8.4.05

முகங்கள்

'விழுந்தாலும் உயிர்ப்போம்' எனத் தொடங்கி 'எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை' என முடித்தான்.

பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். 'அவ்வப்போது அடியுங்கடா விசில்' என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள்.

'இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் என எச்சரிக்கிறேன்' என சென்றமர்ந்தான். எல்லோரும் கை தட்டினார்கள். அதுவும் மூன்றாவது வரிசையிலிருந்த அவள் பலமாய்த் தட்டினாள்.

அவள் ஒவ்வொரு முறையும் தட்டுகிறாள் அவனையே பார்த்தபடி.

இப்பொழுதும் அவனையே பார்த்தபடி..

'யாராக இருக்கும் என்னைத் தெரிந்த ஆளாக இருப்பாளோ'

'நிகழ்ச்சி முடிய போய் பேசிப் பாக்கலாம். ஏதாவது கவிதையைப் பற்றித்தான் பேச வேணும். அவளுக்கும் கவிதை எழுத தெரிஞ்சால் எவ்வளவு நல்லது? '

'எப்பிடியிருந்தது நிகழ்ச்சி.. நல்லாயிருந்ததோ'

'ம்.. உங்கடை கவிதையள் நல்லாயிருந்தது.'

'எங்கை படிக்கிறியள்'

'...இஞ்சை தொகுப்புரை தர உம்மை கூப்பிட்டாச்சு போம்..' பக்கத்திலிருந்தவன் தட்ட வேட்டியைச் சரி செய்து கொண்டு எழுந்தான். வியர்த்தது.

'விசரர்.. ஒரு ஏ சி ஹோலை புக் பண்ணியிருக்கலாம்..'

குரல் செருமினான். அவள் இவனையே பார்த்தபடி.

'அப்பொழுது சொன்னதையே இப்பொழுதும் சொல்கிறேன். நாம் ஆண்ட பரம்பரை. மீளவும் ஆளுவோம். அதை யார் தடுத்தாலும் எதிர்த்து போராடுவோம். '


காடு அமைதியாயிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த அமைதி கலையும்.

அவர்கள் அவசர கதியில் பங்கர்களுக்குள் நிறைந்த நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்.

'எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது..' யாரோ ஒருவன் பாடினான்.

'ச்சூய்... காட்டுக்குள்ளை கழுதை வரப்போது. பாட்டை நிப்பாட்டு.' அது அவன் தான். எப்போதும் போலில்லாமல் இன்று அதிகமாய் பேசியும் சிரித்தும் கொண்டிருந்தான்.

பாடியவன் நிறுத்த 'சரி சரி பாடு நான் பகிடிக்கு சொன்னன்.. நல்லாத்தான் இருக்கு' என்றான்.

அவன் பாடவில்லை. எல்லோரும் அமைதியானார்கள்.

'இன்னுமென்னடா ஒரு ஐஞ்சு மணித்தியாலம். பிறகு எல்லாம் சரி.. பிறகு இங்காலைப் பக்கம் அவன் வந்து பாக்க மாட்டான்.'

மீண்டும் அவனைத் தவிர எல்லோரும் அமைதியாயிருந்தார்கள்.

'பாட மாட்டியோ.. சரி போ நான் பாடுறன்..' அவன் பங்கருக்குள் இறங்கி சேற்று நீரை வெளியிறைத்தான்.

'எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது'


பஸ் சிரிப்புக்களால் நிறைந்தது.

'பிறகெங்கையடா அவள்'

'காணேல்லை. தேடினன் போயிட்டாள் போல'

'சரி விடு.. எப்பிடி எங்கடை விசிலடி'

'கலக்கிட்டியள்.. '

'எங்கை வேட்டி..'

'அது சும்மா.. உள்ளை ஜீன்ஸ் போட்டிருந்தன். நிகழ்ச்சி முடிய வேட்டியை கழட்டி எறிஞ்சிட்டன். அதை மனிசன் கட்டுவானே.. சும்மா ஒரு பிலிம் காட்டவெல்லோ அது கட்டினது. எப்பிடி என்ரை கவிதையள்'

'அந்த மாதிரி.. நல்லா உணர்வு பூர்வமா இருந்திச்சு.. கேட்கறவனுக்கு கட்டாயம் ஒரு பீலிங் வந்திருக்கும்.'

