21.10.05

காலமும் கதைகளும்

காலம் 1

மீண்டும் இடம் மாறிப் பூத்தது பூ

அவளோடு அதிகம் பேசச் சொல்லும் மனசு. அதை அடக்கும் புத்தி!

'வழியாதே! கௌரவமாய் இரு"

அவளைப் பார்க்கும் கணங்களில் மனசு மட்டும் பற்றி எரிய மெல்லிய புன்முறுவலோடு சேர்த்து வணக்கம் உதிர்க்கும் உதடு.

தேவைக் கேற்ப பேசினானேயாயினும் சில சமயங்களில் அத் தேவைகளும் திணிக்கப் பட்டனவாயிருந்தன அவள் அறியாமல்!

அவளும் பேசுகிறாள் தன் தேவைக் கேற்ப, அவையும் திணிக்கப் பட்ட தேவைகளோ என்று எண்ணுகையில் அங்கே நிகழிகிறது முதல்த் தவறு!

'எல்லோரும் இருக்க ஏன் என்னிடம் மட்டும்"!! என்ற படு பிற்போக்குத் தனம் உதித்தது!

காலம் 2

ரெலிபோனில் அழைத்தான்.

'உங்களோடு கொஞ்சம் பேசலாமோ"

'சொல்லங்கோ"

'இவ்வளவு நாளும் கதைச்சதை விட வித்தியாசமாய் இருக்கும். பரவாயில்லையா"

மௌனம் நீடித்தது.

'வேண்டாம். அப்பிடி எதுவும் கதைக்க வேண்டாமே"

நாக்கு உலர்ந்திருந்தது. தண்ணீர் குடித்தான்.!

'சரி.. கொஞ்ச நாளாய் அப்பிடி ஒரு எண்ணம் மனசில.. கேட்டேன்.. அவ்வளவும் தான்.!"

'கேட்டதும் நல்லது தான்.."

நல்ல வேளை நானும் ஏதாவது காரணமோ என்று அவள் கேட்கவில்லை!

'வேறை என்ன .. நான் உங்களோடு பிறகு கதைக்கிறன்!" துண்டித்தான்.

காலம் 3

'நான் நினைச்சன்! இனி என்னோடு கதைக்க மாட்டியள் எண்டு"

சிரித்தான்!

'நான் என்ன செய்ய.. ரொம்பவும் திறந்த மனசு எனக்கு! நினைத்தவுடனை கேட்டன்.."

'எனக்கும் தான்.. கேட்டவுடனை மாட்டன் என்றேன்.. அதை விட்டுவிட்டு யோசிக்க வேணும்.. ரைம் வேணும் என்றெல்லாம் கேட்க வில்லை பாத்தீங்களா"

'அப்புறம்.."

'.............................."

'.............................."

காலம் 4

மீண்டும் அவளையும் தன்னையும் ஏமாற்றுவது போலிருந்தது!

அவளோடு சண்டை பிடித்து விலகியிருக்கலாம்!

மனக்குரங்கு மறுபடியும்!

இம் முறை ஆழமாகவும் விரிவாகவும் அர்த்தமாகவும்!

'எனக்கெப்ப கல்யாணம் கட்ட வேண்டும் என்று தோன்றுதோ அப்ப நான் கட்டுவன்.! அதுக்கு முதல் காதல் என்பதெல்லாம் கிடையாது.!"

'சரி.. நான் உங்களை கல்யாணம் கட்டுறன்.. என்ன சொல்லுறியள்?"

'இதுக்கு ஓம் என்றால் காதலிக்கலாமே?"

'அதைத் தானே நானும் கேட்கிறன்"

'....................."

'......................"

'சரி எனக்கு உங்களை பிடிக்க வில்லை என்று சொன்னால் ... இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறன்."

பிரச்சனை முடிவுக்கு வந்தது!

'இப்ப உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும். உணர்வுகள் எனக்கும் விளங்கும்.. இன்னும் கொஞ்சக் காலத்திலை நினைச்சு பாருங்கோ சிரிப்பாக இருக்கும்.. "

உண்மைதான்.. சின்னப் பிள்ளைத் தனமாகத் தான் இருக்கிறது.

காலம் 5

'நான் பிசாசு கதைக்கிறன்!"

'அட என்ரை முன்னால் காதலியும்.. இந்நாள் சகோதரியும்.. சொல்லு!" ஒருமைக்கு தாவி நிறைய நாட்கள் ஆகிவிட்டது.

