1.2.07

படங்களில் நிற்பது நான் தான்

இந்தப் படங்களை எனது வலைப்பதிவில் அங்கங்கு எங்காவது பார்த்திருக்கலாம் நீங்கள். டிஜிற்றல் கமெரா கிடைத்த ஆரம்ப நாட்களில் ஒஸ்ரேலியாவில் அருகிருந்த வீட்டுப் பொடியன் செந்தூரனை சிப்பிலியாட்டாத குறையாக அப்படியெடு இப்பிடியெடு அந்தா எடு இந்தா எடு என்று ஆக்கினைப் படுத்தி எடுத்த ஒரு சில படங்களில் இரண்டு படங்கள்..

Image hosted by Photobucket.com

தோளுக்குப் பின்னிருந்து சூரியன் ஒளிர வேண்டுமென நினைத்து எடுத்தது. சற்றுத் தவறி விட்டது. நான் இந்தப் படத்தில் மிக அழகாக இருப்பதாக அப்போது யாரோ சொன்னார்கள்.

Image hosted by Photo bucket.com

Titanic பாதிப்பில் எடுத்தது. அந்த நேரத்தில் யாருமில்லாததால் நான் மட்டுமே நிற்க வேண்டியதாய்ப் போய் விட்டது. பரவாயில்லை. பறக்க முயற்சித்தேன் முடியவில்லையென்றும் சொல்லலாம்.

9 Comments:

Anonymous Anonymous said...

என்ன படங்கள் வெளியிடும் வாரமோ..? பழைய படங்களை தூசு தட்டுகிறீர் போல

1:27 AM  
Blogger ரவி said...

படங்கள் தெரியவில்லையே ? அப்லோட் செய்து லிங்க் தரவும்...

1:40 AM  
Blogger சயந்தன் said...

செ.ரவி
வருகிறதே.. அப்லோட் செய்து தானே கொடுத்திருக்கிறேன்.

2:28 AM  
Anonymous Anonymous said...

//அந்த நேரத்தில் யாருமில்லாததால் நான் மட்டுமே நிற்க வேண்டியதாய்ப் போய் விட்டது//

:):)

3:50 AM  
Anonymous Anonymous said...

புதிய புதிய தொழில் நுட்பங்கள் அழகான பராமரிப்பு என அம்சமாக இருக்கிறது உங்கள் வலைப் பதிவு. பரிந்துரைக்கின்றேன் என்ன சங்கதி..? கூகுள் இந்த வசதியைத் தருகின்றதா..?

7:06 AM  
Blogger சயந்தன் said...

//கூகுள் இந்த வசதியைத் தருகின்றதா..?//

ஆம்.. Google Reader நமக்குப் பிடித்த இடுகைகளை பகிர்வதற்கான வசதியையும் அதனை நமது தளங்களில் இணைப்பதற்கான நிரலியையும் தருகின்றார்கள்.
நமக்குப் பிடித்த வலைத் தளங்களை Google Reader இல் இணைத்து அவற்றில் உள்ள நமக்குப் பிடித்த இடுகைகளை தெரிவு செய்தால் அவை நமது வலைப்பதிவில் தோன்றும். நமது வலைப்பதிவு வார்ப்புருவில் மாற்றமேதும் செய்ய வேண்டியதில்லை. Google Reader ஊடாகவே மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

1:44 PM  
Blogger கானா பிரபா said...

//Titanic பாதிப்பில் எடுத்தது. அந்த நேரத்தில் யாருமில்லாததால் நான் மட்டுமே நிற்க வேண்டியதாய்ப் போய் விட்டது. பரவாயில்லை. பறக்க முயற்சித்தேன் முடியவில்லையென்றும் சொல்லலாம்.//
என்னைக் கூப்பிட்டிருந்தா வந்திருப்பனே

2:06 PM  
Anonymous Anonymous said...

//என்னைக் கூப்பிட்டிருந்தா வந்திருப்பனே//

ஏன்..உங்களுக்கும் ஆருமில்லையே..

1:57 AM  
Anonymous Anonymous said...

இரண்டாவது படத்திற்கான lighting எவ்வாறு ..? கம்யுட்டர் உதவியா..

10:02 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home