உள்ளுக்குள் பெருமையாயிருந்தது.

'ம்.. சரி நாளைக்கு படம் பாக்கப் போவமே? '

'புதுசா தமிழ்ப் படம் ஒண்டும் வரேல்லையே'

'தமிழ்ப்படத்துக்கு ஆர் போறது. இங்கிலிஷ் படத்துக்கு போவம்.'


எல்லோருக்கும் உடம்பு வலித்திருந்தது. அருகருகாக அமர்ந்திருந்தார்கள்.

பருத்தித்துறை வடையும் வெறுந்தேத்தண்ணியும் நன்றாகவிருந்தன.

'வேறை என்னடாப்பா.. ஏதாவது கதையுங்கோவன்.'

இன்னும் சில நிமிட நேரங்கள் இருந்தன. அதன் பின்பு இந்தக் காடு அதிரும்.

அவன் அருகிலிருந்தவனின் முதுகில் சாய்ந்தான். அருகிலிருந்தவன் கண்கள் பனித்ததை யாருக்கும் தெரியாமல் துடைத்தான்.

வோக்கி இரைந்தது... 'ரூ..ரூ.. கந்தயா.. என்னெண்டு சொன்னால்..

அவன் எழுந்தான். இடுப்பில் தோளில் என எல்லாவற்றையும் பொருத்தினான். எல்லோருக்கும் கை கொடுத்தான். இருட்டுக்குள் நுழைந்து திரும்பி கையசைத்து திரும்பி நடந்தான்.

நிமிடங்கள் கரைந்தன. காடு வெடியோசையூடு அதிர துரத்தே செந்நிற பிழம்பெழுந்தது. தொடர்ந்து சடசடத்தன. நடு இரவு தாண்டி விட்டது. இனி விடியும்.


வெளியே மழை வரும் போல இருந்தது. கட்டிலிலி கால் நீட்டிப் படுத்தான் அவன்.

அன்றைய பத்திரிகை பார்வையில் இருந்தது.

கவிதைப் போட்டி..

எழுந்து உட்கார்ந்தான். இன்றைய சமகால நிலையை பிரதிபலிப்பதாய் நூறு சொற்களுக்கு கூடாமலும் ஐம்பது சொற்களுக்க குறையாமலும் கவிதைகளை அனுப்புங்கள். பரிசு முதல்ப்பரிசு 5000....

பேப்பரும் பேனையும் எடுத்தான்.

'விழ விழ எண்டு தொடங்கினால்.. எழு எழு எண்டு அடுத்த வரி போடலாம்.. அழ அழ எண்டு ஏதாவது எழுதி அடுத்த வரியை நிரப்பலாம்.. பிறகு... ம்.... வழ வழ எண்டு ஏதாவது எழுதலாமா' என்று யோசிக்க தொடங்கினான். வெளியே இருட்டிக் கொண்டு வந்தது.

20 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

நல்லது அருமையான பதிவு.

அது சரி அது என்ன ரூவன்னா ரூவன்னா கந்தையா.3.33 9.4.2005

10:41 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: vaamanikandan

//'கலக்கிட்டியள்.. '//

அதே...அதே!

வா.மணிகண்டன்

23.16 8.4.2005

10:44 AM  
Blogger à®•à®±à¯à®ªà¯à®ªà®¿ said...

சயந்தன் என்ன சொல்ல. உங்கள விளையாட்டுப்பிள்ளை எண்டெல்லோ நினைச்சுக் கொண்டிருந்தனான். உண்மையச் சொல்லுறன் மிக மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ரெண்டு மூண்டுதரம் திரும்ப திரும்ப வாசிச்சன்.

10:50 AM  
Anonymous லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி said...

எனது நண்பியான முல்லை மைதிலி கொழும்பிலிருந்து வெளிவந்த உயிர்ப்பு எனும் இதழலில் (2003 தை) எழுதியதை இந்த சயந்தன் தனது படைப்பாக பதிந்துள்ளமையை வன்மையாக கண்டிக்கிறேன். (தான் தான் புனை பெயரில் எழுதியதாக கதை விடக் கூடும். நம்புவதும் நம்பாததும்...)

