15.4.05

ஒஸ்ரேலியாவில் சந்திரமுகி

முதல்நாள், முதல்க்காட்சி அலைமோதும் கூட்டம் இல்லை. ஆரவாரம் இல்லை.

இரவு ஏழு மணிக் காட்சி. ஏற்கனவே ரிக்கெற்றுக்களை பதிவு செய்து விட்டதனால்.. அவ்வப்போது ஆறுதலாக வந்து சேர்ந்த கூட்டம்..

இடிபட்டு தள்ளுப்பட்டு சட்டைகிழிந்து பேச்சு வாங்கி இவ்வாறான எந்தவிதமான அனுபவங்களும் இல்லாமல் சந்திரமுகி படம் இன்று பார்த்தேன்.

படம் ஏதோ பரவாயில்லைப்பா.. பாபாவை விட பரவாயில்ல.. இது தான் வந்திருந்த பெரும்பாலானோர் சொன்னது.

படம் ஆரம்பித்து ரஜினி தன் சப்பாத்துக்களை காட்டி வந்த போது முன்னிருந்து சிலர் மலர் தூவினார்கள். அட இங்கேயுமா?

வடிவேலு புண்ணியத்தில் தியேட்டர் சிரிப்பலைகளில் மிதந்து கொண்டே இருந்தது.

தவிர சீரியசான சில இடங்களிலும் எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. குறிப்பாக ரஜினி யாரோ ஒரு உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ நிபுணரின் மாணாக்கன் என்ற போது சிரிப்பு தாங்க முடியவில்லை.

இன்னும் ஒரு கட்டத்தில் பிரபுவிடம் ஜோதிகாவின் நிலை பற்றி விளக்க பிரபு 'என்ன கொடுமை இது' என்பார். அப்போதும் எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்று தெரியவில்லை.

தேவுடா பாடலில் றிப்பீட்டு சொல்ல டிரெக்ரர் வாசு, பிரபுவின் அண்ணா ராம்குமார், 'இன்னும் ஒருவர்' வந்தார்கள். அந்த இன்னும் ஒருவர் யாரென்று தெரியவில்லை.

ஜோதிகா.. லக்க லக்க லக்க லக்க லக்க லக்க லக்கலக்கல்..

சந்திரமுகியாக மாறுகிற போது கண்ணும் முகமும்.. பயமாக்கிடக்கு!
கிராபிக்ஸில் பாம்பு காட்டுகிறார்கள். எதுக்கு காட்டுகிறார்களோ
தெரியவில்லை.

படம் தொடங்கும் போது கமல்காசனுக்கு நன்றி என்று ரைற்றில் போடுகிறார்கள். (எதுக்கு..)

படத்தை தொய்யாமல் கொண்டு சென்றதில் வடிவேலுக்கு பங்கிருக்கிறது.

ஜோதிகாவின் பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சிம்ரன். அவர் பின்னியெடுத்திருப்பார் என்றனர் சிலர்.

எனக்கு ஜோவையே பிடிச்சிருந்தது.

லக்க லக்க லக்க லக்க லக்க லக்க லக்க

23 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ravi

னல்ல விமர்சனம்

0.20 16.4.2005

11:58 AM  
Blogger à®•à®±à¯à®ªà¯à®ªà®¿ said...

அட ச்சீ நான் இன்னும் பாக்கவில்லை சந்திரமுகி.
உண்மையான விமர்சனம்.
ஏனென்று தெரியாத பல கேள்விகள்.
பூ எறியும் சில பேமானிகள்
எனக்கும் பிடிக்கும் ஜோதிகாவை
லக்க லக்க லக்க லக்க

12:05 PM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

கறுப்பி.. இதென்ன கவிதையோ..? மற்றது நான் விமர்சனம் எழுதேல்லையே... சும்மா பாத்ததை எழுதினன்.. அவ்வளவும் தான்.. எண்டாலும் சோதிகா.. லக்க லக்க லக்க லக்க லக்க லக்க லக் கலக்கல்..

12:10 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Vasnthan

லக்க லக்க லக்க லக்க:நக நக நக நக நக்...?

21.34 15.4.2005

12:31 PM  
Blogger à®•à®±à¯à®ªà¯à®ªà®¿ said...

