தமிழில கதைக்கிறது எப்பிடி
கொழும்பில தனியார் வானொலிகள் வந்த போது அவையெல்லாம் எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய கனவாக இருந்தது. எனக்கு தெரிஞ்ச என்ரை நண்பர் ஒருவர் றேடியோவில சேருவதற்காக மட்டக்களப்பில இருந்து கொழும்பு வந்து தங்கியிருந்ததாக நான் நக்கல் அடிப்பன். நல்ல வேளை அவருக்கு அது கை கூடாத படியால் இன்று பல துறைகளில் பிரகாசிக்கின்றார்.
நான் கூட கொழும்பில் ஏதாவது வானொலிகளுக்கு ஒருநாளாவது போய் என்ரை குரலை காட்ட முடியுமா என்று யோசித்திருக்கிறேன். இப்படியெல்லாம் நான் நினைச்சதுக்கு அறிவிப்பாளர்களை எங்காவது கண்டால் ஓடிவந்து ஓட்டோகிராப் வாங்கும் பெண்களும் நிகழ்ச்சிகளில் ஆண் அறிவிப்பாளர்களோடு வழிந்து வழிந்து தொலைபேசியூடாக பேசும் பெண்களும் காரணமாயிருக்கலாம்.
ஆனால் இப்ப, வலு இலகுவாக வானொலிகளுக்குள் நுழைய முடிகிறது.
'மச்சான்.. இண்டைக்கு சமையல் குறிப்பு சொல்லுறவள் வரமாட்டாள் எண்டு sms பண்ணியிருக்கிறாள் இண்டைக்கு சமையல் குறிப்பு இல்லை' என்றால், 'கட்டாயம் பொம்பிளை தான் சமையல் குறிப்பு சொல்ல வேணுமோ.. இஞ்சை விடு நான் செய்யிறன்' என்று கத்தரிக்காய் பச்சடி செய்வது எப்படி என செய்ய முடிகிறது. யாரையோ மனதில் வைத்து எப்போதோ எழுதிய கவிதை என அழைக்கப்படுகின்றவற்றை..' ஒரு மூண்டு நிமிசம் தாங்கடாப்பா.. இதை வாசிச்சுப் போட்டு விடுறன்' என சொல்லி அதை காற்றலைகளில் பரவ வட முடிகிறது.
'டேய் எல்லாம் முடிஞ்சுது. ஆனால் ரைம் இருக்குது.. என்ன செய்யலாம்' எண்டு கேட்டால்.. 'ஒரு பாட்டைப் போடு மச்சான்.. மிச்சத்துக்கு ஏதாவது கதைப்பம்' எண்டு முடிவெடுத்து 'என்ன கதைக்கலாம்' எண்டால் 'அதுதான்ரா.. கை வசம் நிறைய இருக்கே.. புலத்தில் தமிழ், புலத்தில் கலாசாரம் இப்பிடி ஏதாவதை கதைப்பம்' என அலட்சியமாய்ச் சொல்ல முடிகிறது.
ஆனால்.. யாரும் வந்து ஓட்டோகிராப் கேட்பதில்லை.. ஆகக் குறைந்தது.. Is that you? என்கிறார்கள்.. போனால் போகிறதென.. It was gud என்கிறார்கள்.. அவ்வளவும் தான்..
இத்தகைய ஒரு பின்புலத்தில தான்!
மெல்பேணில அவரை என்ரை நெருங்கிய நண்பர் எண்டு சொல்லலாம். என்னை விட கொஞ்சம் (கொஞ்சம் தான்) வயசு குறைஞ்சவர் எண்டாலும் ரண்டு பேருக்கும் நல்லா இணங்கிப்போகும். இதுக்குப் பிறகும் அவரை வடிவா அறிமுகம் செய்யிறதெண்டால் நிறைய உண்மைகளை போட்டு உடைக்க வேண்டியிருக்கும் எண்டாலும் என்ரை வயிறை அடிக்கடி புகைய வைக்கிறதில அவருக்கு நிறைய பங்குண்டு.
