டினால்ப் போதுமா..? நான் மற்றவர்களுக்கு இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்ட வேண்டாமா..? அவற்றை நினைவு வைத்துக்கொள்வது எப்படி..? இப்படி யோசித்ததன் விளைவு தான் பக்கத்தில் நீங்கள் பார்க்கின்ற நான் இட்ட பின்னூட்டங்கள் என்னும் பகுதி.

cocomment என்னும் தள உதவியுடன் Fire fox உலாவியின் அனுசரணையுடன் இதனைச் செய்துள்ளேன். இதன் மூலம் நான் எவருக்கெல்லாம் பின்னூட்டமிடுகின்றேனோ அவர்களின் பதிவின் பெயர் இடுகையின் பெயர் மற்றும் எனது பின்னூட்டத்தின் ஒரு பகுதி இவையாவும் எனது வலைப்பதிவிலும் வந்து தாமாகவே குந்திக் கொள்வார்கள்.

உதாராணமாக கானா பிரபாவின் ஒரு பதிவுக்கு நான் பின்னூட்டமிடுகிறேன். Fire fox இல் நிறுவப்பட்டுள்ள ஒரு நீட்சி அந்தப் பின்னூட்டத்தைத் தானாகவே தூக்கி சென்று ஒரு இடத்தில் சேமிக்கும். சேமிக்கப் பட்ட இடத்திலிருந்து எனது வலைப்பதிவு அதனை தானாகவே பெற்றுக் கொள்ளும். அதிலும் கானா பிரபா எனது பின்னூட்டத்தை அனுமதிக்கும் காலம் வரை காத்திராமல் உடனடியாகவே காட்சிப் படுத்தும். (அனுமதிக்காட்டியும் காட்டுவோமே..)

எனது பயன்பாட்டுக் கணணிகள் தவிர்ந்த புதிய கணணியொன்றில் எந்த வித ஏற்பாடுகளுமற்று நான் பிறருக்கு இடும் பின்னூட்டம் திரட்டப்பட மாட்டாது.

வலைப் பதிவு தவிர்ந்த வேறு களங்களில் நான் ஏதாவது எழுதினால் கூட அவையும் திரட்டப்படக் கூடும். (ஈ மெயில்களையும் திரட்டுமோ..:((

என்ன பதிவு என்ன இடுவையென தனித் தனியே பிரித்துக் காட்டுவது சிறப்பானது.

ஒழுங்காக வேலை செய்தால் விபரமாக எழுதுகிறேன். :)

16 Comments:

Blogger சயந்தன் said...

சோதனை தான்.

4:40 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

நல்ல ஐடியாவா இருக்குதே. சீக்கிரம் பிரபலப் படுத்துங்க.
மொத்தமா சேத்து ஒரு கருவியா வெளியிடுங்க.
வாழ்த்துக்கள்

5:55 PM  
Blogger SurveySan said...

nalla idea, ubayogamaavum irukkum.

6:57 PM  
Blogger -L-L-D-a-s-u said...

வேகமாக வெளியிடுங்கள்.. காத்திருக்கிறோம்

7:08 PM  
Anonymous Anonymous said...

super.. good idea

12:04 AM  
Anonymous Anonymous said...

இதனை நீங்கள் டோண்டு சார் காலத்தில் கண்டு பிடித்திருக்க வேண்டும். அவருக்கு வெகுவாகப் பயன்பட்டிருக்கும். இப்போது கூட ஆள்மாறாட்டப் பின்னூட்டங்களுக்கு நல்ல தீர்வு தான் இது.

1:36 AM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல நுட்பப் பதிவு :) இனி பின்னூட்டத்தை சேர்த்து வைக்கன்னே யாரும் பதிவு போட மாட்டாங்க :) email எல்லாம் திரட்டிக் காமிச்சா, சேவை வீண். இன்னொருத்தர் பதிப்பிக்காட்டியும் இது காமிக்கும்கிறது பிரம்மாஸ்திரம் :) முன்னமே இந்த cocomments பார்த்திருக்கேன்..ஆனா, சோதிச்சுப் பார்க்கல

1:41 AM  
Blogger கானா பிரபா said...