வசந்தன் உந்த நக்கல்தானே கூடாது எண்டுறது. உங்களுக்குச் சிம்ரனைப் பிடிக்குமெண்டா எங்களுக்கென்ன. நாங்கள் எப்பவும் ஜோ கட்சிதான். இல்லையா சயந்தன்? சயந்தன் ஒஸ்ரேலியாவில ஜோ கோயில் கட்டப் போறாராம்.

12:41 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kirukan

//ரஜினி யாரோ ஒரு உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ நிபுணரின் மாணாக்கன் என்ற போது சிரிப்பு தாங்க முடியவில்லை.// Kusumbu...


1.29 16.4.2005

4:33 PM  
Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

கறுப்பி!
அது நான் எழுதேல. வேற ஆரோ எழுதினது. நான் இந்தப் பின்னூட்டப் பெட்டியில எழுதிறேல. லொக் இன் பண்ணித்தான் எழுதிறனான். அதோட வசந்தன் எண்ட பெயரைச் சரியா எழுதுவேன். அதுவும் ஆங்கிலத்தில எழுதிறேல. நான் இப்பதான் வந்து இந்தப் பதிவு பாத்தனான். அதுக்குள்ள இவ்வளவு நடந்து போச்சு.

சிம்ரன் எண்டா என்ன பெரிய கொம்பே? ஜோதிகாவெண்டாலும் அப்பிடித்தான். உங்கட பதிவில சந்திரமுகியப் போட்டுத்தாக்கின பதிவு நல்லா யாவாரம் போகுது. நீங்களெண்டாலும் சந்திரமுகி பாப்பன் எண்டியள். நான் அதுகூட இல்ல.

5:00 PM  
Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

எனக்குப் பிடிச்ச நடிகையைச் சொல்லுறன்.
அவ லட்சுமி. "சில நேரங்களில் சில மனிதர்கள்" படத்தில நடிச்சா.
இன்னொரு நடிகை, சரிதா. குண்டுக்கட்டா வந்து "ஜூலி கணபதி" படத்தில ஜெயராம கலாயக்கிற மனுசி.
நடிப்ப விட்டிட்டு வேற தேவயளுக்குப் பாக்கிறதெண்டா வெள்ளக் காரியளப் பாத்திட்டுப் போவன். எதுக்கு தமிழ்ப்படத்தில தேடோணும்? என்ன கறுப்பி நான் சொல்லுறது?

5:05 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Naan

பாருங்கோ கறுப்பி எங்கட தமிழ்ப் பெண்களை வசந்தன் போன்றோர் வேற தேவைக்காகவும் பார்க்கினம். இதைக் கேட்டிட்டு நீங்கள் பொங்கி எழாமல் இருக்கிறியள். (இப்ப கனடாவில குளிர் குறைவுதானே)

11.37 16.4.2005

6:39 PM  
Anonymous வசந்தன் said...

அடே நான்!
(ஆள் ஆரெண்டு தெரிஞ்ச படியா அப்பிடித்தான் கூப்பிடுவன்).

நான் (இது வசந்தனாகிய நான்) ஓர் ஆணாக இருப்பதால் கறுப்பி ஜோதிகாவைப் பார்ப்பதற்கும் நான் ஜோதிகாவைப் பார்ப்பதற்கும் சிறிதளாவாவது வித்தியாசம் இருக்குமென்று தெரிகிறதா?
மேலும் தமிழ்ப் பெண்கள் பற்றி ஆர் கதைச்சது? சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்க எண்ட மாதிரி எண்டைக்கோ ஒரு தமிழிச்சியத் தான் கட்ட வேணுமெண்டபடியா அப்பிடியெல்லாம் சொல்லி எதிர்காலத்தில பிரச்சின வர விரும்பேல.:D
நீர் "தமிழ்ப் படத்தில நடிக்கிற ஆக்களப்பற்றி" எண்டு எழுதியிருக்கோணும்.

7:22 PM  
Blogger à®…ருணன் said...

என்ன தியேட்டர் மாதிரி ஒரே சத்தமாக்கிடக்கு.

12:23 AM  
Anonymous Anonymous said...

