20.11.07

Slide Show மூலம் படங்களைக் காட்சிப் படுத்துங்கள்

பதிவில் நமது ஒளிப்படங்களை வெளியிடும் போது ஒன்றிரண்டு படங்கள் எனில் பரவாயில்லை ஆனால் பல படங்களை காட்சிப்படுத்தும் போது வரிசைக்கும் அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. எனக்கென்னமோ அது பிடிக்கவில்லை. ஏற்கனவே Light Box என்ற நுட்பம் ஊடாகவும் முன்பு படங்களை காட்சிப்படுத்தியிருந்தேன்.

இருந்தும் Slide show ஊடாக படங்களைக் காட்சிப் படுத்த விரும்பி இணையத்தை நோண்டியதன் விளைவு இப்பதிவு. Photoshop Flash முதலான செயலிகளில் நாமாகவே நமக்கான Slide show க்களைத் தயாரிக்க முடியும். ஆயினும் தயாரித்தலின் பிற்பாடு செயலிகள் உருவாக்கித் தரும் ஜாவா ஸ்கிரிப்ட் xml ஸ்கிரிப்ட் மற்றும் காட்சிப்படுத்த வேண்டிய படங்கள் என அனைத்தையும் தரவேற்றியோ நிரலில் இணைத்தோ என ஏகப்பட்ட சில்லெடுப்புக்கள் உண்டு. தவிர புதிதாக படங்களைச் சேர்க்க விரும்பும் போது நிரல்களிலும் மாற்றங்களை உண்டு பண்ண வேண்டும்.

இவற்றிற்கான இலகுவான தீர்வாக அமைகிறது PicToBrowser.

Flickr தளத்தில் உங்களுக்கான கணக்கைத் தொடங்கி படங்களை குறிச்சொல் குறிப்புடன் தரவேற்றுங்கள்.

இங்கே நான் காட்சிப்படுத்தியிருக்கும் படத்தொகுப்பில் வலது பக்க கீழ் மூலையில் உள்ள Info தொடுப்பை அழுத்துங்கள். மிகுதியை நீங்களே முடித்துக் கொள்வீர்கள்.

ஏற்கனவே ஒரு slide show இனைத் தயாரித்து பதிவிட்ட பின்னர் கூட பதிவுகளில் எந்த விதமான மாற்றத்தையும் செய்யாமலேயே புதிய படங்களை இணைக்கலாம். அதாவது முன்னர் காட்சிப்படுத்திய குறிச்சொல்லின் (Tag) குறிப்புடன் தரவேற்றப்படும் படங்களும் உங்கள் தொகுப்பில் இணைக்கப்படும்.

இங்கு காட்சிப்படுத்தியிருக்கும் படங்கள் அவ்வப்போது நான் கிளிக்கியவை.


6 Comments:

Anonymous Anonymous said...

Good one
Thanks

9:49 AM  
Blogger பகீ said...

This is really a great idea.

The photos are very nice.

Thanks

10:05 AM  
Anonymous Anonymous said...

useful info. I will try it

1:30 PM  
Anonymous Anonymous said...

மஞ்சள் பூசி குளிக்கிறீர் போல :)))

9:46 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

//At 9:46 PM, Anonymous

மஞ்சள் பூசி குளிக்கிறீர் போல :)))
//

இல்லையே?
நானறிய சந்தனமாகத்தானே இருந்தது?
எப்ப மஞ்சளா மாறினது?

11:47 PM  
Anonymous Anonymous said...

என் கண்ணை என்னாலேயே நம்ப முடியவில்லையே..

சயந்தனா..

குண்டா வந்து குண்டைத் தூக்கி போட்டது போக இப்ப இப்பிடி...

என்ன தான் நடக்குது.. மஞ்சள் மகிமையோ.. சந்தன மகிமையோ..
இல்லை ஏதாவது editing tools..
ஷ் ஷ்

11:59 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home