2.4.07

றீகல் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறீர்களா..?

சாரல் பதிவின் தலைப்பில் இருக்கின்ற படம், யாழ்ப்பாணத்தில் இருந்த சினிமாத் திரையரங்குகளில் ஒன்றான றீகல் தியேட்டரின் முன்தோற்றம்.(அதற்காக பின்தோற்றமெல்லாம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. முன்தோற்றம் மட்டும் தான்.) யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் முனியப்பர் கோவிலடிச் சூழலில் அமைந்திருந்த இத் திரையரங்கு, கோட்டைச் சமர்காலத்தின் அத்தனை வடுக்களையும் தாங்கி, இழந்தவை போக மிகுதியாக உள்ள ஒற்றை முன் சுவரோடு, ஏதோ இருந்திட்டு போகிறேன் என்பது போல காட்சியளிக்கிறது.

95 இன் ஒரு காலத்தில், ஒக்ரோபர் இடப்பெயர்வுக்கு சில காலமே முன்பாக, கோட்டையை அண்டிய பகுதிகளில் பதுங்கு குழிகள் வெட்டுவதற்காக, பொடிப்பயல்களாக இருந்த நாமும் போயிருந்தோம். போயிருந்தது மட்டும் தான், மற்றும் படி பராக்குத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். அதிலும் மதியம் புரியாணி தரப்படும் எனச் சொன்னதனால் மதியம் வரை காலங் கடத்த வேண்டிய புறச் சூழ்நிலை வேறு. (கிடைத்தது பாணும் பருப்பும் தான்:()

அப்போது தான் விரிவாக வீரசிங்கம் மண்டபம், றீகல் தியேட்டர், யாழ் நூல்நிலையம் என அச் சூழலில் அமைந்த பகுதிகளை சுற்ற முடிந்தது.

றீகல் தியேட்டரின் முன் சுவரில், 90 இல் (என நினைக்கிறேன்) ஓடிய இறுதித் திரைப்படத்தின் சுவரொட்டி ஒட்டப் பட்டிருந்தது. அது ஒரு ஆங்கிலப் படம். அது தவிர அது ஒரு வயது வந்தோருக்கான திரைப்படம் என்பது கூடுதல் செய்தி.

எடேய்.. இந்த தியேட்டரில இப்பிடிப் படமெல்லாம் போட்டிருக்கிறாங்களடா என நாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டோம். நம்மில் சிலருக்கு பெருமூச்சுக்களும் வந்தன.

பிற்காலங்களின் அறிதலில் இத் திரையரங்கில் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களே திரையிடப்பட்டன எனவும் அக்கால இளைஞர்கள் தூர இடங்களில் இருந்து கூட இரவுக் காட்சிகளுக்கு வந்து சென்றதாயும் கேள்விப் பட்டேன்.

யாராவது இருக்கிறீங்களா.. :))

(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் நூல் நிலையம் உட்பட பல திருத்தப்பட்டிருந்தன. என் தனிக் கருத்தின் படி 81 இல் சிங்கள மேலாதிக்கத்தால் கொளுத்தி எரிக்கப்பட்டு கரிய கட்டடமாகக் கிடந்த தெற்காசியாவின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் அவ்வாறே எரிந்த நிலையில் பேணப்பட பிறிதொரு இடத்தில் நூல் நிலையத்தை அமைத்திருக்கலாம்.)

11 Comments:

Blogger மலைநாடான் said...

//யாராவது இருக்கிறீங்களா.. :))//

இருக்கிறோம் தம்பி...:)))

//(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் நூல் நிலையம் உட்பட பல திருத்தப்பட்டிருந்தன. என் தனிக் கருத்தின் படி 81 இல் சிங்கள மேலாதிக்கத்தால் கொளுத்தி எரிக்கப்பட்டு கரிய கட்டடமாகக் கிடந்த தெற்காசியாவின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் அவ்வாறே எரிந்த நிலையில் பேணப்பட பிறிதொரு இடத்தில் நூல் நிலையத்தை அமைத்திருக்கலாம்.)//

வழிமொழிகின்றோம்.

11:03 AM  
Anonymous Anonymous said...

நானும்தான்.. தம்பியவை யாழ்ப்பாணத்தில ஆங்கிலப் படத்தையே வயது வந்தோருக்கான படம் எண்டுதான் சொல்லுறவை.

11:59 AM  
Blogger தமிழ்பித்தன் said...

//(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் நூல் நிலையம் உட்பட பல திருத்தப்பட்டிருந்தன. என் தனிக் கருத்தின் படி 81 இல் சிங்கள மேலாதிக்கத்தால் கொளுத்தி எரிக்கப்பட்டு கரிய கட்டடமாகக் கிடந்த தெற்காசியாவின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் அவ்வாறே எரிந்த நிலையில் பேணப்பட பிறிதொரு இடத்தில் நூல் நிலையத்தை அமைத்திருக்கலாம்.)//
ஆமாம் எல்லாம் சங்கியார் செய்த திருவிளையாடல் இப்பவும் ஞாபகம் இருக்கிறது திறப்பு விழாவை தடுக்க கோடியொடு நின்றது (சங்கரியார் நினைத்தார் துரையப்பாவைப் போல் தனக்கும் சிலை வைப்பார்கள் என் பாவம் கடைசியிலே ஆப்புத்தான்.......தமிழ் ஆப்பு வைத்தால் எழுந்து உட்காரவே முடியாது அப்படி வைப்பான்

12:08 PM  
Blogger தமிழ்பித்தன் said...

////தமிழர்கள் ஆப்பு வைத்தால் எழுந்து உட்காரவே முடியாது அப்படி வைப்பான்/// என்று வாசியுங்கோ

12:11 PM  
Blogger சின்னக்குட்டி said...

