4.4.05

கவித எழுத போறன்!

ஆர் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. நான் முடிவெடுத்திட்டன்.
எல்லாரும் கவித எழுதுகினம். அதுவும் நாப்பது ஐம்பது பின்னூட்டங்கள் வேறை.

நல்லாருக்கு, எழும்பியாச்சோ, நித்திர கொள்ளேலையோ எண்டுதான் பின்னூட்டங்கள் வந்தாலும், எனக்கென்ன.. எண்ணிக்கை தானே முக்கியம்.

அதனாலை தான் சொல்லுறன் நான் கவித எழுதியே தீரப் போறன்.

உந்த வசந்தன் சும்மா Anti Poet Org எண்டொரு இயக்கமாம். அது கவித எழுதக்கூடாது எண்டுதாம் எண்டு பினாத்துறார். ஒரு பொதுத்தளத்தில மாற்றுக்கருத்துக்களை வைச்சு விவாதிக்காமல், அதைப்பத்தி கேள்வி கேட்க எனக்கிருக்கிற உரிமையை மறுத்துப் போட்டு உவர் எப்பிடி உப்பிடி சொல்ல முடியும்?

விசயத்துக்கு வாறன்..

இப்ப கொஞ்ச நாளா இரவில எனக்கு நித்திரை வருகுதில்லை. இரவில நேரமும் போகுதில்லை. மெதுவா ஊருது. பேந்த பேந்த முழிச்சுக்கொண்டு இருக்கிறன். பிறகு பகலில நல்லா நித்திர கொள்ளுறன். மத்தியானத்துக்கு பிறகு தான் விடியுது.

சரி இப்ப நான் மேலை சொன்னதை கவிதையாச் சொல்லப் போறன். கவனமாக் கேளுங்கோ

என் இரவுகள்
ஊனமாகிப் போக
பகல்கள் ஒளியிழந்து கரைகின்றன.


அச்சாக் கவித.. எல்லாரும் ஒருக்கா கை தட்டுங்கோ.. மிச்சக்கவித பிறகு சொல்லுறன்

உந்த படிமம் குறியீடுகளைப் பத்தி பெரிசா எனக்கு அறிவில்லை. ஆரும் சொல்லித்தருவியளே..

எட மடையா உது கவிதையே இல்லை எண்டு நினைக்கிறாக்களும் சொல்லுங்கோ..

13 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kulakaddan

ஏன் தி.....சா......ஒரே தொல்லயோ
எPதுங்கொ.........பொழுது போகாட்டி வாசிக்க ஏதாவது வேணும் தானே.......
வசந்தனதும் உங்களதும் பதிவுகள் நல்ல சுவாலசியமாக இருக்கிறது

22.56 4.4.2005

2:03 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Seelan

ஹி..ஹ ..ஹி.. என்னத்தை சொல்ல..?

9.31 5.4.2005

4:33 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: கொண்டோடி

நல்லாயிருக்கு ஓய் உம்மட விளயாட்டு. நீரே எதிராச் சொல்லுவீராம். பிறகு அதையே எதிர்த்து எழுதுவீராம். நல்லாத்தானையா யாவாரம் செய்யிறீர்.

10.0 5.4.2005

5:05 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: கிஸோக்கண்ணன்

...என் இரவுகள்
ஊனமாகிப் போக
பகல்கள் ஒளியிழந்து கரைகின்றன...

இரண்டும் ஒரே அர்த்தம் இல்லையா?

20.6 4.4.2005

5:11 PM  
Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

கிஸோ!
உமக்கு வேற வேலயில்லயோ?
இது ஒரு 'கவித' எண்டு அதுக்கு ஒரு ஆராய்ச்சி. (ஆராய்ச்சிய உம்மட படிப்பில காட்டும்).

பகலையும் இரவையும் ஊனமாக்கியாச்சு. இனி வேறென்ன கிடக்கெண்டு பாக்கப்போயிட்டார். வலைப்பதிவர் மாநாடு நடக்க முதல் இத எழுதியிருக்கோணும்..., இப்ப உண்மையாயே ஊனமாத்தான் இருந்திருப்பார்.

7:50 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Thadcha

முழுக்கவிதைகளும் எப்பொழுது முடியும். அறிய ஆவலாயிருக்கிறேன். அதன் பின்னர் வலைப்பதிவுக்கு வருவதற்கு :)

22.20 5.4.2005

5:22 AM  
Blogger à®ˆà®´à®¨à®¾à®¤à®©à¯(Eelanathan) said...

அதுசரி கவிதை எழுதப்போறனெண்டீங்கள் எங்கை ஒண்டையும் காணேலை

8:23 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Arunan

உங்களது முடிவு விருப்பத்தில் எடுக்கப்பட்டதோ விரக்தியில் எடுக்கபட்டதோ அது பிரச்சினை இல்லை உதை யாருக்கு விழுகிறது என்பதை பூடகமாகவாவது கூறுங்களேன்.

1.12 7.4.2005

8:14 AM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

//பகலையும் இரவையும் ஊனமாக்கியாச்சு. இனி வேறென்ன கிடக்கெண்டு பாக்கப்போயிட்டார். வலைப்பதிவர் மாநாடு நடக்க முதல் இத எழுதியிருக்கோணும்..., இப்ப உண்மையாயே ஊனமாத்தான் இருந்திருப்பார். //

அன்பு நண்பரே
என் கவிதைத்தளம் வேறானது உங்களுடைய இலக்கியத் தளம் வேறானது. நான் என்ர வழியில ஒதுங்கி எக்கேடு கெட்டாலும் ஒழிஞ்சு போறன். எனக்கு மற்றவை மாதிரி கவிதை எழுத தெரியாது தான். இதற்கு முதல் கவிதை பற்றி எழுதியிருந்தாலோ இனி எழுதினாலோ அவை கொஞ்சம் கொஞ்சமா அழிக்கப்படும். நான் கவித எழுதப் போறன் எண்டு சொன்னது உங்கள உபத்திரவப் படுத்தியிருந்தால் மன்னிச்சுக் கொள்ளுங்கோ...
என்னாலை தடிப்பான வார்த்தைகளோடு உங்கள எதிர் கொள்ள முடியாது. நான் வெறும் நான் தான். போய் வருகிறன் நண்பர்களே..

கவிதை எழுதுறதை நிறுத்தினாலும் உலக அறிவியலைப் பற்றி எழுதலாம் எண்டு நினைக்கிறன்..

9:07 AM  
Blogger à®•à®±à¯à®ªà¯à®ªà®¿ said...

இஞ்ச சும்மா அலம்பிக்கொண்டிருக்காமல் எதையாவது எழுதி கிழியுமன்

9:15 AM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

கொஞ்ச நாளைக்கு பின்னூட்டங்கள் எழுதிக் கிழிக்கப் போறன்.

9:28 AM  
Anonymous லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி said...

அவரும் அவரிட கவிதையும்.... இதில அறிய ஆவலாக இருக்கிறேன் என்டு ஒண்டு...... என்னவோ...

10:26 AM  
Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

உதத்தான் ஐசே திசை திருப்பிறதெண்டிறது. மற்றாக்கள் எழுதிறத கொப்பியடிச்சு இப்ப பின்னூட்டமும் மற்றாக்கள் எழுதிற மாதிரியே துவங்கீற்றீர். பின்னூட்டத்த(யாவது) சுயமா எழுதும்.

5:48 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home