14.2.08

ரொம்ப முக்கியமான கேள்விகள் ?

தினப்படி வாழ்க்கையில தோன்றுகின்ற கேள்விகளை தொகுத்துப் பதிவிடுறன். இதில சம்பந்தப்பட்டவர்களிடமே இதுகளை நேரே கேட்கலாம் எண்டாலும் சும்மா ஒரு இதுக்கு பொதுவில விடுறன்.

கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது என்னும் பலதரப்பட்ட எழுத்தாளர்களைக் கவர்ந்த நூல்கள் தொடர்பான நூல் ஒன்றை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொகுத்திருக்கிறார். அதில் ஒவ்வொரு எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்களும் உண்டு. அவற்றை அ. முத்துலிங்கம்தானா எழுதினார் என அறிய ஆவல். ஏனெனில் அவரைப் பற்றிய குறிப்பில் நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ. முத்துலிங்கம் படைப்புக்களைச் சொல்லலாம் என்றுள்ளது. ??

தினக்குரலில் கானா பிரபாவின் பதிவினை அறிமுகப்படுத்தியவிடத்தில் மடத்துவாசல் பிள்ளையார் கனவில் வந்து சொன்னதும் நித்திரையால் எழும்பி பதிவுகளை எழுதுபவர் கானா பிரபா என்ற பொருள்பட உள்ளதே.. ? உண்மையா.. ? என் கனவிலும் தான் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பதிவெழுதச் சொல்லவில்லையே.. :(

2004 காதலர் தினத்தை (அப்போது தீர்மானிக்கப்படாத) காதலியுடன் கொண்டாடுவேன் என அறிக்கையிட்ட சோமிதரன் (ஆதாரம் ஒளிப்பதிவாக உண்டு ) 2008 இலாவது அந்த இலக்கை அடைந்தாரா ? தவிர அவரது யாழ் நூலகம் தொடர்பான ஆவணப்படம் எப்போ வரும் ?

கொழுவிக்கு டொச் தெரியும் என அறிய முடிந்த சிறீரங்கன் அவர்களால் கொழுவிக்கு தமிழும் தெரியும் என அறிய முடியாமல் போனது ஏன்.. ?

அப்புறம்.. அப்புறம்.. பெரியண்ணன் இப்போ பெரியண்ணன் வீட்டில் உள்ளாராமே.. ? அறிந்தவர் யாரேனும் உண்டோ ?

பதிவுலகிலிருந்து விடைபெற்றுச் சென்ற ஓசை செல்லா அண்ணன் இன்னும் திரும்பி வரவில்லையே.. ஏன் ?

கேள்விகள் தொடரும் -

21 Comments:

Blogger theevu said...

பேசாமல்(அதான் எழுதிவிட்டீர்களே) எசகுபிசகான கேள்விகள் என்று தலைப்பிட்டிருக்கலாம்.

2:13 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
இவை கேட்கக் கூடாத கேள்விகள்....

2:25 AM  
Anonymous Anonymous said...

எசகு பிசகில எசகு என்றால் எதிர்ப்புச் சக்தி குறைவாம். அதாவது எயிட்சாம்.

6:08 AM  
Anonymous Anonymous said...

//பதிவுலகிலிருந்து விடைபெற்றுச் சென்ற ஓசை செல்லா அண்ணன் இன்னும் திரும்பி வரவில்லையே.. ஏன் ?//

சும்மா இருங்கய்யா, வந்துடப் போறாரு :(

6:16 AM  
Anonymous Anonymous said...

//அப்புறம்.. அப்புறம்.. பெரியண்ணன் இப்போ பெரியண்ணன் வீட்டில் உள்ளாராமே.. ? அறிந்தவர் யாரேனும் உண்டோ ?//

இதற்கும் பிரபாகரன் தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் செய்திருக்கும் தொடர்புண்டா..

6:24 AM  
Anonymous Anonymous said...

