17.7.05

தொடர் தாக்குதல்கள்: இலங்கையில் - 1

நானும் அனந்தனும் சேயோனும் கொழும்பில் தாட்சாயினி வீட்டுக்கு போயிருந்தோம். சேயோன் கனடாவிலிருந்து வந்திருந்தான். படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

அகண்ட தமிழ்த்தனிநாடு எண்டுறது போல அவன்ரை நெற்றி மேலேறி தலையிலும் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து இருந்திச்சு. பரம்பரை வழுக்கையெண்டும் தான் அதைப்பற்றி கவலைப்பட போறதில்லை எண்டும் சொன்னான்.

தாட்சாயினி வீட்டை போய் இருக்கிறம். தாட்சாயினியின்ரை அம்மா அதில நான் ஒருத்தன் இருக்கிறதைப் பற்றி சட்டை செய்யாமல் அனந்தனைப்பாத்து அப்ப எப்பிடி அவுஸ்ரேலியா பிடிச்சிருக்கோ எண்டுறா.

இது எனக்கு முதலாவது அற்றாக்.

அனந்தன் அது நானில்லைங்கோ அது அவர் என்று என்னைக்காட்டி நெளியுறான்.

சேயோன் சிரிசிரியெண்டு சிரிக்கிறான். எட நாசம் கட்டினது. என்ரை மூஞ்சையைப்பாத்தா வெளிநாட்டில இருந்து வந்தவன் மாதிரி தெரியேல்லையாம். நான் என்ன செய்யிறது.

என்ரை கையில டிஜிற்றல் வீடியோ கமெராவும் இல்லை. அந்த முழங்காலுக்கு கீழே போடுற காற்சட்டையும் போடேல்லை. அப்ப நான் வெளிநாடு எண்டு கண்டு பிடிக்கிறது அவவுக்கு கஸ்ரமாத்தானே இருந்திருக்கும்.

எண்டாலும் என்ரை முகம் கொழு கொழு மொழு மொழு எண்டு இல்லையாம். வெளிநாடுகளில இருந்து வாறவை அப்பிடித்தானாம் இருக்கிறவை.

நான் என்னத்தை செய்ய? என்ரை முக விருத்தம் அப்பிடி!

இப்ப நான் சோமிதரனோடை கிளிநொச்சிக்கு போறன். ஒரு பின்னேரப் பொழுது. கிளிநொச்சியில திட்டமிடல் செயலகத்தில க.வே பாலகுமாரனை சோமிதரன் ஏதோ ஊடக அலுவலாய்ச் சந்திச்சு கதைச்சுக் கொண்டிருந்தான். நான் அந்த இடங்களை சுத்திப் பாத்துக்கொண்டிருந்தன்.

இப்ப பாலகுமாரன் என்னோடை கதைக்கேக்கை சொன்னார். நான் முதலில நினைச்சன் நீர் லோக்கல் ஆள் எண்டு.

இது எனக்கு ரண்டாவது அற்றாக்.

பிறகு சோமிதரன் சொன்னான். நீ கை இல்லாத கலர் பனியன் போட்டுக்கொண்டு வாறதுக்கு பதில் உப்பிடி வெள்ளைச் சேட்டோடை வந்தால் எப்பிடித் தெரியும் நீ வெளிநாடு என்று?

எட! இது வேறையோ? நான் வெயிலுக்கு வெள்ளைச் சேட்டுத்தான் நல்லது எண்டு போட்டுக்கொண்டு போனனான்.

இப்ப திரும்பவும் கொழும்பில! படிச்ச பள்ளிக்குடத்துக்கு போறம். நான் சேயோன் நிரஞ்சன் மற்றது ஜெயகாந்தன் ஜீவன். எல்லா ஆசிரியர்களையும் சந்திச்சு கதைச்சம்.

என்னடா ஒரு அற்றாக்கையும் காணவில்லையே என்று நான் நினைக்கிறன். நினைக்க விழுகுது அடி!

ஒரு ரீச்சர் கேட்டா! அவுஸ்ரேலியாவில வெயில் கூடப் போல..

