அப்பிள் தோட்டமும் ஆதாமும் - ஒளிப்படங்கள்
சிறுவயதுகளில் அப்பிள் சாப்பிட விரும்பினால் கொழும்பு சென்ற யாராவது ஊர் திரும்பும் போது தான் அது நிறைவேறும். யாழ் நகரத்து ஆஸ்பத்திரி வீதியில் விற்கும் அப்பிள்கள் கடந்து போகையில் கண்களால் மட்டும் உண்ணும் அளவிற்கு அதிக விலையில் இருந்தன. கொழும்பிலிருந்து யாரேனும் கொண்டு வரும் (அநேகமாக அம்மா) அப்பிள்கள் கூட அளவுக்கணக்கில் துண்டுகளாக்கித் தரப்படும். அதற்காக அடிபடுவதுமுண்டு.
இப்போ இங்கே வீட்டின் முன்னே பின்னே என காய்த்து (அப்பிள் பழுக்குமா?) குலுங்குகின்றன அப்பிள்கள். சிறிய மரங்கள் குலைகளின் பாரம் தாங்காது கிளையாடிந்து விழ நிலத்தில் சிந்தியும், சிதறியும் கிடக்கின்றன அவை.
பார்க்கும் போது ஆஸ்பத்திரி வீதியும் அடித்துப் பிடித்து உண்டு மகிழ்ந்த காலங்களும் நினைவில் வருகின்றன.
(படங்களை கிளிக்கி வலது, இடது பக்கங்களில் மௌஸை கொண்டுசெல்வதன் மூலம் முன்னைய, பின்னைய படங்களைப் பார்க்கலாம்.)

8 Comments:
இவ்வளவு பெரிய தோட்டமிருக்கா? படங்கள் பிரமாதம்! 5ம் படத்தில் உள்ள இரட்டை நிற "Royal gala " என்ற வகை எனக்கு மிகப்பிடிக்கும். நல்ல கேள்வி அப்பிள் பழுக்குமா?? முற்றுதல் என்பது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.
அது சரி ஆதாமைக் காணவில்லை.
அப்ப மாலன் ஐயா சொன்னது உங்களைத்தானா?
அப்பிள் தோட்டத்துடன் செட்டில் ஆகியிருக்கீரிரே!!!
//இவ்வளவு பெரிய தோட்டமிருக்கா?//
தோட்டம் இருக்கு.. ஆனா என்னதில்லை :)
குழப்பி (யார்யா இது ?) அப்புறம் என் பதிவிலிருந்தே எடுத்த ஆதாரம் என யாரும் சொல்ல முதல் சொல்லிர்றேன். இது நான் இருக்கும் வீட்டுக்குச் சொந்தமான தோட்டம். அம்புட்டுந்தேன்.
சன நடமாட்டமேயின்றி இருப்பதைப் பார்க்கும் போது ஆதாமாயிருக்கச் சாத்தியம் தான் ! :)
//சன நடமாட்டமேயின்றி இருப்பதைப் பார்க்கும் போது ஆதாமாயிருக்கச் சாத்தியம் தான் ! :)//
ஏ வாலா.. A வாலா.. ?
அது சரி ஆப்பிள் எனச் சொல்லிவிட்டு வேறு படங்களும் உள்ளதே.. அவை என்ன ? குறிப்பா அந்த கடும் நாவல் கலர்.
தீபா!
இப்படத்தில் பியர்ஸ் (பேரைக்காய்), அத்துடன் கருநாவல் நிறப்பழம் புறுண் என்பார்கள். இனிமையான பழம் ,இதை வற்றலாக்கிச் சேமிக்கும் வழக்கமும் உண்டு.
யோகன் அண்ணை நன்றி விளக்கத்திற்கு. பியர்ஸ் பழத்தையும் பறித்து ஏதோ ஒரு வாயு அடித்து வைத்து விடுவார்களாம். பிறகு அடுத்த வருட சந்தைக்குத்தானாம் பயன் படுத்துவார்கள். இங்கு பறிக்கப்படும் அப்பிள்கள் கூட பழச்சாறுக்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன.
nice place
enjoy :)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home