'சகோதரி எண்டால் அடி வாங்குவாய்! இப்ப நீ பெரிய ஆள். போன் பண்ணுறதுமில்லை.. கதைக்கிறதும் இல்லை"

'ஓம்.. முந்தி ஒரு தேவை யிருந்தது.. இப்ப அப்பிடி இல்லைத் தானே.. பிறகென்ன.. சரி.. முந்தி நான் அடிக்கடி எடுத்து கதைக்கும் போது தம்பி வேறையொரு பிளானோடை தான் இப்பிடி எல்லாம் கதைக்கிறார் எண்டு நினைக்க வில்லையா"

'இல்லை.. நீ அப்பிடி தெரிஞ்சிருந்தால் அப்பனுக்கு அப்பவே புத்தி சொல்லியிருப்பனே"

'அப்ப அளவுக்கதிகமா வழிய வில்லையெண்டு சொல்லு.."


காலம் 6

'ஏன் எங்களுக்கெல்லாம் உங்கடை காதல் கதைகளை சொல்ல மாட்டியளோ?"

'ஆறுதலாச் சொல்லுவம் எண்டிருந்தன்..! அதுக்குடனை வந்திட்டுதா?"

'வாழ்த்துக்கள்..!"

'நன்றி.. "

-மறுபதிப்பூ-

7 Comments:

Anonymous Anonymous said...

Vaazththukkal! Nantri!

9:19 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தோழர்

ஆரம்பிச்சிட்டான்டா...

2.53 22.10.2005

9:53 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

ஐயா!
நீர் துவக்கின அந்தத் தொடர் (நிலவுக்குள் நெருப்போ என்ன இழவோ) எங்கயப்பு?
என்னத்துக்கு அதுகளை நிப்பாட்டினீர்? அதோட பழைய பதிவுகளையும் தூக்கிப்போட்டீர்.

நான் ஒரு தொடர் தொடங்கப்போறன். பேர் என்ன தெரியுமோ?
"பெண்டாட்டி தாசன்"
வாரும். வந்து படியும். வாழ்த்திவிட்டுப் போம்.
நீர் மட்டுமில்லை. மற்ற ஆக்களையுந்தான்.

10:56 AM  
Blogger சயந்தன் said...

//ஐயா!
நீர் துவக்கின அந்தத் தொடர் (நிலவுக்குள் நெருப்போ என்ன இழவோ) எங்கயப்பு?
//

சில அழுத்தங்கள் காரணமா அதை தூக்க வேண்டியதாப்போட்டுது.. எண்டாலும்.. உண்மைகள் உறங்குவதில்லை எண்டதை உரத்து.. சொல்லமுதல்.. மெதுவாக சொல்லிப்பாக்கிறேன்..

உம்மடை பொண்டாட்டி தாசனை எழுதுறதை கொஞ்சம் தள்ளி வைச்சால் என்ன..?

11:27 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

சரி.
உம்மட வேண்டுகோளுக்கிணங்க தள்ளிப் போடுறன். சிலவேளை நிரந்தரமாக் கைவிட வேண்டியும் வரலாம்.
எல்லாம் 'அவன்' கையில்தான் கிடக்கு.

"அழுத்தங்களுக்கு அடிபணியாதே. நாங்கள் மறத்தமிழர்".
ஏதாவது உதவி தேவையெண்டாச் சொல்லும் 'வில்லனா' வாறன்.

6:11 PM  
Anonymous Anonymous said...

ம். இதுவும் அழுத்தங்கள் வந்து நிப்பாட்டுப்பட முதல் சேமிச்சு வைக்கிறது உசிதம்.
'உங்கட காதற்கதைகளை எங்ளுக்கும் சொல்லமாட்டியளோ எண்டுதானே கேட்கப்பட்டது? மற்றாக்களுக்குச் சொல்லக்கூடாது எண்டு 'அழுத்தம்' வரேலத்தானே?

அவனொருத்தன் க்கா...க்கா எண்டு கரையப்போய் வந்த வில்லங்கமெண்டு நினைக்கிறன்.

7:45 PM  
Blogger சோமி said...

சயந்தன் எனக்கும் பழைய நினைவுகள் வருகுது...தூக்கம் தொலைந்துபோன அந்த இரவுகள்....அட வேறு ஒண்டுமில்ல சயந்தன் தன்ர காதல் கதையள எனக்கு சொன்னா நான் எங்க நித்திரை கொள்ளுறது...

இப்ப நினைச்சா எல்லம் சிரிப்பாய் சிரிக்குது எனக்கும்தான்......

9:35 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home