சைய சையா நய்.. தைய தையா
எல்லாமாச் சேத்து ஒரு 15 000 சனம் வந்திருக்கும். அதில ஒரு முக்கால்ப் பங்கு இந்திய அதுவும் ஹிந்தி மொழி பேசும் சகோதரர்களாக இருந்திருப்பார்கள். நாங்கள் ஒரு ஏழெட்டு தமிழ்ப்பெடியள்.
வழமை போலத்தான் கொஞ்சம் லேற்றாகப் போனம். உள்ளே நுழைஞ்ச போது ஏதோ ஒரு ஹிந்திப்பாட்டை ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். நீண்ட முடி வளர்த்திருந்த அவர் சரியாகச் சொல்லப்போனால் பேயோட்டுபவர் மாதிரி பாடிக்கொண்டிருக்க 'ஐயோ.. பயமாக்கிடக்கு' எண்டு முதல் அலறல் எங்களிட்டை இருந்து வெளிப்பட்டது.
இருக்கைகளில் 3D கண்ணாடிகள் வைக்கப்பட்டிருந்தன. இருந்தவுடனையே எடுத்துப் போட்டுப்பாத்தன். எல்லாம் அப்பிடியே தான் இருந்திச்சு. 'கழட்டுடா. எப்ப போடுறது எண்டு சொல்லவாங்கள் எண்டான் எனக்கு பக்கத்தில இருந்தவன்.
இரண்டு பெரிய திரைகள் அரங்கத்தின் அருகருகாக இருக்க அதில நிகழ்வுகள் போய்க்கொண்டிருந்தன. ரஹ்மான் மேடையின்ரை நடுவில கொஞ்சம் பின்னுக்காக நின்றுகொண்டு keyboard வாசிச்சுக்கொண்டிருந்தார். மேடையின் ஒரு புறத்தில சிவமணி தாரை தப்பட்டையளோடை நிண்டு கொண்டிருந்தார்.
முதலில் போனதெல்லாம் பரிச்சயமில்லாத ஹிந்திப்பாடல்கள் எண்ட படியாலை அமைதியாத்தான் இருந்தம்.
ஒரு கொஞ்ச நேரத்தில சங்கர் மகாதேவன் வந்தார். 'தமிழ்ப்பாட்டு ஒண்ணு பாடலாமா' எண்டதும் தான் தாமதம், ஆங்காங்கே இருந்து ஹே என்ற கத்தல்கள். (தமிழர்கள் தங்கள் சிறுபான்மைப் பலத்தை காட்டிச்சினம்.)
உப்பக்கருவாடு பாட்டைத்தான் சங்கர் பாடினவர்.
அந்தப்பாட்டு முடிய திரும்பவும் ஹிந்திக்கு போயிட்டினம். எண்டாலும் எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ப்பாடல்களின் மெட்டுக்கள் தான். அதே நேரம் ஹிந்திப்பாட்டுக்களின் இடையில அவ்வப்போது தமிழ் வரிகளையும் சேத்திச்சினம். அந்த நேரமெல்லாம் நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருந்தம்.
எண்டாலும் ஹிந்தியில ஆரம்பிச்ச பாட்டுக்கள் ஒரு கட்டத்தில அடுத்தடுத்து தமிழுக்கு மாறிச்சுது. சிலர் we want hindi எண்டு கத்துற அளவுக்கு நிலைமை இருந்திச்சு. எங்களுக்கு முன்னாலை இருந்த ஒருவர் சைய சையா எண்டு கத்தினார்.
பின்னாலை இருந்த நாங்கள் சைய சையா நய்.. தைய தையா எண்டு கத்த அவர் ஒரு நட்புடன் எங்களைப்பாத்து சிரிச்சார்.
அவ்வப்போது இப்பொழுது உங்கள் 3D கண்ணாடிகளை அணியுங்கள் என்றும் இப்பொழுது கழற்றுங்கள் என்றும் அறிவிப்பு திரையில் வந்தது.
3Dயில் திரையில் அவ்வப்போது சில காட்சிகள் போய்க்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் அவற்றைப்பார்ப்பதில் இருந்த ஆர்வம் பின்னர் இல்லாமல் போய்விட்டது.
