2.12.07

ஐ போட் டச்சில் (IPod Touch) இல் பொட்டியடுக்கும் சாரல்

இரண்டாயிரத்து ஒன்றுகளில் ஒரு தடவை குறிப்பிட்ட ஒரு இணையத்தளத்தினை ஆவல் மேலிடப் பார்வையிட்டபோது தோன்றிய பெட்டிகளைக் கண்டு இதென்ன புதுப் பொண்டு (font) எனக் குழம்பி மயூரனிடம் கேட்டபோது தான் யுனிகோட் என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியது. பெயர் மட்டும் தான்.

பாமினியைப்போலவே சரஸ்வதியைப்போலவே அதுவும் ஒருவகை எழுத்துருவோ எனத் தேடிப்பார்த்து பின் தெளிந்தபோதாயினும் அப்போதைய வின்டோஸ் 98 உடன் கூடிய கணணியின் கடைசிப்பாவனைத் திகதிவரை அதில் யுனிகோட் பொட்டிக் கடைதான் விரித்தது.

பின்னர் வலைப்பதிவு அறிமுகமாகி தவழ்ந்து எழுந்து பாமினியில் எழுதி சுரதா பக்கமொன்றினூடா யுனிகோட்டாக்கி.. பின்னர் இகலப்பை உபயோகித்து ... (இப்போ வரை இகலப்பையில் பாமினி முறையில்த்தான் எழுதுகிறேன். உபுண்டுவில் பாலினியில் :) வருகையில் இப்போ ரொம்ப நாளைக்கு அப்புறம் மீளவும் பொட்டி எழுத்துக்கள் தோன்றுகின்றன ஐபோட் டச்சில்..

ஐ பொட் டச்சின் Wi-Fi நுட்பத்தில் பரவலாக சகல இடங்களிலும் யாரோ எவரினதோ இணையத் தொடர்பு கிடைத்துவிடுகிறது. :) (இத்தகைய இணைப்பு சட்டவிரோதமானதா..? அவ்வாறெனில் எதற்காக இந்த நுட்பம் வெளியிடப்படுகிறது. ?)

ஐபொட் டச்சில் இணைய உலாவல் அந்த மாதிரி இலகுவாக இருக்கிறது. சபாரி என்னும் இணைய உலாவியைப் பயன்படுத்தும் ஐபொட் டச் நாம் அதனை கைகளில் வைத்திருக்கும் பாங்கிற்கு ஏற்ப வளைந்து கொடுக்கிறது. தவிர திரையில் முழுதும் தோன்றிய இணையப் பக்கத்தின் குறித்த பகுதி மட்டும் தேவைப்படும் போது அவ்விடத்தில் தொடுவதன் ஊடாக அதனை பெரிதாக்கி பார்க்க முடிகிறது. யூ ரியூப் வீடியோக்களைப் பார்ப்பதற்கும் தனியாக ஒரு பகுதி உள்ளது.

முதலில் தமிழ்நெற்றில் நுழைந்து அதனைப் பரீட்சித்துப் பின்னர் எனது வலைப்பதிவுக்குள் நுழைந்த போது கிடைத்தது ஏமாற்றம். தமிழ் எழுத்துக்கள் பொட்டி பொட்டியாகவே தெரிந்தன. யுனிகோட் ஆதரவு இல்லையென்பது புரிகிறது. அதனை உட்செலுத்துவது குறித்துத்தான் எதுவும் பிடிபடவில்லை. அதற்கான வாய்ப்பு ஐ போட் டச்சில் இல்லையென்றே நினைக்கிறேன்.

ஐ போட் டச்சில் எனது வலைப்பதிவு தோன்றிய சில படங்கள்....

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


7 Comments:

Anonymous Anonymous said...

பிலிமு

1:44 PM  
Blogger theevu said...

பிலிமு எல்லாம் ஓகேதான் .என்ன விலைக்கு வாங்கினீங்க அல்லது சுட்டீங்களா?:)

எத்தனை கொள்ளளவு 16 ஆ அல்லது 8 gb ஆ என்பதையும் தெரியப்படுத்தினால் நல்லது.

இணைய பாவிப்பிற்கு பிறிதாக பணம் செலுத்தவேண்டிவருமே...

தமிழில் pdf file ஏதும் பாவித்துப்பார்த்து சொல்லுங்கள் தமிழ் வருகிறதா என..

1:52 PM  
Anonymous Anonymous said...

அதுசரி, பொட்டி பொட்டியாகத் தெரியுதா அல்லது பெட்டி பெட்டியாகத் தெரியுதா? கொஞ்சம் விளக்குவியளோ?

5:31 PM  
Blogger மலைநாடான் said...

//ஐ பொட் டச்சின் Wi-Fi நுட்பத்தில் பரவலாக சகல இடங்களிலும் யாரோ எவரினதோ இணையத் தொடர்பு கிடைத்துவிடுகிறது. :) (இத்தகைய இணைப்பு சட்டவிரோதமானதா..? அவ்வாறெனில் எதற்காக இந்த நுட்பம் வெளியிடப்படுகிறது. ?)//

தீவு!
இப்படிச்சொன்ன ஆளிட்ட,
இணைய பாவிப்பிற்கு பிறிதாக பணம் செலுத்தவேண்டிவருமே... என்று கேட்கலாமோ?

சயந்தன்!
"இலத்திரன் சுவடியும் " கையுமாத் திரியிறியள் என்டு சொல்லுறியள்... நடக்கட்டும் நடக்கட்டும்:)

9:43 PM  
Blogger சயந்தன் said...

//தமிழில் pdf file ஏதும் பாவித்துப்பார்த்து சொல்லுங்கள் தமிழ் வருகிறதா என..//

ஆம். விடுதலைப்புலிகள் பத்திரிகையின் பக்கங்களை பரீட்சித்துப் பார்த்தேன். வருகிறது. ஆனால் பக்கங்களை பெரிதாக்கி பார்க்க முடியவில்லை :(

4:15 AM  
Anonymous Anonymous said...

Even smart phones have the same problem :(

7:04 AM  
Blogger ILA (a) இளா said...

the same problem with Black berry..

1:38 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home