அவர் இஞ்சை சில தமிழ்ப் போட்டிகள் நாடகங்கள் எண்டு அடுத்தடுத்து பின்னித்தள்ள மெல்பேணில உள்ள ஒரு தமிழ் வானொலி அவரை பேட்டி காண கூப்பிட்டது. இங்கை இருக்கிற தமிழ் பெடி பெட்டயளுக்கு தமிழின்ர அருமை பெருமைகளை சொல்லுறதுக்காக அவரைக் கூப்பிட்டிருந்தவையாம். (அப்பிடியொரு றேடியோ இருக்கிறதெண்டதே அவை target பண்ணுற பெடி பெட்டயளுக்கு தெரியுமோ எண்டுறது எனக்குச் சந்தேகம்)
றேடியோவில பேட்டி தொடங்கி போய்க்கொண்டிருந்தது. அங்கை கேக்கிற கேள்வியளுக்கு ஆள் வடிவா நிதானமாத்தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர். சும்மா றேடியோவில மைக் கிடைச்சதெண்டுறதுக்காக கத்தரிக்காய் கறி எப்பிடி வைக்கிறது எப்பிடியெண்டு நான் புறோக்கிறாம் செய்தது போலில்லாமல் ஆள் ஏதோ பிரியோசனமா கதைச்சுக்கொண்டிருந்தவர்.
அப்ப அவரை ஒரு கேள்வி கேட்டினம்.. நீர் எப்பிடி இப்பிடி அழகா தமிழ் கதைக்கிறீர் எண்டு.. எனக்கு அந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே.. சும்மா சுரீர் எண்டது. அதுக்கு அவர் என்ன பதில் சொல்லுறார் எண்டு கவனமா கேட்டுக்கொண்டிருந்தன். அவர் சொல்லுறார்.. ' நான் வீட்டில பெற்றாரோடு தமிழில தான் கதைக்கிறனான்.. அதனாலை என்னாலை வடிவா தமிழில கதைக்க முடியுது..'
எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்லை.. சிரிச்சு சிரிச்சு களைச்சுப்போயிட்டன்.. ஏனெண்டு கேக்கிறியளோ..?
பின்னையென்ன.. இலங்கையில இருந்து ஒஸ்ரேலியா வந்து ஒரு வருடம் கூட ஆகாத ஒரு பதினெட்டு தாண்டிய தமிழ்ப் பெடியனிட்டை நீர் எப்பிடி உப்பிடி வடிவா தமிழில கதைக்கிறீர் எண்டு கேக்கிறதும் அதுக்கு அவர்.. நான் வீட்டில தமிழில தான் கதைக்கிறனான் எண்டும் பதில் சொன்னால் எனக்கு எப்பிடியிருக்கும்..
ஆளுக்கு ஒரு போனைப் போட்டன். ' ஏதோ இலங்கை முழுவதும் வெள்ளைக்காரர் இருக்கிற மாதிரியும் நீர் அவைக்கு மத்தியில வீட்டில தமிழில கதைக்கிற மாதிரியும் சொல்லுறீர் ' எண்டு சொல்ல 'சரி சரி கண்டுகொள்ளாதைங்க..' எண்டு சமாளிச்சார்.
இன்னொரு விசயமும் சொல்ல வேணும்.. இங்கை இருக்கிற பெரும்பாலான தமிழ் இளம் பெடியள் போல் அல்லாமல் அவர் என்னோடு தமிழில் தான் கதைக்கிறவர். எப்பவாவது ஆங்கிலத்தில வெளிக்கிட்டார் எண்டால்.. நான் விளங்கிக் கொள்ளுவன்..
'அம்மானைச் சுத்தி கவனத்துக்குரிய ஆக்கள் நிக்கினம்'

5 Comments:
எழுதிக்கொள்வது: என்னும் வைக்கப்படவில்லை
undefined
14.33 28.10.2005
எழுதிக்கொள்வது: என்னும் வைக்கப்படவில்லை
எழுதிக்கொள்வது: என்னும் வைக்கப்படவில்லை
"எண்டாலும் என்ரை வயிறை அடிக்கடி புகைய வைக்கிறதில அவருக்கு நிறைய பங்குண்டு."
ஏன் அந்த கவனத்துக்குரிய ஆக்களாலயோ?
14.33 28.10.2005
14.45 28.10.2005
:)
நடத்துங்க..
எழுதிக்கொள்வது: lollu
பொடியல்ட சைகலாஜி நல்லா தெரியுது உங்களுக்கு!
0.56 7.2.2006
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home