ஒரு கட்டத்தில எங்களுக்கு பின்வரிசையில் இருந்த ஹிந்திச் சகோதரிகள் நாலைந்து பேர் ஆடத்துடங்கி விட்டார்கள். எனக்குப் பக்கத்தில இருந்த செந்தூரன் டேய்.. புரோக்றாமை பாரடா எண்டு என்ரை தலையை அடிக்கடி முன்னாலை திருப்பிக் கொண்டிருந்தான்.
நிகழ்வின் நடுவில் சிவமணியின் தாளவாத்திய நிகழ்வு நடந்தது. அந்த நேரம் ஒரு வெள்ளைக்கார பெண்மணியும் சேர்ந்து ஏதோ ஆங்கிலத்தில பாடினவ. அவ பாடுற நேரம் தவித்து மற்ற நேரங்களில் சிவமணியின் கைகள் புரியும் நர்த்தனத்தை வாய் பாத்தக்கொண்டிருந்தா.
அதுக்கு பிறகும் ரஹ்மான் உங்கள் எல்லாருக்கு bombay dreams வேணுமா எண்டு கேட்டார். முதல் பாடின வெள்ளைக்கார பெண்மணி தான் வந்து பாடினா. அது தாளத்தில வாற ஒரு பாட்டுமாதிரி இருந்தது.
அ.ஆ படத்தில இருந்து ரஹ்மான் ஒரு பாட்டுப் பாடினார்.
ஆறரைக்கோடி பேர்களில் ஒருவன்.. அடியேன் தமிழன்.. எண்ட பாட்டு..
ஒவ்வொரு முறையும் அடியேன் தமிழன் எண்டும் போதும்.. கலக்கிட்டமில்ல!!
அதுக்கடுத்ததா வந்தது மரங்கொத்தியே பாட்டு. தமிழென்ன ஹிந்தியென்ன? அந்த ஹிந்திச் சகோதரிகள் ஆடிக் கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில எங்களுக்கு இருப்புக் கொள்ளேல்லை. எழும்பிட்டமில்ல!!
இறுதிப்பாடல் சரிகமே! மொத்த அரங்கமும் எழுந்து நின்றாடியது.
கடைசியாக வந்தே மாதரம்! அத்துடன் நிறைவுற்றது நிகழ்வு. வீட்டுக்கு வந்திட்டமில்ல!!

11 Comments:
1979ஆம் வருஷம் ரீ.எம்.சௌந்தர்ராஜன் கொழும்பு சுகதாச விளையாட்டு மைதான அரங்கில் பாடிக் கொண்டிருந்தார்ääஅவரது பாடல்களைத் தொகுத்து வழுங்கியது கே.எஸ்.ராஜா.கேட்கவா வேண்டும்!நாங்களும் இப்படிதாம் ஆடினோம் பாடினோம்.
நிகழ்ச்சி முடிவடையும்போது சனங்கள் எழுந்து நடக்கும்போது ஒர பாட்டுப் பாடினார் சௌந்தர்ராஜன்ääபெண்கள் அப்படியே ஜ்த்தம்பித்து நின்றார்கள்.அப்பாடல்: ஏரிக்கரையின்முது போறவளே பெண் மயிலே நில்லும் கொஞ்சம் நானும் வாறன் கூட்டிச் செல்லுவாய் கிளியே...
இளவயதில் ஆடாத ஆட்டம் வீண்.அனைத்தும் ஆடி அடங்கும் வயது இள வயது.அற்புதமாய் அநுபவியுங்கள்.இளமைக்கெதுவும் வேலியில்லை.
இங்கேயிருந்து ஏதோ புகையிற வாசனை இன்னும் உங்க மூக்குக்கு வந்து சேரலையா?
மர மூக்கப்பா!
துளசி இன்னமும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உடனடியாக ஒரு பிளேனைப் பிடிச்சு சிட்னிக்கு வந்திடுங்க!