நான் சேயோனைப் பாத்துட்டு எனக்குள்ளை சிரிச்சன். ' அப்ப கனடாவில எப்பிடியிருக்கும் வெயில்'

(தொடர்ந்தும் கதை சொல்லவன்)

10 Comments:

Blogger துளசி கோபால் said...

:-))))))))))))))

6:00 PM  
Anonymous Anonymous said...

poda doi......kangkayila kuliththalum kakkai annamaakumaa???

1:34 AM  
Anonymous Anonymous said...

poda doi......kangkayila kuliththalum kakkai annamaakumaa???

1:34 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: லாலலோல...

//படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது//

எது எதுக்கு மகிழ்ச்சிப்படுறதென்று விவஸ்தையே இல்லையா?


//என்ரை கையில டிஜிற்றல் வீடியோ கமெராவும் இல்லை. அந்த முழங்காலுக்கு கீழே போடுற காற்சட்டையும் போடேல்லை. அப்ப நான் வெளிநாடு எண்டு கண்டு பிடிக்கிறது அவவுக்கு கஸ்ரமாத்தானே இருந்திருக்கும்.//

அது மட்டும் காணாதுடா ராசா.. கொஞ்சம் இதுவும் வேணும். இதெண்டா இது தான்.

22.11 18.7.2005

9:12 AM  
Blogger சயந்தன் said...

//அது மட்டும் காணாதுடா ராசா.. கொஞ்சம் இதுவும் வேணும். இதெண்டா இது தான்.//

எதுங்கிறேன்?

5:05 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

சயந்தன்!
உமக்கே இந்த நிலைமையெண்டா..
எங்கள் தரவளிய யோசிச்சுப் பாரும்.

தொடர் தாக்குதல்கள் நல்லாத்தான் இருக்கு. தொடர்ந்து தாக்குதல்களை மட்டும் தராமல் வேற விசயங்களையும் எழுதும். தமிழ்க்கவி அம்மாவைச் சந்திச்சதிலயிருந்து இன்னும் கனக்க இருக்குத்தானே கதைக்க.

(இனிப்போனா, காதில கடுக்கன், குடுமி சகிதம் போறது பரவாயில்லைப் போல. அப்பிடியெணடாலும் வெளிநாட்டான் எண்டு நினைப்பினம். இல்லாட்டி ஒரு வெள்ளைக்காரியக் கூட்டிப்போனாலும் பரவாயில்லை.;-)

11:03 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Nanban

//இல்லாட்டி ஒரு வெள்ளைக்காரியக் கூட்டிப்போனாலும் பரவாயில்லை.;-) //

அவள் வரவேணுமே! உங்களோடு??? :)

11.52 20.7.2005

6:54 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: NONO

நான் இலங்கைக்கு/யாழ்பாணம் போன போது வெளிநாட்டுக் இருந்து வந்தவன் என்று அனேகமானவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! (வாயை மூடிக்கிட்டு இருக்கம்வரையும், ஏதாவது தமிழ்ழில் கதைத்தால் அவ்வளவுதான், உடனே கண்டுபிடித்து விடுவார்கள்)முடிந்த அளவுக்கு உள்நாட்டவர் போல் இருக்க முயற்சிப்பதுதான் சிறந்தது என எனக்கு படுகின்றது! இது எனக்கு பலவிதத்தில் உதவியாக இருந்தது வேறுவிடையம்!

16.30 20.7.2005

7:41 AM  
Anonymous Anonymous said...

//இது எனக்கு பலவிதத்தில் உதவியாக இருந்தது வேறுவிடையம்!//

போகிற வழியில் புலிகளுக்கு பணம் கொடுக்காமல் போனதைதானே சொல்றீங்க?

6:20 AM  
Blogger NONO said...

"போகிற வழியில் புலிகளுக்கு பணம் கொடுக்காமல் போனதைதானே சொல்றீங்க?"
எனது கடவுசீட்டைப்பார்த்தா வி.த.பு தெரிந்துவிடுமே!!!! அதை செல்ல வரல... சுகந்திரமாய் எங்கும் சென்று வெரலாம்... அனாவசிய பார்வைகள் தவிற்கபடும்..ஏமாத்து படுவதுக்கு உரிய சந்தபர்ங்கள் எல்லம் குறையவே...

7:41 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home