அந்த காலத்தில்அடல்ஸ் ஒன்லி படங்கள் என்று காட்டிய படத்தில் எப்பவாது வெட்டி கொத்தி வரும் அரை நிமிச காட்சியிலும் பார்க்க இப்போதைய தமிழ் படத்திலை கூட காட்டுறாங்கள்.தானே

அந்த தீயேட்டரில் நல்ல தரமான பிறமொழி படங்களும் ஓடியிருந்தது. வின்சரும் ரீகலும் சிலோன் தீயேட்டர்ஸ் வியோகஸ்தரின் படங்களை ஓடுறவர்கள். ஒரு கொப்பியை வைச்சு தமிழ் படமும் சில நேரம் ஒரே காலத்திலை இரண்டு தியேட்டரிலும் படம் ஓட்டுறவை. எப்படி என்றால் ஒன்றிலை அரைமணித்தியாலம் முன்னுக்கு தொடங்கும் ஓன்றிலை பின்னுக்கு தொடங்கும்

12:22 PM  
Anonymous Anonymous said...

ஓமோம் நல்லாப் பார்த்திருக்கிறோம்!!!
அப்ப எல்லா இங்கிலிஸ் படங்களையும் 'அடல்ஸ் ஒன்லி' எண்டுதான் போடுவாங்கள். வெளியில கட்டவுட் கட்டிற தட்டியில இந்தத்தொங்கலில் இருந்து அந்தத்தொங்கல் வரையும் கையில அகப்படுறதெல்லாம் எழுதுவாங்கள் " அடல்ஸ் ஒன்லி, 70 எம்.எம், ஸ்ரிரியோ, ஈஸ்மன் கலர்" அது எப்பவும் ஸ்ராண்டட் தான். படத்தின்ர பெயர் தான் மாறும்.
சொல்லப்போனால் இப்போதுள்ள (?!) றீகல் பங்காளர் சண்டையில் அடித்துடைக்கப்பட்ட பின் கட்டப்பட்டது. முன்னர் அது தகரக்கொட்டகை. ஆனால் முன்னர் இருந்த புரொஜெக்சன், சவுண்ட் மிகவும் நல்லது. நவீன அமைப்புகள் புதிய றீகலில் வந்தாலும் அந்த அமைப்புக்கு அவை சரியாகப் பொருந்தவில்லை என நினைக்கிறேன்.
பழைய றீகலில்தான் 'தி ஓமன்' என்ற திகில் படம் பார்த்தேன். இன்னும் மறக்க முடியாது. புதிய றீகலில் தமிழ் படங்களும் காட்டினார்கள். முரட்டுக்காளை அல்லது சட்டம் ஒரு இருட்டறை ஓடியது. எம்.ஜி.ஆரின் பழையபடம் 'எங்க வீட்டுப் பிள்ளை' அங்குதான் பார்க்கக் கிடைத்தது.

12:47 PM  
Blogger அற்புதன் said...

பழைய ரீகளில் நான் பாத்த படம்,'Dogs of war'
அந்த நாளில எப்படி ஒரு ஆமிக் காம்பை அதிரடியா அடிக்கிறது எண்டு காட்டுறாங்கள் எண்டு சொல்லி ஒரு அண்ணா கூட்டிக்கொண்டு போய்க் காட்டினவர். உந்த அதிரடித் தாக்குதலுக்காகவே இந்தப் படம் யாழில் சக்கை போடு போட்டது.அந்தக் காலத்தில் ஒரு துவைக்கைப் பறிக்கிறதே பெரிய விசயம் என்பதை நினைவில் கொள்க.

2:24 PM  
Anonymous Anonymous said...

--எடேய்.. இந்த தியேட்டரில இப்பிடிப் படமெல்லாம் போட்டிருக்கிறாங்களடா என நாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டோம். நம்மில் சிலருக்கு பெருமூச்சுக்களும் வந்தன.--

ஏன் ராசா 95 க்குப் பிறகு யாழ்ப்பாணத்தில இருக்க வில்லையா. இருந்திருந்தால் பெருமூச்சுக்களுக்கு விடை கிடைத்திருக்கும்.

9:34 PM  
Blogger சயந்தன் said...

அட.. ஆங்கிலப் படத்தைத்தான் வயது வந்தோருக்கான படம் எண்டு யாழ்ப்பாணத்தில அந்தக் காலம் சொல்லுறதென்பது புதுச் செய்தி. கடைசியா பின்னூட்டம் போட்டவரும்.. ஒரு செய்தியை சொல்லிப் போயிருக்கிறார்.

1:50 PM  
Anonymous Anonymous said...

ராணி தியேட்டரில் killing fields படம் பார்த்தஞாபக்ம் இன்னும் பசுமையாக உள்ளது.That was as Oscar winning movie ,won several oscar awards including best movie best supporting actor ,recently I had a chance to watch the movie again ,it brought back all good memories of good old days.அந்தப் படத்தைப் பார்க்கும் பொழுதே யாழ்ப்பாணம் இப்படி மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது அது உண்மையாகிவிட்டது.அந்தப் படம் இன்றய யாழ் நிலைக்கு மிகவும் பொருந்தும்.

5:16 PM  
Blogger த.அகிலன் said...

ஆசியாவிலேயே சிறந்த ஒலியமைப்புடன் கூடிய திரை அரங்காக டி.ரி.எச் எல்லாம் வரமுதலே அந்தக்காலத்திலேயே இருந்ததாம் இது எண்டு எனக்கொருவர் சொன்னார்(வயசு போனவர்தான்)அதுவும் உண்மையொ எண்டு இங்க வாறவை சொன்னால் நல்லா இருக்கும்....

12:44 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home