12.3.05

உயிராய்.. உணர்வாய்




பொதுவாவே எனக்கு கொஞ்சம் மென்மையான பாட்டுக்கள் கூடப் பிடிக்கும். துள்ளல் பாட்டுக்களை விட!

போன கிழழை ஒரு பாட்டு ஒண்டு பாக்கவும் கேட்கவும் கிடைச்சது. அதிலை என்ன வித்தியாசம் எண்டால்.. அது ஒரு காதல் பாட்டுத்தான்.. ஆண் குரல் சிங்களத்திலையும் பெண் குரல் தமிழிலையும் இருக்கிறது தான்.

என்னவோ கேட்ட உடனை பிடிச்சிட்டுது எனக்கு. வீட்டிலை இப்ப அது தான் அடிக்கடி போற பாட்டு.

சினிமா பாட்டெண்டால் சொல்லிட்டு விட்டிடலாம். எப்பிடியும் நீங்களும் கேப்பியள். இது கொஞ்சம் வித்தியாசம் தானே.. அது தான் இதிலை ஒலி வடிவிலை இணைச்சிருக்கிறன். எங்கை காணவில்லை எண்டு தேடுறியளோ?

வரும். வரும் என்ரை கதை முடிய பாட்டு வரும். நானும் கொஞ்சம் கதைக்கிறேனே!

பாட்டை பாடியிருக்கிறது சந்துஷ் பார்த்தி மற்றது நிரோஷா.. சிங்களப் பாடகியான நிரோஷா சிறீலங்கால பேசப்படுற ஒரு ஆள். அவ ஏதோ ஒரு தென்னிந்திய தமிழ்ச் சினிமாவிலையும் பாட்டொன்று பாடியிருக்கிறா!

மற்றது இலங்கையிலை சமாதானம் வேண்டி வெண்புறாவை வரச் சொல்லியும் ஒரு பாட்டு அவ பாடினவ. பாட்டு பாடி பத்து வருசமாயிருக்கும். வெண்புறா தான் இன்னும் வரேல்லை.

அதை விடுவம். இந்தப் பாட்டு ஆராலை எனக்கு கிடைச்சது எண்டதை நான் சொல்லாமல் விடேலாது. அப்பிடி விட்டால் நண்பன் எண்ட பேரிலை ஒராள் வந்து உங்களுக்கு நன்றி சொல்லுற பழக்கம் எல்லாம் கிடையாதோ எண்டு பின்னூட்டம் எல்லாம் விடுவார்.

அதனாலை இந்தப் பாட்டை எனக்கு வீடியோ வடிவில் அனுப்பினது சேயோன். அவருக்கு என்ரை நன்றி.

அகலப் பட்டையா பாட்டையா எண்டு தெரியேல்லை. எதுவோ அந்தப் பட்டை வைச்சிருக்கிறாக்கள்.. குடுத்திருக்கிற இந்தச் சுட்டியிலை போய் வீடியோவையும் தரவிறக்கி பாக்கலாம். நல்ல ஒளிப்பதிவு.

சரி. தொடர்ந்து பாட்டைக் கேளுங்கோ!!!

4 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தங்கமணி

கதைச்ச விதம் நன்றாக இருந்தது. பாட்டும் கூட!
நன்றி!

14.16 12.3.2005

3:17 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Dondu

பாட்டு வரவில்லை சுட்டியில். இதுதான் வருகிறது:
"The page you are looking for was likely moved, deleted or it never existed. Try going back a page and check the link or try one of the links on the left to common pages. Alternatively, if you're looking for something on an EngSoc user's personal webspace you may have better luck searching for what you're looking for."
அன்புடன்,
டோன்டு ராகவன்

9.9 13.3.2005

8:02 PM  
Blogger துளசி கோபால் said...

அன்புள்ள சயந்தன்,

உங்களுடைய குரலும், பேசின விதமும் நன்றாக இருந்தன! அந்தப் பாட்டும்
கொஞ்சம் வித்தியாசமா இருந்தது!

என்றும் அன்புடன்,
துளசி.

11:35 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

சயந்தன் உமக்கு நல்ல குரல்வளம்.இடையிடை மயூரன் செய்வது போன்று குரல்பதிவுகளையும் தாருங்கள்.

12:21 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home