என்னத்த காதலும் கவிதயும்
இந்தக் கவிதையை எதற்காக இங்கிட்டேன் என்று சொல்வதற்குரிய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலையில் சும்மா சடைதலுக்காகவேனும் காதலர் தினத்துக்காக இக்கவிதையை இங்கிடுகிறேன் என சொல்லிக் கொள்கின்றேன். மற்றும் படி காதலர் தினத்துக்கு கவிதையோ சிறப்பு நிகழ்ச்சிகளோ ஏற்பாடு செய்யும் நோக்கமெதுவும் எனக்கில்லை.
கவிதையின் ஒரு சில Samples பாருங்க..
காதல் ரசம் வழிந்து வாய்க்கால் வழியோடும் இந்த கவிதையின் முழுப் பதிவையும் கேளுங்கள்... கேளுங்கள்.. கேட்டுக் கெட்டே இருங்கள்..
கவிதையின் ஒரு சில Samples பாருங்க..
வா!
வேட்கை தணியும் வரை என்னை
முத்தங்களால் ஒத்தியெடு.
உன் உணர்வு அடங்குமட்டும் - என்
உதடு கடித்து ரத்தமெல்லாம்
உறிஞ்சியெடு.
ராட்சசி போல் என்
பாதாதி கேசமெல்லாம்
உன் பசிக்கு ஏற்றாற்போல்
புசித்து முடித்துவிடு.
காதல் ரசம் வழிந்து வாய்க்கால் வழியோடும் இந்த கவிதையின் முழுப் பதிவையும் கேளுங்கள்... கேளுங்கள்.. கேட்டுக் கெட்டே இருங்கள்..
19 Comments:
வச்ந்தன் அண்ணாவிற்கு பயந்தீட்டிங்களா
இது ஒரு பெரிய ஆள் எழுதின கவிதை போல இருக்கே......
கவிதைகளுக்கு வசந்தனின் குரலைவிடச் சயந்தனின் குரல் மிகப் பொருத்தமாக இருக்கிறது. கவிதையை உச்சரிப்பதில் வைரமுத்து ஒப்பாரும் மிக்காருமற்றவர் என்றே நினைத்திருந்தேன்.இப்போது சயந்தன் வைரமுத்துவுக்குப் போட்டியானாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
-இப்போது சயந்தன் வைரமுத்துவுக்குப் போட்டியானாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.-
சுவிஸில ஏற்கனவே ஸ்நோ கொட்டுகிறது. இது வேறையா..?
//சுவிஸில ஏற்கனவே ஸ்நோ கொட்டுகிறது. இது வேறையா..? //
உண்மையைச் சொன்னால் கேட்க மாட்டீங்களே!
முதலொரு பதிவு வந்து காணவில்லை.
இது வேறு பதிவா?
இரண்டிலும் ஒரேகவிதைதானே?
//இது ஒரு பெரிய ஆள் எழுதின கவிதை போல இருக்கே......//
ம்..
//இப்போது சயந்தன் வைரமுத்துவுக்குப் போட்டியானாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.//
இரவு முழுதும் நித்திரையில்லை
//இரண்டிலும் ஒரேகவிதைதானே?//
ம்...
Audio Player ஒரு உண்மையைச் சொல்கின்றது. கண்டவர் யாரோ
உங்க குரல் ரொம்பவுமே ரொமான்ட்டிக்காகவே இருக்குங்க..
கேளுங்கள்... கேளுங்கள்.. கேட்டுக் கெட்டே இருங்கள்..
நன்றி.கேட்டுக் கெட்டே இருந்தோம்.
அண்ணை தன்னை அமைப்பில சேர்கல்லை என்று அறம்புறமா அடிபடுறார். இங்கை இவ்வளவு உணர்ச்சி ரசம் வடிய கவிதை எழுதியிருக்கார். இது வசந்தன் எழுதின கவிதையென சொல்ல என்ன தயக்கம்..
சும்மா சொல்லக்கூடாது, தங்கச்சி குடுத்துவச்சவ, நல்ல ரொமான்டிக் ஆன ஆளப்பா நீர்.
ஓயாத அலைகளாய்த் தொடரும்
உன் ஓர விழிப்பார்வையில்
தாவுது மனசு தவளைப் பாய்ச்சலாய்.
ஆகாய கடல் வெளிகள்
அழகே உன் காட்சியாக
என் இதய பூமியில்
புலிப்பாய்ச்சலாய்ப் புகுந்தாய்..
இறுதியாய்
எனைக் காதல் செய்
அல்லது செத்து மடியச் சொல்.
எப்பிடியண்ணை.. இந்த கவிதை.. இதையும் உங்கடை குரலில வாசிச்சு போடுவியளோ..? என்ன நினைக்கிறியள் இதைப் பற்றி..
உன் உணர்வு அடங்குமட்டும் - என்
உதடு கடித்து ரத்தமெல்லாம்
உறிஞ்சியெடு
ட்றகுலாப் படம் பார்த்த
பீலிங் வருகுது.
என எழுதியவர் கானா பிரபா.. தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் அழிக்கப்பட்டு விட்டது. வருந்துகிறேன்.
எப்பிடியண்ணை.. இந்த கவிதை.. இதையும் உங்கடை குரலில வாசிச்சு போடுவியளோ..? என்ன நினைக்கிறியள் இதைப் பற்றி..
உதுக்கு பெயர் தான் போர்க்கால இலக்கியமோ..?
என் இதய பூமியில்
புலிப்பாய்ச்சலாய்ப் புகுந்தாய்..
இறுதியாய்
எனைக் காதல் செய்
அல்லது செத்து மடியச் சொல்.
ஐயா ராசா நீர் கவிதை எழுதுறதுக்கோ அவங்கள் பெயர் வைச்சு சண்டை பிடிக்கிறாங்கள்.. சினிமாபடங்களின்ர பெயரில கவிதை எழுத ஆரம்பிச்சு இப்ப இதுகளிலயும் எழுதுறீயளோ..
காதலர் தினத்துக்காகப் போட்டதெண்டு நீர் சொன்னாலும் சுவிஸில பனிக்காலம் என்டது எங்களுக்கு நல்லாவே விளங்குது!! :O))
- 'மழை' ஷ்ரேயா
//சுவிஸில பனிக்காலம் என்டது எங்களுக்கு நல்லாவே விளங்குது//
இதைப் படிச்ச நான் இருக்கிற நாட்டில வேண்டுமானால் பனிக்காலமாக இருக்கலாம். ஆனா இதை வாசிக்கும் போதோ கேட்கும் போதோ புரிகிறதா ..? இதை எழுதினவர் இருப்பது சூடான நாட்டில் என்று..(அல்லது சூடாகும் நாட்டில்..)
இன்றைக்குத்தான் கேட்டேன். ஆனால் நிச்சயம் இது சயந்தனின் கவிதையாக இருக்க முடியாது..காலம் கடந்திற்று..அப்படியென்றால் அவர்தான்..
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home