12.3.05

திறந்த வெளிச் சிறை


Image hosted by Photobucket.com


ஏற்கனவே எனது பதிவொன்றில் என்னைக் கவர்ந்த இவ்வொளிப்படம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பில் யாழ்ப்பாணத்தின் நிலையை துல்லியமாக இப்படம் உணர்த்துகிறது.

ராணுவ முட்கம்பி வேலிகள், சுருள் கம்பிப் பாதுகாப்பு என்பவற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் குறியீடுகள் என கருதக்கூடிய யாழ் நூல் நிலையம் (இதுவே 81 இல் எரிக்கப்பட்டது) தந்தை செல்வா நினைவுத்தூபி மற்றும் துரையப்பா விளையாட்டரங்கம் என்பன தெரிகின்றன.

சுற்றி வர ராணுவ வேலி! நடுவில் யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைக்கூடமாக!

படப் பதிவு திரு

3 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: வசந்தன்

நல்ல பதிவு.

22.20 12.3.2005

3:22 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: வசந்தன்

அதுசரி யானைக்கதையெண்டு ஒண்டு துவங்கினியள். பிறகு மிச்சம் வரும் எண்டு போட்டியள். எங்க போயிட்டுது யானை?


22.24 12.3.2005

3:25 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

சயந்தன்
வணக்கம்!நீங்கள் பிடித்ததுமாதிரியேதாம் ஈழஆவணக்காப்பகமும் நன்றாகப் படம் பிடித்து அவர்தம் தளத்தில் போட்டுள்ளார்கள்.எல்லாமே எமது வாழ்வின் அவலங்களைச் சொல்கின்றன.புதுவையாரின் கவிதைகள்போல்.
என்ன செய்வது உலக ஆதிக்க வாதிகளின் ஏஸன்டுகளான இலங்கை ஆளும் வர்க்கம் இலங்கை வாழ் மக்களை தனது இலாபவெறிக்குப் பலியாக்கியபடி.இதுள் தமிழ் பேசும் மக்கள் படும் வேதனை சொல்லிமாளா! எனினும் ஏதோவொரு விதத்தில் நமது வாழ்வும் விடிவுறும் ஒருநாள்?
நட்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

18.26 12.3.2005

9:32 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home