19.3.08

பூவைப் போல புன்னகை காட்டு - புலிகளின் பாடல்

நேற்று யூ ரியுப்பில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தப் பாடலை பார்க்கக் கிடைத்தது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை நினைவுபடுத்துகின்ற தன்னம்பிக்கைப் பாடலை பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. காட்சி முழுவதும் பெண்போராளிகள் பங்கு பற்றியிருக்கிறார்கள். பாடலை அனுராதா சிறிராம் பாடியிருக்கிறார். இசை வழங்கியிருப்பவர் போராளி இசைப்பிரியன்.

அண்மையில் இசைபிரியனின் செவ்வியொன்றினைக் காணக்கிடைத்தது. அதில் இசையை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து குரல்களைப் பெற்று கலவைசெய்து பாடல்களை வெளியிட முடிகிறதென அவர் சொன்னார். அவர் இசையமைத்த விடுதலை மூச்சுத் திரைப்படத்தில் பாடகர் திப்புவின் பாடலும் இடம் பெற்றிருந்தது.


11 Comments:

Anonymous Anonymous said...

இசையும் வரிகளும் அற்புதம்.

7:46 AM  
Blogger தமிழன் said...

தன்னம்பிக்கை உள்ளவன் தமிழன் என்பதை அன்பு சகோதரிகளை காணும் பொழது புரிகிறது
www.dilipan-orupuratchi.blogspot.com

8:54 AM  
Blogger மலைநாடான் said...

சயந்தன்!

நம்பிக்கையளிக்கும் பாடல். ஒரு நல்ல விடயத்துக்காக இங்கே இட்டிருக்கின்றேன்.

9:09 AM  
Anonymous Anonymous said...

பாடலை எழுதியவரும் ஒரு போராளிதான். தமிழீழ தொலைகாட்சியை சேர்ந்த கு.வீராதான் அவர்

9:59 AM  
Anonymous Anonymous said...

சயந்தன்
பாடல்களை எப்பிடி இந்தியாவில் ஒலிப்பதிகிறார்கள் என நானும் நினைத்ததுண்டு. இசைப்பிரியனுக்கு ஏலவே ஏ ஆர் ரகுமான் என நினைப்புண்டு என நாம் கேலி செய்வதுண்டு. உண்மையாகவே அவன் அவரின் நுட்பத்தை பின்பற்றுகிறான். வாழ்த்துக்கள்

3:21 PM  
Anonymous Anonymous said...

இசைபிரியன் எழுச்சிப் பாடல்களை ஜனரஞ்சகத் தன்மையில் வழங்குகிறார் என்ற ஒரு கருத்து நிலவிய போதும் அருமையான பாடல் இது.

2:17 AM  
Blogger சயந்தன் said...

சில சம்பவங்கள் எதேச்சையாக நடைபெறுவதுண்டு. பதிவர் சிநேகிதியிடம் இந்த வீடியோவினை அனுப்பி சற்றிக்கொண்டிருந்த போது அவரிடமிருந்து அதிர்ச்சி சக மகிழ்ச்சி அலறல்-

இவ் ஒளிப்பதிவில் போராளி உடையில் வருபவரும் சிநேகிதியும் ஒரே வகுப்பு நண்பர்கள். சுமார் 11 வருடங்களிற்கு பின்னர் பார்ப்பதாக அவர் சொன்னார். இது பற்றிய பதிவொன்றினை அவர் எழுதக் கூடும்

3:22 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாடல்,இசை,குரல்,நடிப்பு,காட்சியமைப்பு மிகப் பாராட்டும்படி உள்ளது.

4:01 PM  
Blogger கொண்டோடி said...

//இசைப்பிரியனுக்கு ஏலவே ஏ ஆர் ரகுமான் என நினைப்புண்டு என நாம் கேலி செய்வதுண்டு. உண்மையாகவே அவன் அவரின் நுட்பத்தை பின்பற்றுகிறான். வாழ்த்துக்கள்//

மிகச்சரியான அவதானிப்பு.

'சிட்டுக் குருவி மெட்டுப் போட்டு' என்ற பாடல் உருவானபோதுதான் இந்த ரகுமான் கதை தொடங்கியது. அதன்பிறகு பிடித்தது சனி. ரகுமான் போலவே 'டப்பா'ப் பாடல்கள் பலவற்றைத் தந்தார் இசைப்பிரியன். இடையிடையே நல்ல பாடல்களும் வரும்.

நுட்பமொன்றைப் பயன்படுத்திக் காட்டுவதற்காகவே படைப்பைச் செய்வார்கள் சிலர். அதாவது படைப்புக்காக நுட்பம் என்ற நிலையைப் போக்கி நுட்பத்துக்காகப் படைப்பைச் செய்வார்கள். இதில் இயக்குநர் சங்கரும் ரகுமானும் முக்கியமானவர்கள்.
இசைப்பிரியனும் அதேபாணியில் நுட்பத்துக்காக ஒரு படைப்பைச் செய்துள்ளார் போலும்.

எனக்கு விளங்காத விசயம் என்னெண்டா, இன்னும் எதற்காக வன்னியிலிருந்து சித்ராவையும் அனுராதாவையும் தேடிப்போகிறார்கள்?

என்ர இசையில எஸ்.பி. பாலு பாடியிருக்காக... சுசிலா பாடியிருக்காக... சுவர்ணலதா பாடியிருக்காக... சித்ரா பாடியிருக்காக... அனுராதா சிறிராம் பாடியிருக்காக... என்று பின்னொருநாளில் தம்பட்டம் அடிப்பதற்காகவா?

6:45 PM  
Blogger சுபானு said...

தற்செயலாகத்தான் இந்தப்பதிவிற்கு வரநேர்ந்தது.... வாழ்த்துக்கள் :)
நீண்ட நாட்களின் பின் நம் மண்ணின் மணம் கமழும் அருமையான பாடலொன்றை கேட்டு மனம் பூரிக்கின்றது.... பாடலின் இசையும் வரிகளும் அற்புதம்....

11:09 PM  
Blogger சயந்தன் said...

test

10:43 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home