24.6.07

நன்றி நவிலலும் புதிய பூனையும்

கடந்த ஒருவாரத்து நட்சத்திரப் பதிவுகளில் வழமைப் பாதையிலிருந்து மாறி ( சிங்கப் பாதை...? ) கொஞ்சம் கனமான விடயங்களை கையாள நினைத்திருந்தேன். அவ்வாறே செய்துமிருந்தேன். ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு விவாதப் புள்ளியைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

பெரும்பாலும் இவ்வாறான (பொதுவாக ஈழம் குறித்த) கனத்த பதிவுகள் பின்னூட்டங்களால் திரும்பிப் பார்க்கப் படாத நிலையில் வழமையாக சாரலுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் கிடைத்தன என்பதில் மகிழ்ச்சி. அதிலும் அவை மொக்கைப் பின்னூட்டங்களாக இல்லாமல் பதிவோடு இணைந்திருந்த வகையில் பதிவை நீட்டித்த வகையில் பெரு மகிழ்ச்சி. - கழுவிகளாயிருத்தலும் கொழுவியாதலும் பதிவுக்கு கூட பதிவோடிணைந்த பின்னூட்டங்கள் வந்ததெனின் பார்த்துக் கொள்ளுங்களேன்..

பின்னூட்ட மட்டுறுத்தல் நான் விரும்பாத ஒன்றாயினும் அண்மைக் காலங்களில் என் மொக்கைப் பதிவுகளால் உண்டான அதே வகைப் பின்னூட்டங்களைத் தவிர்க்க அதனை கொண்டு வரவேண்டியதாய்ப் போனது. ஆனால் இந்த நட்சத்திர வாரத்தில் கிடைக்கப் பெற்ற அத்தனை பின்னூட்டங்களும் வெளியிடப்பட்டன. கேள்வி கேட்பவன் பதில் சொல்பவன் முதலானோருக்கு நன்றி

யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது என்ற பதிவை மதி அக்.. நோ நோ.. மதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். அவருக்கும் நன்றி.

இன்னுமொன்று.. இந்த வாரம் முழுதும் சிறப்பாக நிகழ்ந்தேறிய இவ்விழா வரும் வாரமொன்றில் பிறிதொரு இடத்திலும் தொடர இருக்கிறது. அங்கும் உங்கள் மொய்களை இட அன்புடன் அழைக்கின்றோம் -

இங்ஙனம்
விழா உபயகாரர்..

சரி.. இந்தப் பூனை (இது புதுசு கண்ணா..) என்ன சொல்கிறது..


4 Comments:

Blogger கானா பிரபா said...

வணக்கம் சயந்தன்

முழுப்பதிவுகளுக்கும் தனியாகப் பின்னூட்டம் இடாவிட்டலும், எல்லாமே நட்சத்திரம் தான். புலம்பெயர்ந்த எம் எல்லோருடைய அடிமனதில் இருக்கும் சிந்தனைகள் ஒத்தவை என்பதற்கு நல்ல உதாரணங்களாக உங்கள் பதிவுகள் இருக்கின்றன.

நட்சத்திர வாரத்தில் அமைதி வேண்டி இட்ட இடுகை மதியின் பார்வை பட்டு ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் மீள் பதியப்பட்டது மூலம் வேற்றுலகத்தவர்க்கும் எம் நிலை கடத்தப்பட்டது இன்னும் சிறப்பு.

வாழ்த்துக்கள்

6:15 PM  
Blogger மலைநாடான் said...

சயந்தன்!

மிக நிறைவான பதிவுகளுடன், பெறுமதிமிக்க வாரமாக, உங்கள் நட்சத்திர வாரம் அமைந்திருந்தது. பாராட்டுக்கள். நன்றி

3:58 AM  
Anonymous Anonymous said...

ஒடிப்போன பூனை எங்கே?

5:53 AM  
Anonymous Anonymous said...

நட்சத்திர வாரம் இப்போ தான் படித்தேன்..வாழ்த்துக்கள்

5:54 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home