11:04 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kulakaddan

நல்லாயிருக்கு கதை....

20.5 8.4.2005

11:07 AM  
Anonymous லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி said...

உயிர்ப்பு பாத்தவர்கள் யாரும் அவ்வாறு சொல்லக்கூடும் என எண்ணியதால் உண்மை நிலையை மற்றவர்களுக்கு சயந்தன் தெரியப்படுத்தவில்லையே என்ற நினைப்பிலேயே அவ்வாறு விளையாட்டுத்தனமா எழுதினேன். உண்மையாகவே அது சயந்தனால் எழுதப்பட்டது என்பதை எழுத்து நடையைக் கொண்டே அறியலாம். சயந்தன் என்னைப் பொறுத்தருளுவார் என்ற நம்பிக்கையுடன்....

11:26 AM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

//தான் தான் புனை பெயரில் எழுதியதாக கதை விடக் கூடும். நம்புவதும் நம்பாததும்...//

நல்லது லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி

முகங்கள், நான் ஆசிரியராக இருந்த உயிர்ப்பு சஞ்சிகையில் முல்லை மைதிலி எழுதிய கதை தான். எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துப் போனதால் அதனைக் காட்டிப் பாராட்டுக்கள் பெற வேணும் என்ற நோக்கில் திருட்டுத்தனமாக என் கதையாக வெளியிட்டு விட்டேன். சுட்டிக்காட்டி என் குட்டை உடைத்தமைக்கு நன்றி. முக்கியமாக எனது மன்னிப்பை உங்களது நண்பி??? முல்லை மைதிலியிடம்??? சொல்லி விடுங்கள்.

11:37 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: NanPaN

உயிர்ப்பில் வந்தது ஒரே கரு உள்ள வேறு கதை..
சொல்லுறதையும் சொல்லிப் போட்டு பொறுப்பார் !பூமியாளுவார் என்று சொல்லிக் கொண்டு...

14.53 8.4.2005

11:58 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: NanPaN

எழுதிக்கொள்வது: NanPaN

உயிர்ப்பில் வந்தது ஒரே கரு உள்ள வேறு கதை..
சொல்லுறதையும் சொல்லிப் போட்டு பொறுப்பார் !பூமியாளுவார் என்று சொல்லிக் கொண்டு...

14.53 8.4.2005

14.53 8.4.2005

11:59 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: பக்கத்திலிருந்து பார்த்தவன்

உயிர்ப்பு ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஆக்கங்களை போட கூடாது (அதுவும் நீர் ஒவ்வொரு முறையும் உமது கதையை போட்டதால் தான் அப்படியொரு நிலை வந்தது.) என்ற படியால் இந்தக் கதையை எழுதி ரைப் பண்ணி பிறகு அதை உயிர்ப்பு முகவரிக்கு நீரே அனுப்பி வைச்சு பிறகு பரிசீலிக்கிற மாதிரி பரிசீலித்து நல்ல கதை தான். பிரசுரிக்கலாம் என்று சொல்லி தில்லு முள்ளுகள் செய்து முடித்து விட்டீர்.

அதுவும் அந்த விழுந்தாலும் உயிர்ப்போம் என்று தொடங்கி கழுவேற்ற நீளுமோ பிறர் கை என முடிகிற கவிதையை நினைவிருக்கா.. எப்பிடி மறக்கும்? இந்தக் கதை வந்த உயிர்ப்புக்கு முதல் வந்த உயிர்ப்பில் அந்தக் கவிதை வந்ததே.. அட.. அதை எழுதியதே நீர் தானே?

நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும்

1.18 10.4.2005

12:26 PM  
Blogger à®šà¯à®¤à®°à¯à®šà®©à¯ said...

என்னய்யா கூத்து இந்த பின்னூட்டப் பகுதியில நடக்குது?

1:17 PM  
Anonymous கூள மேகம் said...

