24.6.05

பொதுக்கட்டமைப்பு கைச்சாத்து

புலி வருது.. புலி வருது கதையாக இறுதியில் புலி வந்தே விட்டது. இன்று சுனாமி நிவாரண பங்கீட்டுக்கான புலிகளுடன் இணைந்து பணியாற்றும் கட்டமைப்பில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளும் கைச்சாத்திட்டு விட்டனர்.

சிங்கள இனவாத அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்கள் ஆரம்பம் முதலே இதற்கு இருந்து வந்தது. இன்றும் காலை பாராளுமன்றத்திற்கு அண்மையாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

பொதுக்கட்டமைப்பு கையெழுத்திடப்பட்டிருக்கிறது. அவ்வளவே. இனி வரும் காலங்களில் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்ää ஒத்துழையாமை குறித்த ஒவ்வொரு தரப்பினதும் குற்றச்சாட்டுக்கள் வர கூடும்.

ஏற்கனவே சிரான் என்ற ஒரு புனர்வாழ்வு அமைப்பு அமைக்கப்பட்டு தற்போது செயல் இழந்து கிடக்கிறது.

எதுவோ.. இதனை நடைமுறைப்படுத்தல் என்ற வெறியுடன் அதனூடாக பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைத்தல் என்ற உண்மையான அக்கறையுடன் இலங்கை அரசு இக்கட்டமைப்பில் கையெழுத்து இட்டிருந்தால் அரசுக்கும் அதன் தலைவி சந்திரிகாவிற்கும் நன்றி சொல்வதில் எந்த விதமான துரோகமும் இல்லை.

ஆனால் முழுமையான நம்பிக்கையை கடந்த கால வரலாறுகள் தமிழ் மக்களுக்கு வழங்க வில்லையென்பதே உண்மை.

2 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

இது ஒரு பூச்சாண்டி வேலையாகவே படுகிறது. இன்றைய தேதியில் பெரும்பான்மையற்ற தொங்குபொறி அரசாங்கமே உள்ளது. பெரும் நகைப்புக்கருயதாயிருக்கும் சிறிலங்காப்பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியைப்போல ஏறத்தாள ஒன்றரை மடங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர்.

இந்தநிலையில் ஒரு பொம்மைஅரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் என்று இது வரை கேள்விப்படாத ஒருவர் அரசாங்கத்தின் சார்பில் இப்பொதுக்கட்டமைப்பு வரைபில் கைச்சாத்திட்டுள்ளார். சர்வவல்லமைகொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சந்திரிக்கா கைச்சாத்திட்டிருந்தால் ஓரளவு வலுவுள்ள ஒப்பந்தமாயிருக்கும்.

முதலில் அரசதரப்புக் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து புலிகளும் அவ்வாறே திட்டமிடல் பணிப்பாளர் என்று ஒருவரைக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார்க்ள. ஆக இருதரப்பிலுமே முக்கியமான எவரும் கையெழுத்திடவில்லை.

ஏதோ அவசரஅவசரமாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற நிலையில் குறையாகப் பிரசவிக்கப்பட்ட குழந்தையாக இருக்குமோ என்ற ஐயமே உள்ளது. இன்னும் கட்டமைப்பின் விவரங்கள் வெளிவரவில்லை. வந்தபின்தான் தெரியும்.

மூன்றரை வருடங்களுக்கு முன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமே இன்னும் அரசபடையால் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஆயிரக்கணக்கில் அகதிகள் முகாம்களில் தான் இருக்கின்றனர். இப்போது இன்னொரு கட்டமைப்பு. பார்ப்போம் எவ்வளவு தூரம் போகுதென்று.

நீர் கொழுப்பில் நிக்கும்போது இந்தக்காரியங்கள் நடக்குது.
இசகுபிசகா நடக்காட்டிச் சரி.

-வசந்தன்-

7:08 AM  
Blogger கிஸோக்கண்ணன் said...

சயந்தன், கட்டமைப்பின் தமிழ் வடிவம் இருந்தால் அதையும் போடுங்கோ.

10:53 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home