// 2004 காதலர் தினத்தை (அப்போது தீர்மானிக்கப்படாத) காதலியுடன் கொண்டாடுவேன் என அறிக்கையிட்ட சோமிதரன் (ஆதாரம் ஒளிப்பதிவாக உண்டு )
2008 இலாவது அந்த இலக்கை அடைந்தாரா ?//

2004 கொண்டாடினாரோ தெரியவில்லை. ஆனால் 2005 கொண்டாடவில்லை. ஏன் எண்டு மட்டும் கேக்க கூடாது. 10 வருசத்துக்கு மேல தேடிக்கொண்டிருக்கிறார்.. இன்னும் தான் முடியல..

//2008 இலாவது அந்த இலக்கை அடைந்தாரா ?//
நான் நினைக்கல.. 2018 இலயும் நடக்குமா எண்டு.

//தவிர அவரது யாழ் நூலகம் தொடர்பான ஆவணப்படம் எப்போ வரும் ?.//
அது விரைவில் வரும் எண்டு சொல்லுறார். இப்பிடித்தான் ஒரு 4 வருசமா சொல்லுறார். நூலகம் கட்டத் தொடங்கினாலும் கட்டி முடிச்சு அதுக்கு பிறகும் எரிச்சிருப்பாங்கள்.

தலைவர் சோமி வாழ்க.

6:37 AM  
Blogger சயந்தன் said...

//அப்புறம்.. அப்புறம்.. பெரியண்ணன் இப்போ பெரியண்ணன் வீட்டில் உள்ளாராமே.. ? அறிந்தவர் யாரேனும் உண்டோ ?//

இதற்கும் பிரபாகரன் தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் செய்திருக்கும் தொடர்புண்டா..//

கஸ்டம் !!!!!
அப்புறம் - இப்பிடியொரு கேள்வியை போடு நான் வந்து பதில் சொல்லுறேன் எனச் சொன்ன சோமியை இன்னும் காணேல்லையே ---

7:56 AM  
Anonymous Anonymous said...

10 வருசமா வலு கஸ்டப்பட்டு போண்ணு தேடிக் கொண்டிருக்கிற சோமிய சில சனம் மஸ்தான் எண்டு சொல்லுறாங்கள். தலையைக் கொண்டு போய் எங்கையையா முட்டுறது?

9:17 AM  
Blogger -/பெயரிலி. said...

/நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை/

இங்கை நீர் சேட்டை செய்யிறிரோ? சேடை செய்கிறீரோ? :-)

10:43 AM  
Blogger சயந்தன் said...

இங்கை நீர் சேட்டை செய்யிறிரோ? சேடை செய்கிறீரோ? :-)//

ஒண்ணும் புரியலை.. முத்துலிங்கம் தொகுத்து எழுத்தாளர்கள் பற்றிக் குறிப்பெழுதிய புத்தகத்தில் முத்துலிங்கம் பற்றி இவ்வாறு இருந்தது. அதை யாரெழுதியது என்பது தான் கேள்வி.

10:53 AM  
Blogger உண்மைத்தமிழன் said...

சயந்தன்

முதல் ஐந்து கேள்வியை விட்ருங்க.. ஆட்டைக்கு நான் வரலை..

ஆனா 6-வது கேள்வி.. அதான் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரே அப்புறம் எதுக்கு சாமி அவரைத் தேடுறீங்க..

ஒருவேளை உங்க அதிர்ஷ்டம் கூப்பிட்டக் குரலுக்கு வந்துட்டாருன்னு வைங்க.. தேவையா இது..? விடுங்கோ ஸார்..

11:09 AM  
Blogger -/பெயரிலி. said...

'கொடை'yilai 'ட்'டை vidduppOddIrO eNdu paaththan :-)

11:15 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

அப்ப சிறிரங்கன் எழுதினது டொச் தானோ?

பெயரிலி:
;-)

6:17 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

சயந்தன்:
நீர் செல்லாவைப் பற்றிக் கேள்வி கேட்டது பிழையெண்டுதான் படுது.
அந்தாள் பகிடிக்கோ வெற்றிக்கோ சொல்லிச்சு எண்டு தெரியேல. உம்மட இடுகையையும் பகிடியாவோ வெற்றியாவோ எடுப்பாரெண்டும் தெரியேல.
எதுக்கு வீண் வம்பு?
திரும்பி வந்தா எத்தினை பேரின்ர வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொள்ளப் போறீர்?

