26.9.05

இது எங்க பாடல்!

கத்தரித்தோட்டத்து மத்தியில கழுத்தறுத்து விட்டது. இதுக்கு முதலில போட்ட பாட்டு நினைச்ச நேரங்களில மட்டும் தான் வேலை செய்யுது. அதனால வன்னியன்ரை உதவியோடை இந்தப்பாட்டை அவரின்ரை தளத்தில திரும்பவும் போடுறன். கூடவே போனசா இன்னும் ஒரு பாட்டும் போடுறன். அதையும் கேளுங்கோ!! அந்தப்பாட்டுக்கு சும்மா அவசரத்துக்கு வரிகள் எழுதினது.. ஒரு பரீட்சாத்த முயற்சியாக.. மற்றும் படி அதில இசை நுணுக்கங்களை தேடாதேங்கோ.. தேடினாலும் கிடைக்காது.




கத்தரித்தோட்டத்தின் மத்தியிலே..




நெருப்பெரிந்த நிலமாய்...

11 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

நான் சொன்னது உந்தப்பாட்டையில்ல.
நாங்கள் பள்ளிக்கூடத்தில பாடின 'கத்தரித்தோட்டத்து வெருளிப்பாட்டை'.
உந்த டப்பாங்கூத்துப் பாட்டையெல்லாம் என்ர கட்டளைக்கமைவாத்தான் செய்தனான் எண்டு சொல்லி என்னைக் கேவலப்படுத்தாதையும். உதுக்கு, நீர் ரெண்டாவதாப் பாடினமாதிரி வேறஏதாவது பாடிக்கொண்டு வந்திருக்கலாம். கத்தரித்தோட்டத்துப் பாட்டு கேவலப்படுத்தப்படாமலாவது இருந்திருக்கும்.

உந்தக் குறளி வேலயள் பாப்பீர் எண்டுதான் உம்மை ஷ்ரேயாவின்ர பொறுப்பில விட்டனான். அவவும் காலவாரீட்டா.அல்லது எங்கயோ மிலாந்திக் கொண்டு நிண்டிட்டா.

10:06 PM  
Blogger சயந்தன் said...

ஓ..ஓ.. உங்களுக்கு கத்தரித்தோட்ட பாட்டும் வேணும்.. அதே நேரம் வெளிநாட்டு பிள்ளயள் கேட்கவும் வேணும் எண்டால் இதைத்தானே செய்ய வேணும்... (என்னது சினிமா தாயாரிப்பாளர்கள் மாதிரி கதைக்கிறனோ?)

10:29 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

சயந்தன் பாட்டுப்பாடப் போறாரெண்டு அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். நீர் சொல்லேல்ல வசந்தன்.

சயந்தன் - வீட்ட போய் பாட்டைக் கேட்டிட்டு, என்ட கருத்தைச் சொல்லுறன்!

10:49 PM  
Blogger நளாயினி said...

கதிரையில் இருந்தபடிக்கு எங்களையே அசைய வைக்கிறது. புலம் பெயர் பிள்ளைகள் உடலை அசைக்கவைக்கும் முயற்சி. வித்தியாசமான முயற்சி.

1:55 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல வித்தியாசமான முயற்சி சயந்தன்!

கத்தரித் தோட்டத்து மத்தியில - ரீமிக்ஸ் எண்டு சொல்லலாம். பிரச்சினையில்லை. கூடவே பழைய ஆக்களுக்கு(நாந்தான்) ப்ழைய மெட்டிலையும் பாடி இங்க போடுங்க.

யாருக்காக செஞ்சீங்களோ, அவை என்ன சொல்லீனம் எண்டு பிறகு சனி-ஞாயிறு சொல்லுறன்.

-மதி

2:30 AM  
Blogger சயந்தன் said...

//யாருக்காக செஞ்சீங்களோ, அவை என்ன சொல்லீனம் //

ஆருக்காக செஞ்சேனா... ஆஆ? ஓ ... நீங்கள் முதலாவது பாட்டை பற்றித்தானே கதைக்கிறியள்..? மதி குஞ்சு குருமன்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்.. அடுத்ததாக வர இருப்பது.. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை.. ஹி ஹிஹி

2:53 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கடவுளே! கடவுளே!!

அந்தக் குஞ்சு குருமான் களிட்ட கேட்டுச்சொல்லுறன் எண்டுதான் மேல சொல்லியிருக்கிறன்.

ஆனா, என்னை மாதிரி ஆக்களுக்காக பழைய மெட்டிலையும் எடுத்துவிடும்!

-மதி

3:44 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: gud gud

gud

0.29 28.9.2005

7:33 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Seelan

ம்.. வித்தியாசமாத்தான் இருக்கிறது..

23.7 28.9.2005

6:08 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: யதுகிரி

நல்லாத்தான் இருக்குது சயந்தன்.. கத்தரி தோட்டத்து மத்தியிலே.. மற்றது இன்னும் கேக்கல..

22.24 1.10.2005

9:29 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ShiyamSunthar

இதனை MP3 வடிவமாக எடுக்கலாமா?

20.56 3.10.2005

3:57 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home