வரும் சனி அங்கை நடக்க இருக்கிறது. இல்லெயண்டால் ஷ்ரேயாவும் இதைப்பற்றி எழுத அப்புறம் இன்னும் ஒருமுறை நியூசில இருந்து ஏதாவது புகையிற வாசனை வரும்!
இப்பவாவது புகைஞ்ச மணம். நானும் எழுதினா தீய்ஞ்ச மணந்தான்.
//உடனடியாக ஒரு பிளேனைப் பிடிச்சு சிட்னிக்கு வந்திடுங்க//
அதுதானே துளசி, வாங்களேன் இங்க! ஒரு மாநாடும் நடந்தினமாதிரி இருக்கும். ஏஆர் அதுக்குத்தான் வந்து சிறப்பிச்சவர் என்டும் சொல்லலாம்!
நான் நினைச்சன் முழுநேரமும் முப்பரிமாணக்கண்ணாடி போடோணும் என்டு. ஒலி/ஒளிப்பதிவுக் கருவிகளுக்குச் சோதிச்சவங்களா?
68 டொலர் நுழைவுச் சீட்டுக்கு பிரியோசனமா?(இல்லையெண்டு சொன்னிங்களெண்டாப்போல போகாம விடப்போறல்ல..சும்மா கேட்கோணுமே என்டதுக்காக!!ஹிஹி)
//68 டொலர் நுழைவுச் சீட்டுக்கு பிரியோசனமா?//
//ஒரு கட்டத்தில எங்களுக்கு பின்வரிசையில் இருந்த ஹிந்திச் சகோதரிகள் நாலைந்து பேர் ஆடத்துடங்கி விட்டார்கள். எனக்குப் பக்கத்தில இருந்த செந்தூரன் டேய்.. புரோக்றாமை பாரடா எண்டு என்ரை தலையை அடிக்கடி முன்னாலை திருப்பிக் கொண்டிருந்தான்.
//
ஷ்ரேயா சயந்தனுக்கு பிரயோசனமாய் இருந்திருக்கும்.:)
//நான் நினைச்சன் முழுநேரமும் முப்பரிமாணக்கண்ணாடி போடோணும் என்டு. //
ஷ்ரேயா நீங்கள் விரும்பினால் முழுநேரமும் போட்டிருக்கலாம். பிரச்சனையில்லை.
முப்பரிமாணத்திற்கும் நடந்த நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை. அது திரையில் போய்க்கொண்டிருந்த சில முப்பரிமாணக் காட்சிகளுக்கு மட்டும்..
//எனக்குப் பக்கத்தில இருந்த செந்தூரன் டேய்.. புரோக்றாமை பாரடா எண்டு என்ரை தலையை அடிக்கடி முன்னாலை திருப்பிக் கொண்டிருந்தான்.
//
:0
எழுதிக்கொள்வது: Arunan
இசை நிகழச்சியில நீர் என்ன செய்தனீர் எண்டதை தனிப்பதிவாக எழுதலாம்.ஆனா ரகுமான் கேட்டுக்கொண்துக்கிணங்கக அந்த முயற்சியை கைவிட்டுள்ளேன்.
ஆனா சயந்தன நாங்கள் பரவாயில்லை.கொஞ்சப்பேர் மெல்பேர்ணில இருந்துகொண்டு சிட்னியில போய் ரகுமானப்பாக்கப்போயினம் தெரியுமே.
கண்டுபிடிச்சிட்டோம்ல...!
20.8 12.9.2005
எழுதிக்கொள்வது: Naan thaan
அவங்கள் வந்து சுரண்டுறாங்கள்! நீ வாரிக்குடு அவங்களுக்கு! திருத்த முடியாதடா உங்களை
22.18 12.9.2005
எழுதிக்கொள்வது: Chenthooran
நாங்கள் $70 குடுதது அஙக வார பெண்களையும் பார்கதான்.அஙக் போனதிலிருந்து நான் ஒரு முடிவு எடுதுடேன். நான் கலியணம் கட்டினால் ஒரு இந்திய பெண்னை தான் கட்டுவன்,சயந்தனும் எல்லாதயும் விட்டுடு என்னோட சேர்ந்திடுவார் போல இருக்கு
22.14 12.9.2005
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home