நான் எப்பிடி இருக்கிறன்!
எனது படத்தை வலைப்பதிவில் வெளியிட வேணும் என்று கோரிய அநேகம் பேரின் வேண்டுகோளை மதித்து (அடி ஆத்தி! அநேகம் பேரா..? அது யாரு? சரி! ஆகக்குறைந்தது எனது விருப்பத்திற்கு ஏற்ப) இந்தப் பதிவு! இதில் ஒரு மார்க்கமாக நின்று கொண்டிருப்பது நான் தான்!
எப்பிடி இந்தப் படத்தை எடுத்தனியள் எண்டு யாரேனும் கேட்டால்..
அப்பிடி யார் எடுத்தது! அதுவா வந்திச்சு!!!
இந்த படத்துக்கு பொருத்தமான கவிதை எழுதுறாக்களுக்கு .... இந்தப் படத்தை Save picture as பண்ணி எடுத்துக்கொள்ளுற உரிமையை தாறன்.
முக்கிய குறிப்பு: நான் கவிதை எழுதச் சொன்னதையோ அல்லது நீங்கள் கவிதை எழுதுவது பற்றியோ பொடிச்சிக்கும் வசந்தனுக்கும் மதியக்காவிற்கும் மூச்சு விட வேண்டாம்.
எப்பிடி இந்தப் படத்தை எடுத்தனியள் எண்டு யாரேனும் கேட்டால்..
அப்பிடி யார் எடுத்தது! அதுவா வந்திச்சு!!!
இந்த படத்துக்கு பொருத்தமான கவிதை எழுதுறாக்களுக்கு .... இந்தப் படத்தை Save picture as பண்ணி எடுத்துக்கொள்ளுற உரிமையை தாறன்.
முக்கிய குறிப்பு: நான் கவிதை எழுதச் சொன்னதையோ அல்லது நீங்கள் கவிதை எழுதுவது பற்றியோ பொடிச்சிக்கும் வசந்தனுக்கும் மதியக்காவிற்கும் மூச்சு விட வேண்டாம்.
16 Comments:
எழுதிக்கொள்வது: க்ருபா
நான் செக்கச்செவேல் எண்டு கறுப்பா வடிவாயிருக்கறன் எண்டு எங்கம்மா சொல்லுவா. நீங்களும் அப்படியே இருக்கீயள். :-))
15.57 23.3.2005
நல்லூர் கிட்டு பூங்காவுக்கு முன்னாலை பார்த்த மாதிரி இருக்கு
எழுதிக்கொள்வது: சீலன்
சூரிய ஒளி தலைக்குப் பின்னாலிருந்து வந்திருந்தால் உன் பின்னால் ஒளிவட்டம் தோன்றும் என ஏதாவது உளறலாம். இதற்கு என்ன எழுத? அது சரி! இவ்வளவு கறுப்பா நீங்கள்?
0.27 24.3.2005
அதென்ன எல்லோரும் வந்து இவ்வளவு கறுப்பா இவ்வளவு கறுப்பா எண்டு கேக்கிறீங்கள். கேட்டதின்ர அர்த்தத்தையும் ஒருக்கா விளக்கமாச் சொல்லுங்கோ பாப்பம். வெள்ளைத் தோலிய ஏனையா இவ்வளவு மோகம்?
ஆஹா ஒரு ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
சயந்தா! சஞ்சலப்படாதே
உன் சரிவு தளத்தில் மட்டுமே
வாழ்க்கையில் இல்லை
நீளும் உன் விரல்
கூறிச் செல்கிறது
நீ செயல் வீரன் என்பதை
இது எப்பிடி இருக்கு
எந்த தளத்தை சொல்லுறியள்? சாரல் வலைத்தளமோ? அல்லது நான் நிற்கிற தளமோ? அது எங்கை சரிஞ்சது? கமெரா லேசா சரிஞ்சு போச்சு..செயல் வீரனெண்டதை கேட்க சந்தோசமாய் இருக்கு.. அப்பிடி இருந்தன் எண்டால் இன்னும் எவ்வளவு சந்தோசமாய் இருக்கும்? இந்த கவிதையை (ஒருத்தரும் என் மொளியிலை அடிக்க வராமலிருக்க வேணும்) எழுதியதற்கு பரிசாக இந்த படத்தை எடுத்துக் கொள்ளுங்கோ!
கமரா சரிஞ்சா என்ன சயந்தன் சரிஞ்சா என்ன.. சரி கவிதை எழுதினதுக்காக உங்கட படத்தைத் தந்து ஏனிந்தத் தண்டனை
எழுதிக்கொள்வது: முத்து
சயந்தன் உங்க முகம் ரொம்ப அழகா இருக்கு :-)
23.6 23.3.2005
எழுதிக்கொள்வது: Shiyam Sunthar
ஐயகோ எனக்கு கவிதை எழுத தெரியாதே! எப்படி உங்கள் படத்தை எடுத்துக் கொள்வது. ஆகவே கவிதை எழுதத் தெரியாதவர்களின் நலன் கருதி இப்படத்திற்கு சிறுகதைகளையும் எழுதி அனுப்பலாம் என அறிவிக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
9.49 24.3.2005
போச்சுடா,
இனி சிறுகதையளுக்கு எதிரான இயக்கமொண்டு துவங்கோணும் போல கிடக்கு.
எழுதிக்கொள்வது: குமரேஸ்
டிஜிற்றல் கமெராக்கள் பெரிய அளவில் சூரிய ஒளியை பதிவு செய்யாது. சூரிய ஒளியை மறைத்தபடி நீங்கள் நின்று இப்படத்தை எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இன்னுமொருதடவை முயற்சித்துப் பாருங்கள்.. நன்றி
-- குமரேஸ்
--சுவிஸ்
13.28 24.3.2005
ஏய்!! நீ ரொம்ப அழகா இருக்கே :-) :-)
எழுதிக்கொள்வது: Thadcha
அப்படியே சூரியனைப் பார்த்து சுட்டு விரலை நீட்டியிருந்தால் சூரியனுக்கு வழி காட்டுகிறாய் எனச் சொல்லியிருக்கலாம்!
21.59 24.3.2005
எங்க ஊருல இப்படித்தான் அண்ணானு ஒருத்தர் ஒரு விரலை நீட்டினார். அவர புடிச்சி கொடில போட்டு கட்சிபேரா வச்சி இன்னைக்கு வரைக்கும் அவர கைய இறக்கவிடல! உங்களுக்கு அந்த ஆசை இல்லையே?
ச.தி.மு.க! இதுவும் நல்லாத்தான் இருக்கு! :)
எழுதிக்கொள்வது: Naan
டேய்.. வர்ணப்படம் போட்டாலும்.. கறுப்பு வெள்ளையாகத்தான் இருக்கும்.. ஏதோ உன்னால முடிஞ்ச அளவுக்கு போட்டிருக்கிறாய்..
18.58 24.3.2005
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home