6.3.05

என்னான்றே நீ என்னான்றே

என்னான்றே நீ என்னான்றே
என்னான்றே நீ என்னான்றே

வன்னிக்காட்டு வரிச்ச புலி அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன் - எதிரிக்கு
தண்ணி காட்டும் தலைவன் எங்க அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன்

ஏ... நெல்லியடி நெத்தியடி
மில்லரடி சொல்லியடி
அண்ணேன்றேன் வெற்றி மன்னேன்றேன்

ஆனையிறவு தெரியுமா
அடிச்ச அடி புரியுமா
என்னான்றே நீ என்னான்றே

அன்பில தான் பஞ்சடா
அசராத நெஞ்சடா
அண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன்
........................

இது நான் புதுசாக கேட்ட ஒரு புலிகளின் இயக்கப் பாட்டு! அறிவுமதி எழுத பாடியிருப்பவர் தமிழக பின்னணி பாடகி மாலதி.

விடுதலை கானங்களில் இப்பாடல் ரகம் ஒரு புது மாதிரியாக எனக்கு தோன்றுகிறது.

சிலர் தங்களை இப்பாடல் கவரவில்லை என்கிறார்கள். சிலர் அட்டகாசம் என்கிறார்கள்.

எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் பாடியவர் மாலதி என்பதனாலேயோ என்னவோ கூடவே மன்மதராசா பாடலும் நினைவுக்கு வருகிறது.

மேலே பாடல் வரல்லையா ?இந்தச் சுட்டியை அழுத்தி நீங்களும் கேட்டு பாருங்கள். இணைப்பிற்கான நன்றி - தயா ஜிப்ரான் இணையத்தமிழ்

10 Comments:

Anonymous Anonymous said...

இயக்கப்பாடல்களில் காணப்படும் உணர்வு இங்கு இல்லே.வரிகள் ஒகெய்

12:46 PM  
Anonymous Anonymous said...

சயந்தன் இந்த பாடலை எங்கு வாங்கலாம்.
எல்லாளன்.

1:17 PM  
Anonymous Anonymous said...

ஒவ்வொரு வகையும் தேவை என்பது என் கருத்து

1:36 PM  
Anonymous Anonymous said...

Great song!. I liked it very much.

2:32 PM  
Anonymous Anonymous said...

அறிவுமதிக்கு ஏன் இந்த வேல? அதுவும் மாலதியப் பாடவச்சது சுத்த மோசம்.
-வன்னியன்-

3:51 PM  
Blogger à®µà®©à¯à®©à®¿à®¯à®©à¯ said...

என்ன மாதிரி! பின்னூட்டப்பெட்டி சிக்கலாயிருக்கு. முன்பக்கத்தில பின்னூட்டங்களக் காட்டுதில்ல. அதோட சில பின்னூட்டங்கள் ஆரெழுதினதெண்டு தெரியாமக் கிடக்கு. டீ.சே. இன்ர பக்கம் பாத்தனிளளோ. ஆள் 'பாமினி, ஆங்கில எழுத்துரு மாற்றி' பூட்டி வச்சிருக்கிறார். நல்லாத்தானே வேல செய்யுது. உங்களுக்கு மட்டும்தான்.... ம்... அதுக்கெல்லாம் ஒரு மூஞ்ச வேணும்.
-வன்னியன்-

3:57 PM  
Blogger à®µà®©à¯à®©à®¿à®¯à®©à¯ said...

அறிவுமதி சினிமாப் பாடல்கள் எழுதுவதில்லை என்று முடிவெடுத்ததாலோ என்னவோ அப்பிடிப்பாடல்களை இங்கே எழுதத் தொடங்கிவிட்டார் போல. எண்டாலும் சினிமாவில நல்ல பாட்டுக்கள் தந்தவர்.
-வன்னியன்-

4:10 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: வசந்தன்

நலலா இருக்கு.


1.5 8.3.2005

6:08 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சயந்தன்

மீண்டும் பின்னூட்ட பரிசோதனை ஒன்று இரண்டு...

1.16 8.3.2005

6:19 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: யதுகிரி

மன்மதராசா பாடல் நினைவுக்கு வருவதால் இப்பாடல் மீது மரியாதை வருதில்லை. விடுதலை கானங்களுக்கு இப்படியான கூவல் பாட்டுக்கள் தேவையில்லை எனவே நினைக்கிறேன்.

21.41 8.3.2005

7:49 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home