13.1.06

நான் நாடகம் போட்ட கதை

UTS பல்கலைக்கழக தமிழ்ச்சங்க நிகழ்வு என்றாலும் கிட்டத்தட்ட சிட்னியின் அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பங்களிப்புடனும் நடந்த நிகழ்வு அது!

கதம்ப மாலை 2006!

தமிழர் புனர் வாழ்வுக் கழகம் தாயகத்தில் முன்னெடுக்கின்ற மருத்துவப் பணியொன்றிற்கான நிதி திரட்டலுக்காக கடந்த சனிக்கிழமை சிட்னியில் அது நடந்து முடிந்தது.

வருடாவருடம் நடைபெறும் இந் நிகழ்வில் கடந்த வருடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கையளித்த நிதித் தொகை 8000 ஒஸ்ரேலிய டொலர்கள். இம்முறையும் இதேயளவு தொகை கையளிக்கப்பட இருக்கிறது.

பெருமையாக இருக்கிறது!

எழுதுவதையும் பேசுவதையும் விட எழுதும், பேசும் நோக்கத்திற்காக செயலாற்றுதல் சந்தோசமாக இருக்கிறது.

18 இலிருந்து 24 வயசுக்குள் உட்பட்ட இளைஞர்களால் ஒரு நிகழ்வுக்கு 1000 பேரைக் கூட்டுவதென்பது ஆச்சரியப் பட வைக்கிறது.

எங்கெங்கோ எல்லாம் இளைஞர்கள் குழுப் பிரித்து சண்டை பிடிக்கிறார்களாம் என செய்தி வரும் போது இச் செயலாற்றுகை குறித்து பெருமை வருகிறது.

நிகழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டவை! அவர்களால் இயக்கப்பட்டவை! அவர்களால் சிந்திக்கப்பட்டவை!

இந்தியாவிலிருந்து எவரேனும் வருகை தராத நிகழ்வொன்றிற்கு 100 பேரை எதிர்பார்ப்பதே அதிகம் என்றிருந்த யதார்த்த நிலையில் 1000 பேர் வந்தார்கள் என்பது பரவசப் படுத்துகின்ற ஒரு நிலை தான்!

கிட்டத்தட்ட 40 நாட்கள்!

பொழுது மிக மகிழ்வாக, உற்சாகமாக சென்றது!

நிகழ்வில் ஒரு நாடகத்தினை எழுதி இயக்கும் பொறுப்பு என்னிடம்!

எழுதி முடிப்பதொன்றும் பெரிய வேலை இல்லை. ஆனால் அதனை அனைவருக்கும் பழக்கி முடிக்கின்ற வேலைதான் பெரிய பொறுப்பாக முன் நின்றது.

சரி! நாடகம் என்றால் கதை வேணுமே! முடிவாயிற்று! நாடகத்தின் முக்கிய இழை காதல் தான்!

வெளிநாடுகளில் காதலின் எல்லாப் பக்கங்கங்களையும் காட்டலாம் என முடிவு செய்தாயிற்று.. இங்கே காதல் (அல்லது அதன் பெயரில் வேறேதோ ஒன்று) ஏற்படும் போதும், முறியும் போதும் காட்டப்படுகின்ற அவசரம், சரியான புரிந்துணர்வின்மை, ஒரு முதிர்ந்த நிலையில் நின்று அதனை அணுகாமல் சிறுபிள்ளைத்தனமாய் அணுகுதல், காதல் முறிவுகளுக்கான சிரிப்பை வரவழைக்கும் காரணங்கள் இவை தான் நாடகம் முழுவதும் இழையோடின!

கூடவே வெளிநாடுகளில் வந்தும் விடுப்புக் கதைக்கும் ஒரு அம்மா! கழகங்கள் தொடங்குவதும் பின்னர் கருத்து மோதல்ப் படுவதும் பின்னர் புதுக்கழகம் தொடக்குவதுமாயிருக்கின்ற ஒரு அப்பா!

