9.3.05

பதில் தருமா உலகு

தமிழ் மக்களின் மனிதாபிமான அவசர பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதான புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி பகிரங்க பேச்சுக்களுக்கு அரசு தயார்!

இலங்கையில் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க இது சரியான தருணம் அல்ல. புதுடில்லியில் கதிர்காமர் தெரிவிப்பு

இடைக்கால நிர்வாக சபை குறித்துப் பேசி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டால் உடனடியாக அரசிலிருந்து விலகுவோம் ஜே வி பி யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எச்சரிக்கை.

சமஷ்டித் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்ப்பேன். சந்திரிகா சபதம்.

மேற்குறித்த செய்திகள் கடந்த சில நாட்களுக்குள் குறித்த இடைவெளிகளில் இலங்கை அரசியல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான சில செய்திகள்.

மூன்றாம் தர அரசியல் நாகரீகம் பின்பற்றப் படும் நாடுகளில் ஓர் இறுதி முடிவு குறித்து ஆளும் கட்சிகள் எதிர்க் கட்சிகள் எதிரிக்கட்சிகள் என்பவற்றுக்கிடையில் எழும் முரண்கள் தான் இவை என எவரேனும் நினைப்பின் அது தவறு.

இலங்கையை ஆளும் சிறீலங்கா மக்கள் சுதந்திர முன்னணி என்னும் கூட்டுக் கட்சியின் பல்வேறு பட்ட தரத்து நிலையிலானவர்கள் இனப்பிரச்சனைத் தீர்வு என்னும் பொது விடயம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களே இவை. தெளிவான ஒருமித்த கருத்தேதும் இன்றி ஆளாளுக்கு வாய்க்கு வந்த படி இனப்பிரச்சனை தொடர்பாக செய்தி வெளியிடுகின்ற கேலிக் கூத்தே அது.

இறுதிக் கட்டத்தில் இது தமிழர் தரப்பில் இப்படி ஒரு சந்தேகமாக எழுந்திருக்கிறது. அதாவது நகர்த்தப்படாமல் இழுபட்டுக்கொண்டு போகின்ற சமாதாப் பேச்சுக்களுக்கு காரணம் கேட்கும் உலக நாடுகளுக்கு தமக்கிடையேயான உள் முரண்பாடு தான் காரணம் எனக்கூறி தொடர்ந்தும் இதனை இவ்வாறே இழுத்துச் செல்ல அரசு திட்டமிட்டு முயல்கிறதா என்பதே அது.

இது தவிர ஜே வி பி க்கும் சந்திரிக்கா கட்சிக்கும் இடையிலான இம் முரண்பாடு அடுத்த தேர்தலுக்கான பங்குப் போட்டியின் வெடிப்பாகவும் இருக்க கூடும்.

எதுவாகவேனும் இருக்கட்டும். யுத்தம் வன்முறையானது. அது பயங்கர வாதமானது. அது மனித நேயமற்றது. அதைக் கைவிட்டு பேச்சுக்கள் மூலம் தீர்வு காணலாம் என புலிகளுக்கு ஆலோசனை விடுத்த சர்வதேச நாடுகள் இப்பொழுது என்ன சொல்லப் போகின்றன என்பதே கேள்வி

12 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: வசந்தன்

உங்கட குரல் நல்லாயிருக்கு. ஏதாவது வானொலிச் சேவையில இல்லாட்டி தொலைக்காட்சிச் சேவையில செய்தி வாசிக்கிறதுக்கு வேலைக்குச் சேரலாம்.

8.55 10.3.2005

1:58 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தங்கமணி

undefined

12.52 9.3.2005

1:58 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தங்கமணி


எழுதிக்கொள்வது: தங்கமணி
பேச்சுவார்த்தைக்கு புலிகளை வரச்சொல்லி அழுத்தம் கொடுக்குமாறு சந்திரிகா விடுத்திருக்கும் வேண்டுகோளை விட்டுவிட்டீர்களே!
நாட்டிலொரு நாடகமன்றோ நடக்குது!


12.58 9.3.2005

1:58 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Sinnarajah Vijayaratnam MA,PhD.

தம்பி
வணக்கம் ராசா!பேச்சு வார்த்தை? எதைப்பற்றி??
நாடு பிரிப்பது பற்றயா அல்லது பங்கு பிரிப்பது பற்றியா?அப்பாவித் தமிழ் மக்களின் அழிவில் நல்லா அரசியல் பேசுங்கோ! பாசிசப் புலிகளின் வாலுகளே! அப்பாவி மக்களை உயிருடன் வாழ விடுங்கள்
சின்னராசா விசயரெட்னம்

2.6 10.3.2005

5:07 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Shankar

//பாசிசப் புலிகளின் வாலுகளே!//
Very funny

15.12 10.3.2005

8:15 PM  
Blogger à®µà®©à¯à®©à®¿à®¯à®©à¯ said...

சும்மா சொல்லக்கூடாது. நல்லாத்தான் பி.எச்.டி. ஆராய்ச்சி செய்திருக்கிறார். இவயள் தரவளியத்தான் புத்தி ஜீவியள் எண்டிறது.

3:09 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: shankar

அவர் தன்னுடைய கருத்தைச் சொன்னார்

7.24 11.3.2005

12:27 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: shankar

அவர் தன்னுடைய கருத்தைச் சொன்னார்

7.24 11.3.2005

12:27 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: shankar

எழுதிக்கொள்வது: shankar

அவர் தன்னுடைய கருத்தைச் சொன்னார்

7.24 11.3.2005

7.24 11.3.2005

12:28 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: shankar

அவர் தன்னுடைய கருத்தைச் சொன்னார்

7.24 11.3.20057.24 11.3.2005

12:32 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: shankar

அவர் தன்னுடைய கருத்தைச் சொன்னார்

7.33 11.3.2005

12:33 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: eelanathan

சின்னரசாவிற்கு தனது பட்டம் விட இங்குதான் நூல் கிடைத்திருக்கிறது

12.6 11.3.2005

8:09 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home