24.3.05

ஏன் பெயிலாகிறோம்

ஏன் கல்வி ஒரு மாணவனுக்கு கடுமையாக இருக்கிறது.. ஏன் பலர் பரீட்சைகளில் தோற்கிறார்கள் என்கிற ஒரு ஆய்வு எனக்கு மெயிலில் வந்தது. உங்களுக்கும் சில சமயம் வந்திருக்கும். வராதவர்களுக்காக அதை இங்கை தாறன்!

முதலில ஒரு வருசத்தில இருக்கிற மொத்த நாட்களில 52 ஞாயிற்றுக் கிழமைகள் வருது. ஒரு மனிசனுக்கு ஓய்வு கட்டாயம் முக்கியம் எண்ட படியாலை அந்த 52 நாளும் படிக்க முடியாது. ஆக மிச்சம் 313 நாள் தான் படிக்க இருக்கு.

கோடை விடுமுறை எண்டு ஒன்று இருக்கு. அது ஒரு 50 நாள். சரியான வெயில். அந்த வெக்கையில கடைசி வரை படிக்க முடியாது. அப்ப இப்ப மிச்சம் 263 நாள் இருக்கு.

டொக்ரர்ஸ் என்ன சொல்லுகினம் எண்டால் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணி நேரத் தூக்கம் அவசியமாம். அப்பிடிப் பார்த்தால் ஒரு வருசத்தில இது 122 நாள்.. இப்ப மிச்சம் இருக்கிறது 141 நாள்.

சரி விளையாட்டு உடம்புக்கு தேவையான ஒரு விசயம். அதுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1 மணித்தியாலம் ஒதுக்கினால் அதிலை ஒரு 15 நாள் வந்திடுது. மிச்சம் இருக்கிறது 126 நாள்.

சாப்பிடுறதுக்கு, குடிக்கிறதுக்கு, கொறிக்கிறதுக்கு எண்டு ஒரு நாளைக்கு 2 மணித்தியாலத்தை ஒதுக்கலாம். அப்பிடிப் பாத்தால் வருசத்தில அதுக்கெண்டு 30 நாள் செலவாகுது. இப்ப மீதியாயிருக்கிறது 96 நாள்.

நாலு மனிசரோடை கதைக்கிறதுக்கு, சிரிக்கிறதுக்கு ஒரு 1 மணித்தியாலத்தை ஒதுக்குவோம். (தனிய இருந்தால் மன அழுத்தம் ஏதாவது வந்திடுமெல்லோ.) அப்ப அதிலை ஒரு 15 நாள் போயிட இப்ப இருக்கிறது 81 நாள்.

ஒரு வருசத்திலை 35 நாள் சோதினை நடக்குது. சோதினை நேரம் படிக்ககூடாது எண்டு பெரிய ஆராய்ச்சியாளர் சொல்லுகினம். அப்ப அதை விட்டால் மீதமா 46 நாள் படிக்கிறதுக்கு இருக்கு.

உந்த காலிறுதி, அரையிறுதி, திருவிழா, தேர் எண்டு 40 நாள் லீவு.. லீவுக்குள்ளை படிக்க வேணும் எண்டால் லீவே விடாமல் இருந்திருக்கலாமே? அதனாலை ஒரு 6 நாள் மிஞ்சுது படிக்கிறதுக்கு.

ஒரு வருத்தம், உடம்பு சரியில்லை எண்டு ஒரு வருசத்திலை ஒரு 3 நாள் ஒதுக்கலாம். (சரியான குறைச்சல் தான். ஆனாலும் படிக்கிற ஆர்வத்திலை சரியா குறைச்சிருக்கு).. ம் ம்.. இப்ப 3 நாள் மிஞ்சுது.

ஒரு கல்யாண வீடு, ஒரு புதுப்படம் இதுகளுக்கு போகாமல் இருக்க முடியுமோ? ஒரு 2 நாளை அதுக்கு ஒதுக்கலாம். (அதுக்கு மேலை முடியாது)..

இப்ப ஒரேயொரு நாள்த்தான் கிடக்குது படிக்கிறதுக்கு.

சரி படிக்கலாம்..

அட.. அந்த ஒரு நாள்த்தானே பிறந்த நாள்!

1 Comments:

Blogger dondu(#4800161) said...

இது ரொம்பப் பழைய ரீஸனிங் ஆகும். ஞாயிற்றுக் கிழமை 52 நாள் எடுத்தீர்கள். கோடை விடுமுறையில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளை மறுபடி கூட்டுகிறீர்கள். அதிலிருந்து ஆரம்பித்து ஒரு முறை கூட்டியதையே பல முறை கூட்டிக் கழித்தால் மைனஸ் நம்பர் கூட வரலாம் ஐயா.
அன்புடன்,
டோண்டு ராகவன்

8:39 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home