வலை நுட்பம், வகுப்பு ஆ..´ரம்பம்´
ஒரு முழுமையான வலைப்பதிவு ஆக்கத்தில், எனது பதிவான சாரல் அனுபவங்களை முன்வைத்து அதன் நுட்ப விபரங்கள் மற்றும் சீரமைத்தல் முறைகளைச் சொல்ல முயல்கின்றேன். நுட்பங்களுக்கு முன்பாக ஆரம்ப நிலையில் வலைப் பதிவொன்றினை எமக்கு ஏற்ற முறையில் சீரமைத்தலைப் பார்க்கலாம்.
ஆரம்பம் முதல் இறுதி முழுமைக்குமான பயற்சிக்காக, ஒரு தற்காலிக வலைப் பதிவினை இவ் இணைப்பில் ஆரம்பித்துள்ளேன். அவ்வப் போது இடுகின்ற பதிவுகளின் செயன்முறையை உங்களோடு சேர்ந்து நானும் இவ் வலைப்பதிவில் சோதித்துப் பார்க்கவே இவ் ஏற்பாடு.
தவிர, இப் பயிற்சிக்காக நான் பயன்படுத்தியிருக்கும் வார்ப்புருவினை, ஒவ்வொரு தடவையும் கொடுக்கப்படும் செயன்முறை விளக்கங்களுக்கு ஏற்ப, மீள் மாற்றம் செய்து, உங்களால் தரவிறக்கம் செய்து பார்வையிடக் கூடியதாகவும் ஏற்பாடு செய்திருக்கின்றேன். இதனை உடனடியாகவே உங்கள் நடைமுறையில் உள்ள வலைப்பதிவில் இட்டுச் சோதனை செய்வதை விட, பயிற்சிக்கான ஒரு தனியான வலைப்பதிவினை (காசா பணமா ) ஆரம்பிப்பது சிறந்த வழிமுறையாக இருக்கும். அவ்வாறு தொடங்கப்பட்ட வலைப்பதிவில் சில புதிய பதிவுகளைச் சேர்த்து விடுங்கள்.
வலைப் பதிவொன்றின் ஆரம்பத்தில் நான் முன்னைய பதிவில் கூறிய நுட்ப விபரங்களைப் பார்ப்பதற்கு முன்னர், அதனை அழகுணர்ச்சியோடு சீராக்கும் சில வழி முறைகள் பற்றிப் பேசாலாம். அவரவர் ரசனைக்கு ஏற்ப அழகுணர்ச்சி வேறுபடுமேயாயினும் அடிப்படையான ஒரு விடயமாக, எளிமை இருக்கின்றது.
கணணியில் ஒவ்வொரு HD இலக்கங்களுக்கும் ஒவ்வொரு வண்ணம் கிடைக்கின்றது என்பதற்காக ஆயிரத்தெட்டு வண்ணக் கலவைகளைக் கொண்டு தேருக்கு சேலை சுற்றுவது போலவும் (ஆனானப் பட்ட தேருக்கே சேலை தான், என்று யாரும் வராதீங்கப்பா.. :)) கோபுரம், குஞ்சம், தோரணம் என கட்டம் கட்டுவதும் எளிமையான விடயங்களாக இருக்காது.
இப் பயிற்சிக்காக தேர்தெடுத்த வார்ப்புரு வெள்ளை நிறத்தைப் பிரதான நிறமாக கொண்டுள்ளது. எளிமையாகவும் உள்ளது. இப்போ ஆரம்பிக்கலாமா..?
மாமு.. இதெல்லாம் நடக்குத் தெரிஞ்ச விசயம் தான்.. நீ இதையெல்லாம் விட்டிட்டு நேராவே முன்னைய பதிவில் சொன்ன 5 நுட்பங்களையும் சொல்லலாம் எண்டு நினைச்சீங்கள் எண்டால் சொல்லுங்கோ.. அதில இருந்தே ஆரம்பிக்கலாம்.
சந்தேகங்களைப் பின்னூட்டங்களாகப் போட்டால் நான் மட்டுமல்ல வேறும் பல வலைப் பதிவர்கள் அதற்கு விடை கொடுக்க முடியும்.

- பயிற்சிக்காக ஆரம்பித்த வலைப்பதிவின் வார்ப்புருவை (Template) கிளாசிக் வகை வார்ப்புருவில் பேணுங்கள். Layout முறையிலான வார்ப்புருவில் இருந்தீர்களாயின், மீளவும் கிளாசிக் வகைக்கு மீளுங்கள். (தற்காலிகப் பின்னடைவு தான்.. கடைசியில் தூள் கிளப்பலாம்..)
