6.4.07

மொக்கை ஒன்று குறித்த விளம்பரம்

வலைப் பதிவில், வரப்போகின்ற ஒரு பதிவு குறித்து, இது வரை முன்கூட்டியே யாரேனும் விளம்பரம் கொடுத்திருப்பார்களா எள தெரியவில்லை. இல்லையெனின் அதனையும் முதற்செய்யும் பெருமிதத்தோடு..

இதுவரை உரையாடல்களில், இருவரை மட்டுமே இணைத்திருந்த நிலை மாற்றி மூன்று நபர்களோடு மொக்கையை ஆரம்பிக்கிறோம். வரவனையானுடனான இவ்வுரையாடலில் பல்வேறு பட்ட அவருடைய பார்வைகளை அறிந்து கொள்ள முடிந்தது. வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டங்களின் போக்கு, நன்றிப் பின்னூட்டங்களின் நாடகத் தன்மை, சமூக நிலையும் மாற்றங்களும் இவற்றோடு, வேறுபட்ட பிரதேசச் சூழல்களில் பேசப்படும் வட்டாரத் தமிழ் என பல தளங்களில் இந்த உரையாடல் விரிந்தது.

முழுமையாக வெட்டிக் கொத்தித் தொகுக்கத் தேவைப்படும் கால இடைவெளி சற்று அதிகமாக இருக்கும். ஆயினும் நாங்க இப்பிடிச் செய்தோமே என ஒரு பிலிம் காட்டும் பதிவு இது. அங்கங்கே வெட்டியெடுத்த துண்டுகளை இணைத்திருக்கிறேன்.

வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டக் கலாசாரம் என்பது குறித்து கடுமையான வாதப் பிரதி வாதங்கள் நடந்திருக்கிறது. ஆகவே கேட்கத் தவறாதீர்கள்.


17 Comments:

Blogger அற்புதன் said...

ஆவலைத் தூண்டும் முன் நோட்டம்.
இந்த சில அமெரிக்க நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பார்வையாளர் சிரிக்கிற மாதிரி இடை இடையில போடுவினம்,அது மாதிரி சயந்தனின்ர சிரிப்பையும் இடைக்கிடை போடலாம் :-)

6:29 PM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழ்ப் பதிவுலகச் சூழலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவு. முன்னோட்டம் விட்டு ஒலிப்பதிவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் பதிவு ;)

1:18 AM  
Blogger சயந்தன் said...

//தமிழ்ப் பதிவுலகச் சூழலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவு. முன்னோட்டம் விட்டு ஒலிப்பதிவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் பதிவு ;)//

யா யா .. ஒரு முன்னுதாரணப் பதிவு ;) உலகத் தமிழ் வலைப்பதிவுளில் இதுவரை (கணணித்) திரைக்கு வராத புத்தம் புதிய ஒலிப்பதிவு இது..:))

சொல்ல மறந்திட்டேன். அற்புதன் உங்கள் வருகைக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி..

அப்புறம் யாரய்யா.. ஓ ரவிசங்கரா.. வாங்க வாங்க வந்தமைக்கு ரொம்ப நன்றி. கண்டிப்பா இருந்து சாப்பிட்டு.. ஓ.. sorry.. கண்டிப்பா இருந்து கேட்டுட்டுத் தான் போகணும். வருகைக்கு நன்றி. ;)))))

2:37 AM  
Anonymous Anonymous said...

vEru vElai illaiyaa

5:32 AM  
Anonymous Anonymous said...

வணக்கம் சயந்தன்,,,பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் :)

7:23 AM  
Blogger சயந்தன் said...

//வணக்கம் சயந்தன்,,,பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் :)//

தூயா உங்கள் ஆவலுக்கு நன்றி.:)

1:03 PM  
Blogger சினேகிதி said...

அவா ஆவல் என்றுதான் சொன்னவா ஏதோ அவல் தாறன் என்று சொன்னமாதிரி நன்றியாம்:-)))

1:13 PM  
Blogger சயந்தன் said...

//அவா ஆவல் என்றுதான் சொன்னவா ஏதோ அவல் தாறன் என்று சொன்னமாதிரி நன்றியாம்:-)))//

சிநேகிதி உங்கள் நையாண்டிக்கு நன்றி.;))
நன்றி
நன்றி

2:50 PM  
Blogger சயந்தன் said...

//vEru vElai illaiyaa//

அனானி உங்கள் கேள்விக்கு நன்றி

12:39 AM  
Anonymous Anonymous said...

உங்கள் பதிவுக்கு நன்றி :(

5:02 AM  
Blogger சயந்தன் said...

//உங்கள் பதிவுக்கு நன்றி :(//

OK.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

8:55 AM  
Blogger நாமக்கல் சிபி said...

நன்றிக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் அனானி மற்றும் பதிவரின் பரந்த உள்ளங்களுக்கு நன்றி!

9:07 AM  
Anonymous Anonymous said...

//OK.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி//

உங்க நன்றிக்கொரு நன்றி

10:14 AM  
Anonymous Anonymous said...

//வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டங்களின் போக்கு, நன்றிப் பின்னூட்டங்களின் நாடகத் தன்மை,//

இதனையும் வந்து குவியும் நன்றிப்பின்னூட்டங்களையும் பார்க்கும் போது நிறையக் குத்துக்களும் குடைச்சல்களும் உங்கள் பதிவில் வரும் போல் உள்ளது. யாரெல்லாம் காத்திருக்கிறார்களோ.. ஆண்டவா..

10:31 AM  
Blogger லாஸ்ட் பெஞ்ச் லாவண்யா said...

//இதனையும் வந்து குவியும் நன்றிப்பின்னூட்டங்களையும் பார்க்கும் போது நிறையக் குத்துக்களும் குடைச்சல்களும் உங்கள் பதிவில் வரும் போல் உள்ளது. யாரெல்லாம் காத்திருக்கிறார்களோ.. ஆண்டவா//

தங்களின் அன்பான எச்சரிக்கைக்கு மிக்க நன்றி அனானி!

10:35 AM  
Anonymous Anonymous said...

நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே!

10:38 AM  
Blogger சயந்தன் said...

//நன்றிக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் அனானி மற்றும் பதிவரின் பரந்த உள்ளங்களுக்கு நன்றி!//

நாமக்கல் சிபிக்கொரு நன்றி..
அப்புறம் நன்றிக்கொரு நன்றி சொன்ன அனானிக்கொரு நன்றி

1:19 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home