காதலர்களாக நடித்தவர்கள் உண்மையிலேயே கலக்கினார்கள்! காதலன் என்னுடைய கத்தரித்தாட்டத்து மத்தியிலே என்ற பாடலுக்கு இசையமைத்த ராஜ! காதலியாக நடித்தவர் ---------------(Censored)---------------- அவர் நாடகத்தில் பேசுகின்ற வசனங்கள் இவை!

''ஓம்.. சொல்வாய் சொல்வாய்! நீ மட்டும் இன்னொருத்தியைக் காதலிச்சு கல்யாணம் கட்டி செற்றிலாவாய்! நான் மட்டும் மனசாலை நினைச்சவனை கல்யாணம் கட்டாவிட்டா எனக்கு வாழ்க்கையே இல்லையெண்டு விட்டு இருக்கவேணும் எண்டு நினைக்கிறியாக்கும். ஒரு பொம்பிளை முதன் முதலாய் தான் மனசாலை நினைச்சவனைத்தான் கல்யாணம் கட்ட வேணும் எண்டிருந்தால் இங்கை அரைவாசிப் பொம்பிளையள் தங்கடை புருசன்மாரை கல்யாணம் கட்டியிருக்க மாட்டினம்"

அம்மா, அப்பா இருவருமே நன்றாக செய்தார்கள்! அதிலும் அம்மாவாக நடித்த கல்யாணி பழகும் நாட்களில் எல்லாம் அநியாயத்துக்கு வெட்கப்படுவார். அப்போதெல்லாம் 'கல்யாணம் முடிந்து 20 வருஷமாயிற்று! இன்னும் என்ன ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கிறது என்று சக இளைஞ இளைஞிகள் கேலி செய்வார்கள். ஆனால் மேடை ஏறியதும் அசல் அம்மாவாகி விட்டார்.

நாடகம் நகைச்சுவைதான்! ஆனால் பார்த்திருந்த பல நிஜ அப்பா அம்மாக்கள் சில உண்மைகளை விளங்கி கொண்டிருப்பார்கள். காதலன் காதலியிடம் இன்று சினிமா போகலாமா என கேட்க அவள் தன் அப்பாக்கு போன் பண்ணி இப்படித்தான் சொல்வாள்!

''அப்பா இண்டைக்கு UNI ல ஒரு assignment இருக்கு. இண்டைக்கு தான் due date! அதனாலை வர கொஞ்சம் லேற் ஆகும்.. ''

ஆரம்பத்தில் இது மேடையேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அப்படி ஏறினாலும் ஊரே கைகொட்டி சிரிக்கும் என்று தான் நினைத்திருந்தேன். ஏனெனில் அவ்வளவு சொதப்பல்கள் நிறைந்திருந்தது. அதிலும் எந்த உலகம் போனாலும் திருந்தாத தமிழனின் நேரந்தவறுதல் எரிச்சலையும் சினத்தையும் மூட்டியது என்னவோ உண்மைதான்.

இருப்பினும் இந்நிகழ்வில் திரட்டப்பட்ட பணம் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக தாயகத்தில் ஐந்து பேருக்கு இதய மாற்றுச் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப் படப் போகின்றது என்பதில் மகிழ்ச்சி தான்.

இந்நிகழ்வின் தயார்ப்படுத்தலின் போது பதிவு செய்யப்பட்ட ஒளிப்பட துண்டுகள், ஒலிப்பதிவுகள், படங்கள், தவிர இந்நிகழ்வில் நமது நாடகத்திற்காகவும் இன்னும் ஒரு நடன நிகழ்ச்சிக்காகவும் நான் செய்திருந்த வீடியோ முன்னோட்டம் எல்லாவற்றினையும் விரைவில் பதிவில் இடுகிறேன்.