முகமூடிகள் வசதி.
கிழியக் கிழியப் போடலாம்.
நல்லாக் கிழிஞ்சா இன்னொண்டு.
தானே சில வேள
தன்ர முகமூடியக் கிழிக்கலாம்.
ஒருநாள் பழக்கதோசத்தில
தன்ர முகத்தயே கிழிக்கேக்க
அல்லது கிழிபடேக்க தான்
பிரச்சினையே.

5:26 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

யாரெழுதியதோ நமக்குத் தேவையில்லை. அப்படியே குறுக்கு வெட்டாக வெட்டு ஒன்று துண்டு இரண்டாக செர்ல்லப்பட்டிருக்கிறது.

15.51 10.4.2005

10:55 PM  
Anonymous த.திரு said...

உண்மையில் இதுதான் நிகழ்கிறது. சுருக் என்று தைக்கிற அளவில் எழுதியிருக்கிறீர்கள். என்ன படிக்கும் சிலருக்கு கோபம் வரக்கூடும் தங்களைச் சொல்கிறாரே என.. ஆனால் அது தானே உண்மை.

12:46 AM  
Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

சயந்தன்!
உம்மட பழய பதிவொண்டில இதப்பற்றி எழுதியிருக்கு. கஸ்டப்பட்டு தேடியெடுத்தனான். உம்ம தூற்றுற ஆக்களுக்கு இது சமர்ப்பணம்.

2:21 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Sivamathy

சயந்தன் உண்மையில் நீங்கள் விளையாட்டுப்பிள்ளைதான். வார்த்தைமளோடு நன்றாக விளையாடுகின்றீர்கள்.

21.15 9.4.2005

4:21 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Sivamathy

'விழ விழ எண்டு தொடங்கினால்.. எழு எழு எண்டு அடுத்த வரி போடலாம்.. அழ அழ எண்டு ஏதாவது எழுதி அடுத்த வரியை நிரப்பலாம்.. பிறகு... ம்.... வழ வழ எண்டு ஏதாவது எழுதலாமா'
பிரமாதம்.

21.29 9.4.2005

4:31 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Siva

நன்றாகப் புனைந்துள்ளீர்.எனினும் இந்த ஆண்ட பரம்பரை மீளவும் ஆள்வோமென்றதை"இப்படித் திருப்பிப்போட்டாலென்ல"ஆளப்பட்ட பரம்பரை ஆளத் துடிக்குது"ஏதோ எப்படியோ உமது புனைவு சிறப்பாயுள்ளது

19.44 10.4.2005

10:47 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி

ஏன் வசந்தனுக்கு வேற வேலை இல்லையோ? நான் ஒன்டும் சயந்தனை தூற்றவில்லை. விளையாட்டுத்தனமாத்தான் அவ்வாறு எழுதினேன். விளையாட்டுத்தனத்தை இதில காட்டியிருக்க கூடாதென்டு பிறகு புரிஞ்சதால உண்மையைக் கூறி பொறுத்தருளவும்(??) கேட்டிட்டன். (கண் கெட்ட பிறகு...) எது எப்பிடி இருப்பினும் என்னால் ஏற்பட்ட அவப்பெயரை தகுந்த ஆதாரம் காட்டி நிரூபித்ததுக்கு நன்றி.


17.12 11.4.2005

4:14 AM  
Blogger à®µà®šà®¨à¯à®¤à®©à¯(Vasanthan) said...

அம்மா லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி!
(சீ. உங்கட பேர் எழுதிற நேரம் நானொரு பதிவே எழுதிப்போடுவன்.)
நீங்கள் பொறுத்தருள வேண்டினது சரி. ஆனா முல்லை மைதிலி உங்கட நண்பி எண்டியள். பிறகு பாத்தா அப்பிடியொரு ஆளே இல்லையெண்ட மாதிரியெல்லோ கதை போகுது. ஆனா உங்கட நண்பியிட்ட மன்னிப்புக் கேட்கச்சொல்லி சயந்தன் சொல்லுறார். தான் திருடினனான் எண்டும் சொல்லுறார். என்ன நடக்குது? ரெண்டு பேரும் நல்லா வண்டில் விடுறியள். (வண்டில் விடுறதெண்டா என்னெண்டு தெரியும் தானே?)

6:21 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home