- இவ் விணைப்பில் இணைக்கப்பட்டுள்ள வார்ப்புருவினைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இக் கோப்பானது RTF வகையில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் கணணியில் திறந்து கொள்ள, Wordpad செயலியைப் பயன்படுத்துங்கள். அது இலகுவானது. (MS office word செயலி, வார்ப்புருவில் உள்ள தமிழ் சொற்களைப் பெட்டி பெட்டியாகக் காட்டும் வல்லமை உள்ளது.கவனம் ;)
- Wordpad இல் திறந்து வைத்திருக்கின்ற நிரல்களை ஒரு லுக்கு விட்டுக்கொள்ளுங்க. ஆங்காங்கே சில வரிகள் பெரிய சைஸ் எழுத்திலேயும், வண்ண வண்ண நிறங்களிலேயும் தெரிகிறதா..? ம்.. இப்போ இந்த மொத்த நிரலையும், கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் அப்பிடியே கொப்பி செய்து அள்ளிக் கொண்டு, உங்கள் வலைப்பதிவின் கிளாசிக் வார்ப்புருப் பகுதியில் ஒட்டுங்கள்.
- வழமையாக வார்ப்புருவில் மாற்றங்கள் செய்த பின்னர், உடனடியாகச் சேமிக்காமல் Preview பார்த்து விட்டுச் சேமியுங்கள். சேமித்த பின்னர் வலைப்பூவைப் பாருங்கள். அது இப்பதிவின் ஆரம்பத்தில் நான் தந்திருந்த பயிற்சி வலைப்பூவினை ஒத்திருக்கின்றதா..? கண்டிப்பாக இருக்கும்.
- தரவிறக்கிய வார்ப்புருவை மீண்டும் ஒரு லுக்கு விடுங்க. அதில் சிவத்த பெரிய எழுத்தில் ஒரு வரி கீழ்க்கண்ட வாறு இருக்குமே.. அது தான் எங்கோ இருக்கிற இந்தப் பூட்டுப் படத்தை உங்க வலைப் பதிவுக்கு இழுத்து வாற சூக்குமம்.
background-image: url(http://nea.ngi.it/templates/img/78-locked.jpg); - இதில நீங்கள் விரும்பகிற படத்தை இழுத்து வாறதுக்கு முன்பு ஒரு விசயம் சொல்ல வேணும். அதாவது நீங்கள் பயன்படுத்தும் படம் மிக மிகச் சரியாக அதே பூட்டுப் படத்தின் அளவில் இருந்தாக வேண்டும் (760 pixels X 180 pixels). அப்போ தான் அங்கே இங்கே தள்ளி நிற்காமல் நேராக வலைப் பதிவின் சீர் பேணப்படும்.
- பயன்படுத்துகின்ற படத்தை 760 pixels X 180 pixels அளவில் சரியாக வெட்டியெடுத்து photobucket மாதிரியான ஒரு இடத்தில் சேமித்து அதன் நேரடி இணைப்பினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
- இப்போது அவ்விணைப்பினை சிவத்த தடித்த வரியில் உள்ள http://nea.ngi.it/templates/img/78-locked.jpg என்பதற்குப் பதிலாக ஒட்டுங்கள். இணைப்புக்களும் வழிமுறைகளும் சரியானதாக இருப்பின் இப்போ உங்கள் வலைப் பதிவில் பூட்டு உடைக்கப்பட்டு சொந்தப் படம் ரிலீசாகியிருக்கும்.
மாமு.. இதெல்லாம் நடக்குத் தெரிஞ்ச விசயம் தான்.. நீ இதையெல்லாம் விட்டிட்டு நேராவே முன்னைய பதிவில் சொன்ன 5 நுட்பங்களையும் சொல்லலாம் எண்டு நினைச்சீங்கள் எண்டால் சொல்லுங்கோ.. அதில இருந்தே ஆரம்பிக்கலாம்.
சந்தேகங்களைப் பின்னூட்டங்களாகப் போட்டால் நான் மட்டுமல்ல வேறும் பல வலைப் பதிவர்கள் அதற்கு விடை கொடுக்க முடியும்.
15 Comments:
சயந்தன், பயிற்சி வலைப்பதிவின் முகவரி எங்கே? காணல?
ரவி சங்கர் எனது வார்ப்புரு இணைப்புக்களை நிறம் பிரித்துக் காட்ட வில்லை. ஆனாலும் இவ் இணைப்புக்கள் என்னும் சொற்கள் மீது மெளசை கொண்டு சென்றால் இணைப்புக்கள் உள்ளது தெரியும்.
//கணணியில் ஒவ்வொரு HD இலக்கங்களுக்கும் ஒவ்வொரு வண்ணம் கிடைக்கின்றது என்பதற்காக ஆயிரத்தெட்டு வண்ணக் கலவைகளைக் கொண்டு தேருக்கு சேலை சுற்றுவது போலவும் (ஆனானப் பட்ட தேருக்கே சேலை தான், என்று யாரும் வராதீங்கப்பா.. :)) கோபுரம், குஞ்சம், தோரணம் என கட்டம் கட்டுவதும் எளிமையான விடயங்களாக இருக்காது.