ஏனப்பா என்னை இழுத்தனியள் ;-)) எனக்கு பின்னூட்டத்தை தடை செய்யும் வழக்கமில்லை ( தூஷண மற்றும் புறம்போக்கானவை விதிவிலக்கு)

அது சரி, என்ன கணினி வகுப்பு பாதியிலையே நிக்குது, ஏன்?

2:13 AM  
Blogger சயந்தன் said...

ரவிசங்கர் ஈமெயில்கள் திரட்டப்படாது.. பயம் வேணா..
ஆனால் வேறு கருத்துக் களங்கள்.. :))) இவற்றில் எழுதும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவிர அனானியாக எழுதுபர்கள் இரண்டு கணக்கு வைத்துக் கொழுவுப் படுபவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். default ஆக எழுதுவது எல்லாம் பதிவில் திரட்டப்பட்டு விடும். திரட்ட வேணாம் என்றால் ஒரு கிளிக் தேவை.
இந்த விளையாட்டில் நானே மாட்டுப்படலாம். :(

2:45 AM  
Blogger தமிழ்பித்தன் said...

நான் அவர்கள் தரும் ஐ பிரதி செய்தேன் நன்றாக வேலை செய்கிறது சயந்தன் நீங்கள் சொன்ன முறையை பின்பு முயற்சிக்கிறேன்

10:44 AM  
Blogger தமிழ்பித்தன் said...

நான் அவர்கள் code தரும் ஐ பிரதி செய்தேன் நன்றாக வேலை செய்கிறது சயந்தன் நீங்கள் சொன்ன முறையை பின்பு முயற்சிக்கிறேன்

10:45 AM  
Blogger சயந்தன் said...

தமிழ்பித்தன் உங்கள் தளத்தில் பார்த்தேன். நீங்கள் எனக்கிட்ட பின்னூட்டத்தை அதில் காணவில்லையே.. Fire fox நீட்சியை நிறுவி விட்டீர்களா..?

12:33 PM  
Blogger Gopalakrishnudu(#07148244463938149692) said...

//இதனை நீங்கள் டோண்டு சார் காலத்தில் கண்டு பிடித்திருக்க வேண்டும். அவருக்கு வெகுவாகப் பயன்பட்டிருக்கும்.//
Not necessarily. Real Dondu's case was unique. Poli Dondu went on placing filthy comments in Real Dondu's display name. Even the photo as well as the blogger number of 4800161 were copied.

To counter that, Dondu's strategy was the only possible thing. Many well-meaning but ill-informed bloggers advised Dondu to ignore those comments. But how can one ignore filthy comments destined to tarnish his fair name?

Real Dondu's way of dealing with these comments by opening new posts holding his genuine comments elsewhere focused the problem posed by Poli Dondu again and again by coming up in the refreshed pages of updated comments. It was focused more than 1000 times. Thamizmanam did know of this strategy and they just let it go on.

Only after the moderation became the norm, updating of Dondu's such posts was discontinued, as they very well served their purpose by that time.

GK

6:12 PM  
Blogger தமிழ்பித்தன் said...

இப்ப வேலை செய்யுது சயந்தன் கஸ்டப்பட்டு கண்டு பிடித்தாச்சு நன்றி

12:16 AM  
Anonymous Anonymous said...

write soon. will help to follow the comments

4:41 PM  
Blogger சயந்தன் said...

கானா பிரபா பெரிய மனிதரை உதாரணத்துக்கு அழைக்கிறது வழமை தானே.. சிறில் surveysan lldasu ஊக்குவிப்பிற்கு நன்றி. Gopalakrishnudu உங்க பிறர்நிலை விளக்கத்துக்கும் நன்றி.

2:06 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home