ஆமா.. கமலுக்கு எதுக்கு தாங்க்ஸ் போடுறாங்கப்பா.. யாருக்காச்சும் தெரியுமா?

7:43 AM  
Anonymous யதுகிரி said...

எனக்கும்
என் பிள்ளைக்கும்
முடியுமானால் உறவுக்கும்
எண்பது வயது வரை எதுவும் நடக்காமல்
காலம் கழிந்தால் அதுவே போதும்
விடுதலையென்ன விடுதலை?
யாருக்கது வேண்டும்?
பாலும் பழஞ்சோறும் பாணும் பருப்புமிவை
நாலும் கிடைக்குமெனில் நமக்கதுவே போதும்

(நன்றி - புதுவை இரத்தினதுரை)

உங்களுக்கு நாலு மட்டுமல்ல இன்னும் கொஞ்சம் கூட தேவைப்படுது.

உங்கட நலன் தான் முக்கியமென்டு நாடு விட்டு ஓடிப் போனவரிற்கு
முதல் நாள்.. முதல் காட்சியில சந்திரமுகி..... பாக்கிறதால பிறவிப்பயன் கிடைச்ச மாதிரி நினைக்கிறவரிற்கு… புலிகளால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளை விமர்சிக்கிறதக்கு என்ன யோக்கியதை இருக்கு?

ஏத்தனை பேர் கொலை செய்து போட்டும் சட்டத்தை பயன்படுத்தியே தப்பித்து இருக்கிறார்கள். அதற்காக சட்டமே கூடாது என்பதா? அதே போலத்தான் புலிகள் ஏற்படுத்தும் சட்டதிட்டங்களும் நடைமுறைகளும்…

7:48 PM  
Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

யதுகிரி!
இவ்வளவு பச்சையாச் சொல்லக் கூடாது. நானும் போய்ஸ் படத்தடை பற்றி சயந்தன் எழுதின உடன அவர நேர கூப்பிட்டு சிலவிசயம் சொன்னன். ஆனா வினோதம் என்னெண்டா நான் சொல்லி பத்து நிமிசத்துக்குள்ள நான் சொன்ன அதே விசயம் அனாமதேயமா பின்னூட்டத்தில வந்திருக்கு. சரிதான். என்னப் போலவே ஆரோ ஒண்டு யோசிக்குதெண்டு விட்டிட்டன். இப்ப பாத்தா நான் நினைக்கிற சில விசயங்களத் தான் நீங்களும் வந்து எழுதியிருக்கிறியள். எண்டாலும் பயந்து ஓடியந்தது எண்டு சொல்லுறதும் கதைக்க அருகதையில்ல எண்டு சொல்லுறதும் பிழை. அவரிண்ட பார்வையில சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். தடை என்ன செய்தது எண்டதும் அதால வந்த பயன் என்ன எண்டதும் எனக்கு நல்லாத் தெரியும். நக்கலாச் சொல்லேல, உண்மையிலயே பெரிய பலன் இருந்தது. அத விளங்காதவேக்கு விளங்கப்படுத்திறது வீண்வேல. கொஞ்சம் அமைதியா இருங்கோ. (இஞ்ச நான் சயந்தன மட்டும் சொல்லேல)

11:11 PM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

//பாலும் பழஞ்சோறும் பாணும் பருப்புமிவை
நாலும் கிடைக்குமெனில் நமக்கதுவே போதும்

(நன்றி - புதுவை இரத்தினதுரை)

உங்களுக்கு நாலு மட்டுமல்ல இன்னும் கொஞ்சம் கூட தேவைப்படுது.//

பழஞ்சோறு சாப்பிட ஆசையாயிருக்கிறது. பாண் வெறுத்து விட்டது.

//முதல் நாள்.. முதல் காட்சியில சந்திரமுகி..... பாக்கிறதால பிறவிப்பயன் கிடைச்ச மாதிரி நினைக்கிறவரிற்கு…//

இரண்டு நாள், நான்கு காட்சிகளில், முதல்நாள் காட்சிக்கென எந்த பரபரப்பும் இல்லை.

//புலிகளால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளை விமர்சிக்கிறதக்கு என்ன யோக்கியதை இருக்கு?//

ஊடகங்களின் வரவுகள், செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் இவற்றின் வரவிற்கிடையில் Boys திரைப்படத்தினை தடைசெய்த இலக்கு எட்டப்படவில்லை என்று சொன்னேன்.