//
உதுக்குள்ள கானாபிரபாவுக்கு செய்தியொண்டும் இல்லைத்தானே?
படத்துக்கான இந்த URL எங்கே எடுப்பது.புளக்கருக்குப் படம் அனுப்பிப் போடுவது போன்ற இதைச் செய்ய வேணும் சயந்தன்?
சயந்தன்
இப்படிப்பட்ட பதிவை தான் திரு ஜெகத்திடம் ஒரு முறை கேட்டிருந்தேன்.
பரவாயில்லை நீங்கள் போட்டுவிட்டீர்கள்.
பயனுள்ள விஷ(ட)யம் தான்.:-))
என்னை மாதிரி ஆளுங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
//வசந்தன்(Vasanthan) said...
உதுக்குள்ள கானாபிரபாவுக்கு செய்தியொண்டும் இல்லைத்தானே? //
கிண்டலூ??
அந்த மனுஷன் பாடம் நடத்தேக்க குழப்பாதையும் ஐசே, பின் வாங்கிற்கும் போம்.
நல்ல பாடமா இருக்கு புளொக்கை சரி செய்ய வேணும்.
பிளாக்கர் கணக்கொன்றை திறக்க முயன்றேன். என்னிடம் கூகுள் முகவரி இல்லை. அதனால் புதிதாய் ஒரு முகவரி பெற முயன்ற போது Password என ஒரு பகுதி வருகிறது. அப் பகுதியில் நான் என்ன எழுத வேண்டும்..? அதை கொஞ்சம் விளக்க முடியுமா?
படத்துக்கான இந்த URL எங்கே எடுப்பது.
புளொக்கரில ஒரு பதிவில ஏற்றி அதன் HTML பகுதியில் பார்த்தால் படத்துக்கான இணைப்புக் கிடைக்கும். சயந்தன் சொன்னது போல photobucket போன்ற தளங்களிலும் பதிவேற்றி இணைப்பு பெற முடியும். ஆனால் பான்ட்வித் பிரச்சனை ஏற்படலாம்.
எடக் கோதாரி!அதுக்குள்ளேயே சயந்தனுக்கு P.A ஒருத்தரும் வந்தாச்சா?
கலக்கிறே சயந்தன் :))
சயந்தன் உங்கள் பணி எங்களுக்கு தேவை. என்னுடைய வலைப்பதிவை மறுசீரமைக்க ஆரம்பித்துள்ளேன்.
நன்றி
//உதுக்குள்ள கானாபிரபாவுக்கு செய்தியொண்டும் இல்லைத்தானே?//
வசந்தன் குழப்படி செய்ய வேண்டாம். கானா பிரபாவை மொனிற்றரா போட்டிருக்கு. அவர் சொல்வதைக் கேளும்.
வடுவூர்குமார் நன்றி.. தொடர்ந்தும் இணைஞ்சிருங்கோ..
//அதனால் புதிதாய் ஒரு முகவரி பெற முயன்ற போது Password என ஒரு பகுதி வருகிறது. அப் பகுதியில் நான் என்ன எழுத வேண்டும்..? //
அறிவில்லாதவன்.. சந்தேகங்களைக் கேட்கச் சொன்னேன் என்பதற்காக இப்பிடியா..? நகைச் சுவை பதிவு ஆக்கியே தீருவது என நிற்கிறீர்கள் போலும்..
சயந்தனின் PA உதவிக்கு நன்றி.. அப்பிடியே மேலை அறிவில்லாதவனின் கேள்விக்கும் பதிலை தேடியெடுத்து கொடுக்கவும்.
நன்றி. நீங்கள் சொன்னது போல எனக்கு விருப்பமான படம் ஒன்றில் நானாக எனது வலைப்பதிவின் பெயரை எழுதி (சாரல் போல) இணைத்துள்ளேன்.சரியாக வந்தது. ஆனால் பிளாக்கரும் ஒரு தலைப்பினைத் தருகின்றதே.. பிளாக்கர் தரும் தலைப்பினை எவ்வாறு அகற்றுவது? செட்டிங் பகுதியில் பிளாக்கர் பெயரை எடுத்து முயற்சித்தேன். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது என பிழைச்செய்தி வருகிறது. நிரலியில் எந்த இடத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.? முழுவதும் சோதிக்க சோம்பலாக உள்ளது. சொன்னால் நன்று
பிளாக்கர் தரும் தலைப்பினை எவ்வாறு அகற்றுவது? செட்டிங் பகுதியில் பிளாக்கர் பெயரை எடுத்து முயற்சித்தேன
நிரலிகளில் செய்ய வேண்டிய மாற்றம் பற்றி எழுதுகிறேன். பெயரை போட்டு எழுதலாமே.. ஏதாவது திட்டுவது என்றால் மட்டும் அனானியாக வரலாம்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home