;-)

6:19 PM  
Blogger Sri Rangan said...

சயந்தன்,வணக்கம்!

கானா பிரபாவின் பதிவில் கொழுவிக்கென வெட்டியொட்டிய கட்டுரைபற்றிய குறிப்பை இதில் தந்திருக்கிறீர்கள்!

அது, ஓஸ்ரேலியப் பழங்குடி மக்கள் பற்றிய மிகக்காத்திரமான கட்டுரை.

அதை ஜேர்மனிய இடாதுசாரித் தினசரியிலிருந்து நான் வாசித்தேன்."கொழுவிக்கு இதையேன் வெட்டியொட்டினேன்" என்று நீங்கள் கேட்கலாம்.கானா பிரபாவின் பதிவில் முக்கயமாக- உணர்வுப+ர்வமாக விளங்கி உள்வாங்க வேண்டிய பதிவில் வழமைபோலவே கொழுவி தனக்கே உரிய நகைச்சுவையோடு கேள்வியை முன்வைத்தார்.பெரும்பாலும் கொழுவிக்கு பல்மொழியாற்றல் இருப்பதை டோண்டுவோடான அவரது விவாதங்களில் நானும் அறிந்தேன்.பிரயோசனமானவொரு கட்டுரையை அவர் படித்து உள்வாங்கி கருத்துக்களை முன் வைப்பாரென எதிர்பாத்து, அதைச் செய்தேன்.அவ்வளவுதாம் தம்பி.அக்கட்டுரை வந்த இணையத்தின் சுட்டியைத் தந்திருந்தேன் கவனிக்கவில்லையா?உங்கள் கேள்விக்கு நேற்றே பதிலெழுத முனைந்தேன்.வீட்டுக் குசுனிக்குள் பாத்திரங்கள் ஒன்றுடனொன்று முட்டிக்கொண்ட சத்தம்...சூழலைப் புரிவீர்கள்.இப்போதுகூடக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் திட்டு,எனக்கானதே தம்பி.நான் எழுதவேண்டிய கட்டுரையை இன்னும் தொடங்காதிருக்கிறேன்.பெரும்பாலும் இன்று இரவுதாம் சாத்தியம்.

7:13 AM  
Anonymous Anonymous said...

//.வீட்டுக் குசுனிக்குள் பாத்திரங்கள் ஒன்றுடனொன்று முட்டிக்கொண்ட சத்தம்...சூழலைப் புரிவீர்கள்.இப்போதுகூடக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் திட்டு,எனக்கானதே தம்பி//

சிறிரங்கன் அண்ணா - மானுட விடுதலை முதல்ல உங்கள் வீட்டிலிருந்தே தேவை போலும் :))

7:32 AM  
Blogger பகீ said...

//அப்புறம்.. அப்புறம்.. பெரியண்ணன் இப்போ பெரியண்ணன் வீட்டில் உள்ளாராமே.. ? அறிந்தவர் யாரேனும் உண்டோ ?//

எண்டா???

8:37 AM  
Anonymous Anonymous said...

பெரியண்ணன் என்றது யாருங்க? அவங்க தானே ? -;))

12:52 PM  
Blogger சோமி said...

:))))))

4:33 AM  
Blogger மலைநாடான் said...

//அப்புறம்.. அப்புறம்.. பெரியண்ணன் இப்போ பெரியண்ணன் வீட்டில் உள்ளாராமே.. ? அறிந்தவர் யாரேனும் உண்டோ ?//

இதற்கும் பிரபாகரன் தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் செய்திருக்கும் தொடர்புண்டா..//

அட பாவிகளா? :)

4:35 PM  
Anonymous Anonymous said...

பெரும்பாலும் கொழுவிக்கு பல்மொழியாற்றல் இருப்பதை டோண்டுவோடான அவரது விவாதங்களில் நானும் அறிந்தேன்.//

தாத்தாக்குத் தெரிந்தது ஒரேயொரு மொழி தான். அது பிரகாஸ்ராச் நடிச்ச மொழி :)

11:31 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home