//உங்கட நலன் தான் முக்கியமென்டு நாடு விட்டு ஓடிப் போனவரிற்கு //

Absolutely correct!!!

6:51 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: prakash

appo idhuvum outta?

23.41 17.4.2005

3:43 PM  
Anonymous யதுகிரி said...

//விளங்காதவேக்கு விளங்கப்படுத்திறது வீண்வேல//
உண்மை தான்.

அதோட சிலர் விளங்கினாலும் விளங்காத மாதிரி இருப்பினம்.. இன்னும் சிலர் ஏதும் சொல்லப்போனா அவங்களை முட்டாள்களாகவும் தங்களை மட்டுமே புத்திசாலிகளாகவும் நினைப்பினம்.. வேறு சிலரோ நீ சொல்தை சொல்லிப் போட்டுப் போ... நான் ஒருமுறை சொன்னதை வாபஸ் வாங்க முடியாது என்பது போல இருப்பார்கள்.
மனிதர்கள் பலரகம்

7:18 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: R.Raja

Repeattu சொன்ன மற்றும் ஒருவர் ரஜினியின் நண்பர் ராஜ்பதூர்.

16.51 18.4.2005

4:28 AM  
Blogger à®•à®±à¯à®ªà¯à®ªà®¿ said...

சயந்தன் சொல்லுங்கோ. சந்திரமுகி என்ர வீட்டுக்குக் கிட்ட ஒரு தியேட்டரில ஓடுது. ஆகக் கூடாத படம் எண்டால் ஏன் நேரத்தையும் காசையும் வீணாக்குவான். பரவாயில்லை ரகம் எண்டாப் பாக்க நினைக்கிறன். பாபா பாக்க வேண்டாம் எண்டு எல்லாரும் கெஞ்சிக் கேட்டதால பாக்கேலை. சந்திரமுகி அந்த ரகமா இல்லாவிட்டால் ஜோ இருக்கிற படியாப் பாக்கலாமா? சயந்தனின்ர கணிப்பில எனக்கு ஒரு நம்பிக்கை இருக்குச் சொல்லுங்கோ. பாக்கவா வேண்டாமா? பத்துக்கு எத்தின மாக்ஸ் வரும்?

1:11 PM  
Blogger à®šà¯‹à®®à®¿à®¤à®°à®©à¯ said...

வணக்கம்
தமிழ் நாடு மாதிரியே வீணாய் போன படங்களுக்காக வேலை வெட்டி இல்லாமல் அடிபடுறதை நினைக்க கேவலமாய் கிடக்கு. எங்கட மண்ணில விவாதிக்கப் பட வேன்டியதுகள் நிறைய கிடக்கு. நாங்கள் எதுக்காகவோ போராடிக்கொன்டிருகிறம் ஆனால் அது எங்கள விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்குது.
...................................
'மாயவி' பாத்தனீங்களே யாழ்ப்பாணத்தமிழன்ற சீத்துவம் காட்டியிருகீனம்?! சென்னையில் நான் பார்த்த சிலதுகளை வைத்து பாக்கேக்க அது கூட சரியோ எண்டு தோனுது. என்று தணியும் எங்கள் சினிமா மோகம்.

வசந்தன் நீங்களுமோ!!!

சயந்தன் தயவு செய்து அருமையான விசயங்களை எழுதுங்கோ...

வாழ்த்துக்களோடு
..........................சோமி

10:30 AM  
Anonymous Anonymous said...

//பூ எறியும் சில பேமானிகள்//

கறுப்பி என்ன பேசுகிறீர்கள்? பேமானிகள் என்றால் அர்த்தம் என்ன? உங்களுக்குப் பழக்கப்பட்ட மொழியில் எழுதுங்கள். அடுத்தவர் மோகத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.

2:53 PM  
Anonymous Anonymous said...

Hello! I'm Portuguese!! Id'like to meet you!!!


Ana Orgasmo!!

4:40 PM  
Anonymous Anonymous said...

ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் மாதிரி சயந்தன் உங்களுக்கு போர்த்துகலிலும் வாசகர்களா... அட..

7:45 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home