16.6.05

இலங்கை அரசின் எதிர்காலம்?

ஜே.வி.பி விலகி விட்டது.

இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு சுனாமி நிவாரண உதவிகளை பங்கிடுதல் தொடர்பான புலிகளுடன் இணைந்து பணியாற்றும் கட்டமைப்பு யோசனையை கைவிடுமாறு அது சந்திரிகாவிற்கு கொடுத்திருந்த காலக் கெடு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

கடந்த வாரங்களில் கொழும்பின் அரசியல் பரபரப்புடையதாக இருந்தது. ஜே.வி.பி அரசிலிருந்து விலகுமா என்றும் சந்திரிகா ஜே.வி.பியின் நிபந்தனையை ஏற்றுக் கொள்வாரா என்றும் பலவாறான கேள்விகள் அங்கு இருந்தன.

பொதுக்கட்டமைப்பு என்பது ஒரு நிவாரண உதவி அமைப்பு. ஆயினும் அதற்கான எதிர்ப்புகளும் கோசங்களும் ஏதோ தனிநாட்டிற்கு எதிரான கோசங்களுக்கு ஒப்பானதாயிருந்தன. பெளத்த பிக்குகள் உண்ணாவிரதமிருந்தனர். ஊர்வலம் போயினர். தம்மீது பெற்றோல் ஊற்றினர். கண்ணீர் புகை குண்டுகளுக்கிடையில் சிக்கி கண்ணீர் விட்டனர்.

ஜே.வி.பி யும் தன் பங்குக்கு புலிகளுடன் வெற்றுக்காகிதத்தில் கூட கையெழுத்து இட கூடாது என்றது. காலக்கெடு விதித்தது. இறுதியில் அரசிலிருந்து விலகியிருக்கிறது.

சந்திரிகாவிற்கு இது ஒரு மானப்பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியை ஜே.வி.பியினர் ஆட்டிப்படைப்பதை அவர் விரும்பியிருக்காது இருக்க கூடும்.

உலக அரங்கில் புலிகளின் தரத்தை உயர்த்தி விடும் என்பதனாலும் அவர்களுக்கான அங்கீகாரம் ஒன்றினை வழங்கி விடும் என்பதனாலுமே சிங்கள இனவாத அமைப்புக்கள் இந்த பொதுக்கட்டமைப்பை விரும்பவில்லை என்பது தெளிவு. ஆனால் பெரும்பாலான உலக நாடுகள் புலிகளுடனான பொதுக்கட்டமைப்பினை ஆதரிக்கின்றன. விரைவில் அதனை நடைமுறைப்படுத்துமாறு வேண்டு கோள் விடுக்கின்றன.

இது ஆகக்குறைந்தது பாதிக்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் நிர்வாகம் என்ற யதார்த்தத்தினை அந்த நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை குறிக்கிறது.

பொதுக்கட்டமைப்பு தொடர்பில் சிங்கள இனவாத அமைப்புக்கள் நடந்து கொண்ட முறையே உலக நாடுகள் இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பில் இன்றைய யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள போதுமானது.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தினை பங்கிடுகின்ற சாதாரண ஒரு அமைப்புக்கு இத்தனை எதிர்ப்பு சிங்கள தேசத்தில் கிளம்புமென்றால் இடைக்கால நிர்வாக சபைக்கு, சமஷ்டி முறையிலான நிரந்தர தீர்வுக்கு சிங்கள தேசத்தின் இனவாதம் எத்தனை தூரம் கொந்தளிக்கும் என்பதை உலகு உணர்ந்திருக்கும்.

20 வருடங்களுக்கு மேலான தமிழர்களின் போராட்டத்திற்கு நியாயம் இருந்திருக்கிறது என்பதை இன்று சிங்கள இனவாதம் தானாகவே உணர்த்தி கொண்டிருக்கிறது.

3 Comments:

Anonymous Anonymous said...

சாரல் சயந்தன் சொன்னதாவது:
||20 வருடங்களுக்கு மேலான தமிழர்களின் போராட்டத்திற்கு நியாயம் இருந்திருக்கிறது என்பதை இன்று சிங்கள இனவாதம் தானாகவே உணர்த்தி கொண்டிருக்கிறது.||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|இந்தக்கருத்தினை வலைப்பதிவு சாத்வீகக்காவலர்கள் முகமூதி, டல்லாவில்லேசு டம்மி, வந்தென்றும் வன்புடன் வாலா, பேண்டு ஆகியோரிடம் சரிதானா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டும் அனுமதி பெற்றும் நீங்கள் போட்டீர்கள் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டமுடியுமா?|

3:16 AM  
Anonymous Anonymous said...

தமிழர்கள் மிகச்சரியாக இவ்விடயத்தை கையாண்டால் நன்மை கிடைக்கும்

5:58 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

புலிகள் இல்லையாயின் தமிழர்களை அவர்கள் காலில் போட்டு மிதித்திருப்பார்கள் என்பதற்கு நடந்தவை சாட்சி.

15.45 18.6.2005

10:47 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home