18.3.05

பாராளுமன்றில் நான்

கடந்த மாதத்தின் ஒரு வார இறுதியில் ஒஸ்ரேலிய பாராளுமன்றுக்கு சென்று பார்வையிட கூடிய வாய்ப்புக் கிடைத்தது. சிட்னியில் இருந்து கன்பெரா நோக்கிய 3 மணி நேரப் பயணம்! அதுவே மெல்பேணிலிருந்து 7 மணிநேரமாகையால் முதலில் சிட்னிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருக்கின்ற இரண்டு நண்பர்களோடு கன்பெரா நோக்கி புறப்பட்டேன்.

கன்பெராவின் மிகச் சரியான வட்டமானதும் நீள் கோடுகளுமான வீதிகளுக்கால் சென்று பாராளுமன்றை அடைந்தோம். கன்பெராவின் வரைபடத்தினை நோக்கும் போது மிகத் தெளிவாகவே அது செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரம் என்பது விளங்குகிறது.

இந்த வரை படத்தில் பாருங்கள்.

Image hosted by Photobucket.com

அதன் மையத்தில் இருக்கின்ற சிறிய வட்டத்தில் இருந்த குன்று ஒன்றை வெட்டி எடுத்து அங்கே பாராளுமன்றினை கட்டியிருக்கிறார்கள்.

சூழ இருக்கின்ற பெரிய வட்டங்களும் நீள் கோடுகளும் நகரின் பிரதான வீதிகள்.

சாதாரணமாக உள்ளே அனுமதிக்கிறார்கள். இருப்பினும் உட்செல்லும் வழியூடாக உடல் scan செய்யப் படுகிறது.

உள்ளே பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் இடங்களைப் பார்த்தோம்.

இன்னுமொரு பகுதியில் சிறிய திரையரங்கில் பாராளுமன்றம் அமைக்கப்பட்ட வரலாறு கட்டட பணிகள் நடைபெற்ற நாட்கள் என்பவற்றை திரையில் காட்டுகிறார்கள்.

Image hosted by Photobucket.com

பாராளுமன்றிற்கு மேலே சாதாரண தரை போல புல் வளர்க்கிறார்கள். அங்கிருந்து பார்க்கும் போது பழைய பாராளுமன்று தெரிகிறது.

பாராளுமன்றத்திலிருந்து வெளியேறிய போது அதன் முன்பாக இருக்கின்ற சிறிய நீர்ச் சுனையில் கால் நனைத்தேன். அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் வந்து அதை நிறுத்தச் சொன்னார்.

காவல் அதிகாரிகள் இப்படித் தான். தங்களுடைய அதிகாரங்களை காட்டுகிறார்கள் என்று நினைத்த போது அவர் சொன்னார்.

அந்த நீர் அழுக்காக இருக்கிறதாம். காலில் தொற்றுக்கள் ஏற்பட கூடுமாம்.

ம்!!!!!

என்ன அங்க நிக்கிறது!! போ போ.. படமெல்லாம் எடுக்க கூடாது!! இங்க நிக்க கூடாது!! இப்படியெல்லாம் சொல்லாத இவர்கள் எல்லாம் என்ன காவல் அதிகாரிகள்!!

2 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தோழன்

அடுத்த முறை நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டு விட்டு எழுதுங்கள்.

13.56 19.3.2005

9:59 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஷ்ரேயா

அந்த கூம்பான புல் தரையில் மேலையிருந்து உருண்டு பாத்தனீங்களா?தலை ஒரு சுத்தொண்டு சுத்தும், கொஞ்ச நேரத்துக்கு நிற்கவே ஏலாது!!

16.40 24.3.2005

9:44 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home