14 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: MANEETHAN

"இருப்பினும் இந்நிகழ்வில் திரட்டப்பட்ட பணம் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக தாயகத்தில் ஐந்து பேருக்கு இதய மாற்றுச் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப் படப் போகின்றது "
GOOD JOB KEEP IT UP VASANTHAN
NAANREEKAL

6.13 14.1.2006

4:22 AM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

//GOOD JOB KEEP IT UP VASANTHAN//

ஹி ஹி.. எல்லாம் ஓய்ஞ்சு போய் இருக்க நீர் யாரப்பு புதுசா கிளம்புறீர்? நான் சயந்தனாக்கும்! கும்! கும்! கும்!

4:31 AM  
Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

ஐயா மனீதன், (இதென்ன புதுப்பேரா கிடக்கு.)
நீர் புது ஆளெண்டு நான் நம்பேல. ஆதியிலயிருந்து வாசிச்சுக்கொண்டுவாற ஒருத்தரெண்டு விளங்குது. இப்ப வந்த ஒருத்தருக்கும் உந்தப்பிரச்சின வராது.
ஆக, நீங்கள் திருந்திறதா இல்லை.
சயந்தன், உது வேலைக்காவாது. உதுகள இப்பிடியே விடும். என்ன? இடைக்கிடை முசுப்பாத்தியாப் போகும் பொழுது.
-----------------------------------------------
முதலில உம்மட வேலைக்குப் பாராட்டுக்கள். தொடர்ந்து சிறப்பாகச் செய்யவும்.
கெதியா உம்மட கோப்புக்களைத் தரவேற்றி விடும்.

6:47 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Naan

வாழ்த்துக்கள்

2.30 15.1.2006

7:31 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ShiyamSunthar

Good Job

10.25 15.1.2006

3:25 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Anaami

undefined

12.1 15.1.2006

5:06 PM  
Anonymous Anonymous said...

Hi hello how r u

4:09 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Seelan

சயந்தன்! உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்க!

8.28 16.1.2006

1:31 PM  
Anonymous Anonymous said...

8000 கொடுத்தால் மிச்சப் பணத்தினை என்ன செய்ய போகிறீர்கள்? உங்களுக்குள்ளேயே பிரித்து எடுத்து கொள்வீர்களா? தமிழர் புனர் வாழ்வு கழகம் என்ற பெயரில் புலிகளுக்கு தானே கொடுத்தீர்கள்? நீங்களும் புலிகளும் பிழைக்க தெரிந்தவர்கள்! சபாஷ்

6:58 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ௧ல்யாணி

; உங்களுக்கு எனது பாராட்டுக்களும் உரித்தாகட்டும் சயந்தன்
மற்றது உங்கட தொடர்கதையின் மிகுதியை எப்ப போடப் போற{ங்க?13.17 16.1.2006

7:12 PM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

ஓ.. கல்யாணி நீங்க புதுசா.. நான் உப்பிடித்தான் நிறையத் தொடர்கதை எழுதியிருக்கிறன். ஒண்டும் முடிச்சதில்லை. பாத்தியளே பழைய ஆக்கள் அதைப் பற்றிக் கேக்க மாட்டினம். ஏனெண்டால் அவையளுக்கு நான் தொடர்கதை எழுதுற லட்சணம் தெரியும்

11:07 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: கல்யாணி

நான் uts கல்யாணி தான்
அதுதான் ௭னக்கு அந்த தொடர்கதையை பார்க்க அவ்வளவு ஆவல்

10.42 17.1.2006

4:33 PM  
Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

அடப்பாவி,
உங்கபோய் கூட்டாளிமாரையும் கூட்டியந்தாச்சோ?

9:46 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

//எழுதுவதையும் பேசுவதையும் விட எழுதும், பேசும் நோக்கத்திற்காக செயலாற்றுதல் சந்தோசமாக இருக்கிறது.//

பாராட்டத்தக்க முயற்சி. நன்றிகள்.

23.16 17.1.2006

4:27 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home